பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

வெட்கம்... அழகான வார்த்தை. வெட்கப்படும்பொழுது சிலர்
இன்னும் அழகாக தெரிவார்கள். ஆனால் இந்த வெட்கமே
சிலருக்குத் தடையாக இருக்கும். பெரிய அளவில் முன்னேறாமல்
போய்விட இந்த வெட்கம் காரணமாக இருக்கலாம்.

SHY CHILD என அழைக்கப்படும் சில குழந்தைகளை வளர்ப்பது
அவ்வளவு சுலபமல்ல. சுற்றத்துடனும், நட்புடனும் கலந்து
விளையாடாத தன் குழந்தையால் மனவருத்தத்திற்கும்
வெறுப்புக்கும் ஆளாகும் பெற்றோர் எத்தனையோ பேர்.
தன் பெற்றோர் வேறு யாருடனும் பேசி மகிழ்ந்து கொள்ள விடாமல்
அழுது, பிடிவாதம் பிடித்து என கவனத்தை திசை திருப்ப
முயற்சி செய்வார்கள் இத்தகைய குழந்தைகள். பொறுமையாக
இத்தகைய குழந்தைகளை கையாள வேண்டும்.

பொது இடத்தில் சாப்பிட படுத்துவார்கள், பார்ட்டி, கல்யாணம்
போன்ற இடங்களுக்குச் சென்றால் அம்மாவின் காலை கெட்டியாக
பிடித்துக்கொண்டு எங்கும் நகர விடாமல் செய்வார்கள்.


வளர வளர சிலக்குழந்தைகள் எல்லோருடனும் கலந்து பழக
ஆரம்பிப்பாரள் என்றாலும் சிலர் அந்த வெட்கம் தயகக்த்துடனே
வளர்வார்கள். தன்னம்பிக்கை குறையும். யாருடனும் கலந்து
பேசாததால் தனிமை விரும்பிகளாகிவிடுவார்கள்.

என்ன செய்வது?? இந்தப் பிள்ளைகளை எப்படி சமாளித்து
வளர்ப்பது??

வாங்க பகிர்ந்துக்கலாம். நாளைய பதிவில் பார்க்கலாம்.

15 comments:

நல்ல பதிவு தென்றல்.

//வளர வளர சிலக்குழந்தைகள் எல்லோருடனும் கலந்து பழக
ஆரம்பிப்பார்கள்//

உண்மைதான். ஒரு பருவத்தில் தானாகவே மாறிவிடுகிறார்கள். தங்கை பெண் இப்படி இருந்து, பள்ளி செல்ல ஆரம்பித்ததும் கலகலப்பாகி விட்டாள். ஆனால் விதிவிலக்காகவும் தயக்கத்துடன் வளையவரும் குழந்தைகளும் உண்டுதான். தொடருங்கள்.

தன்னம்பிக்கைக் குறைவும், தாழ்வு மனப்பான்மையும் தான் இதற்கு அடிப்படையென நினைக்கிறேன். சிறுபிராயம் முதல் தனது தோற்றம் மற்றும் திறன் குறை பற்றிய பிறரது கேலி கிண்டலுக்கு ஆளாகும் குழந்தை இயல்பிலேயே மனம் கூம்பிப் போய் சக மனிதரைத் தவிர்த்து தனித்திருக்கத் துவங்கி விடுகிறது. பெற்றோரின் கவனமும் ஊக்குவிப்புமே இக் குழந்தைகளை சமநிலைக்கு கொண்டுவரத் துணை நிற்கும்.
அடுத்த பகிர்தலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

என் பைய‌னும் இதையேதான் செய்கிறான்,..
சின்ன‌ வ‌ய‌தில் நானும் அப்ப‌டிதான் இருந்த‌தாக‌ என் அம்மா சொன்னார்கள்,.. இது ஜீன் எபெக்ட்டா என‌ தெரிய‌வில்லை

kulanthaikal valara valara maarukiraarkal... iruppinum kavnam thevai...!see my blog http://veeluthukal.blogspot.com/2011/03/blog-post.html#comments

kulanthaikal valara valara maarukiraarkal... iruppinum kavnam thevai...!see my blog http://veeluthukal.blogspot.com/2011/03/blog-post.html#comments

kulanthaikal valara valara maarukiraarkal... iruppinum kavnam thevai...!see my blog http://veeluthukal.blogspot.com/2011/03/blog-post.html#comments

kulanthaikal valara valara maarukiraarkal... iruppinum kavnam thevai...!see my blog http://veeluthukal.blogspot.com/2011/03/blog-post.html#comments

kulanthaikal valara valara maarukiraarkal... iruppinum kavnam thevai...!see my blog http://veeluthukal.blogspot.com/2011/03/blog-post.html#comments

நன்றி ராமலக்‌ஷ்மி,

உடல்நிலை கொஞ்சம் சரியில்லை. நாளை அடுத்த பதிவு வரும்.

வருகைக்கு நன்றி

வாங்க நிலாமகள்,

நீங்கள் சொல்வது சரிதான். எனெனினும் பிள்ளையில் தவறான எண்ணங்களும்(பெற்றோர் தனக்கு மட்டுமே) போன்ற எண்ணங்களும் சில காரணிகள்.

அடுத்த பகிர்வு நாளை

வருகைக்கு நன்றி

வாங்க ஜோதி,

வருகைக்கு நன்றி

ஆமாம் சரவணன்
கவனம் தேவை.

தங்கள் வருகைக்கு நன்றி

நல்ல பதிவு.. சின்ன வயதில், அம்மா, அப்பாவை மட்டுமே அறிந்த வயதில், மற்றவரிடம் வெட்கம் வருவது இயல்பு தான்..

ஆனால் வளர வளர, அது மறைந்து விட வாய்ப்பு உள்ளது.. அப்படி போகலேன்னா தான் பிரச்சினை.. நீங்க தொடருங்கள்... திரும்ப வருகிறேன். :)

நல்ல தொடர் கலா...அதிக வெட்கமும் ஆபத்துதான்..

yenoda kulanthai yelarkitaum nala palakura
avaluku 2vayathum 4mathamum aguthu. yenaku yenna pirachanai na ava yarkita ponalum yenkitao yen husband kitayo vara matekira yarkuda poralo avanga kudave eruthukiren daddy mummy vendom apadikira.
epadi eruntha nan yenna panurathu?
yenaku epalam avala yarodavum palaga vida vendom nu thonuthu.
yela kulanthaum daddy mummy venum thana solluvanga eva yen epadi erukura.
yenaku payama eruku. yenna verukuralo nu thonuthu.
nan yena panalam ungaluku thericha solluga plz...

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்