2007 டிசம்பரில் ஹைதைக்கு வந்திருந்த பொழுது
“தாரே ஜமீன் பர்” ஹிந்தித் திரைப்படம் பார்த்தோம்.
படம் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே மனதில்
பலவகையான ஓட்டங்கள்.
“நீயும் ஒரு ஆசிரியைதானே? நீ என்ன
சாதித்திருக்கிறாய்” என்றுதான் என் மனசாட்சி
என்னிடம் முதலில் கேட்டது.
“என்னால் என்ன செய்ய முடியும்? நானும்
ஒரு சாதாரண மனுஷிதானே?” இது என்
பதில்.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகும்
தொடர்ந்து எங்கள் உரையாடலின் தாக்கமே
இந்த வலைப்பூ. 16.01.08 அன்று தொடங்கப்பட்டது.
பெற்றோர்கள் ஒன்று கூடி நமக்குள்
ஓரு விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும்,
ஒருவரின் அனுபவம் மற்றவருக்கு உதவுமானால்
பகிர்ந்துகொள்ளவும் ஒரு களமாக இருக்கத்தான்
இந்த வலைப்பூ.
நண்பர் இம்சை வெங்கியின் உதவியுடன்
அமோகமாக துவங்கப்பட்டு இன்று
* நந்து f/o நிலா
* இம்சை
* விசயக்குமார்
* பாச மலர்
* புதுகை.அப்துல்லா
* சுரேகா..
* Jeeves
* வெண்பூ
* புதுகைத் தென்றல்
* கிருத்திகா என இந்த வலைப்பூவின்
உறுப்பினர் பட்டியல் நீள்கிறது.
இந்த வலைப்பூவிற்கு ஆதரவளித்த அனைவருக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து உங்களின் ஆதரவோடு பல நல்ல
பதிவுகளை இந்த வலைப்பூ தரவிருக்கிறது.
இதில் சேர்ந்துகொள்ள விரும்புவோர்கள்
சேர்ந்துகொள்ளலாம்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
40 comments:
மீ த ஃபர்ஷ்ட்டூ :)
முதல்ல நீங்க சேர சொல்லயில இமேஜ் போய்ரும்னு நினைச்சேன் :)
அப்புறம் ஒழுங்கா வளர்க்கலன்னா பிள்ளையே போய்ரும்ன்னு மரியாதையா சேர்ந்துட்டேன்.
:))))
அட ஒருவருஷம் ஆச்சா நம்ப கிளப் ஆரமிச்சு !!!
ஒரு வருசம் ஆச்சா? வாழ்த்துகள்..
//
முதல்ல நீங்க சேர சொல்லயில இமேஜ் போய்ரும்னு நினைச்சேன்
//
ஹி..ஹி.. எனக்கெல்லாம் அது இல்லைன்றது தெரிஞ்சதால நீங்க கேட்டவுடனே சேந்துட்டேன்.. :)))
வாங்க அப்துல்லா,
நம்ம வலைப்பூவின் கொண்டாட்டத்திற்கு முதலா நீங்க வந்தது சந்தோஷம்.
பேர் சொல்லும் பிள்ளையாக வாழ்த்துகிறேன்!
வாங்க வெண்பூ,
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
கூட்டுறவின் அர்த்தம்:
மக்களுக்காக மக்களால் தொடங்கப்பட்ட இயக்கம்.
பேரண்ட்ஸ் கிளப்பின் அர்த்தம்:
பெற்றோர்களுக்காக, பெற்றோர்களால் நடத்த்ப்படும் வலைப்பூ.
எங்களுக்கு புது சொக்கா, நிறைய பொம்மைகள் அப்புறம் லாலி பாப், பிக்கோத்து எல்லாம் வாங்கித் தரணும்!
பேர் சொல்லும் பிள்ளையாக வாழ்த்துகிறேன்!//
நன்றி சிபி.
எங்களுக்கு புது சொக்கா, நிறைய பொம்மைகள் அப்புறம் லாலி பாப், பிக்கோத்து எல்லாம் வாங்கித் தரணும்!//
அதெல்லாம் அப்துல்லா, வெண்பூ, நந்து டிபார்ட்மெண்ட்.
:))))))))))
//அதெல்லாம் அப்துல்லா, வெண்பூ, நந்து டிபார்ட்மெண்ட்.
//
இங்க பாருடா இந்த அக்காவ...நைஸா நம்பள மாட்டிவுடுறத :))
பேரண்ட்ஸ் கிளப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எங்கள மாதிரி சின்னப் பசங்களுக்கு எல்லாம் மிட்டாய் குடுங்க.
இப்பக் கூட பேரண்ட்ஸ் எல்லாம் சொல்ற மாதிரி மிட்டாய் எல்லாம் சாப்புட கூடாதுடான்னு திட்டாதீங்க.
// Namakkal Shibi said...
எங்களுக்கு புது சொக்கா, நிறைய பொம்மைகள் அப்புறம் லாலி பாப், பிக்கோத்து எல்லாம் வாங்கித் தரணும்!
//
சொன்னபடி கேட்டு சமர்த்தா இருந்தா அண்ணே குச்சி மிட்டாயும்.குருவி ரொட்டியும் வாங்கித்தருவேன்..ஓக்கேய்ய்ய்யா சிபி பாப்பா ???
வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
இங்க பாருடா இந்த அக்காவ...நைஸா நம்பள மாட்டிவுடுறத //
:)))))))))))))))
பேரண்ட்ஸ் கிளப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். //
நன்றி ஜோசப்.
மிட்டாய் சாப்பிட்டா திட்டமாட்டோம்.
:)
வாழ்த்துக்கள் அனைவருக்கும்...//
மனமார்ந்த நன்றிகள் ஜமால்.
\\"தாமதாமாக ஒரு கொண்டாட்டம்."\\
தாமதமாக என் வாழ்த்து ...
வாழ்த்துக்கள் :)))))
தாமதமாக என் வாழ்த்து ...//
நன்றி ஜமால்
வாழ்த்திற்கு நன்றி ஆயில்யன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இன்னும் பல பதிவுகள் தந்து பெற்றவர் மனம் குளிர வையுங்கள்! சந்தேகங்கள் தீர்த்து வையுங்கள்! ஆலோசனைகளை அள்ளி வழங்குங்கள்!
உறுப்பினராக இல்லாவிட்டாலும் வெளியிலிருந்து ஆதரவு தரும் எம்.எல்.ஏ [ரொம்பத்தான் நினைப்பு:)] கணக்கா...
இரண்டு பதிவுகள் போட்ட பெருமிதத்திலும் பல விவாதங்களில் கலந்து கொண்டு பயனுள்ள பல தகவல்கள் பெற்ற சந்தோஷத்திலும்...
பேரண்ட்ஸ் கிளப்பின் மகுடமான குறள் கதைகளில் என் கதையும் இருக்கிற மகிழ்ச்சியிலும்...
அங்கத்தினரை வாழ்த்தி என்னையும் வாழ்த்திக்கிறேன்:)!
உறுப்பினராக இல்லாவிட்டாலும் வெளியிலிருந்து ஆதரவு தரும் எம்.எல்.ஏ//
ஆமாங்க எம்.எல்.ஏ உங்களை மறந்திட்டேன் பாருங்க.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்னும் பல பதிவுகள் தந்து பெற்றவர் மனம் குளிர வையுங்கள்! சந்தேகங்கள் தீர்த்து வையுங்கள்! ஆலோசனைகளை அள்ளி வழங்குங்கள்!//
நம் உறுப்பினர்களும் வெளியில் இருந்து ஆதரவு தர்றவங்களும் கேட்டுக்கோங்கப்பா.
நம்பளையும் சேர்த்துக்கோங்கப்பா ...
மனமார்ந்த வாழ்த்துக்கள்
///புதுகைத் தென்றல்
அருமையான கருத்துக்கள், அலசல்கள்.
தாங்கள் விரும்பினால் இந்தப் பதிவை பேரண்ட்ஸ்கிளப்பில் வலைப்பூவிலும் ஏற்றலாம்.
பலருக்கும் உபயோகமாக இருக்கும்.
////
புதுகை அக்கா இந்த பதிவை இங்கு எப்படி சேர்ப்பது.
உங்க மெயில் ஐடியை pdkt2007@gmail.comக்கு அனுப்புங்க.
நீங்களும் கிளப்பில் உறுப்பினாராகிடலாம்.
வாழ்த்துக்கள். கொஞ்சம் சில நாட்களாகத் தான் நான் இந்த வலைப்பபூவ படிக்கறேன். ஒவ்வோரு பதிப்பும் ஆழமாகவும், அழகாகவும் இருக்கு.
@ராமலக்ஷ்மி,
//உறுப்பினராக இல்லாவிட்டாலும் வெளியிலிருந்து ஆதரவு தரும் எம்.எல்.ஏ [ரொம்பத்தான் நினைப்பு:)] கணக்கா...//
:-)
@புதுகைத் தென்றல் said...
//உங்க மெயில் ஐடியை pdkt2007@gmail.comக்கு அனுப்புங்க.
நீங்களும் கிளப்பில் உறுப்பினாராகிடலாம்.//
கிளப்பில் உருப்பினராக என்ன க்வாலிஃபிக்கேஷன் இருக்கனும்?
Good Blog .. all the best...I reading all the articles.. Great help..
VSB
(Father of Nisha and Ananya)
நம்பளையும் சேர்த்துக்கோங்கப்பா ...//
இப்போ கொஞ்சம் பிசி. பிப்ரவரி முதல் வாரத்தில் ஞாபகமாய் ஒரு மெயில் அனுப்பிவிடுங்க ஜமால்
வாழ்த்துக்கு நன்றி அமுதா.
ஒவ்வோரு பதிப்பும் ஆழமாகவும், அழகாகவும் இருக்கு.//
தங்களின் இந்த பின்னூட்டம் எங்களுக்கு நல்லதொரு ஊக்குவிப்பாக இருக்கிரது. நன்றி
கிளப்பில் உருப்பினராக என்ன க்வாலிஃபிக்கேஷன் இருக்கனும்?//
குவாலிஃபிக்கேஷன் ஏதும் தேவையில்லை. பிள்ளைவளர்ப்பு, பெற்றோருக்கு உதவ என உங்களின் எண்ணங்களை, அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். (நெட்டிலிருந்து மொழியாக்கமும் செய்யலாம் :))) )
Good Blog .. all the best...I reading all the articles.. Great help..
VSB
(Father of Nisha and Ananya)//
மகி்ழ்ச்சி. நன்றி
வருடம் ஒன்றாகிவிட்டதா?
Post a Comment