பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பேரண்ட்ஸ் கிளப் ஆரம்பித்ததின் நோக்கமே ஒரு
வளமான எதிர்காலத்தை வளரும் குழந்தைகளுக்கு
பெற்றோர் வழங்க தங்கள் அனுபவங்களை பகிர்ந்து
பதிவு செய்து உதவி புரிந்து கொள்ளவே.

சென்ற மாதம் ஒரு மடல் பேரண்ட்ஸ் கிளப் ஐடிக்கு
வந்திருக்கிறது. நான் ஓய்வில் இருந்தது அனைவருக்கும்
தெரிந்தது. இன்றுதான் அந்த ஐடியை திறந்து பார்த்தேன்.
அதிர்ச்சியூட்டும் வரிகளுடன் ஒரு மடல் வந்திருந்தது.

25 வயதுக்குழந்தை ஒன்று தனது பருவத்தில் திகழ்க்க
வேண்டிய மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டதாக
சொல்லியிருந்த மடல் அது. எனக்கு ஏதாவது உதவி
செய்யுங்கள் என்று கேற்றிருக்கிறார்.

கிராமங்களில் இன்னமும் மனம், மணம் மாறா
மக்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும்
இந்த வேளையில் இவரின் மடல் பரிதாப நிலையைச்
சொல்கிறது.


மனம் நொந்து மடல் வடித்திருக்கும் அந்த நண்பரின்
பெற்றோர்கள் இருவருக்கு வயது 55, 50 வயதாகிறதாம்.
தந்தை விவாகரத்துக்கு கோறியிருக்கிறாம்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்த இருவரும் பத்தாம் வகுப்பு
வரை படித்தவர்களாம். இவர்களின் கையாலாகாத
தனத்தால் இவர்களின் மகளின் வாழ்வும் நாசமாகி
அவருக்கும் திருமணமாகி விவாகரத்து வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

தனது இந்த நிலை மன உளர்ச்சிக்கு ஆளாக்குவதாக
எழுதியிருக்கிறார்.” கிராமத்தில் பிளர்ந்து வளர்ந்த
எனக்கு என் வீட்டில் இப்படி ஒரு நிலை வரும் என்பதை
ஜீரணிக்க முடியவில்லை!” என்று எழுதியிருக்கிறார்.
பிரச்சனைகளின் காரண கர்த்தாக்களான பெற்றோர்களிடம்
கெஞ்சி, கூத்தாடி அறிவுரை சொல்லி என எத்தனையோ
செய்து பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில்
இருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய கோரி மடல்
அனுப்பியிருக்கிறார்.


இந்த பிரச்சனைக்கு சுமூகமான விடை பெற
தமிழகத்தில் உங்கள் யாருக்காவது தெரிந்த
marriage counsellerஇருந்தால் தனக்குத் தெரியப்படுத்தி
உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
pshycologis பார்க்க பெற்றோர்களும், சகோதரியும்
ஒத்துக்கொள்ளவில்லை போல் தெரிகிறது.

பெயரை மாற்றியாவது என் மடலை தங்களின்
வலைப்பூவில் வெளியிட வேண்டுகிறேன்,  என்
கண்ணீர் கதையைப் படித்தாவது சில பெற்றோர்கள்
திருந்தட்டும் என கேட்டிருப்பதால் பதிவிட்டிருக்கிறேன்.

உங்களால் ஆன உதவியை செய்ய வேண்டுகிறேன்.

12 comments:

what kind of help they need? i am ready to help them out

சட்ட ரீதியாகவா ?
மனோ ரீதியாகவா ?

சீக்கிரம் மன அமைதி கிட்ட பிரார்த்தனைகள்.

வாங்க எல் கே,

நல்ல மேரெஜ் கவுன்சிலர் உதவி தேவையாம்.

வருகைக்கு நன்றி

மன அமைதிக்குத்தான் வழி தேடுகிறார் ஜமால்

நன்றி ஹுசைனம்மா

நம்மூரில் இது ஒரு பிரச்சினைதாங்க. அதிலும் கிராமத்து மக்கள்ன்னா.... கவுன்ஸலிங் செஞ்சுக்கச் சம்மதிக்க மாட்டாங்க. எங்க வீட்டு விஷயத்துலே மூணாவது மனுசர் ஏன் நுழையணும்பாங்க:(

தாய்தகப்பன் விவாகரத்து கேட்டால், கூடவே இந்தப் பொண்ணும் விவாகரத்து செய்யணுமுன்னு சொல்றாங்களா? இது என்ன அக்கிரமம்!

எனக்காக வருத்தப் படும் அனைவருக்கும் மிக்க நன்றி. நண்பர் புதுகைத் தென்றல் அவர்களுக்கு ஒரு மிக நீண்ட .. மடல் ஒன்றை அனுப்பி வைத்து இருக்கிறேன்... நேரம் இருந்தால் படிக்கவும்... நன்றி.

எனக்காக வருத்தப் படும் அனைவருக்கும் மிக்க நன்றி. நண்பர் புதுகைத் தென்றல் அவர்களுக்கு ஒரு மிக நீண்ட .. மடல் ஒன்றை அனுப்பி வைத்து இருக்கிறேன்... நேரம் இருந்தால் படிக்கவும்... நன்றி.

//நல்ல மேரெஜ் கவுன்சிலர் உதவி தேவையாம்.//

one of my friend can do that. i will confirm with her and let you know :)

எனது நண்பர் LK உங்களிடம் குறிப்பிட்ட தோழி நான் தான். பதிவை முழுதும் படித்தேன் மனம் கனக்கவே செய்கிறது. ஆனால் சரிபடுத்த கூடிய விசயமாக தான் தோன்றுகிறது . நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.

உங்களது contact id யை தெரிவியுங்கள். உதவி செய்ய காத்து இருக்கிறேன்.

நன்றி சகோதரி.
எனது மின்னஞ்சல் முகவரி, tamil491985@gmail.com. தயவு செய்து தங்களுடைய கைப்பேசி என்னை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நான் உங்களை அழைக்கிறேன். உங்களுடைய வலைபூவினைப் பார்த்தேன் அனால் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடிக்க இயலவில்லை. தங்களின் வலைப் பூவில் உள்ள ஒவ்வொரு விசயமும் சிறப்பாகவும், தெளிவான விரிவானப் பார்வையுடன் எழுதப் பட்டு இருக்கிறது.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்