ஏறு போல் நட
குழந்தைகளா! ஒரு ஊருல, சலவைக்காரர் ஒருவருக்கு பொன்னி, செம்பி என்ற இரண்டு கழுதைகள் இருந்தன.பொன்னி சலவைக்காரர் இட்ட வேலைகளை எல்லாம் சரியாக செய்துவிடும். செம்பியோ சற்று முரட்டுத்தனம் காட்டும்.
ஒரு நாள் சலவைக்காரர் வழக்கத்துக்கு மாறாக அதிக துணிகளை சலவை செய்து காயவைத்து துணியெல்லாம் உலர்ந்த பின்னர் அதனை செம்பியின் முதுகிலும், பொன்னியின் முதுகிலும் ஏற்றி அவைகளை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பொன்னியும், செம்பியும் துணிமூட்டைகளை சுமந்தபடியே வந்து கொண்டிருந்தன.
அமைதியாக சென்று கொண்டிருந்த பொன்னியைப் பார்த்த செம்பி "இதோ பார் நாம் இப்படி கடினமாக வேலைசெய்ய வேண்டுமா?" என்று கேட்டது.
உடனே பொன்னி "இன்று உனக்கு என்ன நேர்ந்து விட்டது? எதனால் இப்படிப் பேசுகிறாய்?" என்று கேட்டது.
உடனே செம்பி "ஆமாம் நீ எப்போதுமே ஏதாவது கூறினால் ஏன் எதற்கு என்று கேட்டுக் கொண்டே இருப்பாய். நான் சொல்வதை கவனமாக கேள். எதற்காக நாம் இந்த சலவைக்காரருக்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். அதனால், இவர் முன்பு உடம்பில் வலு இல்லாதது போல் நம்மால் மூட்டையை சுமந்து செல்ல முடியாதது போல் நடிக்க வேண்டும். நம் நடிப்பை அவரும் உண்மை என்று நம்பி நம்மை துணி சுமக்க செய்யமாட்டார். இரக்கப்பட்டு நம்மை விட்டுவிடுவார்" என்று கூறியது.
செம்பியின் பேச்சைக் கேட்ட பொன்னி "இதோ பார் செம்பி உன் எண்ணத்தை மாற்றிக் கொள். துணி மூட்டைகளை சுமந்து செல்லும் ஆற்றல் உனக்கு ஏற்கனவே இருக்கிறது. எனவே அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு நம் சலவைக்காரருக்கு தகுந்தபடி நடந்துகொள். இப்படி கூனிக்குறுகி நடக்காதே. ஏறுபோல் நட. பொய்யுரைக்காதே. நடித்து ஏமாற்றாதே!" என்று கூறியது.
பொன்னியின் பேச்சைக் கேட்காத செம்பி தான் சுமந்து வந்த துணி மூட்டையை பொத்தென்று தரையில் போட்டது. துணி மூட்டை தரையில் விழுந்த வேகத்தில் சாக்கடைநீரில் உருண்டோடியது.
அந்த நேரம் கழுதைகளின் பின்னே வந்து கொண்டிருந்த சலவைக்காரர் இந்த காட்சியைப் பார்த்து விட்டார். வேகமாக ஓடிவந்து தனது துணி மூட்டைகளை எடுத்து அப்புறப்படுத்திவிட்டு, செம்பியை பலமாக தாக்கத் தொடங்கினார்.
செம்பியை சந்தைக்கு கொண்டு சென்று விற்றுவிட்டார்.
செம்பியை விலைக்கு வாங்கிய சலவைக்காரரோ அதற்கு சரியாக உணவு கொடுக்காமல் துன்புறுத்தினார்.
செம்பி பொன்னி கூறிய அறிவுரைகளை அப்போதுதான் உணரத் தொடங்கியது. ஏறுபோல் நட என்று பொன்னி கூறியதே அதன் பேச்சுப்படி நாம் நடந்திருந்தால் இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்காதே என்று நினைத்தது.
வாழ்க்கையில் எந்த துன்பங்களையும் தாங்கிக் கொண்டு, பொய்யுரைக்காமல் அடுத்தவரை ஏமாற்றாமல், ஏறுபோல் நடைபயணத்தை தொடர்ந்தால் வெற்றி உறுதி.
--மீண்டும் அடுத்த வாரம் பார்க்கலாமா!
.
குறள் வழிக்கதைகள்
5 years ago
14 comments:
வாழ்க்கையில் எந்த துன்பங்களையும் தாங்கிக் கொண்டு, பொய்யுரைக்காமல் அடுத்தவரை ஏமாற்றாமல், ஏறுபோல் நடைபயணத்தை தொடர்ந்தால் வெற்றி உறுதி.]]
நல்ல மெஸேஜ்.
பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.
http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view¤t=singakkutti-awad.gif
நன்றி.
ரொம்ப நன்றிங்க சிங்கக்குட்டி.
--வித்யா
நன்றிங்க ஜமால்.
--வித்யா
// --மீண்டும் அடுத்த வாரம் பார்க்கலாமா! //
சரீங்க சார்.......!!
இந்த கதையில ஏதோ உள்குத்து இருக்குது....!! ஆனா கத நல்லாருக்கு....!! அழகு..!!
//லவ்டேல் மேடி said...
// --மீண்டும் அடுத்த வாரம் பார்க்கலாமா! //
சரீங்க சார்.......!!
இந்த கதையில ஏதோ உள்குத்து இருக்குது....!! ஆனா கத நல்லாருக்கு....!! அழகு..!!///
லவ்டேல் மேடி - நான் சார் இல்லங்க. மேடம்தான். :))
உள்குத்தா... முடியலங்க.. எப்படி... எல்லாத்தயுமா அரசியலாக்குவீங்க
கதை அழகாயிருக்குன்னு சொன்னதுக்கு நன்றிங்க.
--வித்யா
நல்ல மெஸேஜ்
ஆஹா,
மனமார்ந்த பாராட்டுக்கள் வித்யா
நன்றி புதுகை தென்றல்.
--வித்யா
அருமைங்க வித்யா. இது மாதிரி நிறைய கதைகள் சொன்னீங்கன்னா எங்களுக்கும் உபயோகமா இருக்கும்... இப்பவே அடுத்த வாரத்தை எதிர் பார்க்க ஆரம்பிச்சாச்சு.
நன்றி ராசுகுட்டி
--வித்யா
////Hi ssrividhyaiyer,
Congrats!
Your story titled 'ஒரு ஊருல... கதைகள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 2nd September 2009 03:55:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/107685
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team///
நன்றி தமிழிஷ் மற்றும் வோட்டு போட்ட
vanniinfo
tamilz
ldnkarthik
jntube
mvetha
arasu08
அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி.
--வித்யா
நல்ல கருத்துகளை கொண்ட கதை. ஏறு என்றால்...
குடந்தை அன்புமணி:
ஏறு என்றால்...
பெயர்ச்சொல்: ஏறு
1. ஆண் அரிமா அல்லது சிங்கம்
2. காளை
3. சுறா மீனின் ஆண்
(நன்றி : விக்சனரி)
Post a Comment