பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

Dorothy Law Nolte சொல்வதைக் கேளுங்கள்:

விமர்சனத்தோடு வளரும் குழந்தை குறை கூறக் கற்கிறது.

காழ்ப்புணர்வோடு வளரும் குழந்தை சண்டையிடக் கற்கிறது

பயத்தோடு வளரும் குழந்தை திகிலோடு வாழ்கிறது

இரக்கத்தோடு வளரும் குழந்தை சுயபச்சாதாபப்படக் கற்கிறது

ஏளனத்துடன் வளரும் குழந்தை வெட்க உணர்வைக் கற்கிறது

பகையுணர்வோடு வளரும் குழந்தை பொறாமைப்படக் கற்கிறது

அவமான உணர்வோடு வளரும் குழந்தை குற்றவுணர்வைக் கற்கிறது.

ஊக்க உணர்வோடு வளரும் குழந்தை தன்னம்பிக்கையைக் கற்கிறது.

சகிப்புத் தன்மையுடன் வளரும் குழந்தை பொறுமையைக் கற்கிறது.

புகழ்தலுடன் வளரும் குழந்தை பாராட்டக் கற்றுக் கொள்கிறது.

உரிமையோடு வளரும் குழந்தை அன்பு செலுத்தக் கற்றுக் கொள்கிறது.

திருப்தியுடன் வளரும் குழந்தை சுயமதிப்போடிருக்கக் கற்கிறது

அங்கீகாரத்துடன் வளரும் குழந்தை குறிக்கோளுடன் வாழக் கற்கிறது

விட்டுக் கொடுத்தலோடு வளரும் குழந்தை பெருந்தன்மையோடு வாழ்கிறது.

நேர்மையோடு வளரும் குழந்தை உண்மையை மதிக்கக் கற்கிறது.

நியாய உணர்வோடு வளரும் குழந்தை நீதிமானாக இருக்கக் கற்கிறது.

கருணையோடு வளரும் குழந்தை மரியாதை செலுத்தக் கற்கிறது.

பாதுகாப்புடன் வளரும் குழந்தை நம்பிக்கையைக் கற்கிறது.

நட்புணர்வுடன் வளரும் குழந்தை, உலகம் வாழ்வதற்கான இடம் என்பதைக் கற்றுக் கொள்கிறது.

சிறந்த பெற்றோர்க்கான குறிப்புகள்:

குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பது.
பெற்றோர் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது.
ஒழுக்க முறையைக் கற்பிப்பது; நடைமுறைப் படுத்துவது.
குழந்தையின் தனித்தன்மையை மதிப்பது; போற்றுவது.
வயதிற்கும் மன வளர்ச்சிக்கும் ஏற்ப சுதந்திரம் அளிப்பது.
பெற்றோர் மீது பரிவும் பாசமும் நிலைக்கவும், பயத்தைத் தவிர்க்கவும் செய்வது.
தேவையான அளவு அன்பு காட்டுவது.
மன, உடல் சங்கடங்கள் ஏற்படும் போது பரிவுடன் நீக்க முயல்வது.
திரைப்படம், விளம்பரம், தொலைக்காட்சி இவற்றின் வரையறைகளைத் தெளிவுபடுத்துவது.
நல்ல நண்பர்களுடன் பழகவும், வீட்டிற்கு அழைத்து வரவும் அனுமதிப்பது.
தகுதிக்கு ஏற்ற அளவு வெற்றியை அடையும் போது மகிழ்வது; பாராட்டுவது.
குடும்பத்தினர் யாவரும் குதூகலமாக இருக்க உதவுவது.
நாமே எடுத்துக் காட்டாக முன்மாதிரியாக வாழ்வது.


******************************************************

நிலாமகள் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பியதை பதிவிட்டிருக்கிறேன்.
நன்றி நிலாமகள்.

9 comments:

ஊக்க உணர்வோடு வளரும் குழந்தை தன்னம்பிக்கையைக் கற்கிறது.


பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டிய அற்புதமான் கருத்துக்களுக்குப் பாராட்டுக்கள்>

பாதுகாப்புடன் வளரும் குழந்தை நம்பிக்கையைக் கற்கிறது.


எல்லாமே நல்ல வரிகள்.

@ இராஜராஜேஸ்வரி...
@Lakshmi...

த‌ங்க‌ள் வ‌ருகையும் க‌ருத்தும் உற்சாக‌ம‌ளிக்கிற‌து, ந‌ன்றி!

அருமையான கருத்துகள்

அழகான மகிழ்வான
பதிவு
வாழ்த்துக்கள்
தோழா

அழகான மகிழ்வான
பதிவு
வாழ்த்துக்கள்
தோழா

வணக்கம் . நான் நிலாமகளின் 'மகள்'.இப்போது தான் இப்பதிவை வாசிக்க முடிந்ததது!(அன்புடன் மன்னிக்கவும்) இந்த பதிவின் ஒவ்வோறு வரியும் எனது பெற்றோரையே நினைவுபடுத்தியது !

அவ்வபோது உங்கள் பதிவுகளை படிப்பேன் .

நல்ல பகிர்வு!

வணக்கம் நான் பவியின் பேரன்.பெர்த்தியை வள்ர்க்கும் பொறுப்பால் இப்பதிவுக்கு வரமுடிந்தது.ஆண்டவனுக்கு நன்றி.தொடர்ந்து நாள்முழுக்க வாசிக்கலாம்.அருமையான பதிவுகள்.ஐயா பகிரமுடியாதா?பயனுள்ள இப் பதிவுகள் எல்லா பெற்றோருக்கும் உதவும்’ நன்றி அன்புடன் நடா

வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்