மகிழ்ச்சியெனில் மத்தாப்பாய் சிரிக்கிறபோதும் ... துன்பமெனில் அடைமழையாய் கொட்டித்தீர்க்கிற மழலையின் மனசு வேண்டும்...
இறந்த கால நினைவுகளில் எதிர்கால திட்டங்களில் நிகழ்காலத்தை தொலைக்காத பிள்ளையின் வாழ்வு வேண்டும்.....
- சாக்ரடீஸ்.
குடும்பம் என்ற கூட்டில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யனமான உணர்வுகள். அதுவும் குழந்தைகளுடனான உலகம் சற்றே வித்தியாசமானது. மிகவும் மகிழ்ச்சியானது , கவலையில்லாதது , வேடிக்கைகளும் வினோதங்களும் நிறைந்தது.
அங்கும் பொறாமை, கோபம், ஏக்கம், துக்கம் உண்டு அதன் ஆயுள் குறைவு , மகிழ்ச்சி மட்டுமே அங்கு சாகா வரம் பெற்றது. அப்படியொரு மகிழ்ச்சியான அனுபவத்தின் ஊடே ஒரு ஏமாற்றமும் கவலையும் கொண்ட சிறு பெண்ணின் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட உணர்வுகளே
" The White Balloon "
ஈரானிய புத்தாண்ட்டு கொண்டாட்டங்களுக்காக கடை வீதியில் பல வித பொருட்களையும் புதிய உடைகளையும் வாங்கி கொண்டு வீடு வந்து சேருகிறார்கள் ரசியாவும் அவளது தாயும். தான் வெகு நாளாக கடை வீதியில் பார்த்து வைத்திருக்கும் அழகிய குண்டு தங்க மீன் வேண்டும் என்று சினகி கொண்டே எதையும் ரசிக்காமல் கூடவே வருகிறாள் ரசியா.
ஏற்கனவே வீட்டிலுள்ள தொட்டியில் வண்ண மீன்கள் உள்ளதென்றும் இப்போது 100 ரூபாய்க்கு மீன் வாங்கி செலவழிக்க வேண்டாமே, இருப்பது போதும் என்கிறாள் தாய். ஆனாலும் அதெல்லாம் விட அந்த குண்டு மீன் தான் தனக்கு பிடித்ததென்றும் அது தண்ணீரில் நீந்தும் போது உடலசைப்பில் டான்ஸ் ஆடுவது போலுள்ளதென்று அடம் பிடிக்கிறாள் ரசியா.
ஏறகனவே நிறைய பணம் செலவழித்து விட்டதாகவும் புத்தாண்டிற்கு வீட்டிற்கு வருபவர்களை உபசரிக்கவும் பரிசு பொருட்கள் வாங்க மட்டுமே சிறிது பணம் உள்ளதென்றும் கூறுகிறாள் தாய். தன் அண்ணன் அலியிடமும் முறையிட்டு அழுகிறாள் ரசியா. தங்கை மீதுள்ள பாசத்தால் அவள் அழுவதை பொறுக்க முடியாமல் தாயிடன் சென்று குழைந்து பேசி தாயை சம்மதிக்க வைக்கிறான் அலி.
தாயும் இப்போது சில்லறை காசில்லை என்றும் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டாக உள்ளதென்றும், சிறிது நேரம் கிடைத்ததும் மாற்றி தருவதாக சொல்கிறாள் தாய். தாயின் சம்மதம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் வண்ண மீனின் விலை 100 ரூபாய் என்றும் தானே கடைக்கு சென்று வாங்கி கொண்டு மீதி பணத்தை கொண்டு வருவதாக சொல்லி ஒட்டம் பிடிக்கிறாள் ரசியா.
“ பணத்தை தொலைத்து விடுவாய்” பொறுமையாய் இரு.. நானும் வருகிறேன் என்று சொல்லி முடிப்பதற்குள் 500 ரூபாய் நோட்டுடனும் மீன் வாங்க கண்ணாடி குடுவையுடனும் தெருக்கோடியை கடந்து விட்டாள் ரசியா.
போகும் வழியில் பாம்பு வித்தைகாட்டி கூட்டம் சேர்ந்திருக்க எட்டி பார்க்கிறாள் ரசியா. தந்திரமாய் பேசி பணத்தை அபகரிக்கிறான் வித்தை காரன். பணத்தை திருப்பி கொடுக்குமாறு அழுது புலம்ப தொடங்குகிறாள் ரசியா. அவள் அழுகையை பார்த்து இரக்கப்பட்டு பணத்தை திருப்பியும் தந்து விடுகிறான்.
பணத்தை குடுவையில் போட்டு கொண்டு பணத்தை மீட்ட மகிழ்ச்சியில் மார்க்கெட் பகுதியை நோக்கி விரைந்து ஒடுகிறாள் ரசியா. வண்ண மீன் விற்கும் கடையையும் அடைகிறாள். ஆனால் அவள் பார்த்து வைத்திருந்த குண்டு வண்ண மீன் 150 ரூபாய் என்றும் 100 ரூபாய்க்கு சிறிய மீன் மட்டுமே தர முடியும் என்கிறார் கடைக்காரர். தன்க்கு அதே மீன் 100 ரூபாய்க்கு தர வேண்டும் என்று கெஞ்சுகிறாள். கடைக்காரும் முதலில் கறாராக மறுக்கிறார். பின்னர் மனம் மாறி தர சம்மதிக்கிறார்.
