என்ன எல்லோரும் நலமா? நடுவில் கொஞ்சம் பிசியா
இருந்தேன். அதான் இந்தப் பக்கம் வரலை. மன்னிக்கணும்.
இதோ வந்துட்டேன். இனி பதிவுகள் தொடரும்.
பிள்ளைகளை எங்காயவது கூட்டிகிட்டு போறதுன்னா
பெரிய பிரச்சனை. அவங்க அங்க போய் என்ன
செய்வாங்கன்னு யோசிச்சு பாத்தாலே கண்ணு கட்டும்.
அதனாலேயே முக்கால்வாசி பேர் பிள்ளைகளை வீட்டில்
விட்டுடுடு போவது, யாரிடமாவது விடுவது மொத்தத்தில்
பிள்ளைகளை அழைச்சுகிட்டே போக மாட்டாங்க.
இப்படி இருந்தா தப்பில்லையா? பிளைங்களுக்கும்
எங்க எப்படி நடந்துக்கணும்னு தெரியாமலேயே
போயிடும்ல.
ஹோட்டலுக்கு போனால் அங்கே குழந்தைகள்
ஓடி பிடித்து விளையாடுவதை பார்க்க கோவம்
தான் வரும் எனக்கு. கிளிங் என்ற சப்தத்துடன்
சர்வரின் கையில் இருந்த கிளாஸ் கீழே விழுந்து
உடையும். பல சமையம் கையில் கொண்டுவரும்
உணவைத் தட்டி விட்டுவிடுவார்கள் குழந்தைகள்.
ஹோட்டலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்று அறிவுறுத்தப்படாததே இதன் காரணம்.
நண்பர்கள் அல்லது உறவினரின் வீட்டிற்கு
சென்றால் இந்த பிள்ளைகளை ஏன் அழைத்து
வந்தார்கள் என்று நினைக்கும் அளவிற்கு
பிள்ளைகள் நடந்து கொள்கிறார்கள்.
நம் வீட்டில் நாம் எப்படி வேண்டுமானாலும்
நடந்து கொள்ளலாம். ஆனால் அடுத்த வீட்டிற்கு
செல்லும்போது அவர்களுக்கு தகுந்தாற்போல்
நடந்து கொள்ள வேண்டும். அதாவது
சூழ்நிலைக்கு தகுந்த வாறு.
எப்படி செய்வது?
என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கறேன். இது
உங்களுக்கு உதவுமான்னு பாருங்க.
எங்கே போகப்போகிறோமோ அதைப் பத்தி
முதலில் பிள்ளைகளிடம் சொல்லிவிடுவேன்.
(setting the mood). போகும் இடம்,
அங்கு யார் இருப்பார்கள்? எப்படி நடந்து
கொள்ள வேண்டும்? எல்லாம் முன்பே
சொல்லி அழைத்து செல்வேன்.
உதாரணமா: கோவிலுக்கு போகிறோம் என்றால்
அதை சொல்லிவிடுவேன். போகும் இடத்திற்கு
தகுந்த உடை அவர்களே தெரிவு செய்து விடுவார்கள்
(கோவில்னா பாவாடை சட்டைதான், நோ பாண்ட்ஸ்னு
அம்ருதாவுக்கு தெரியும்)
அடுத்தது,”கண்ணா! கோயிலுக்கு போறோம்.
கோவில் ஓடி விளையாடும் இடம் இல்லை.
ஆண்டவனை பிரார்த்திக்கும் இடம். ஆக
அமைதியா உங்களுக்குத் தெரிந்த பிரார்த்தனைகளை
சொல்லிக்கொண்டு வரவேண்டும். அனைவரும்
அமைதியை நாடி வரும் இடம் தானே கோவில்னு சொல்லி
கூட்டிகிட்டு போவேன். (சின்ன பிள்ளைகளாக
இருந்தால் ஒவ்வொரு முறையும் சொல்வது முக்கியம்)
இப்பொழுதெல்லாம் கோவிலுக்கு சென்றால் ஆஷிஷ், அம்ருதா
இருவரும் அந்தந்த தெய்வங்களுக்கு உண்டான மந்திரங்களைச்
சொல்லி பிரார்த்தி வருவதை பார்த்து திகைக்காதவர்களே
கிடையாது.
பார்கிற்கு சென்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்தால்
நன்றாக இருக்காது. அது மாதிரி கோவிலில் ஆர்ப்பரிக்கும்
சத்தத்துடன் பிள்ளைகள் விளையாடுவது அவர்களின்
முறையற்ற வளர்ப்பையே காட்டும்.
சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அழைத்துச் சென்றால்
பார்ப்பதை எல்லாம் பிள்ளை கேட்கிறான் என்பதற்காக
அழைத்துச் செல்லாமல் விட்டு விடுவதால்
அவனுக்கு அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்
என்பது தெரியாமலேயே போய்விடக்கூடும்.
பதிலாக குழந்தையிடமும் ட்ராலி ஒன்றைக் கொடுத்து
”நான் கொடுப்பதை ட்ராலியில் போட்டுக்கொண்டு
தள்ளிக்கிட்டு வரையா?” என்று பொறுப்பை
கொடுத்து பாருங்கள்..
இதுவும் பிள்ளை வளர்ப்புத்தானே! தெரியாமல்
இருப்பதனால்தான் பிள்ளைகள் தவறு செய்கிறார்கள்.
சொல்லிக்கொடுத்தால் போதும். சூப்பர் பிள்ளைகள்
ஆகிவிடுவார்கள்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
9 comments:
அக்கா நல்லா எழுதி இருக்கீங்க....!
/*எங்கே போகப்போகிறோமோ அதைப் பத்தி முதலில் பிள்ளைகளிடம் சொல்லிவிடுவேன்.(setting the mood). போகும் இடம்,அங்கு யார் இருப்பார்கள்? எப்படி நடந்து
கொள்ள வேண்டும்? எல்லாம் முன்பே
சொல்லி அழைத்து செல்வேன்*/
நல்ல பழக்கம்.. உண்மை தான் நாம் இப்பொழுது சொல்லாது விட்டால் யார் சொல்வார்கள்? நானும் இனி செய்கிறேன்...
//எங்கே போகப்போகிறோமோ அதைப் பத்தி முதலில் பிள்ளைகளிடம் சொல்லிவிடுவேன்.(setting the mood). போகும் இடம்,//
நல்ல பாயிண்ட். நோட் பண்ணிகிட்டேன். நன்னி ஹை. :)
அக்கா நல்லா எழுதி இருக்கீங்க....!
நன்றி நிஜமா நல்லவன்
நானும் இனி செய்கிறேன்...//
மிக்க மகிழ்ச்சி அமுதா.
நல்ல பாயிண்ட். நோட் பண்ணிகிட்டேன்.//
ஆஹா வாங்க அம்பி
நன்னி ஹை.//
டீக் ஹை :)
//எங்க எப்படி நடந்துக்கணும்னு// குழந்தைகளுக்கு எப்போ எப்படிச் சொல்லித் தரணும்னு அருமையா விளக்கியிருக்கீங்க தென்றல்.
குழந்தைகளுக்கு எப்போ எப்படிச் சொல்லித் தரணும்னு அருமையா விளக்கியிருக்கீங்க //
நன்றி ராமலக்ஷ்மி
Post a Comment