பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பிள்ளையை பார்த்து பார்த்து வளர்ப்போம்.

சில வீடுகளில் கண்டிப்பு அதிகமாகவே இருக்கும்.
அதுவும் உயர் பதிவுகளில் இருப்பவர்களின் பிள்ளைகள்,
கொஞ்சம் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் வீட்டுப்
பிள்ளைகள் கொஞ்சம் விலகியே இருப்பார்கள்.
காரணம் வீட்டில் விதிக்கப்படும் கட்டுப்பாடு.

என்ன கட்டுப்பாடு???

அவங்களோட சேராத. நமக்கு சமமானவங்க இல்ல!!

அவங்களோட சேர்ந்து சுத்தினா நமக்கு கொளரவ
குறைச்சல்!

நம்ம வீட்டு நிலையென்ன? அவுங்க நிலை என்ன?
பாத்து நட்பு வெச்சுக்கோ.

இப்படி தனிமைப்படுத்தி யாருடனும் அதிகமாக
கலக்காமல் வளர்ப்பதால் அந்தக் குழந்தையின் மனதில்
ஏக்கம் இருக்கும்.

என் நண்பர் ஒருவர். மிகச்சிறந்த வக்கீல். அருமையான
இரண்டு குழந்தைகள். மகனும், மகளும் மதிப்பு, மரியாதை
தெரிந்த குழந்தைகள். அனைவருடனும் அன்பாக இருப்பார்கள்.

”உங்கள் பிள்ளைகளை எனக்கு மிகவும் பிடிக்கும்! இனிமையான
பிள்ளைகள். அனைவருடனும் கலந்து பேசி மகிழ்வாக இருக்கிறார்கள்!”
என்றேன். அதற்கு அவர். பாராட்டிற்கு மிக்க சந்தோஷம்.

என் அப்பாவும் வக்கீல் தான். அதானால் வக்கீல்,
டாக்டர் போன்ற பதவிகளில்
இருப்பவர்களின் பிள்ளைகளோடுதான் விளையாடி, பேச
வேண்டும் என வீட்டில் கட்டுப்பாடு இருந்தது. அதனால் சராசரி
குழந்தையின் ஆனந்தத்தை அடைந்ததில்லை. பிள்ளையார
ஆற்றில் கரைக்க ஆடிச்செல்லும் சக நண்பனின் சந்தோஷம்
எனக்கு கிட்டியதே இல்லை.

நான் இழந்த பிள்ளை பிராயத்தை என் பிள்ளைகள் அனுபவிக்க
வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன்”. என்றார்.

சத்தியமான வார்த்தைகள்.

திரும்ப கிடைக்காத பிள்ளை பருவத்தை தடையில்லாமல்
அனுபவிக்க அனைவருடனும் கலந்து பழக விடுங்கள்.

13 comments:

சரிதான். நம்ப மக்கள் யாருடன் பழகுகிறார்கள் என்கிற கண்ணோட்டமும் அவசியம்.

வாங்க ஃபண்டூ,

//நம்ப மக்கள் யாருடன் பழகுகிறார்கள் என்கிற கண்ணோட்டமும் அவசியம்.//

மிக அவசியம். society plays vital role in child development. ஆனால் சந்தேக கண்ணோடு பார்த்து விலக்கி வைத்து, அவர்களின் ஆனந்தத்தை கெடுக்காமல் பெற்றோரின் கண்காணிப்பு இருக்கணும்.

அருமையான & அவசியமான பதிவு.

சரியான விடயம்.

நல்ல விஷயம் தென்றல். தம்மை விட வசதியில் குறைந்தவர்க்ளிடம் பழக நேரும்போது நம் பிள்ளைகளையும் அறிவுறுத்த வேண்டும், என்னிடம் இது இருக்கு, அது இருக்கு என்று பெருமை பேசக் கூடாது என்று.

என் மகனிடம் அவ்வாறு சில பிள்ளைகள் சொல்லுவதாக அவன் சொல்லும்போது எனக்கு வருத்தமாக இருக்கும்.‌

children are learning every think from society. Socialization is very important to think rationally.Nice Article

கலந்து பழக விடுவது பண்பினை வளர்க்கும். அவசியமான பதிவு தென்றல்.

நன்றி சூர்யா

நன்றி ஜமால்

என்னிடம் இது இருக்கு, அது இருக்கு என்று பெருமை பேசக் கூடாது என்று.//

ஆமாம் ரொம்ப முக்கியம். அதே சமயம் மேல்தட்டு பிள்ளைங்க்ளை பார்த்து மத்த பிள்ளைங்க அதே போல வாழணும்னு அடம் பிடிக்க கூடாதுன்னு சொல்லிக்கொடுக்கணும்

நன்றி கவிக்கிழவன்

நன்றி ராமலக்‌ஷ்மி

நல்ல பதிவு தென்றல்.....குழந்தைகள் எல்லொரிடமும் செர்ந்து விளையாடவிடவேண்டும்.அப்போதுதான்ஒவ்வொருவரின் சூழ்நினிலையும் அவர்களுக்கும் புரியும்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்