Charlie Hinton (எடி மர்ஃபி) Kim Hinton அவரின் மனைவி
இருவரும் வேலைப்பார்ப்பவர்கள். சார்லியின் மனைவி ஒரு
வக்கீல்.
கண்டிப்புக்கு பேர்போன சாப்மென் அகெடமியில் தனது
மகனை சேர்க்கின்றனர். இதை நடத்துவது கண்டிப்பும் கறாரும்
மிக்க திருமதி.Harridan.
சார்லி வேலை பார்க்கும் பிரிவு மூடப்பட வேலையை இழக்கிறார்.
6வாரங்கள் வேலைக்காக அலைந்து திரிந்து வெறுத்துப்போகிறார்.
தனது இரு நண்பர்கள் Phil & Marvin உதவியுடன் டே கேர் செண்டர் ஒன்றை தன்
வீட்டிலேயே திறக்கிறார்.
சாப்மென் அகெடமியை விட ஃபீஸ் குறைவாக இருந்தாலும்
தரத்தில் உயர்ந்தாக இருக்கிறது சார்லியின் செண்டர்.
இதனால் பெரும்புகழ் அடைகிறது அவரது செண்டர். சாப்மென்
அகெடமியின் புகழ் மங்குகிறது.
இதனால் கோபமடைந்த Harridan அந்த டே கேர் செண்டரை
மூட என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை முயற்சிகளீலும்
ஈடு படுகிறார். குழந்தைகளுக்கு சேவை நிறுவனத்தின் தரம்
குறைவாக இருப்பதாக புகார் செய்கிறார். Mr. Cubitz குழந்தை
நல சேவை நிறுவனதின் இயக்குநர் சார்லியின் செண்டரில்
இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி அவை நீக்க வைக்கிறார்.
தனது வீட்டிலேயே டே கேர் செண்டர் நடத்தும் சார்லி,
அதில் அதிகமான பிள்ளைகள் இருப்பதால் வேறு இடத்திற்கு
மாற்ற வேண்டுமென Mr. Cubitz கூறுகிறார். ஒரு இடத்தை
வாங்க நினைக்க "Rock for Daddy Day Care." எனும் பெயரில்
நிதி வசூலிக்க விழா ஒன்று நடத்துகிறார் சார்லி.
இதை அறிந்த சாப்மென் அகெடமியின் Harridan மற்றும்
அவரது வேலை ஆட்கள் அனைவரும் சேர்ந்து அந்த
விழாவை நடக்க விடாமல் என்னென்ன செய்ய இயலுமோ
அவ்வளவும் செய்கிறார்கள். நிதி வசூலிக்க முடியாததால்
கட்டிடத்தை வாங்க இயலாமல் போகிறது.
சார்லிக்கும் அவரது நண்பர்கள் இருவருக்கும் வேறு
வேலை கிடைக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள தயாரானபோது
சாப்மென் அகெடமியின் Harridan தானே டேடி டே கேரை
வாங்கிக்கொள்வதாக சொல்கிறார்.
வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் சார்லிக்கு மனது
அதில் ஒட்டவில்லை. தான் பார்க்க வேண்டிய வேலை
இதுவல்ல என்பதும் தன் மனம் டேடி டே கேர் செண்டரை
சுற்றியே இருக்கிறது என்பதையும் உணர்ந்து வேலையை
விட்டு சாப்மென் அகெடமிக்கு சென்று அங்கிருக்கும்
தனது செண்டர் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் பேசி
திரும்பவும் டேடி டே கேர் செண்டரை துவக்குகிறார்.
இந்த முறை டேடி டே கேர் செண்டர் மிக வெற்றிகரமாக
நடைபெறுகிறது இதன் புகழால் சாப்மென் அகெடமியை
மூடவேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கு வேலை பார்ப்பவர்கள்
சார்லியிடம் வந்து சேருகிறார்கள்.
******************************
எழுதியவர் Geoff Rodkey, இயக்கியவர் Steve Carr.
மே 9 2003 ஆண்டு திரையிடப்பட்டது.
தயாரிப்பு Revolution Studios for Columbia Pictures.
தாயுமானவராக தந்தையும் பிள்ளையை பேணி வளர்க்க
முடியும் என்பதை நகைச்சுவாயாக சொல்லியிருக்கும் படம்.
எடி மர்பிக்கும் அவரது மகனுக்கு இடையேயான காட்சிகள்
படு சுவாராசியம். கட்டுகோப்பான பள்ளிகளில் பிள்ளைகள்
கற்பது என்பதே கிடையாது. சிட்டு போல் துள்ளித் திரிகையில்
அவர்கள் கற்பது ஏராளம் எனும் செய்தியைச் சொல்லும் படம்.
தந்தையர்கள் அனைவருக்கும் பேரண்ட்ஸ் கிளப் அங்கத்தினர்கள்
சார்பில் மனமார்ந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
11 comments:
பேரண்ட்ஸ் கிளப்பில் ”டாடி டே கேர்” திரை விமர்சனம்..
சூப்பர்!
விமர்சன பகிர்விற்கு நன்றி அக்கா. இன்னும் இந்த படத்தை பத்தி அதிகம் எழுதியிருக்கலாமோன்னு தோணுது.
வாங்க சென்ஷி,
சீன் பை சீன் எழுதிருக்கலாம் தான். ஆனா சில விடயங்கள் வீடியோவில் பார்க்கும்போது சூப்பரா இருக்கும்ல.
டயப்பர் மாத்த மர்பி படும் அவஸ்தைகள் எல்லாம் சொன்னா புரியாதுல்ல.. :)))
நல்ல விமர்சனம்.. நன்றி..
தந்தையர் தினத்திற்கு பொறுத்தமான பட விமர்சனம். நன்றி..
you are killin' me..you r killin' me :))
பகிர்விற்கு நன்றி
என்னோட பதிவின் சுட்டி:
http://butterflysurya.blogspot.com/search/label/Daddy%20Day%20Care
வருகைக்கு நன்றி நர்சிம்
வலைச்சர ஆசிரியரின் வருகைக்கு நன்றி வெண்பூ
வருகைக்கு நன்றி அனானி
நல்ல படம்..தந்தையர் தின வாழ்த்துகள்..
Post a Comment