பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

தூர்தர்ஷனை அடிச்சுக்க ஆளே இல்லீங்க. சென்ற வாரத்தில் ஒரு மாலையில்
பொன்வேளையில் தூர்தர்ஷ்னில் அருமையான ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது.

பதின்மவயதுக்குழந்தைகளுடன் ஒரு குழந்தைகள் மனோதத்துவ நிபுணர்
உரையாடல் நிகழ்ச்சி. மிக அருமையாக இருந்தது. என் மனதில் பதிந்த
அந்த உரையாடலில் சில இங்கே பகிர்கிறேன்.

1. என் அம்மா என்னுடைய நண்பர்களுடன் அதிகம் போனில் பேச விடுவதில்லை!
பள்ளியில் பேசுவது போதாதா என்று திட்டுகிறார். இதற்கு என்ன செய்ய?

நிபுணர் பதில்: உங்களுக்கு எப்படி உங்கள் பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்
என நினைக்கிறீர்களோ, அதே போல பெற்றோர்களுக்கும் தன் குழந்தைகளுடன்
அளவளாவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பள்ளி, பிற வகுப்புக்கள்
என்று நீங்கள் வீடு திரும்பிய பின்னும் நண்பர்களுடன் பேசிக்கொண்டு
இருந்தால் பெற்றோருக்கு உங்களின் அருகாமை கிடைக்காமல் போகிறது.
அதனால்தான் பெற்றோர் அப்படி ரியாக்ட் செய்கிறார்கள்.

ஆகவே உங்களின் அருகாமையை பெற்றோர்கள் உணரும் வகையில்
நடந்து கொள்வதும் அவசியம். அவர்களை உணராமல் தவிக்க விடுதல்
கூடாது.

2. என் தந்தைக்கு சமீபத்தில் வெளியூருக்கு மாற்றல் ஏற்பட்டுள்ளது.
நானும், அம்மாவும் மட்டும் இங்கே இருக்கிறோம். அப்பா வெளியூருக்கு
சென்றது முதல் அம்மா என்னை அதிகம் கண்ட்ரோல் செய்கிறார்.
நீ நண்பர்களுடன் ஊர் சுற்றி கெட்டுவிடுவாய் என்கிறார். ஏன் இப்படி?

நிபுணர் பதில்: அப்பா அருகில் இல்லாததால், அதையே சாக்காக்கி
பிள்ளை கெட்டுவிடக்கூடாது என்ற தாயின் முன்னெச்செரிக்கை
நடவடிக்கையே இது. இதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் அன்னைக்கு
ஆதரவாக இருப்பது அவசியம்.

3. அப்பா நான் சொல்வதை புரிந்துக்கொள்வது போல, அம்மா புரிந்து
கொள்வது இல்லை( இது ஒரு மகனின் குற்றச்சாட்டு)

நிபுணர் பதில்: அப்பாவின் சைக்காலஜி வேறு, அம்மாவின் சைக்காலஜி
வேறு. அவர்கள் பேசும் பாஷையும் அதனால் வேறுபடும். இதை
புரிந்துக்கொள்வது மிக அவசியம். அம்மா பதின்ம வயதில் இருந்த
பொழுது ஏற்பட்ட மாற்றங்கள் மன உளைச்சல் வேறு ரகம். அதனால்
சில சமயம் அம்மாவால் மகனை புரிந்து கொள்ள முடியாமல் போகிறது.

(சத்தியமான வார்த்தை. அன்னைக்கு அந்த நிலை புரியாது என்பதால்
அவளால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த நிலையை தாண்டி வந்த
தகப்பனின் ஆறுதல், அரவணைப்பு தர முடியாமல் வேலை என்று
ஓடுவதால் மகன் பாவம்)

( எனக்கு இந்த இடத்தில் தோணிய
பாட்டு,” அப்பாக்கள் பல பேரு அந்நாளில் செய்திட்ட தப்பைத்தான்
அடியேனும் இந்நாளில் செய்தேன் அப்பா, என்ற திரைப்படப்பாடல்தான்.
தானும் அந்தத் தவறுகளை செய்திருப்பதால் அப்பாவுக்கு இதெல்லாம்
ஒரு பொருட்டில்லாமல் இருக்கலாம்.)


4. இரவில் செல்போன் கொடுப்பதில்லை என் பெற்றோர்.
ஏன் இப்படி செய்கிறார்கள்?

நிபுணர் பதில்: உங்களுடைய ஏதாவதொரு செயல் அவர்களுக்கு
உங்களின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கும். அதன் வெளிப்பாடுதான்
இந்த நடவடிக்கை. நம் மீது நம்பிக்கை வருமாறு நடந்துகொள்வது
பிள்ளைகளுக்கு அவசியம். தவிர உங்களின் இம்பல்சிவ் பிகேவியரை
கட்டுப்படுத்துவது அவசியம் என்பதால் பெற்றோர்கள் இப்படி செய்கிறார்கள்.

