பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பேரன்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் வாசகர்களுக்கும் அன்பு வணக்கம். நீண்ட நாட்கள் கழித்துப் பதிவிடுகின்றேன்....


சில பெற்றோருக்குக் குழந்தைகளை விடுதியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இது சரியா தவறா என்று விவாதமே நடத்துமளவுக்கு இரண்டு தரப்பிலும் நியாய அநியாயங்கள் உண்டு. இப்பதிவுகளின் நோக்கம் அவற்றை விவாதிப்பதற்கல்ல...

அந்தக்காலகட்டத்தில் கல்லூரி வயதில் கூட விடுதிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுத்த பெற்றோர் உண்டு. பெண்பிள்ளைகள் மட்டுமல்ல, ஆண்பிள்ளைகளும் இதை அனுபவித்திருப்பார்கள். இந்தத் தலைப்பில் நான் பேச இருப்பது பள்ளிக் குழந்தைகளைப் பற்றி மட்டுமே. கல்லூரிக் கல்விக்காகப் பிள்ளைகளை அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

பள்ளிக் குழந்தைகளை விடுதிக்கு அனுப்பக் காரணங்கள் பல உண்டு..இந்தத் தலைப்பில் பல கோணங்களில் அலசலாம்..இந்தப் ப்ரச்னை குறித்து ஒரு சில பகுதிகளில் அலசிப் பார்க்கலாம்.

பகுதி -1: விடுதியில் சேர்ப்பதற்கான பொதுவான காரணங்கள்:
  • கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறேன். வீட்டில் சூழல் சரியில்லாததால் குழந்தையால் படிக்க முடியவில்லை..
  • பிரிந்து விட்ட அல்லது விவாகரத்து செய்த கணவன், மனைவி இம்முடிவுக்கு வரலாம்...
  • அடம் அதிகமாகி விட்டது...சொன்ன பேச்சு கேட்க மாட்டேன் என்கிறான்...விடுதியில் விட்டால்தான் சரியாக வரும்..
  • தன் வேலைகளைத் தானே செய்து பழகுவதற்காக...
  • டியூஷன் என்று தினசரி பல இடங்களுக்கு அனுப்ப இயலவில்லை..இங்கே கோச்சிங் நன்றாக இருக்கும்...
  • இந்த இன்டர்நேஷனல் பள்ளியில் குதிரை ஏற்றம், கராத்தே, நீச்சல் என்று பல பயிற்சிகள் தருகிறார்கள்..
  • நாங்கள் இருப்பது குக்கிராமம்..அதிகதூரம் தினசரி பஸ்ஸில் போய்வர முடியாது...
  • குழந்தை யாருடனும் பழகுவதில்லை...விடுதியில் எப்போதும் பலரோடு பழகுவான்..
  • இரண்டு பேரும் வேலைக்குப் போய் வருவதால் குழந்தையில் தேவைகளைச் சரிவரக் கவனிக்க இயலவில்லை..
  • வேற்று மாநிலத்தில் இருப்பதால் பாஷை புரியாமல் கஷ்டப்படுகிறான்...அதனால் நம் மாநிலத்தில் இருந்து பலருடனும் கூச்சம் மறந்து எளிதாகப் பழக..
  • அடிக்கடி வேலைக்காக ஊர், மாநிலம் மாறிவருவதால் படிப்பு பாதிக்கிறது..எனவே விடுதி என்றால் ஒரே இடமாக இருக்கும்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேறுவித காரணங்கள்:
  • இந்தக் கலாசார சூழல் குழந்தையை பாதிக்கும்...
  • இங்கே பாடத்திட்டம் இந்தியா போல நன்றாக  இல்லை...
  • வெளிநாட்டு சொகுசு பழகிவிட்டதால் இந்தியா வரும் காலத்தில் குழந்தை அச்சூழலுக்கு அனுசரிப்பதற்காக..
  • இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் அந்நிய நாட்டின் தனிமையில் பாதுகாப்பு இல்லை..

இப்படியாகப் பல காரணங்களுக்காக விடுதியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் நேரிடலாம்...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.

ஏதோவொரு காரணத்துக்காக இப்படி விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது என்றால் பெற்றோர் கவனிக்க வேண்டியவை..
அடுத்த பகுதியில்..

6 comments:

மிக அருமையான அலசலுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள் பாசமலர். நான் படித்த பள்ளியில் சுற்றுக் கிராமங்களிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் வந்து தங்கிப் படித்தார்கள். அவர்களிடம் எப்போதுமே கூடுதலாக நான் நட்பும் நேசமும் பாராட்டுவதுண்டு. சிலபேர் நீண்ட விடுமுறைகளுக்குக் கூட பெற்றோரிடம் செல்ல இயலாமல் இருப்பதுண்டு.

தொடருங்கள்.. வருகிறேன்.

நன்றி ராமலக்ஷ்மி...மார்ச் 16 - 30 வரை சின்னதாய் ஓர் இந்தியப் பயணம்...வந்ததும் தொடர்கிறேன்... புறப்படுமுன் முடிந்தால் இன்னும் ஒரு பகுதி வரும்..

வணக்கம் தோழி... பேரன்ட்ஸ் க்ளப்பில் தற்சமயம் எனக்கு மிக அத்தியாவசியமான ஒரு பதிவு தந்தமைக்கு நன்றி! ஆம். எங்கள் மகன் CBSE பாட முறையில் படிப்பை தொடர வேண்டி தனது பதினோராம் வகுப்பை ஆந்திராவின் நாராயணா கல்வி நிறுவனத்தில் பயில இருக்கிறான். இன்னும் ஒரு மாதத்தில் அவன் வேறு மாநிலத்தில் வேறு மொழியினருடன் இருப்பான். எங்கள் மன உணர்வுகளைப் பதிவிட இருக்கிறேன். தங்கள் ஆலோசனைகளும் எங்களுக்கு மிகப் பயனுள்ளதாய் இருக்குமென நம்புகிறேன்

வாங்க நிலாமகள்....அவசியம் உங்கள் பதிவையும்
படிக்கின்றேன்....பதிவிட்டதும் எனக்கு ஓர் அஞ்சல் அனுப்பிவையுங்கள்...முகவரி என் அறிமுகப்பக்கத்தில் உள்ளது....

மிகவும் அருமையான பதிவு . என்னை பொறுத்தவரை என் தன்னம்பிக்கையின் அளவு வளர்ந்தது என்றால் அது நான் விடுதியில் இருந்த அந்த 4 வருடங்களில் தான் எனலாம். கல்லுரி படிக்கும் வயதில் விடுதி அனுபவங்கள் பல விதமான மனிதர்களை ,அவர்கள் குணங்களை அறிய உதவும் . அதே சமயம் பொறுப்புகளை ஏற்றுகொள்ளும் பக்குவமும் வளரும் . இது நான் என் சொந்த அனுபவத்தில் கண்ட உண்மை

பூங்கொத்து!

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்