குடுவையில் பார்த்தால் பணத்தை காணவில்லை. அதிர்ச்சியும் அழுகையும் பீறிட்டு செயவதறியாது திகைக்கிறாள் ரசியா. நிலைமையை கடைக்காரரிடம் சொல்லவே, வந்த வழியிலேயே சென்று தேடுமாறு சொல்கிறார் கடைக்காரர்.
பதட்டத்துடனும் பயத்துடனும் வந்த வழியிலேயே தேடி கொண்டு வருகிறாள். மார்க்கெட் முழுவது ஒரே கூட்டம். புத்தாண்டை கொண்டாட ஆடி பாடி சென்று கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
வரும் போது கேக் கடையருகே சிறிது நேரம் வேடிக்கை பார்த்தது நினைவிற்கு வரவே அங்கே தான் தவற விட்டிருக்க வேண்டும் என்று யூகித்து வந்து சேர பணம் பூட்டிய ஒரு கடையின் அருகே கிடப்பதை பார்த்து பூரிக்கிறாள் ரசியா. பணத்தை ஒடி சென்று எடுப்பதற்குள் வேகமாக வந்த ஸ்கூட்டரால் பணம் பறந்து போய் கடையின் வாயிலருகே உள்ள வற்றிய சாக்க்டைக்குள் விழுந்து விடுகிறது.
இரும்பு கம்பிகளால் மூடப்படிருக்கும் சாக்கடையை எட்டி பார்க்கிறாள் ரசியா. உள்ளே பணம் விழுந்து கிடக்கிறது. கவலையும் பயமும் அதிகரிக்க வேதனையோடு எப்படி பணத்தை எடுக்க வழி தெரியாது திகைக்கிறாள்.
வெகு நேரமாகியும் வீடு திரும்பாத தங்கையை தேடிக்கொண்டு வந்தும் விடுகிறான் அண்ணன் அலி. அவனிடம் நடந்தவற்றை சொல்லி அழுகிறாள் ரசியா. பணத்தையும் காட்டுகிறாள். அவளை கண்டபடி திட்டுகிறான் அலி.
பக்கத்து டெய்லர் கடையில் சென்று விசாரிக்க, பூட்டிய கடையை திறந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியுமென்றும் கடைக்காரர் காலையில் தான் கடையை மூடி விட்டு புத்தாண்டுக்காக ஊருக்கு கிளம்பியதாகவும் சொல்கிறார் டெய்லர். முதலில் அவரும் பணத்தை எடுக்க முயற்ச்சிகிறார். எதுவும் நடக்கவில்லை..
தாய்க்கு என்ன பதில் கூறவது என்று இருவரும் வேதனை படுகின்றனர். அந்த வழியே வந்த ராணுவ வீரனும் இவர்களுக்கு உதவ முயற்ச்சிக்கிறான். பணத்தை எடுக்க பல வித முயற்ச்சிகள் எடுத்தும் ஒன்றும் பயனளிக்கவில்லை. பணத்தை எடுக்கவும் முடியவில்லை.
டெய்லரும் பணியை முடித்து விட்டு கடையை மூடி விட்டு செல்லும் முன் பூட்டிய கடையின் கடைக்காரரின் விலாசத்தை அறிந்து கொண்டு அவரை அழைத்து வர ஒடுகிறான் அண்ணன். பூட்டிய கடையின் அருகேயே அமர்ந்து கொண்டு பணத்திற்கு காவலாக இருக்குமாறு ரசியாவிடம் கூறிவிட்டு செல்கிறான் அலி.
அவரும் வீட்டில் இல்லை. வெளியில் சென்றிருப்பதாகவும் வந்த்தும் அனுப்பி வைப்பதாகவும் குடும்பத்தினர கூறவே, மீண்டும் திரும்ப வந்து விடுகிறான்.
அப்போது பலூன் விற்கும் சிறுவன் ஒருவனை பார்த்ததும் அண்ணனுக்கு ஒரு ஐடியா உதிக்கிறது. அவன் பலூன்களை கட்டி வைத்துள்ள பெரிய குச்சியால் எடுத்து விடலாம் என்றெண்ணி அந்த குச்சியை கொண்டு முயற்ச்சிக்கின்றனர். அதுவும் நடக்கவில்லை.
பபுள்கம் போன்று ஏதாவது ஒட்டு பொருள் இருந்தால் அதை வைத்து எடுக்கலாம் என்று யோசனை சொல்கிறாள் ரசியா. பபுள்கம் வாங்க கூட இருவரிடம் கையில் ஒரு பைசா கூட இல்லை. பலூன் விற்பவனிடமே கடனாக கேட்கிறான் அண்ணன். அவனுடன் இப்போது தான் விற்பனைக்கு வந்ததாகவும் இன்னும் போணியாகத்தால் கையில் காசு இல்லை என்று கூறி விட்டு நடையை கட்டுகிறான்.
