"இவனைக் கட்டுப்படுத்தவே முடியலை...
விஷமம் தாங்கலை. இரு இரு ஸ்கூல் திறக்கட்டும்.
உன்னை முதலில் கொண்டுபோய் தள்ளிவிடறேன்."
"இருடி! அடிக்கிற டீச்சரா கிடைக்கணும்.
அப்பத்தெரியும்."
" இவளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டாதான் நிம்மதியா இருக்கும்"
"ஸ்கூல் திறக்கட்டும். தரத் தரன்னு இழுத்துகிட்டுபோய்
ஸ்கூலில் சேத்துட்டுதான் மறுவேலை"
இதை எல்லாம் கேட்ட பின்னாடி பிள்ளை ஸ்கூல்
போக விரும்புமா?
பள்ளி என்றாலே ஏதோ பூச்சாண்டி இருக்கும் இடம்
என்பது போல் ஆகிவிடாதோ...
இப்படி சொல்வதை கேட்டு வளரும் பிள்ளைக்கு
பள்ளி ஒரு ஜெயிலாகவும், ஆசிரியர்கள் பூதங்களாகவும்,
படிப்பு எட்டிக்காயகவும் அல்லவா ஆகிவிடும்.
மாறாக, "ஹை பப்பு குட்டி ஸ்கூல் போகப்போறாளே!
ஜாலி, ஸ்கூலுக்கு போனா நிறைய ஃபெரண்ட்ஸ்
கிடைப்பாங்க" என்றோ,
சுரேஷுக்கு ஜாலி, புது ஸ்கூல், புது டீச்சர்,
போரடிக்காம எஞ்சாய் செய்யலாம் என்றோ சொல்வதனால்
புதிதாக பள்ளி செல்லும் குழந்தைக்கு பள்ளியின் மீதும்
பாடத்தின் மீதும் நல்ல அபிப்ராயம் ஏற்படும்.
ஜூன் மாதத்தில் டீச்சர்களே பயப்படும் அளவிற்கு
அழுது, ஆராட்டம் செய்து, பல சமயம், "என்னை
விடு!" என்று டீச்சரை அடிக்கவும் செய்யாமல்
குழந்தை தன்னை புது சூழலுக்கு தயார் செய்து
கொள்ளும்.
அதற்கு வீட்டில் நாம் தரும் பாசிடிவான
கமெண்டுகள் மிக முக்கியம்.
குழந்தையைக் கவர கடைக்கு அழைத்துச்சென்று
புது பேக், வாட்டர் பாட்டில், ஷூ, யூனிபார்ம்
போன்றவை, வாங்கிக் கொடுக்கலாம்.
முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி தன் கணவருடன்
திரைப்படம் பார்க்கச் செல்வதை ஊர் மொத்தம்
சொல்லிக்கொண்டு செல்வார். அது மாதிரி
"எங்க சுஜா ஸ்கூலுக்கு போகப்போறா.
அவளுக்கு தேவையானது எல்லாம் வாங்கப்போறோம்"
என்று குழந்தையின் காதுபட 4 பேரிடம் சொல்லாம்
தப்பில்லை.
அதனால் ஏதோ நல்லது நடக்கபோகிறது போன்ற
அபிப்ராயமே பிள்ளையின் மனதில் ஏற்படும்.
பிள்ளைக்கு கல்வியின் அவசியத்தை அறிந்த நாமே
அவர்களுக்கு அதை எட்டிக்காயக்ககூடாது.
நாம் குழந்தை வளர்ப்பில் செய்யும் தவறுகளையும், அதற்கான தீர்வுகளையும் இங்கே தர முயன்றிருக்கிறேன். உங்கள் மதிப்புமிக்க விமர்சனத்தை எதிர்நேக்கி,
தவறு.1
கீழே விழுந்த குழந்தையை உடனே சென்று தூக்குவது. உடனே அழுகையை அடக்குவதற்காக ‘இந்த இடம் தானே, தள்ளி விட்டது’ என்று கீழே விழுந்த இடத்தை உதைப்பது அல்லது அடிப்பது.
காரணம்
உடனே தூக்கும் பெற்றோரது குழந்தையே அதிகமாக அழும். அந்த இடத்தை அடிப்பது, தன் தவற்றிற்கு அடுத்தவர்தான் காரணம் என்கிற பழி போடும் மனோபாவத்தை வளர்க்கும்.
தீர்வு
கீழே விழுந்த இடம், விழும்போது ஏற்பட்ட சத்தம் ஆகியவற்றைக்கொண்டு அதிகமாக அடி பட்டிருக்குமா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். குறைவாக அடி பட்டிருக்கும்பட்சத்தில் கண்டுகொள்ளாமல் நம் வேலையை கவனிப்பது நல்லது. அதிகமாக அடி பட்டிருக்கும் என்று உணரும் பட்சத்தில் உதவிக்கு செல்லலாம். அடிபட்ட உடல் பாகத்தை நன்கு தேய்க்க சொல்ல வேண்டும். ‘சிறிது நேரம்தான் வலிக்கும் பிறகு சரியாகிவிடும்’ என்று ஆறுதல் கூறலாம்.