5. ஜங்க்புட், ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதற்கு தடா போடுகிறார்கள்.இது
மிகுந்த வேதனையை அளிக்கிறது.

நிபுணர் பதில்: நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது ரொம்ப முக்கியம்.
பேலன்ஸ்ட் டயட் இல்லாமல் கண்டதைச் சாப்பிட்டோமானால் அது
நம் மன உளைச்சலை அதிகரித்து நம்மில் பெரிய மாற்றத்தை உண்டு
படுத்தும். வாரத்திற்கு இரண்டு தடவை மேற்சொன்ன உணவை எடுத்துக்
கொண்டால் கூட உங்களில் பெரிய மாற்றம் வந்துவிடும்.

6. எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?
நிபுணர் பதில்: நல்ல கேள்வி. மிக முக்கியமானதும் கூட. இந்த வயதில்
குறைந்த பட்சம் 7 மணி நேரம் தூக்கம் அவசியம். இதில் கூட, குறைந்தாலும்
பிரச்சனைதான். நல்ல சாப்பாடு, நல்லத் தூக்கம் இது ரொம்ப முக்கியம்.

இப்படியாக அரைமணிநேரம் நடந்த உரையாடல் மிக அருமையாக
பல கருத்துக்களை உணர்த்தும் வகையில் இருந்தது. இந்த வயதில்
என்னென்ன பிரச்சனைகளோ? அவற்றை எப்படிக்கையாள்வது என்பது
ஒரு கலை தான்.

3 மாதம் வரை பைத்தியம் கூட குழந்தையை வளர்த்துவிடலாம் என்று
சொல்வார்கள் பெரியவர்கள். ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒவ்வொரு ஒரு
பிரச்சனை இருக்கும் என்றாலும், இந்த பதின்மவயது கத்தி மேல்
நடப்பது போல!!! 4 வயது வரை வளர்ப்பது கூட சவால் இல்லை.
இந்த வயதுதான் கடினம்.

சோனி டீவியில் கோன் பனேகா குரோர்பதி முடிவடையப்போகிறது.
அதனால் புது சீரியல்கள் ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதில் வரும்
ஒரு சீரியல் என்னைக் கவர்வதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
அது PARVARISH. குழந்தைகளை வளர்த்தெடுக்க பெற்றோர் ஒவ்வொரு
விதமாக ஹேண்டில் செய்ய வேண்டி இருக்கிறது என்பது உண்மை.

நவம்பர் 21ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த சீரியல்களின்
எபிசோட்களை தமிழாக்கம் செய்து பதிவிடலாம் எனத்திட்டம்.
ஆனால் ஒரே ஒரு கஷ்டம் இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு வரவிருக்கிறது.
எங்கள் வீட்டில் இருக்கும் எழுதப்படாத சட்டப்படி நானும் பிள்ளைகளும்
9 மணிக்கே தூங்கப்போய்விடுவோம்.:))

காலை வேளைகளில் மறு ஒளிபரப்பு செய்வார்கள் என நம்புகிறேன்.
அப்படி இருந்தால் நான் சொன்னபடி பதிவு வரும். பலருக்கு(எனக்கும் தான்) உதவும்
என்ற நம்பிக்கையில் சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாத நான் சீரியல்
பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

5 comments:

கட்டாயம் அந்த சீரியல்களைப் பார்க்க உங்களுக்கு சந்தர்ப்பம் அமைய வேண்டும். அதை நீங்க இங்க எழுத வேண்டும். அதை நாங்க வாசிக்க வேண்டும். :)

வாங்க கலை,

என் விருப்பமும் அதுதான். உங்க வருகைக்கு மிக்க நன்றி

பதிநான்கு வயதான என் மகனின் சில மாற்றங்கள் எனக்கு எப்படி அனுகவேண்டும் எனத் தெரியாது அசசத்தை உண்டாக்குகிறது. இதுவரை குழந்தையாக பார்த்த அவனைக் கண்டிப்பாக வளர்ந்தமகனாக பார்க்க வேண்டுமமென அறிவு சொல்கிறது ஆனால் மனம் இன்னும் தெளிடையவில்லை. உண்மையாக பயனுள்ளஅந்த சீரியலை கண்டிப்பாக வெளியிடுங்களேன். காததிருக்கிறேன்.
ஆண் குழந்தைகளை தாய் புரிந்து கொள்வது கடினமா? முதன்முறையாக அதன் முக்கியத்துவத்தைஉணர்கிறேன்.

நண்பா மிகவும் அருமையான
நான் தேடும் பதிவு இது.
வாழ்த்துக்கள்

நண்பா மிகவும் அருமையான
நான் தேடும் பதிவு இது.
வாழ்த்துக்கள்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்