மேலும் மேலும் நேரமாவதாலும், வானமும் இருட்டி கொண்டு மழை வரும் போல இயற்கையும் தங்களுக்கு எதிராக சதி செய்வதாய் குழம்பி போகிறார்கள் அண்ணனும் தங்கையும்.
நடையை கட்டிய பலூன்காரன் நிறைய பலூன்களை விற்று முடித்து குழந்தைகளுக்காக இரக்கப்பட்டு பபுள்கம் வாங்கி கொண்டு திரும்பி வருகிறான். அவன் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சியில் குதிக்கின்றனர் அலியும் ரசியாவும்.
பலூன்காரனின் குச்சியின் துணையை கொண்டு பணத்தையும் எடுத்து விடுகின்றனர். உலகையே வென்று விட்ட மகிழ்ச்சியில் இருவரும் ஒடிச்சென்று 100 ரூபாய்க்கு ரசியா விரும்பிய தங்க மீனையும் வாங்கி கொண்டு வீட்டை நோக்கி ஒடுகின்றனர்.
விற்காமல் போன ஒரே வெள்ளை நிற பலூன் காற்றில் அசைந்து கை காட்டி செல்வது போல் திரைப்பட்ம் நிறைவடைகிறது...
Abbas Kiarostami யின் திரைக்கதையை இயக்கியிருப்பவர் Jafar Panahi . இயக்குநரின் முதல் திரைப்படம் இது.
கிட்டதட்ட 90 நிமிடங்களே ஒடக்கூடிய இத்திரைப்ப்டத்தை குழந்தைகளை கொண்டு படைத்திருக்கிறார்கள் மிகச்சிறந்த படைப்பாளிகளான இவ்விருவரும். மிக இயல்பாக குழந்தைகள் நடித்திருப்பதும், காட்சிகளை அதற்கு ஏற்றார்போல் சித்தரித்துள்ளதும் இயக்குநரின் திறமைக்கு இந்த திரைப்படம் ஒரு சான்று.
1995 ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் பரிசை அள்ளியது.கனடா, டோக்கியோ திரைப்பட விருதுகள் என்று பல பரிசுகளை வாரி குவித்ததுடன் உலகின் பல விழாக்களில் பங்கு பெற்றது.
Abbas Kiarostami மஜித் மஜிதியை போன்றே குழந்தைகளை பின்னணியில் பல சிறந்த திரைப்படங்களை உருவாக்கியவர்.
கடுமையான ஈரானிய தணிக்கை இருந்தும் அதை மறுக்க முடியாமல் அந்த கட்டுபாடுகளிடையே மிகச்சிறந்த திரைப்படங்களை உருவாக்குபவர். ஒரு வேளை இந்த கட்டுபாடுகள் தான் மிக்சிறந்த திரைப்படங்களை உருவாக்குவதன் மன நிலையை தோற்று விக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.
பெரியவர்களை விட குழ்ந்தைகள் குறைவாகவே எதையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாழ்வின் மீது அதிக ஈடுபாடு இருக்கிறது. குழந்தைகளை மறைந்து வாழும் ஞானிகள் என்று தான் கூறுவேன். அதனால் தான் சீன தத்துவஞானியான லா ஒட்ஷேவிற்கு வயதான குழந்தை என்று புனைபெயர் இருக்கிறது. ஒரு சூபி ஞானியைப் போல குழந்தைகள் அந்த கணத்தை மட்டும்தான் விரும்புகிறார்கள், வாழ்கிறார்கள் என்று சொல்லும் Abbas Kiarostami கூற்றிற்கு இத்திரைப்படம் ஒரு தன்னிலை விளக்கம்.
சந்தர்ப்பம் கிடைத்தால் குழந்தைகள் மட்டுமல்லாது அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மிகச்சிறந்த திரைப்படம்.
Please Don't Miss.....
குறள் வழிக்கதைகள்
5 years ago
4 comments:
ரொம்ப நாளைக்கப்புறம் அருமையான
பதிவு. வாழ்த்துக்கள் வண்ணத்துப்பூச்சியாரே
ஒவ்வொரு முறையும் தவறாமல் உங்கள் வாழ்த்தும் விமர்சனமும் மட்டுமே இங்கு வந்து சேருகிறது.
நன்றிகள் பல
பிள்ளைகள் இல்லாத என்னை போன்றவர்களுக்கும் பாசம் வரும எழுத்து ..
..
. இயக்குனரின் உணர்வை அப்படியே கொண்டுவந்துள்ளீர்கள்
தமிழ் ராஜா. நன்றி.
ஆகா. பாராட்ட பரந்த மனம் படைத்த மேலும் ஒருவர் வந்து விட்டார்.
மிக்க நன்றி.
வாழ்த்துகள்.
Post a Comment