இப்போ பொதுவா எல்லா இடங்களிலும் நாம் பார்க்கும்
விடயம் கால்குலேட்டர்களின் பயன்பாடு. சாதாரணமான
கணக்குகளுக்கு கூட கால்குலேட்டரின் உதவி நாடப்படுகிறது.
ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையில் அப்படித்தான்
இருந்ததா? இது நாம் சற்று யோசிக்க வேண்டிய விடயம்.
முன்பு பள்ளிகளில் கணித வகுப்பில் வாரத்துக்கு ஒரு நாள்
மனக்கணக்கு வகுப்பு இருக்கும்.
ஆசிரியை கணக்கை போர்டில் எழுதுவது,
அல்லது சொல்வது அதை கூர்ந்து கவனித்து கணக்கை
மனதில் செய்து விடையை மட்டும் நோட்டில் எழுதவேண்டும்.
இப்போது பள்ளியில் இந்த முறை செய்ல்பாட்டில் இருப்பதாகத்
தெரியவில்லை.
Mental calculation
பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிபீடியா.
வாய்ப்பாடு எங்கே எப்படி கேட்டாலும் சொல்லத் தெரிந்திருக்கவேண்டும்.
அப்போதுதான் கணக்கை சரியாக போட முடியும். வாய்ப்பாடு
பல குழந்தைகளுக்குத் தெரிவதில்லை.(இதில் என் பிள்ளைகளும்
அடக்கம். அவர்கள் முன்பு படித்த பள்ளியில் வாய்ப்பாடு கற்றுக்
கொடுக்கவில்லை. அவர்கள் வேறு முறையில் செய்தார்கள்.
இப்போது வாய்ப்பாடை அவர்களே சொல்ல ரெக்கார்ட் செய்து
கேசட் கொடுத்துவிட்டேன் அதைக் கேட்டு கேட்டு நல்ல முன்னேற்றம்)
பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கிறார்களோ இல்லையோ
வீட்டில் நாம் பழக்கலாம். மனக்கணக்கு போட ஓரிடத்தில்
உட்கார்ந்து செய்ய வேண்டுமென்பது இல்லை. நாம்
வேலை செய்துக்கொண்டே பிள்ளைகளுக்கு மனக்கணக்கு
கொடுக்கலாம்.
மனக்கணக்கு போடுவதால் பயனென்ன?
1. நம் பிள்ளைகள் கால்குலேட்டரை நம்பி வாழப்போவது இல்லை.
2. மனக்கணக்கு போடுவதனால் மூளைவேலை செய்கிறது.
3. மனக்கணக்கு BRAIN TEASER ஆக உபயோகமாகிறது.
4. புத்தகம், பேனா கொண்டு செய்யும் கணக்குகளுக்கு
இடையே இது பிள்ளைகளுக்கு புத்துணர்ச்சி தரும்.
5. பிள்ளைகள் மிகவும் விரும்புவார்கள்.
புத்தக கடைகளில் மெண்டல் சம்ஸ் என்ற பெயரில்
பல புத்தகங்கள் கிடைக்கின்றன். பிள்ளைகளின்
வயதிற்கேற்ப அத்தைகய புத்தகங்களின் உதவியோடும்
கணக்கைச் செய்ய வைக்கலாம்.
கணக்கில் பலவித பயிற்சி கிடைக்க பிள்ளைகளுக்கு
ஏதுவாகிறது.
மனக்கணக்கு பயிற்சி செய்ய நாம் ஓர் இடத்தில்
உட்கார்ந்துதான் செய்ய வேண்டுமென்பதில்லை.
துணி மடிக்கும்பொழுது, சமையற்கட்டில்
வேலை செய்துகொண்டே கூட பிள்ளைகளுக்கு
மனக்கணக்கு கொடுக்கலாம்.
(லீவுக்கு பாட்டிவீட்டுக்கு செல்லும்பொழுது
பக்கத்துவீட்டில் ஒரு வயதான மாமா வருவார்.
மாயவரத்துக்காரர். மனக்கணக்கு நான் கற்றது
அவரிடம் தான். துணி துவைத்துக்கொண்டே
மனக்கணக்குச் சொல்வார். விடை சொல்ல
வேண்டும் சொன்னால் சாயந்திரம் சின்ன பரிசு
கிடைக்கும். :)) )
நம் பிள்ளைகளுக்கு மனக்கணக்கு கற்றுக்கொடுப்போம்
புத்திசாலிகளாக்குவோம்.
******************************************
இது பேரண்ட்ஸ் கிளப்பின் 100ஆவது பதிவு.
தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் மனமார்ந்த
நன்றிகள்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
36 comments:
உண்மைதான் என் அப்பா எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் மனக்கணக்காகவே முடித்துவிடுவார்...
