லீவு விட்டா போதும் நான் மாமா ஊருக்கு போறேன்,
அத்தை வீட்டுக்கு போறேன், பாட்டி வீட்டுக்கு போறேன்னு
திட்டம் போட்டது ஞாபகம் இருக்கா!
தொந்தரவு விட்டா சரின்னு வீட்டு பெரியவங்களும்
கொண்டு போய் அவங்க வீட்டுல தள்ளிட்டு வந்திடுவாங்க. :))
அப்படி போனதுனாலத்தானே நமக்கு வெளியுலகம்
தெரிஞ்சுச்சு? அப்பா, அம்மாகிட்ட இருக்கற உலகம்
வேற, அடுத்தவங்க வீட்டுல நாம எப்படி அட்ஜஸ்ட்
செஞ்சுக்கணும், இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டோமே!
இப்ப நாம குழந்தைகளை அடுத்தவங்க வீட்டுக்கு
அனுப்ப ரொம்பவே யோசிக்கறோம். நாம்
பாத்துக்கற மாதிரி அவங்க பாத்துக்க மாட்டாங்க!
குழந்தை கஷ்டப்படும், அவங்களுக்கு ஏன் தொந்திரவு?
இப்படி யோசிச்சு நாம போகும்போது மட்டும் தான்
குழந்தையை கூட்டிகிட்டு போறோம், நம்மளோடையே
திரும்ப கூட்டிகிட்டு வந்திடறோம்.
(இப்ப பல உறவினர்கள் வீட்டுல அவங்க பேரக்
குழந்தை வெளிநாட்டுல இருக்க இவங்க தனியா
இருக்கறதுனாலையும் நாம அனுப்பறதில்லை)
நாம் கத்துகிட்ட மாதிரி நம்ம பிள்ளைகள் கத்துக்கறது
எப்படி?
1 அல்லது 2 குழந்தைகள்
ஓர் இடத்தில் சேர்ந்து பேசி, மகிழ்ந்து,
தூங்குவதுதான் SLEEPOVER NIGHTS.
(இது இனிமையான நினைவுகளை
பிள்ளைகளுக்குத் தரும்)
SLEEPOVER NIGHTS குழந்தைகளுக்கு பல
நல்ல விஷயங்களை கத்துக்கொடுக்கும்.
உள்ளூரில் உங்களுக்கு நெருங்கினத் தோழி
இருக்காங்களா? அவங்களுக்கும் உங்க குழந்தை
வயது பிள்ளை இருக்கா? அது போதும்.
ஒரு வார இறுதியில் அவங்க குழந்தையை
உங்க வீட்டுக்கு அனுப்பச்சொல்லுங்க.
இல்லைன்னா உங்க குழந்தையின் நண்பர்களை
அழைங்க.
அவங்களுக்கு விருப்பமான உணவு,
விளையாட்டு, டீவிடி பார்த்தல்
என செம ஜாலியாக பிள்ளைகள்
இருப்பார்கள். கொஞ்சம் ரிலாக்ஸாக
இது உதவும்.
இதே போல் அவரின் வீட்டுக்கும்
உங்கள் குழந்தையை அனுப்பலாம்.
(குழந்தை மட்டும் தாங்க போகணும்)
எப்போதும் பெற்றோருடனே ஒட்டிக்கொள்ளாமல்
பிள்ளைகள் தனித்திருக்கவும் பழகுவார்கள்.
நம்ம வீட்டுல இருக்கும் ஒன்றிரண்டு குழந்தைகளையே
மேய்க்க முடியவில்லை, இதில் அந்தப் பிள்ளைகளையுமா!
அப்படின்னு யோசிக்காதீங்க.
தனது நண்பர்களுடன் சேர்ந்து இருப்பதை விரும்புவார்கள்.
**************************************
டிஸ்கி: இது என்னுடைய எண்ணம் + அனுபவம்.
ஆனால் 100 % சரின்னு சொல்ல முடியாது.
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கிற
மாதிரி எதற்கும் + - இருக்கலாம்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
14 comments:
/*நம்ம வீட்டுல இருக்கும் ஒன்றிரண்டு குழந்தைகளையே மேய்க்க முடியவில்லை, இதில் அந்தப் பிள்ளைகளையுமா! அப்படின்னு யோசிக்காதீங்க*/
இது தாங்க யோசனையா இருக்கும். மத்தபடி நீங்க சொன்ன மாதிரி அவங்க என்ஜாய் பண்ணுவாங்க.
கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும்
அவங்களை பிசியா வைக்கற மாதிரி திட்டமிட்டுகிட்டா ப்ரச்சனை இல்லை அமுதா.
கவிதைகள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்
//
SLEEPOVER NIGHTS குழந்தைகளுக்கு பல
நல்ல விஷயங்களை கத்துக்கொடுக்கும்.
உள்ளூரில் உங்களுக்கு நெருங்கினத் தோழி
இருக்காங்களா? அவங்களுக்கும் உங்க குழந்தை
வயது பிள்ளை இருக்கா? அது போதும்.//
சூப்பருங்க
கவிதைகள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்//
அழகா சொல்லியிருக்கீங்க சுரேஷ்.
நன்றி
ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.
நல்ல ஐடியா தான். கண்டிப்பாக செய்யலாம்.
நன்றி.
வாழ்த்துக்கள்
happy new year தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புதுகை அப்துல்லா அண்ணா!!!
உண்மையிலேயே மிகவும் நல்ல விஷயம்...குறிப்பாக வெளிநாடுகலில் உறவினர்கள் இல்லாமல் இருக்கும் நிலையில் இதுபோன்ற விஷயங்களால்தான் குழந்தைகளை உறசாகப் படுத்த முடிகிறது..
நல்ல விஷயம் சொன்னீர்கள் புதுகைத்தென்ரல்..
வாங்க வண்ணத்துப்பூச்சி,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
வாங்க பாசமலர்,
நல்மா?
நன்றி புதுகை தென்றல். குழந்தைகள் திரைப்படம் பற்றி ஜி மெயிலிட்டேன். பதிலில்லையே..??
Sleepover nights is really very good topic.In yesteryears in joint families there were plenty of children within the house itself for playing & sleep overnight.After sometime bcz of jobs the mingling of related children itself got restricted to holidays.Mingling with others teach outside unknown world. This sleepover really makes children happy & Happiness is the first thing that shapes the child. You are right in ur topic Butterflysurya.
Its good for the children Thenral
we just to make sure abt the ambience and if the parents of both children real good friends,this will encourage the kids' independence and manners.
I know I was thrilled when my parents had to leave me in some friend's place during some emergency!!!!!!!
Post a Comment