பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பள்ளி செல்வதற்கு முன், பள்ளி செல்ல ஆரம்பித்த பின்
என பிள்ளையின் வளர்ச்சியை எடுத்து பார்த்தால்
கணிசமான வித்யாசம் தெரியும்.

பல நல்லவைகளையும், சில கெட்டவைகளையும்
கற்றுக்கொண்டிருப்பது புரியும். இது யார் சொல்லிக்
கொடுத்து வந்தது. சுற்றி இருப்பவர்கள்.
சமுதாயம் கற்றுத் தந்தது. அதனாலேயே
ஆரோக்கியமான சமுதாயத்தில் பிள்ளைகள்
வளர வேண்டும்.

இந்த மாற்றத்தை நாம் ஒன்றும் செய்ய இயலாது.
இது தன்னிச்சையாக நடப்பது.

அப்படி என்ன பெரிய்ய மாற்றம் வந்துவிடும்
என்று கேட்கிறீர்களா??

ஒரு உதாரணம் சொல்கிறேன்.

20 வயது பெண் தனது உறவினர் வீட்டில்
தங்கி மேல் படிப்பு படிக்க சென்றாள்.

அந்த வீட்டு பிள்ளைகள் 4,6 வகுப்பில்
படிப்பவர்கள். தன் தாய்க்கு உதவிக்கொண்டு,
தன் வேலையை தானே செய்து பழகிய
நல்ல குழந்தைகள். ஹாலில் டம்பளார் இருந்தால்
அதைக் கொண்டு வந்து சிங்கில் போட்டு வீட்டைச்
சுத்தமாக்க உதவும் இயல்பு, நல்ல விதமாக
பிள்ளைகளை வளர்த்திருந்தார் அந்தத் தாய்.

அந்தப் பெண் வந்து தங்கியது முதல் மாற்றங்கள்.
இந்தப்பிள்ளைகள் படிப்பில் மந்தகித்து, தன்
வேலையைக்கூட செய்யாமல் இருக்க குழம்பிய
தாய் யோசித்து பார்த்ததில் மேல் படிப்பு
படிக்கும் காரணத்தைக்காட்டி புதிதாக வந்திருக்கும்
20 வயது பெண் வீட்டில் உதவுவதே இல்லை.
அவரின் உடைகள் எல்லாம் அலங்கோலமாக
கிடக்கும், படிப்பும் சரியாக படிக்காமல் எந்த
நேரமும் மொபைலில் பாட்டு கேட்டுகொண்டிருப்பதை
பார்த்து பிள்ளைகள் மாறிவிட்டார்கள்.

மகனின் பள்ளியில் அழைத்து பிள்ளையின்
படிப்பு குறித்தும், நடவடிக்கை மாற்றம் குறித்து
பேசும் பொழுதுதான் நிலமையின் தீவிரம் உணர்ந்து
அந்தப் பெண்ணை ஹாஸ்டலில் சேர்க்க வைத்து
தன் மக்களின் மனமாற்றத்தை போக்க வெகு
காலம் எடுத்தது!!!!


வீட்டை விட்டு வெளியே சென்று பலதரப்பட்ட
மக்களுடன் பள்ளியில் பழகித்தான் ஆகவேண்டும்.
என் மகன் கெட்டுவிடுவான் என நினைத்து
வீட்டுக்குள் முடக்கி வைக்க முடியாது.

என்ன தான் செய்வது??

அன்னை தெரசாவிடம் 4 மாணவர்கள் சென்று
தாங்களும் சேவை செய்ய விரும்புவதாகச் சொன்னார்களாம்.

ஏன் என்று கேட்க, “அவர்களுக்கு உதவ, அன்பு காட்ட”
என்றார்களாம்.

“உடனே அன்னை! அன்பு விதைப்பதை உன் வீட்டிலிருந்து
தொடங்கு!” என்று அனுப்பி வைத்தாராம்.

