அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்
வாகனம் ஓட்டும் உரிமம் பெற முடியும்னு சட்டம்
போட்டு வெச்சிருக்காங்க. ஆனா பெத்தவங்களும்,
பிள்ளைங்களும் அதை காற்றில் பறக்க விட்டுகிட்டு இருக்காங்க.
13 வயது துவங்கி 18 வயதுக்குள் இருக்கும் ஆண்/பெண்
குழந்தைகள் டூவிலர் ஓட்டுவது சர்வசாதரணமாக
கண்ணில் படும் காட்சி. இது தவறு என்று தெரிந்தாலும்
இருதரப்பினரையும் செய்யத் தூண்டுவது எது??????
பிள்ளைகளின் பிடிவாதம் என்றே சொல்லலாம்.
அவர்கள் விரும்பியது விரும்பிய உடனே வாங்கிக்
கொடுக்கும் பெற்றோர் இந்த டூவீலர் விவகாரமும்
செய்கிறார்கள். “மெயின் ரோட்டுக்கு போகாதே!
அங்கே போலிஸ் இருக்கும். இங்கயே சுத்து”
இது நாமே சட்டத்துக்கு புறம்பாக பிள்ளையை
நடக்க அனுமதிக்கும் செயலாச்சே....
பிள்ளைகளுக்கு சைக்கிள் போதும். சைக்கிளில்
ஏறுவதற்கே ராக்கெட் ஓட்டுவது போல் வேகமாக
பிள்ளைகள் ஓட்டுகிறார்கள். தற்போது பல
பெரியவர்கள் கூட கார், பைக் ஓட்டுகிறார்கள் தான்.
ஆனால் ட்ராபிக் சென்ஸ் இல்லாமல் தாறுமாறாக
வண்டி ஓட்டுகிறார்கள். கிடைக்கும் சைக்கிள் கேப்பில்
லாரி ஓட்டுவது போல் முறையாக செல்லாமல்
வளைந்து, நெளிந்து இவர்கள் ஓட்டுவதால்
பெரிய வண்டிககாரர்கள் தடுமாறுவதும் நடக்கிறது.
பெரியவர்களே இப்படி இருக்கும்போது பிள்ளைகள்
கையில் வண்டி கொடுத்தால் என்னவாகும்???
பெற்றோர்களுக்கு அவசரமாக கடைக்கு போகவேண்டும் அல்லது
சின்ன குழந்தையை பள்ளி, ட்யூஷனில் விட
வேண்டுமாக இருந்தால் சற்றே பெரிய குழந்தையின்
உதவியை நாடுகிறார்கள். அவர்களோ,” டூ வீலர்
கொடுத்தால், நீங்க சொன்ன வேலையை நான் செய்யறேன்”
என்பதுதான். தனக்கு வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக
“ஜாக்கிரதயா போ!” என்று சொல்லி சாவியை
கொடுத்து விடுகிறார்கள்.
பக்கத்து வீட்டிலேயே பத்தாம் வகுப்பு படிக்கும்
மாணவி இருக்கிறாள். கொஞ்சம் பெரிய்ய
பெண்ணாக தெரிவாள். அதனாலேயே அவளது
பெற்றோர் தைரியமாக இங்கிருந்து 5 கிமீ
தொலைவில் இருக்கும் அவளது ட்யூஷன்
வகுப்புக்கு சென்று வர ஆக்டிவா வாங்கிக்
கொடுத்திருக்கிறார்கள்.. என்ன சொல்ல???
இப்படி சின்னக் குழந்தைகள் வண்டி ஓட்டுவதை
பார்க்கும்போது நெஞ்சு பதை பதைக்குது.
நேரம் நல்லா இல்லாமல் இருந்து விபத்து
ஏதும் ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை கூட
கிடைக்காது. மருத்துவ செலவு, அது இது
என்று விபரீதம் நடந்தால் என்னாகும் என யாரும்
யோசிக்காததால் பிள்ளைகள் டூவீலர் ஓட்டுகிறார்கள்.
பெற்றவர்களே யோசியுங்கள். இளங்கன்று
பயமறியாது!!! நாம் தான் எடுத்துச் சொல்லி
18 வயது வரை சைக்கிள் மட்டும் ஓட்டச்
சொல்ல வேண்டும்.
பெரியவர்களுக்கு என் வேண்டுகோள்.
ட்ராபிக் சட்டங்களை மதித்து வண்டி
ஓட்டுங்கள். இரவில் ஹெட்லைட்
எதிராளியின் கண்ணைக்குருடாக்குவது போல்
போட்டு வண்டி ஓட்டாதீர்கள். பக்கத்திலிருந்து
நம் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக
திகழ வேண்டிய மாபெறும் பொறுப்பு நமக்கிருக்கிறது.
குறள் வழிக்கதைகள்
5 years ago
4 comments:
உண்மைதான் தென்றல். அவர்களின் வயது ,உடலில் வேகத்தைக் கூட்டுகிறது. கண்மண் தெரியாமல் அவர்கள் ஓட்டும் வேகம் அவர்களின் பாதுகாப்பும்,
சாலையில் செல்லும் அனைத்து நபர்களுக்கும் ஆபத்தாக இருக்கிறது.
உங்கள் பதிவு நல்லதொரு விழிப்புணர்வு கொண்டு வரட்டும்
அவர்களின் வயது ,உடலில் வேகத்தைக் கூட்டுகிறது. கண்மண் தெரியாமல் அவர்கள் ஓட்டும் வேகம் அவர்களின் பாதுகாப்பும்,
சாலையில் செல்லும் அனைத்து நபர்களுக்கும் ஆபத்தாக இருக்கிறது.//
ஆமாம் வல்லிம்மா,
பெற்றவர்கள்தான் அவர்களின் வேகத்துக்கு ஒரு தடை போட வேண்டும். வருகைக்கு நன்றிம்மா.
/*அவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக
திகழ வேண்டிய மாபெறும் பொறுப்பு நமக்கிருக்கிறது*/
உண்மை. அவசியமான பதிவு
கோவையில் ஒரு போலீஸ்காரரின் மகனே 16 வயதில் பல்ஸர் ஓட்டுகிறான் , இதையெல்லாம் யாரிடம் சொல்வது
Post a Comment