46. குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது, வெளியில் உள்ள விசயங்களளப் பற்றி விவாதியுங்கள். கட்டிட அமைப்பு, போக்குவரத்து விதிகள், வெவ்வேறு வகையான வாகங்கள், விலங்குகள் முதலியன.
47. நீங்கள் மற்றவர்களுடன் பேசும்போது குழந்தைகளை இடைமறிக்க அனுமதிக்காதீர்கள். “தொந்திரவுக்கு மன்னிக்கனும் அல்லது அப்பா ஒரு நிமிடம்”, என்று கூறிவிட்டு நாம் பேசி முடிக்கும் வரை காத்திருக்க குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
48. குழந்தைகளிடம் உள்ள தேவையற்ற பழக்கங்களைக் கவனித்து சரிப்படுத்துங்கள். உதாரணத்திற்கு சில குழந்தைகள் கதவை இழுத்து வேகமாக சாத்தும், அவர்களுக்கு கதவை எப்படி மூடுவது எனக் கற்றுக்கொடுங்கள். வீட்டுக்குள் ஓடும் குழந்தைகளுக்கு, வீட்டிற்குள் எப்படி நடக்கவேண்டும் எனவும், மூக்கிள் சளி வரும்பொழுது கைக்குட்டையை எப்படிப் பயன்படுத்துவது எனவும் கற்ற்க்கொடுங்கள்.
49. குழந்தைகளை எல்லாவிதமான் வயதினருடனும் பழக பழக்குங்கள்.
50. மத சம்பிரதாயங்களைப் போதியுங்கள், அவற்றில் பங்கேற்கச் சொல்லுங்கள்.
51. பலவித (மதம், சாதி, மொழி, நம்பிக்கைகள்) மக்களைப் பற்றியும் நல்லவிதமாக நினைக்க குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கல்.
52. நகைச்சுவையாகப் பேசுங்கள் நன்றாக சிரிக்கட்டும், வார்த்தை விளையாட்டு விளையாடுங்கள், மனித நேயத்தைக் கற்றுக் கொடுங்கள்.
53. குழந்தைகளுக்கு நீந்தக் கற்றுக்கொடுங்கள். மிக இளம் வயதில் கற்றுக் கொடுப்பது நல்லது.
54. உங்கள் தொழிலைப் பற்றியும், அதன் சிறப்புப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் பணிபுரியும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். உலகில் வெவ்வேறு தொழில்கள் எப்படி நடக்கிறது என்பதைக் காண்பியுங்கள்.
55. வீட்டில் உலக உருண்டை அல்லது உலக வரைபடம் அல்லது அட்லஸ் வைத்து, எப்பொழுதெல்லாம் நாம் பேசும் விசயத்தில் ஊர் பெயர் வருகிறதோ, உடனே வரைபடத்தில் அந்த ஊர் எங்கு உள்ளது எனக் காண்பியுங்கள்.
56. குழந்தைக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொடுங்கள். அவர்கள் பயன்படுத்த வசதியான வடிவத்தில் துடைப்பான், பழைய துணி முதலியன.
57. குழந்தைகள் விரும்பாதவற்றை வேண்டாம் எனச் சொல்லும்போது கோபமின்றிச் சொல்லப் பழக்குங்கள்.
58. குழந்தைகள் வேண்டாம் எனச் சொல்லுவதைவிட வேண்டும் எனச் சொல்லும்படி சூழ்நிலையை உருவாக்கிக் கொடுங்கள் மற்றும் நீங்களும் நடத்துகொள்ளுங்கள்.
59. குழந்தைகளைப் பார்த்துக் கேலியாக சிரிக்காதீர்கள்.
60. அடுத்து வரும் நிகழ்வுகளைப் பற்றி ஞாபகப்படுத்துங்கள். உதாரணத்திற்கு “இன்னும் பத்து நிமிடத்தில் படுத்து தூங்க வேண்டும்” எனக் கூறுவது.
In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)
தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்
குறள் வழிக்கதைகள்
5 years ago
2 comments:
மத சம்பிரதாயங்களைப் போதியுங்கள், அவற்றில் பங்கேற்கச் சொல்லுங்கள்.
/
/
/அதை கடைப்பிடிக்க தீவிரம் காட்டவேண்டாம் என்றும் சொல்லுங்கள்
குழந்தை பருவத்தில் "பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் "என்பதை அழுத்தமாக பதிய வையுங்கள்
மத சம்பிரதாயங்களைப் போதியுங்கள், அவற்றில் பங்கேற்கச் சொல்லுங்கள்.
//
அவை அனைத்தும் மனிதனை பண்படுத்த மட்டுமே... அடித்துக்கொள்ள அல்ல என்பதனையும் மறவாமல் மனதில் பதிய வையுங்கள்
Post a Comment