ஆனால் நான்...ஹி,,,ஹி,,,
எங்கப்பாகூட கால்குலேட்டர் உபயோகிச்சதே இல்லை.
மனக்கணக்கின் அவசியம் பல நேரங்களில் உபயோகப்படுகிறது.
நூறாவது பதிவா பேரண்ட்ஸ் கிளப்பில்..
கலக்கல்தான்.
மேலும் பல நூறுகள் காண வாழ்த்துக்கள்
பல நூறுகள் காண வாழ்த்துக்கள்//
நன்றி சென்ஷி
வாழ்த்துகள்...
நல்ல பகிர்வு..
நான் கூட மனகன்க்காவே எல்லாம் calculation போட்டுவிடுவேன்
ஹி ஹி ஹி, உண்மைதான் புதுகை தென்றல் அக்கா.
நூறாவது பதிவா பேரண்ட்ஸ் கிளப்பில்
கலக்கல்தான்.
மேலும் பல நூறுகள் காண வாழ்த்துக்கள்!!
மனக்கணக்கு அவசியந்தான்...இது போன்ற அவசியமான பதிவுகளைத் தரும் பேரண்ட்ஸ் கிளப், இன்னும் பல நூறு இடுகைகளை அளிக்க வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஞானசேகரன்
மனக்கணக்காக போடுவது சுலபமாகிவிடுகிறதுதானே ரம்யா.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
பல நூறு இடுகைகளை அளிக்க வாழ்த்துக்கள்//
வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்
பொதுவா மணக்கணக்குல இந்தியர்கள் ரொம்ப கில்லாடி.
சரியா சொன்னீங்க. எங்கப்பா, அம்மா எல்லாம் ரொம்ப நல்லா மணக்கணக்கு போடுவாங்க. அதுல பாதி அறிவு தான் எனக்கு இருக்கு.
இந்த வகை புத்தகங்கள் எங்க கிடைக்குது? கடை முகவரி எல்லாம் கொஞ்சம் வெவரமா சொல்லுங்க.
நூறு பதிவுகளும் உபயோகமானவையே, அப்படியே ஆயிரம் பதிவுகளாகட்டும்.
ஒரு சின்ன யோசனை:
0 - 12 மாத குழந்தைகளுக்கு, 1-2,
2 to 3 and 3+ வயது வரைன்னு ஆலோசனை பதிவுகள் வந்தா எங்களுக்கும் உபயோகமா இருக்கும். :))
இந்த வகை புத்தகங்கள் எங்க கிடைக்குது? கடை முகவரி எல்லாம் கொஞ்சம் வெவரமா சொல்லுங்க. //
வாங்க அம்பி,
பள்ளிப்பாடப்புத்தகங்களி கிடைக்கும் கடைகளில் மெண்டல் மேத்ஸ் புக்ச் என்று கேட்டால் கிடைக்கும்.
(பிள்ளைகளுக்கு பரிசளிக்கவும் இவை உதவும்.)
அப்படியே ஆயிரம் பதிவுகளாகட்டும். //
அப்படியே செய்திடுவோம். வாழ்த்திற்கு நன்றி அம்பி.
நல்ல செய்தி... வாழ்த்துகள்....
0 - 12 மாத குழந்தைகளுக்கு, 1-2,
2 to 3 and 3+ வயது வரைன்னு ஆலோசனை பதிவுகள் வந்தா எங்களுக்கும் உபயோகமா இருக்கும்.//
பேரண்ட்ஸ் கிளப்பின் நோக்கமே எல்லா வயதுக் குழந்தைகளுக்கு உதவும் பெற்றோரை உருவாக்குவதுதான்.
சில பதிவுகள் நீங்கள் கூறியிருக்கும் வயது பிள்ளைகளுக்காக வந்திருக்கிறது.
இன்னும் நிறைய்ய வரும்
வாழ்த்துக்கு நன்றி விக்கி
நூறுக்கு வாழ்த்துகள்.
மனக்கணக்கு நல்ல பதிவு
நன்றி அமுதா
இந்த பதிவை பார்த்ததும் தான் மனக்கணக்கு என்பதே நினைவுக்கு வருகிறது. என்ன பண்ணுறது தொழில்நுட்ப வளர்ச்சி இந்த நிலைமையில் கொண்டு வந்து விட்டுடுச்சி. சரி விடுங்க. 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
I am very comfortable doing my math calculation without a calculator.//
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இது எப்படி சாத்தியமாச்சுன்னு ஒரு பதிவு போடுங்களேன் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.
இந்த பதிவை பார்த்ததும் தான் மனக்கணக்கு என்பதே நினைவுக்கு வருகிறது.//
:((
என்ன பண்ணுறது தொழில்நுட்ப வளர்ச்சி இந்த நிலைமையில் கொண்டு வந்து விட்டுடுச்சி.//
aamam
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!//
thank s a lot
100kku நூறு வாழ்த்துகள்
நன்றி ஜமால்
நூறுக்கு வாழ்த்துக்கள்.