நாமும் நம் குழந்தைகளுக்கு நற்பண்பு, அன்பு ஆகியவற்றை

வீட்டில் விதைத்த அன்பு,நற்பண்புகள் வீதி முழுதும் விளைந்து,
ஏரியா, ஊர், மாநிலம், தேசம் என விரிந்தால் நல்லதொரு
சமுதாயம் அமையும். அப்படி பட்ட சமுதாயத்தில் வாழும்
பிள்ளைகள் நல்ல குடிமகன்களாக, சிறந்த பண்புடையவர்களாக
வளர்வார்கள்.

ஆரோக்கியமான,அழகான சமுதாயத்தை உருவாக்குவோம் வாருங்கள்.

18 comments:

test

//வீட்டை விட்டு வெளியே சென்று பலதரப்பட்ட
மக்களுடன் பள்ளியில் பழகித்தான் ஆகவேண்டும்.
என் மகன் கெட்டுவிடுவான் என நினைத்து
வீட்டுக்குள் முடக்கி வைக்க முடியாது.///

சரிதான்! வீட்லேயே பூட்டி வைத்து வளர்க்கும் பிள்ளைகள் பின்னாளில் பொதுவிடங்களில் மற்றவர்களிடம் பழகுவதில் ரொம்ப சிரமப்படுவதை நேரில் கண்டதும் உண்டு :(

அருமையான பதிவு.
-வித்யா

வீட்லேயே பூட்டி வைத்து வளர்க்கும் பிள்ளைகள் பின்னாளில் பொதுவிடங்களில் மற்றவர்களிடம் பழகுவதில் ரொம்ப சிரமப்படுவதை நேரில் கண்டதும் உண்டு//

ஆமாம் ஆயில்யன்,

ரொம்ப கஷ்டப்படுவாங்க. அலுவலகம், வீடு எங்கேயும் பெரிதாக வளர்ச்சி இல்லாமல் இருப்பாங்க.

நன்றி வித்யா

சரியாக சொன்னீங்க

எதையும் நாம் நம்மிலிருந்தே துவங்க வேண்டும் ...

அழகாச்சொல்லி இருக்கீங்க ..ஓட்டும்போட்டாச்சு!!!

நல்லாயிருக்குது என்று ஒரு வரியில் சொல்ல மனமில்லைத்தான் ஆனாலும் நல்லாயிருக்குது

-தியா-

எதையும் நாம் நம்மிலிருந்தே துவங்க வேண்டும் ...//

ஆகாககாகா...

நன்றி தேவா

நன்றி தியா

/ஆயில்யன் said...

//வீட்டை விட்டு வெளியே சென்று பலதரப்பட்ட
மக்களுடன் பள்ளியில் பழகித்தான் ஆகவேண்டும்.
என் மகன் கெட்டுவிடுவான் என நினைத்து
வீட்டுக்குள் முடக்கி வைக்க முடியாது.///

சரிதான்! வீட்லேயே பூட்டி வைத்து வளர்க்கும் பிள்ளைகள் பின்னாளில் பொதுவிடங்களில் மற்றவர்களிடம் பழகுவதில் ரொம்ப சிரமப்படுவதை நேரில் கண்டதும் உண்டு :(/


வழிமொழிகிறேன்!

அக்கறை நிரம்பிய பதிவு.அவ்வளவு உபயோகம்.நன்றி ஜமால்.

நன்றி நிஜம்ஸ்

நன்றி ராஜாராம்

பிள்ளைகளின் குண நலன்கள் சுற்றி இருக்கும் சூழலைப் பொறுத்தே .

நல்ல பதிவு

என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி

சமுதாயத்தின் பங்கினை விட பெற்றோர்களின் பங்கு மிகவும் அதிகம். எந்த ஒரு விசயத்தையும் தெளிவான மனதுடன் எந்த ஒரு குழந்தை பிரித்து எடுக்கக் கற்றுக்கொள்கிறதோ, கற்றுக்கொள்ள வழி சொல்லப்படுகிறதோ அந்த குழந்தை தவறாகப் போகாது.

சமுதாயத்தை விட பெற்றோர்களே என ஒவ்வொருவரும் நம்பிக்கை கொண்டு நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பொறுப்பற்ற பெற்றோர்களே சந்ததிகளின் பிரச்சினைக்குக் காரணம். இதை அறிவுறுத்திய நல்லதொரு பதிவு.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்