விருட்சம்.காம் வலைதளத்தில் இருந்து பகிரப்படுகிறது.
cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்
ஒரு இளைஞன் இந்த நீல நிற சாஷேயை பிரித்து ஒன்றை எடுத்து உதடிடுக்கில் வைத்துக் கொள்ள ஆஹா என்ன ஒரு புத்துணர்ச்சி? உடனே எங்கிருந்தோ மூன்று நவ நாகரீக நங்கைகள் ( இங்கே அப்படி என்றால் தையல் கடையில் இருந்து கடாசிய துண்டு துணிகளை மட்டும் உடுத்தியவர்கள் ) வந்து ஒட்டிக் கொள்ள …
இப்படி போகும் அந்த விளம்பரம். எல்லா தொலைக் காட்சிகளிலும் சாதாரணமாக காட்டப் படும் விளம்பரம். சரி இது ஏதோ வாய்க்கு புத்துணர்ச்சி தரும் பொருட்களுக்கான விளம்பரங்களில் ஓன்று என்று நினைத்து பலரும் அலட்சியப் படுத்தி விடலாம். அலட்சியப்படுத்தி விட்டால் விட்டது தொல்லை. மாறாக யோசிக்காமல் வாங்கி ஓன்று வாயில் இடுக்கிக் கொண்டால் பிடித்தது ஏழரை என்பதைக் கூட உணராமல் அதில் மாணவக் கண்மணிகள் மூழ்கிக் கொண்டு இருக்கும் அவலம்
இப்போ கண்டுபிடித்திருக்கிறது ஒரு தனியார் பள்ளி.
பள்ளி மாணவர்களை இது எப்படி கவருகிறது? விரலிடுக்கில் நீட்டிக் கொண்டு புகை விட்டு மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை. வாயில் புகையிலை குதப்பி துப்ப வேண்டியதில்லை. மறைவிடங்கள் தேட வேண்டியதில்லை. ரொம்ப சுலபம். விலை ஐந்தே ரூபாய். சின்ன சாட்ஷே. பத்து சின்ன வில்லைகள். மேல் உதட்டில் ஒன்றை இடுக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் எந்த சந்தேகமும் வராமல் வகுப்பில் பாடம் கவனிக்கும் மாணவன் போல் அமர்ந்து கொள்ள முடியும்.
பின் விளைவுகள் என்னென்ன? வேறு என்ன ஒரு நாள் எடுத்துக் கொள்ள வில்லை என்றால் தலை வலி எரிச்சல் தூக்க மின்மை, எரிந்து விழுதல், படிப்பில் கவனமின்மை.
இதை விளம்பரப்படுத்தும் இந்தச் சுட்டி
சொல்லுவது இது ஹெர்பல் தயாரிப்பாம். ஆரோக்கியத்துக்கு நண்பனாம் அதான் ஹெல்த் பிரெண்ட்லி
ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும் புகையிலை தயாரிப்பு என்று ஏதாவது உண்டோ.
vandhaan vadivelan
1 year ago
13 comments:
:((( என்னத்த சொல்ல.
பெற்றோர்களுக்கு எச்சரிக்கை மணி அடிச்சிருக்கீங்க. நன்றி
ஒரு பக்கம் இந்தப்பசங்களை நினைச்சா பாவமா இருக்கு..
வளர்ந்து வரும்பொழுதில் எத்தனை நெருப்பாறுகளை கடந்து வரவேண்டியிருக்கு :-((
உண்மைதான் இதைக் கன்ட்ரோல் பண்றது பெரும்பாடாயிருக்கு பள்ளிகளில்...
//மேல் உதட்டில் ஒன்றை இடுக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் எந்த சந்தேகமும் வராமல்//
டெக்னாலஜி இஸ் ஸோ மச் இம்ப்ரூவ்ட் யூ நோ!! :-(((((
அறியா வயதில் தவறி விழுந்துவிடாமல் இருக்கணுமேன்னு வயிறு எரியுது!!