தவறு.2
குழந்தை அடம்பிடித்தால் அப்போதைக்கு பிரச்சினையில் இருந்து விலக கேட்டதை வாங்கிக் கொடுப்பது.
காரணம்
அடம்பிடித்தால் எதையும் சாதித்துக்கொள்ளலாம் என்று குழந்தை உணர்ந்துகொள்கிறது. பிறகு எதற்கெடுத்தாலும் அடம் பிடிக்க ஆரம்பித்துவிடும்.
தீர்வு
குழந்தை பொருளை முதல் முறை கேட்கும்பொழுதே வாங்கலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானித்து விட வேண்டும். வாங்க சம்மதமானால் “இன்று இந்த ஒரு பொருள் மட்டும்தான் அல்லது இன்னும் ஒரு பொருள் மட்டும்தான்” என்று சொல்லி விட்டு உடனே வாங்கிக்கொடுத்து விட வேண்டும், வாங்கிக் கொடுக்கக்கூடாது என்று தீர்மானித்துவிட்டல் அதற்கான காரணத்தை குழந்தையிடம் விளக்க வேண்டும். ஒரு முறைக்கு இரு முறை விளக்க முயற்சிக்கலாம். அதற்கு மேல் எவ்வளவு அடம் பிடித்தாலும் வாங்கிக்கொடுக்கக் கூடாது. சில நேரங்களில் அழுது வாந்தி எடுக்கும் நிலை வரை கூட அடம் பிடிக்கும்.
தவறு.3
குழந்தைகள் சொல்லும் சிறு சிறு செயல்களையும் குழந்தைதானே கேட்கிறது என்று செய்யாமல் இருப்பது.
காரணம் & தீர்வு
குழந்தைகள் கேட்கும் ஒவ்வொரு சிறு சிறு செயலையும் உடனே செய்யும்போது, குழந்தையும் நாம் சொல்லும்போது உடனே கேட்க வேண்டும் என்று புரிந்துகொள்கிறது. அவர்கள் கேட்பதை நாம் மறுத்தால், நாம் சொல்லும்போதும் கேட்கத் தேவையில்லை என்று புரிந்துகொள்கிறது. அவர்கள் கேட்பதில் அதிகம் எளிதாக செய்யக்கூடிய காரியங்களாக இருக்கும். சில நேரங்களில் மட்டும் செய்யவே முடியாத காரியங்களாக இருக்கும். அந்நேரத்தில் ஏன் செய்ய முடியவில்லை என்ற விளக்கமும் கொடுத்து விட வேண்டும். நாம் அதிக தடவை அவர்கள் பேச்சைக் கேட்டுவிடுவதால், சில நேரங்களில் கேட்காமல் இருப்பது அவர்களுக்கு பெரிதாகத் தெரியாது.
சென்ற தலைமுறை வரை குழந்தைகள் வளர்ந்தார்கள். இந்தத் தலைமுறையில் தான் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். ஆகவே பெரியோர்கள் வழியாகவோ, நமக்கோ குழந்தை வளர்ப்புப் பற்றிய அறிவு குறைவாகவே இருக்கு. ஒழுக்கம் வளர்க்க எனது சில அனுபவங்கள்.
1. ஒழுக்கமாக வளர்க்கிறேன் என்கிற பெயரில் அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. அதிகக் கட்டுப்பாடுகளால் வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றோர்களள வெறுப்பார்கள். அது வாழ்க்கை மீதும் பிடிப்பு இல்லாத அல்லது வெறுப்பு ஏற்படும் நிலை வரை செல்லும். இதனால் அவர்களது உண்மையான மன வளர்ச்சி தடைபடுகிறது. மேலும் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் நம் சொல்லை கேட்க மாட்டார்கள், அவர்களாகவும் நல்ல முடிவுகள் எடுக்கத் தெரியாமல் வழி தவறிப் போகும் வாய்ப்பு அதிகமாகிவிடும்.
2. சிறு சிறு தவறுகள் அதாவது வயது ஏற ஏற சரியாகிவிடும் என்பது போன்ற தவறுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்.
3. குழந்தை செய்யும் தவறை நாம் செய்கிறோமா என்று ஆராய்ந்து அதனைத் திருத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் குழந்தைகள் அதிகமாக மற்றவர்களைப் பின்பற்றியே நடக்கிறது.
4. குழந்தை செய்யும் தவறை “ஏன் செய்யக் கூடாது” என்று விளக்குங்கள். கேட்கவில்லையா? இரண்டாவது முறை விளக்குங்கள். மீண்டும் கேட்கவில்லையா? கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள். இன்னொரு நாள் அதே தவறை செய்யும்பொழுது மீண்டும் விளக்குங்கள். இப்படி 3 தடவை முயற்சி செய்யலாம். கண்டிப்பாக மாறி விடுவார்கள்.
5.எந்த ஒழுக்கத்தை போதித்தாலும் முதலில் நாம் அதை பின்பற்ற வேண்டும்.
