பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

4ஆம் வகுப்பு மாணவன் கூட ஐ லவ் யூ என்று தன்
சகவகுப்பு மாணவியிடமோ, தோழியிடமோ சொல்லும்
காலம் இப்போது. இந்த நிலையில் பதின்மவயதுக்குழந்தைகள்
பற்றி சொல்லவே வேண்டாம்.

பாய்ஃப்ரெண்ட்/கேர்ள் ஃப்ரெண்ட் இல்லாவிடில் அவர்கள்
எதற்கும் லாயக்கற்றவர்கள் என சொல்லும் நட்பு வட்டம்...
ஸ்டேடஸ் சிம்பளாக ஒரு பெண்ணோடோ/ஆணோட
நட்பு இருப்பதாக காட்டிக்கொள்வது சர்வ சாதரணமாகிவிட்ட
சூழல் என இருக்கும் நிலையில் பிள்ளைகள் காதல்
வயப்படுகிறார்கள். இது உண்மையில் காதலில்லை
என்று சொன்னால் கேட்கும் மனநிலை அவர்களுக்கு இல்லை.
தனக்கென ஒரு உலகம் அமைத்து அதற்குள் வாழும் அவர்கள்,
தனக்கான தனி அடையாளம் அமைத்துக்கொள்ள என்ன
வேண்டுமானாலும் செய்ய கூடிய ஒரு மனநிலையில்
இருப்பார்கள்.

வீட்டுக்குள் அடைப்பது, திட்டுவது, அடிப்பது, சோறு
போடாமல் கண்டிப்பது எல்லாம் வேலைக்கு ஆவாது.
அவர்களுடன் பேசி நிஜத்துக்கும் நிழலுக்கும் உள்ள
வித்தியாசத்தை புரிய வைக்க வேண்டும். பெற்றோர்கள்
தான் தனது வாழ்க்கையின் முக்கிய எதிரி என நினைப்பார்கள்.
அன்பான வார்த்தை கூட எடுபடாத இந்த சூழலில்
இது எதிர்பாலினத்தரின் மீதான ஒரு கவர்ச்சி. இது
இப்பொழுது நிகழக்கூடிய ஒன்று. இதை காதல் என
தவறாக புரிந்து கொண்டு வாழ்க்கையை வீணாக்காமல்
படிப்பை கவனித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம் என
பேசிப் பேசி புரிய வைக்க வேண்டும்.
சொல்வது போன்ற எளிது கிடையாது.

தற்போது படிப்பில் கவனதை செலுத்தி நல்லதொரு
வளமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டு
அப்போதும் இருவருக்கும் இருந்தால் பார்க்கலாம்
என சொல்லலாம். ஏன் கூடாது??? என எதிர் கேள்வி
வீசப்போகும் பிள்ளைக்கு அதை புரிய வைக்க வேண்டியது,
நிதர்சன உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டியது
பெற்றோரின் கடமை.

ஆகாயத்தில் கோட்டை கட்டாமல் நிதர்சனங்களை அலசி
ஆராய்ந்து தனக்கென கால் ஊன்றிய பிறகு தன் வாழ்க்கை
துணையை தேர்ந்தெடுப்பது நலம் என சொல்லவேண்டும்.
இந்த வயதில் இந்த இனக்கவர்ச்சி இயல்பானது என்பதை
புரிந்து கொண்டு பெற்றோரும் குழந்தைகளை அதிகமாக
கட்டுபடுத்தாமல் நல்ல வழிகாட்டியாக பிள்ளைகளுக்கு
உதவி இனிதாக பதின்மவயதை தாண்ட உதவ வேண்டும்.

6 comments:

//சொல்வது போன்ற எளிது கிடையாது//

100% நிஜம். காலேஜில் ஜூனியர்கள் சிலருக்கு சொல்லிப் பார்த்த அனுபவம் இருக்குல்ல!!

காலேஜ் படிக்கிற வயசுலயே அப்படின்னா, பதின்ம வயசுன்னா சொல்லணுமா!! ரொம்பவே பயமாத்தான் இருக்கு இப்பல்லாம்!!

உண்மை தான். இப்பவெல்லாம் இந்த சினிமா தொலைகாட்சி எல்லாம் காதல் என்னவோ வாழ்வில் கண்டிப்பா இருக்க வேண்டும் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்பது மாதிரி ஒரு மாயத்திரையை வியாபார நோக்குடன் உருவாக்கி உள்ளனர். இந்த ஊடகங்கள் மூலமாக உலகை பெற்றோர் அறிமுகம் செய்வதால் அதை பார்த்து விட்டு பிள்ளைகளும் இப்படி தான் இருக்க வேண்டும் என முடிவெடுக்கின்றார்கள். அதிக சுதந்திரம் பதின்ம வயதில் பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை மேலை நாட்டவர்க்கு அவர்களின் கலாசாரத்திற்கு சுதந்திரம் கொடுகிறார்கள் சரி இந்த நாட்டில் சரி வராது!

இந்த மாற்றத்தை நாம் திடீர் என்று பிள்ளைகளிடம் கொண்டு வர முடியாது . ஆரம்பம் முதலே பார்க்கும் படங்கள் முதல் ,பழகும் நண்பர்கள் வரை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளும் படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் . அவர்களின் உணர்வுகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு காதல் என்றாலே கேட்ட வார்த்தை , அதை பற்றி பேச கூட கூடாது என்று மிரட்டப்படும் பிள்ளைகள் தங்கள் உணர்வுகள் பற்றி பேச , பகிர வெளியில் தான் நண்பர்களை தேடுவர்.. அதுவே பின்னர் இனக்கவர்ச்சி ஆகி தேவை இல்லாத பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஹுசைனம்மா

நன்றி பாரதி வைதேகி

கருத்துக்கு நன்றி மித்ரா அம்மா

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்