பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

சென்ற தலைமுறை வரை குழந்தைகள் வளர்ந்தார்கள். இந்தத் தலைமுறையில் தான் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். ஆகவே பெரியோர்கள் வழியாகவோ, நமக்கோ குழந்தை வளர்ப்புப் பற்றிய அறிவு குறைவாகவே இருக்கு. ஒழுக்கம் வளர்க்க எனது சில அனுபவங்கள்.

1. ஒழுக்கமாக வளர்க்கிறேன் என்கிற பெயரில் அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. அதிகக் கட்டுப்பாடுகளால் வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றோர்களள வெறுப்பார்கள். அது வாழ்க்கை மீதும் பிடிப்பு இல்லாத அல்லது வெறுப்பு ஏற்படும் நிலை வரை செல்லும். இதனால் அவர்களது உண்மையான மன வளர்ச்சி தடைபடுகிறது. மேலும் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் நம் சொல்லை கேட்க மாட்டார்கள், அவர்களாகவும் நல்ல முடிவுகள் எடுக்கத் தெரியாமல் வழி தவறிப் போகும் வாய்ப்பு அதிகமாகிவிடும்.
2. சிறு சிறு தவறுகள் அதாவது வயது ஏற ஏற சரியாகிவிடும் என்பது போன்ற தவறுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்.
3. குழந்தை செய்யும் தவறை நாம் செய்கிறோமா என்று ஆராய்ந்து அதனைத் திருத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் குழந்தைகள் அதிகமாக மற்றவர்களைப் பின்பற்றியே நடக்கிறது.
4. குழந்தை செய்யும் தவறை “ஏன் செய்யக் கூடாது” என்று விளக்குங்கள். கேட்கவில்லையா? இரண்டாவது முறை விளக்குங்கள். மீண்டும் கேட்கவில்லையா? கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள். இன்னொரு நாள் அதே தவறை செய்யும்பொழுது மீண்டும் விளக்குங்கள். இப்படி 3 தடவை முயற்சி செய்யலாம். கண்டிப்பாக மாறி விடுவார்கள்.
5.எந்த ஒழுக்கத்தை போதித்தாலும் முதலில் நாம் அதை பின்பற்ற வேண்டும்.
6. தினம் ஒரு கதை மூலம் ஒழுக்கத்தை புகுத்துங்கள். போதனையைவிட ஒழுக்கத்தை புகுத்த இதுவே சிறந்த முறை. உங்கள் கதையில் வரும் நல்ல பையனைப்போல் குழந்தைகள் நடக்க முயல்வதை நீங்கள் பார்க்கலாம்.
7. எது நல்லது எது கெட்டது என்று அவர்களையே கேளுங்கள். அவர்கள் தவறாக சொன்னாலும் சரியாக சொன்னாலும் அதைப் பற்றி அவர்களுடன் விவாதியுங்கள். அவர்கள் சரியாக சொன்னால் பாராட்டுங்கள். தவறாக சொன்னால் எந்த கண்டிப்பும் இல்லாமல் விவாதம் மட்டும் செய்யுங்கள். இல்லாவிட்டால் அதற்கும் ஒரு கதைதான்.
8. ஒருநாளைக்கு 1 அல்லது 2 கட்டுப்பாடுகளுக்கு மேல் விதிக்காதீர்கள். ஒரே நாளில் அதிகாமாகத் தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். மற்ற தவறுகளுக்கு வேறொரு நாளில் வாய்ப்பு கிடைக்கும்பொழுது திருத்திக் கொள்ளலாம்.
9. குழந்தை முன் பெற்றோர்கள் இருவரும் சண்டை போடக்கூடாது. பிறகு நம் மீது மதிப்பு இல்லாமல் போய்விடும். பிறகு நாம் சொல்லுவதையும் கேட்கமாட்டார்கள்.
10. குழந்தையை குழந்தையாக நடத்தாதீர்கள். பெரியவர்களைப் போல் நடத்துங்கள். அப்பொழுதுதான் அவர்கள்மீது அவர்களுக்கே நம்பிக்கையும், பெருமையும் வரும், நம்மையும் மதிப்பார்கள்.
11. ஒழுக்கத்தை கற்றுத் தருகிறேன் என்கிற பெயரில் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். இதனால் ஒழுக்கம் வளராது, ஒப்பிடப்படும் குழந்தைமீது வெறுப்பு தான் வரும்.

                                                                                                - மரு. இரா. வே. விசயக்குமார்.

6 comments:

வாங்க விசயகுமார், முதல் பதிவே கலக்கலா போட்டிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.

நல்ல கருத்துகள்..மேன்மேலும் எழுத என் வாழ்த்துக்கள்.

ஆஹா, வாங்க விசயகுமார்.

தங்கள் பெயருக்கு தகுந்தார்போல் விசயமுள்ள குமாராக முதல் பதிவை
நம் கிளப்பில் துவக்கியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

புதுமையான, பயனுள்ள வலைப்பதிவு, வாழ்த்துக்கள்!
என் நண்பன் சொல்வான் "குழந்தைகள் கேட்டு நடப்பதில்லை, பார்த்தே நடக்கிறார்கள்" என்று. அதனைப் போலவே உங்களது கருத்தொன்றையும் காண்கிறேன். அதனுடன் நான் பெரிதும் உடன்படுகிறேன். அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவதை முதலில் நாம் செய்ய வேண்டும்.
இம்முயற்சிக்கு நன்றி!

(தாமதமாக) வரவேற்கிறேன்..நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துகள்..நல்ல கருத்துகள் சொல்லியிருக்கிறீர்கள்.

பாச மலர் said...
(தாமதமாக) வரவேற்கிறேன்..நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துகள்..நல்ல கருத்துகள் சொல்லியிருக்கிறீர்கள்.

ரிப்பிட்டேய்... மிகவும் தாமதமாக வரவேற்க்கிறேன்... வாழ்த்துக்கள்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்