6. தினம் ஒரு கதை மூலம் ஒழுக்கத்தை புகுத்துங்கள். போதனையைவிட ஒழுக்கத்தை புகுத்த இதுவே சிறந்த முறை. உங்கள் கதையில் வரும் நல்ல பையனைப்போல் குழந்தைகள் நடக்க முயல்வதை நீங்கள் பார்க்கலாம்.
7. எது நல்லது எது கெட்டது என்று அவர்களையே கேளுங்கள். அவர்கள் தவறாக சொன்னாலும் சரியாக சொன்னாலும் அதைப் பற்றி அவர்களுடன் விவாதியுங்கள். அவர்கள் சரியாக சொன்னால் பாராட்டுங்கள். தவறாக சொன்னால் எந்த கண்டிப்பும் இல்லாமல் விவாதம் மட்டும் செய்யுங்கள். இல்லாவிட்டால் அதற்கும் ஒரு கதைதான்.
8. ஒருநாளைக்கு 1 அல்லது 2 கட்டுப்பாடுகளுக்கு மேல் விதிக்காதீர்கள். ஒரே நாளில் அதிகாமாகத் தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். மற்ற தவறுகளுக்கு வேறொரு நாளில் வாய்ப்பு கிடைக்கும்பொழுது திருத்திக் கொள்ளலாம்.
9. குழந்தை முன் பெற்றோர்கள் இருவரும் சண்டை போடக்கூடாது. பிறகு நம் மீது மதிப்பு இல்லாமல் போய்விடும். பிறகு நாம் சொல்லுவதையும் கேட்கமாட்டார்கள்.
10. குழந்தையை குழந்தையாக நடத்தாதீர்கள். பெரியவர்களைப் போல் நடத்துங்கள். அப்பொழுதுதான் அவர்கள்மீது அவர்களுக்கே நம்பிக்கையும், பெருமையும் வரும், நம்மையும் மதிப்பார்கள்.
11. ஒழுக்கத்தை கற்றுத் தருகிறேன் என்கிற பெயரில் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். இதனால் ஒழுக்கம் வளராது, ஒப்பிடப்படும் குழந்தைமீது வெறுப்பு தான் வரும்.
- மரு. இரா. வே. விசயக்குமார்.
என்ன எல்லோரும் நலமா? ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறோம்.
கொஞ்சம் பிஸியாகிட்டேன். அதான்.
நீங்களும் பசங்க பரிட்சை, விடுமுறைன்னு பிசியா இருந்திருப்பீங்க.. :)
பிளையின் நூடில்ஸில் என்னென்ன செய்யலாம் அப்படின்னு
பார்ப்போமா?
1. வெஜி நூடில்ஸ்:
தேவையான பொருட்கள்:
ஹக்கா நூடில்ஸ் (பிளையின் நூடில்ஸ்) தேவையான அளவு.
பட்டர், மிளகுத்தூள், (துருவிய கேரட், முட்டை கோஸ்,
வெங்காயத்தாள், பீன்ஸ், மெலிதாக அரிந்தது..)
சோயா சாஸ்.
செய்முறை.
கொதிக்கும் தண்ணீரில் சமைய்ல எண்ணைய் 1 ஸ்பூன்,
உப்பு கொஞ்சம் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும்
சல்லடையில் போட்டு, குளிர்ந்த நீர் ஊற்றி வடிய வைக்கவும்.
வானலியில் பட்டர் போட்டு, காய்கறிகளை சேர்த்து வதக்கி,
வெந்ததும், உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், சேர்த்து வெந்த
நூடில்சையும் போட்டு பிரட்டி எடுத்தால் வெஜி நூடில்ஸ்
ரெடி. காய் சாப்பிட அழும் குழந்தையும் அழாமல் இந்த
காய்கறி நூடில்சை சாப்பிட்டு விடும் :)
நூடில்ஸ் மஞ்சூரியன்:
நூடுல்ஸ் 1/2 கப், மைதா 1- ஸ்பூன்,
கார்ன்ஃபிலார் - 1 ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள்,
அஜினோமோட்டோ, சில்லி சாஸ் தேவைக்கேற்ப..
செய்முறை :
வேகவைத்த நூடுல்ஸ் உடன் எல்லாவற்றையும் சேர்த்து
பிசைந்து உருண்டை செய்து நன்கு கிரிச்பியாக பொரித்து
வைத்தால் தட்டில் ஒன்று கூட மிச்சம் இருக்காது.
1.நூடில்ஸ்/ பாஸ்தா இவைகளை மேற்சொன்ன முறையில்
செய்து அசத்தலாம்.
2. மேற்சொன்ன முறையிலேயே செய்து, மிளகுத்தூள், சோயாசாஸ்,
சேர்க்காமல், பாஸ்தா சாஸ் சேர்த்தால் டொமாடோ நூடில்ஸ்.
3. காய்கறிகள் சேர்க்காமல், பாஸ்தா சாஸ் சேர்த்து மேலே
சீஸை துருவி போட்டால் கிரீமி நூடில்ஸ்/பாஸ்தா ரெடி.