வலையுலக நட்புக்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ரொம்ப நாளைக்கப்புறம் பதிவு அதுவும் ஒரு அழகான படத்துக்கு. சந்தோஷமா ஆரம்பிக்கறேன்.
ஆஹா ஓஹோன்னு எதிர்பார்பெல்லாம இல்லாம தியேட்டருக்கு போனீங்கன்னா உங்களுக்குள்ள ஒரு மாற்றத்தோட வெளியில வருவீங்க. இதை எதிர் பார்த்துதான் டைரக்டர் பாண்டிராஜ் ( பசங்க படம் எடுத்த அதே புதுக்கோட்டை பாண்டிராஜ் தான்) இந்த படத்தை உருவாக்கியிருக்கார்.
முந்தைய படம் எங்க புதுகையில் நடக்கறாப்ல இருக்கும். ஸ்லாங்க் கூட அப்படியே வரும். இந்த படத்தோட களம் சிட்டி. நகர வாழ்க்கையில் இருக்கும் பிள்ளைகளின் பிரச்சனையை சொல்லியிருக்கார். கதைன்னு கேட்டா வழக்கமான ஒன்லைன். பிரச்சனையுடைய பிள்ளைகள், அது என்னன்னு தெரியாம, எப்படி ஹேண்டில் செய்ய தெரியாத பெற்றோர்கள் ரெண்டு பேருக்கும் நடக்கும் போராட்டம், அதற்கான தீர்வு இதுதான்.
சுட்டி கவின் மற்றும் அவனுடைய பெற்றோர், குட்டி சுட்டி நயனா மற்றும் பெற்றோர் இவங்களுடன் டாக்டர் தமிழ்நாடனாக வரும் சூர்யா, அமலா பால் (வெண்பா டீச்சர்) இவங்க பிள்ளைங்க. இவங்களை சுத்திதான் கதை நகருது.
கவினுக்கும் நயனாவுக்கும் ஒரே பிரச்சனை. ஒரு இடத்துல அவங்களால உட்கார முடியாது, குறும்பு சேட்டை, கவனக்குறைவு அதனால படிப்பு சுமார், இதனால பள்ளிகள் அப்பார்ட்மெண்ட்கள் மாற்றம்னு அவஸ்தை. அவங்களை ஹாஸ்டலில் போடுவதுதான் தீர்வுன்னு முடிவு செஞ்சு அதை அமுலாக்கற பெற்றோர். ஆனா அது தேவையில்லைன்னு தன்னுடைய அணுகுமுறையால புரிய வைக்கிறார் டாக்டர். தமிழ்நாடான்.
குழந்தைகளின் உலகம் வேற . அதுக்குள்ள நாம இருக்கணும். நானும் இந்த ஸ்டேஜெல்லாம் கடந்து தான் வந்திருக்கேன்லாம் சொல்லலாம். ஒவ்வொரு பிள்ளையும் வேறு. ஆனா பிசியா ஓடிக்கிட்டு இருக்கற பெற்றோருக்கு குழந்தைகளின் அழகு உலகை புரிஞ்சிக்க நேரம் இருக்கா என்பது கேள்விக்குறி தான்? அவங்களை புரிஞ்சிக்காம அவங்க அவஸ்தைகளை புரியாம பிள்ளைகளையே பிரச்சனையா பாக்கறது நடக்குது.
ADHD நம்ம வலைப்பூல இதைப்பத்தி நிறைய்ய எழுதியிருக்கோம். குழந்தைகள் அதிகமா டீவி பார்க்க விடறது, மொபைல், ஐபேட், வீடியோ கேம்ஸ் அதிகமா உபயோகிப்பது இதெல்லாம் முக்கியமான காரணங்கள். இதைப்பத்தி கொஞ்சம் அதிகமா டாக்டரின் பார்வையிலாவது சொல்லியிருக்கலாம். ஆனா முக்கியமான பாயிண்டை பிடிச்சு சொன்னதற்காக டைரக்டருக்கு பூங்கொத்து கொடுக்கறேன்.
மாண்டிசோரி கல்வி முறையில 0-7 வருடங்கள் ரொம்ப முக்கியமானது. அப்படி பார்த்தா கரு உருவானது முதலே வளர்ச்சி துவங்குது. ரொம்ப முக்கியமான கட்டம் கருவறைப்பாடம் தான். தாய் என்ன சூழ்நிலையில் இருக்காங்க, கணவன் மனைவி உறவு எப்படி இருக்கு, என்ன சாப்பிடறாங்க, என்ன செய்யறாங்க, என்ன நிகழ்ச்சி பாக்கறாங்க, எதை விரும்பி செய்யறாங்க இதெல்லாம் குழந்தைக்கும் பாதிப்பு உண்டாக்கும். கருவிலேயே சக்கரவ்யூகத்துக்குள் போக கத்துக்கிட்ட அபிமன்யு, விஷ்ணுவின் கதையை கருவிலேயே கேட்டதால விஷ்ணு பக்தியுடன் பிறந்த பிரகலாதன் இவர்களை நினைவு படுத்திக்கணும். கவின், நயனா அம்மாக்கள் அவர்களை கருவுற்றிருந்த காலத்தில என்னென்ன செஞ்சாங்கன்னு காட்டியிருக்கார் டைரக்டர். அதை கவனிக்காம விட்டாங்கன்னா படத்தில் பிள்ளைகள் செய்யும் குறும்புக்கான புரியாம போயிடும். அப்புறம் படத்துல கதை என்ன? என்ன சொல்லவர்றாரு டைரக்டர்னு புரியாம போயிடும்.
பிள்ளைகள் நல்லவங்களா இருந்தாலும் கெட்டவங்களா இருந்தாலும் அளவோடு குறும்பு செஞ்சாலும், அளவுக்கதிகமா குறும்பு செஞ்சாலும், அடுத்த பிள்ளைகளை அடிப்பது, கடிப்பது இப்படி செஞ்சாலும் அது பெற்றோர் வளர்ப்பு குறைபாடுதான். ஆனா இதை பெற்றோர் சிலர் ஒத்துக்க மாட்டாங்க.
குழந்தை பேறுங்கறதை செல்வம்னு சொல்வாங்க. பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதாது. அவர்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு எடுத்து பாத்து பொறுப்பா செய்ய வேண்டிய விஷயம். அதை இந்தப்படம் இன்னொரு வாட்டி தெளிவா புரிய வெச்சிருக்கு. நல்ல சூழலை உருவாக்கி கொடுத்து, நாம ஒரு உதாரணமா அவங்களுக்கு வாழ்ந்து காட்டி, அவர்கள் உதவியோடு அவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து பார்த்து அனுபவித்து மகிழ்வது சுகம். இது தான் இப்போதைய அத்தியாவசிய தேவையும் கூட.
HAPPY PARENTING. HAPPY NEW YEAR 2016

1 comments:
Comment poda aal illama poche !!
Post a Comment