இதை Parentsclub ல் பகிர்ந்து பலருக்கும் தகவல் போய்ச் சேர உதவிய விதூஷுக்கு நன்றி
சுட்டி மிஸ்ஸிங். இதோ
http://metaindia.blogspot.com/2010/06/cool-lip-tabbaq-pillow-pure-indian.html
இதில் விளையாட்டாக ஆரம்பிக்கும் மாணவர்கள் ஒரு நேரத்தில் ஒரு வில்லை என்று துவங்கி பின் இரண்டு மூன்று என்று கூட்டி பின் அதிக போதைக்கு அடுத்தகட்டத்துக்கு அதாவது இதில் ஹை டோசெஸ் இருக்காம் அது பிறகு சிகரட், மது என்று நகரத் துவங்கி விடுகிறார்கள்.
மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த கேட்டினை எடுத்துக்காட்டியதற்கு நன்றி.
Cool Lip Tabbaq என்பது ஒரு புகையிலைப் பொருள். எனவே, புகையிலைக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் இதற்கும் பொருந்தும்.
இந்த விளம்பரம் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ஒன்றுதான். ஆனால், விளம்பரத்தில் "Cool Lip Tabbaq" என்று குறிப்பிடாமல் "Cool Lip Mouth Freshener" என்று குறிப்பிடுகிறார்கள். அப்படியும்கூட இந்த விளம்பரம் புகையிலை கட்டுப்பாடு (COTPA 2003) சட்டப்படி குற்றம்தான்.
அவ்வாறே, பள்ளி மாணவர்களுக்கு இதனை விற்பதும் சட்டப்படி குற்றம். COTPA 2003 சட்டப்படி 18 வயதுக்கு கீழானவர்களிடம் புகையிலைப்பொருட்களை விற்க கூடாது.
எனவே, நீங்கள் குறிப்பிட்டுள்ள பள்ளி குறித்த விவரத்தை அளித்தால், அவர்களுடன் சேர்ந்து சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். பள்ளி மாணவர்களை குறிவைத்து இதனை விற்கிறார்கள் என்பதை நிரூபிப்பது அவசியம்.
2010 தொடக்கத்தில் Four Square சிகரெட் சார்பாக இசைநிகழ்ச்சிகள் நடத்திய போது - அவை அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன. இப்போது, பள்ளிகளும் சமூக ஆர்வலர்களும் முன்வந்தால் இந்த Cool Lip தீமையையும் தடுக்க முடியும்.
பொதுவாக புகையிலை பொருள் விளம்பரங்களை முற்றிலுமாக தடுப்பதற்கான முன்முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும், ஆர்வமுள்ளோர் ஒன்றிணைந்தால் சாதிக்கலாம்.
முடியுமானால் பின்வரும் முகவரிகளுக்கு புகார் அளிக்கலாம்:
Director of Public Health and Preventive Medicine,
Directorate of Public Health and Preventive Medicine,
359, Anna Salai,
DMS Complex,
Teynampet,
Chennai – 600 018
State Tobocco Control Cell,
359, Anna Salai,
DMS Complex,
Teynampet,
Chennai – 600 018
விருப்பமிருந்தால் எனக்கு தகவல் அளிக்கலாம். நான் என்னாலான முன்முயற்சியினை மேற்கொள்வேன்.
arulgreen@gmail.com
அருள்
நன்றி. இதை நான் ஒரு பள்ளியின் பிரச்சனையாக ஏன் பார்க்க வேண்டும்? . மாணவர்களின் பிரச்சனையாகப் பார்க்கலாமே. அதனால் பள்ளி வந்து புகார் கொடுக்க வேண்டும் என்று இல்லாமல் ஒரு பொது நலன் கருதி . நான் ஒரு மின்னஞ்சல் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறேன். பள்ளிக்கும் தகவல்கள் கொடுத்து இருக்கிறேன். நீங்களும் உங்களால் ஆன முயற்சியை செய்யுங்களேன்
தேவையான பதிவு.பகிர்வுக்கு நன்றி.
குழந்தைகளை குழல் ஊதி இழுத்துச் செல்லும் பைட் பைப்பர்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டே வருகிறது...பாவம் சிறார்கள்
naan orun 3 varusam kalichu senthukiren
Very Nice Post indeed!
Post a Comment