எங்க காலத்தில [நம்ம:) ?] தினம் ஒரு வாய்ப்பாடு படித்து அசம்பளியில் சேர்ந்து சொல்ல வைப்பார்கள் 4,5ஆம் வகுப்பில். சேர்ந்து சொல்றதுதானேன்னு டிமிக்கி எல்லாம் கொடுக்க முடியாது. தப்பா வாய் அசைப்பதில் கப்பெனப் பிடித்து தனியா அத்தனை பேர் முன்ன சொல்ல வைப்பாங்க. பயத்தில படித்தது இன்றும் கணக்குப் போட உதவுது:)!
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;))
மனக்கணக்கு...ம்ம்ம் என்னாத்த சொல்ல இப்போ எல்லாமே இயந்திரம் ஆகிடுச்சி மனிதர்கள் கூட சேர்த்து தான்!
வாங்க ராமலக்ஷ்மி,
இப்ப ஸ்கூல்ல எங்க வாய்ப்பாடு.
வாய்ப்பாடு பத்தின என்னோட கொசுவத்தி சீக்கிரமா பதிவா வரும்.
ராமலக்ஷ்மி & கோபி வாழ்த்திற்கு் நன்றி
என்னாத்த சொல்ல இப்போ எல்லாமே இயந்திரம் ஆகிடுச்சி மனிதர்கள் கூட சேர்த்து தான்!//
பெருமூச்சு விட்டுக்கிடத்தான் முடியும்
வாழ்த்துக்கள் 100 வது பதிப்பிற்கு.
என் மகன் முதல் வகுப்பிலேயே வாய்ப்பாடு எப்படிக் கேட்டாலும் சொல்லுவான். இப்பொழுது 25 ஆல் பெருக்க 100ஆல் பெருக்கி 4ஆல் வகுக்கலாமே என்பான். இது அவன் அப்பா வீட்டில் விளையாட்டாய் சொல்லிக்கொடுத்தது.
ஆசிரியரே பாராட்டியிருக்கிறார்.
ஆனால் இவன் செய்த குறும்பு என்ன தெரியுமா? ஒரு தேர்வில் [4 ஆம் வகுப்பில்] 3 digit multiplication ஐக் கூட வழி இல்லாமல் [steps] நேரிடையாக விடை எழுதிவிட்டான். ஏன் என்று கேட்டதற்கு இது சரியான பதில் தானே என்கிறான். அவன் பள்ளீயில் assessment தான் exam என்று இல்லை என்பதால் அடுத்தமுறை steps ம் எழுதவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்
வீட்டில் அவன் விளையாடும் விளையாட்டே யார் சீக்கிரமாக விடை சொல்வது [அப்பாவும் பிள்ளையும் மட்டும் தான்] என்பதுதான்.
ஆங்கிலத்திலும் spelling எந்த புது வார்த்தையாக இருந்தாலும் சொல்லிவிடுவான்.
நூறாவது பதிவினிற்கு நல்வாழ்த்துகள்
முன்பு பள்ளிகளில் கணித வகுப்பில் வாரத்துக்கு ஒரு நாள்
மனக்கணக்கு வகுப்பு இருக்கும்.
ஆசிரியை கணக்கை போர்டில் எழுதுவது,
அல்லது சொல்வது அதை கூர்ந்து கவனித்து கணக்கை
மனதில் செய்து விடையை மட்டும் நோட்டில் எழுதவேண்டும்.
///
இப்போது இருக்கிற மாதிரி தெரியலியே11
I am very comfortable doing my math calculation without a calculator.///
டெல்பின் சொல்வது உண்மை!! நாம் படித்தபோது கால்குலேட்டர் உபய்யோகிக்கக்கூடாது!
Congrats!! All the best.. I am vivid reader of the club.
VS Balaje
(father of nisha and ananya)
மிக நல்ல பதிவு.
முதல் முறை பார்க்கிறேன்.
எனுக்கும் கணக்கு மிகவும் பிடிக்கும்.நீங்கள் சொல்வது மிகவும் சரி.
புலம் பெயர்ந்தாலும் என் குழந்தைகளுக்குக் கூட வாய்பாடு சொல்லிக் கொடுக்க முயற்சிக்கிறேன்.கணிதம் பற்றி என் வலைப் பதிவில் தொடர்ந்து எழுதுகிறேன்.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
பயன் தரும் பதிவுகள்...அம்மா அக போகிற எனக்கு ரொம்பவே பயனுள்ள செய்திகள்
நூறாவது பதிவோடு நிற்கிறதே. நல்லவிஷயம் தொடரட்டுமே.
Post a Comment