பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

வணக்கம்,

உங்களையெல்லாம் சந்திச்சு ரொம்ப நாளாச்சு. C.B.S.C பாடத்திட்டத்தில்
இப்பொழுது பல மாறுதல்கள். பாடத்தை மனப்பாடம் செய்து
பரிட்சை எழுதி மார்க் வாங்கிய காலமெல்லாம் போயிடிச்சு.

இப்போ சப்ஜெக்டுகளுடன் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிஸுக்கும்
மதிப்பெண் கொடுக்கப்படுது. பாட்டு, யோகா, படம் வரைதல்
என எத்தனையோ இருக்கு.

ரேங்கார்டில் உங்கள் குழந்தையின் நடவடிக்கைகள், ப்ராஜக்ட்களை
முறையாக சொன்ன தேதியில் சமர்ப்பித்தல், என பல அம்சங்களும்
சேர்க்கப்படுது. CONTINUOUS ASSESSMENT மூலம் பாடங்கள் மதிப்பீடு
செய்யப்படுவது போல மேற்சொன்னவைகளையும் பார்க்கிறார்கள்.
ஆகவே குழந்தையின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தால்
உட்கார வைத்து பேசுங்கள். பள்ளியில் அன்றாடம் என்ன நடக்கிறது?
என கேட்டுத் தெரிந்து ப்ராஜக்ட் சரியாக சமர்ப்பிக்கிறார்களா? என
பார்க்க வேண்டியதும் நம் கடமை.



இந்த ப்ராஜக்ட் பத்தி பேசும் பொழுது அது என்னவோ பெற்றவர்களுக்கு
தரப்படுவது போல நினைக்கும் சூழல் ஏற்படுகிறது. நாம் செய்து
கொடுப்பதற்கு பதில், அருகிலிருந்து செய்ய உதவ வேண்டும்.
பல ப்ராஜக்டுகளுக்குத் தேவையான படங்கள் கடைகளில் கிடைப்பதில்லை.
ஆகவே, வீட்டில் கணிணி,இண்டர்நெட் கனெக்‌ஷன்,
பிரிண்டர் ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டது. தனக்குத் தேவையான
விவரங்களை அவர்கள் தேடி கண்டுபிடித்து, வேர்ட் டாக்குமெண்டில்
போட்டு எப்படி பிரிண்ட் எடுப்பது என்பதை சொல்லிக்கொடுப்பது
அவசியம். நாமும் கவனமாக அவர்களை கண்காணிப்பது அவசியம்.



ப்ராஜக்டுக்கு தேவையான சில உதவிப் பொருட்களை முன்னக்கூடியே
வாங்கி வைத்துக்கொள்தல் நல்லது. அப்பொழுதென்று ஓட முடியாது.
ஒரு மினி ஷ்டேஷனரி ஷாப் போல சார்ட், க்ளூ, வகை வகையாக
வெட்டும் கத்திரிக்கோல், செலோ டேப், கலர் செலோடேப்கள்,
ஹேண்ட் மேட் பேப்பர், ஸ்ட்ரா, ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ்( ஷ்டேஷனரி
ஷாப்பில் கிடைக்கும்), சாடின் ரிப்பன், சின்னசின்ன ஸ்டிக்கர்ஸ்,
நெற்றிக்கு வைக்கும் பொட்டுக்கள், கலர் நூற்கண்டு, ஊசி செட்,
என ஏற்பாடு செய்து வைத்துக்கொள்வதால் பிள்ளைகள் ப்ராஜக்டை
நேரத்தில் சமர்ப்பிக்க நாமும் உதவ முடியும். கடைசி நேரத்தில்
சொல்கிறாயே என பிள்ளைகளிடம் கோவப்படாமல் இருக்கவும்,
கடைசி நேரத்தில் கடைக்கு ஓடுவதை தவிர்க்கவும் இந்த முன்னேற்பாடுகள்
அவசியமாக இருக்கும்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். அதே போல வெறும்
மனனம் செய்து மதிப்பெண் வாங்குவது வாழ்க்கைக்கு போதாது
என்பதால்தான் இந்த மாற்றம் கல்வித்துறையில் வந்திருக்கு. நல்லதொரு
மாற்றம் தான். மாற்றத்தை நாமும் உணர்ந்து குழந்தைகளுக்கு
உதவி செய்வோம்.

12 comments:

உபயோகமுள்ள பகிர்வு சகோ... பகிர்வுக்கு நன்றி.

நல்ல பதிவு தென்றல் .

//இந்த ப்ராஜக்ட் பத்தி பேசும் பொழுது அது என்னவோ பெற்றவர்களுக்கு
தரப்படுவது போல நினைக்கும் சூழல் ஏற்படுகிறது. நாம் செய்து
கொடுப்பதற்கு பதில், அருகிலிருந்து செய்ய உதவ வேண்டும்.
பல ப்ராஜக்டுகளுக்குத் தேவையான படங்கள் கடைகளில் கிடைப்பதில்லை.
ஆகவே, வீட்டில் கணிணி,இண்டர்நெட் கனெக்‌ஷன்,
பிரிண்டர் ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டது. தனக்குத் தேவையான
விவரங்களை அவர்கள் தேடி கண்டுபிடித்து, வேர்ட் டாக்குமெண்டில்
போட்டு எப்படி பிரிண்ட் எடுப்பது என்பதை சொல்லிக்கொடுப்பது
அவசியம். நாமும் கவனமாக அவர்களை கண்காணிப்பது அவசியம்//

அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அருகில் இருந்து கண்காணிப்பது சுவாரஸ்யமானது கூட.

ந‌ல்ல‌தொரு வ‌ழிகாட்ட‌ல்!

வருகைக்கு நன்றி சகோ

மிக்க நன்றி கார்த்திகா

மிக்க நன்றி நிலாமகள்

ஆமாப்பா, இப்ப இந்த CCE-யினால சில மாற்றங்கள் இருக்கு. செமினார், சார்ட் பேப்பரில் படங்கள், அஸைன்மெண்ட்ஸ், க்விஸ் கொடுக்கிறாங்க. செமினார் தவிர மீதி எல்லாமே முன்னாடியே இருக்கிறதுதான் (ஆசிரியர்களைப் பொறுத்து). இப்ப எல்லா சப்ஜெக்ட்டுக்கும் கட்டாயமாக்கிட்டாங்க.

உபயோகமுள்ள பகிர்வு... thanks

நல்ல பதிவு நண்பா
வாழ்த்துக்கள்.......


நண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது
ஓடிவாங்கோ..........

Please correct "CBSC" as C.B.S.E., it is the short form for Central Board for Secondary Education.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹுசைனம்மா

நன்றி அப்பாவி தங்கமணி

வருகைக்கு நன்றி விடிவெள்ளி.

நன்றி அழகன். மாற்றிவிட்டேன். சுட்டிகாட்டியதற்கு மிக்க நன்றி

உபயோகமான யோசனை நன்றி

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்