பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

ஹரிணிக்கு நாளை யூனிட் டெஸ்ட் ,அதையொட்டி நேற்று பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தாள்(தோம்).

ஆங்கிலத்தில் முதல் பாடம் மை பேமிலி .

இரண்டாம் பாடம் ஸ்மால் பேமிலி,லார்ஜ் பேமிலி,ஜாயின்ட் பேமிலி இவை மூன்றையும் ஒப்பிட்டு காட்டுவது தான் இரண்டாம் பாடம்.

மை பேமிலி அவளுக்கு எல்.கே.ஜி முதற்கொண்டே இருப்பதால் என்னிடம் கேட்பதற்கு கேள்வி ஒன்றும் இல்லை அவளுக்கு.

ஸ்மால் பேமிலி படித்து விட்டு My family is a small family என்றாள். ஆமாம் என்றேன்.

அடுத்து லார்ஜ் பேமிலி வந்தது ;

Father,Mother,Grand father,Grand mother,Uncle,Aunt,Childrenஇவர்கள் எல்லோரும் இணைந்து வசித்தால் அது லார்ஜ் பேமிலி .

அடுத்து ஜாயின்ட் பேமிலி ;

Father,Mother,Grand father,Grand mother,Uncle,Aunt,Cousins,Childrenஇவர்கள் எல்லோருமே சேர்ந்து வசித்தால் அது ஜாயின்ட் பேமிலி .

கடைசியில் Which family you like ?என்றொரு கேள்வி.

ஹரிணியின் பதில் -I LIKE ALL THE THREE FAMILIES .

என்னடா இப்பிடி சொல்ற ,ஏதாவது ஒரு பேமிலி பிடிக்கும்னு சொல்லலாமே என்றதற்கு ;

இல்ல ..எனக்கு எல்லா பேமிலியும் பிடிச்சிருக்கு , ஆனா ஜாயின்ட் பேமிலி தான் நான் இன்னும் பார்த்ததே இல்லை என்றாள். ரொம்ப ஜாலியா இருக்குமில்லம்மா ,நம்ம பெரியப்பாக்கள் நாலு பேரோட பேமிலி ,சித்தி பேமிலி,மாமா பேமிலி , அத்தைகளோட பேமிலி ,அப்புறம் Mummyசைடு தாத்தா,பாட்டி,Daddy சைடு தாத்தா பாட்டி ...அம்மாடி எவ்ளோ பெரிய ஜாயின்ட் பேமிலியா இருக்கும் !

சூப்பரா இருக்கும்ல?!

ம்ம்...சூப்பரா தான் இருக்கும்.

எப்போ நாம ஜாயின்ட் பேமிலி ஆவோம்?

ம்ம்...எப்போ !!! ...அது வந்து ஊர்ல திருவிழா நடந்தா அப்போ ஜாயின்ட் பேமிலி ஆயிடுவோம் அப்புறம் பெரியப்பாக்கள் வீட்ல ஏதாவது விசேசம்னா ,தாத்தா,பாட்டி வீட்ல ஏதாவது விசேஷம்னா ,சித்தி பையனுக்கு பெர்த் டேனா அப்போலாம் நாம எல்லாரும் ஜாயின்ட் பேமிலி தானடா என்றேன்.

அவளுக்கு என் பதில் சமாதானம் ஆகவில்லை போலும்.

அதுக்கு பேர் ஜாயின்ட் பேமிலியா ? ...நாம தான் ரெண்டு நாள்ல சென்னைக்கு வந்து திரும்பி ஸ்மால் பேமிலி ஆயிடரோமே!?

குழந்தையின் கண்களில் ஏக்கம் தெரியத்தான் செய்கிறது .கூடியமட்டும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வகையில் தான் இனிமேல் எந்த ஒரு குடும்ப விழாவையும் திட்டமிட வேண்டும் என அந்த நொடியில் மனதுக்குள் தோன்றியது.கூடவே என்ன தான் சின்னச் சின்ன உரசல்கள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை நம் தலைமுறையோடு மறையட்டும் குழந்தைகளிடம் அவற்றை கடத்திக் கொண்டு தொடர வைக்க வேண்டாம் என்றும் தோன்றியது.

குழந்தைகள் எப்போதும் தனிமையை விரும்புவதில்லை ,தன்வசதி வாய்ப்புகள் ,தன் வளர்ச்சி,சூழல் எனும் போர்வையில் பெரியவர்களுக்குத் தான் அதெல்லாம் தேவைப்படுகிறது.குழந்தைகள் எப்போதும் கூட்டமாய் குழுவாய் வாழவே விரும்புகிறார்கள் என்றும் தோன்றியது .

6 comments:

ஆமாம் குழந்தைக‌ள் அப்ப‌டி தான்.எத்த‌னை நாட்க‌ளுக்கு ந‌ம் முக‌த்தையே பார்த்துக்கொண்டிருப்ப‌து?அவ‌ர்க‌ளின் தேட‌ல் வேக‌ம் அதிக‌ம்.

//கூடவே என்ன தான் சின்னச் சின்ன உரசல்கள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை நம் தலைமுறையோடு மறையட்டும் குழந்தைகளிடம் அவற்றை கடத்திக் கொண்டு தொடர வைக்க வேண்டாம் என்றும் தோன்றியது.//

மிக கடினமான முயற்ச்சி. ஆனால் இதன் வெற்றி அதீதபலன் கொண்டது.

http://vaarththai.wordpress.com

நாமிருவர் நமக்கிருவர் போய் நாம் இருவர் நமக்கொருவர் இருந்தது. இப்போ அதுவும் போய் லிவிங் டுகதர்தான் மிஞ்சி இருக்கிறது. :( வேற என்னத்த சொல்ல. நல்ல பதிவு

நன்றி வடுவூர் குமார் ...குழந்தைகளிடம் தமக்கான சொந்தங்களை உறவுகளை சொந்தங்களை தேடும் வேகம் அதிகம் தான்,பாரபட்சங்கள் எல்லாம் பெரியவர்கள் தலைவலி அதை சுமக்க குழந்தைகளுக்கு பெரும்பாலும் விருப்பமிருப்பதில்லை.


நீங்கள் சொல்வது சரியே சிதம்பரம் சௌந்திரபாண்டியன் ...

நன்றி புதுகை தென்றல் ...

என்ன தான் சின்னச் சின்ன உரசல்கள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை நம் தலைமுறையோடு மறையட்டும் குழந்தைகளிடம் அவற்றை கடத்திக் கொண்டு தொடர வைக்க வேண்டாம் என்றும் தோன்றியது.

குழந்தைகள் எப்போதும் தனிமையை விரும்புவதில்லை ,தன்வசதி வாய்ப்புகள் ,தன் வளர்ச்சி,சூழல் எனும் போர்வையில் பெரியவர்களுக்குத் தான் அதெல்லாம் தேவைப்படுகிறது.குழந்தைகள்

அருமையான வரிகள்...அருமையான பதிவு..

பெரியவர்களின் கருத்து வேறுபாடுகள் ஈகொ பிரச்சினைகளில் அடிபடுவது சிறிய குழந்தைகளின் ஆசைகளும் பாசமும்.
மீறி நாம் முயற்சி செய்து சேர்ந்திருக்க முயற்சி செய்யலாம். 25% வெற்றியாவது கிடைக்கும். நல்ல பதிவு கார்த்திகா.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்