பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பிள்ளைகளுக்கு பள்ளி துவங்கியாச்சு. எல்லா பெற்றோரும்
பிசியா இருக்கும் நேரம் இது. என் மனசுல ரொம்ப நாளா
ஓடிக்கிட்டு இருக்கற ஒரு கேள்விதான் இந்தப் பதிவு.

CURSIVE WRITINGல் தான் சில பள்ளிகளில் எழுத வேண்டும்னு
ரூலே வெச்சிருக்காங்க. ஆனா இந்த CURSIVE WRITING
தேவையா என்பதுதான் என் கேள்வி. இப்படி சேர்த்து
எழுதும் முறையை நாம அதிகமா எங்கேயும் உபயோகிப்பதில்லை.
இப்ப simple letters or printing letters இதுதான்
அதிகமா உபயோகத்தில் இருக்கு. ஏன் பிள்ளைகளின்
பாடப்புத்தகமே இந்த முறையில் தான் அச்சிடப்பட்டு இருக்கு.

அப்படி இருக்க கூட்டெழுத்து அல்லது சேர்த்தெழுதினாத்தான்
நல்லதுன்னு சொல்வதில் அர்த்தம் இல்லைன்னு எனக்குப் படுது.
அதுவும் இந்த எல்கேஜி பிள்ளைகளை கூட்டெழுத்து கத்துக்க
சொல்லி கட்டாயப்படுத்துவது மகா கொடுமை. அந்த வயசு
குழந்தைகள் பென்சிலையே பிடிக்க கூடாதுன்னு சொல்வேன்.
அப்படி இருக்க அவங்களுக்கு கூட்டெழுத்து கட்டாயமா
சொல்லிக்கொடுப்பதன் அவசியம் என்ன?





சில குழந்தைகளுக்கு எழுத வரும். சில குழந்தைகளுக்கு இப்படி
எழுத கஷ்டமா இருக்கு. b, d இந்த ரெண்டு எழுத்தையும் எழுதும்
பொழுது குழப்பமா இருக்கும். சேர்த்து வார்த்தைகள் எழுதும் பொழுது
படிக்க கஷ்டமா இருக்கும். அதைவிட கஷ்டம் பெற்றோருக்கு!!!
என்ன கேள்வி பதில் எழுதி வந்திருக்காங்கன்னு படிக்க
கஷ்டமோ கஷ்டம்தான். கூட்டெழுத்து நல்லா எழுத கற்ற பின்
எங்கே அதை உபயோகிக்க போறாங்க? கல்லூரிகளிலா? இல்லை
அலுவலகங்களிலா??

ஆங்கிலேயர்கள் டைப்ரைட்டர் கண்டுபிடிக்கும் முன்னாடி கூட்டெழுத்தில்
எழுதிக்கிட்டு இருந்தாங்க. "fair hand" அப்படின்னு சொல்வாங்க.
அதாவது எழுத்துக்கள் அழகா இருக்குன்னு அர்த்தம். ஆனா
அப்பக்கூட 2 ஆம் வகுப்புக்கு மேலதான் இந்த கையெழுத்துப்
பயிற்சியை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா
இப்ப பள்ளிகளில் எழுதுவதே CURSIVE தான்னு கஷ்டப் படுத்தறாங்க.
சிலருக்கு இப்படி எழுத முடியும். சிலருக்கு எழுத முடியாது.
கூட்டெழுத்துல எழுதுவது ரொம்ப ஈசியும் கிடையாது.

இப்ப கிளர்க் வேலையில் கூட எழுத்து வேலை குறைவு.
எல்லா இடத்திலையும் கணிணி ஆக்கிரமிச்சாச்சு. புத்தகங்கள்
எல்லாமே பிரிண்டிங் சிம்பிள் லெட்டர்ஸ்தான். அப்படி இருக்க
கூட்டெழுத்தில் எழுதக்கற்றுக்கொள்வதை கட்டாயம்னு சொல்வது
நியாயமே இல்லை. இப்ப பல இடங்களில் கூட்டெழுத்து முறை
குறைஞ்சுகிட்டே வருது. 2006 வருடத்தில் SAT
( standardized test for college admissions in the United States.)
15 சதவிகிதத்தினர்தான் கூட்டெழுத்துல எழுதியிருக்காங்க.

டிஸெலக்ஸியா பிள்ளைகளுக்கு எழுத்து என்பதே
கஷ்டமா இருக்கும். அப்படி இருக்க அவர்களை கூட்டெழுத்தில்
எழுதச் சொன்னா ரொம்ப கஷ்டம். நம் நாட்டில் எனக்குத்
தெரிந்து மாண்டிசொரி முறையில் பாடங்கள் ஆரம்ப
வகுப்புக்களில் நடத்தப்படுவதில்லை. அதாவது ஒரு
எழுத்தை தொட்டு உணர்ந்து, அதை பல முறை
பார்த்து அதன் பிறகு எழுதுவது. (என்னுடைய முந்தைய
மாண்டிசோரி கல்வி முறை பதிவுகளில் பார்க்கலாம்)

எடுத்த உடனேயே A,B,C, ஆரம்பிக்கறாங்க.
சில பள்ளிகளில் ஸ்ட்ரோக்ஸ் போடச் சொல்லிக்
கொடுப்பதே இல்லை. அதிலும் a,b,c ஈசியா இருக்க,
கேபிடல் ஏ,பி,சி ஆரம்பிச்சிருவாங்க. பாவம் பசங்க.

கையெழுத்து பயிற்சிக்காக பிள்ளைகள் விரும்பினா மட்டுமே
கூட்டெழுத்து சொல்லிக்கொடுக்கணும் என்பது என் எண்ணம்.
வற்புறுத்தாம விருப்பம் இருந்தா எழுதட்டும்னு சொல்லிக்
கொடுக்கலாம். நடைமுறை உபயோகத்தில் இருக்கும்
பிரிண்டிங் ஆல்ஃபபெட் எழுதப்பழகுவதில் எந்த தவறும் இல்லை.

அம்ருதா, ஆஷிஷ்ற்கு கர்சிவ் ரைட்டிங் தெரியாது. ஆனா
அவர்கள் இந்தியா வந்து பள்ளியில் சேர்த்த பொழுது
அதை அவர்கள் குற்றமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆஷிஷாவது
அப்போது 7ஆம் வகுப்பு. அம்ருதா 4 ஆம் வகுப்புதான்.
அவர்கள் பள்ளியில் ஆசிரியர்கள் ”முடிந்தால் ட்ரை செய்,
இல்லாவிட்டால் இப்படியே இருந்துவிடு ”என்று சொல்லிவிட்டார்கள்.
D'Nealian style of writing:

D'Nealian 1978ஆம் ஆண்டு இப்படி எழுதும் ஸ்டைலை
கொண்டு வந்தார்.





பிரிண்டிங் மெத்தட் இல்லாமல் கர்சிவ் ரைட்டிங்கும் இல்லாம
நடுவாந்திரமா இருக்கும் இந்த முறை பிள்ளைகள் கற்க
எளிதா இருக்கும்.

இந்த முறையில் எழுத சொல்லிக்கொடுப்பது நல்லா இருக்கும்னு
சில அறிஞர்கள், ஆசிரியர்கள் சொல்றாங்க. இந்த முறையில்
எழுத சொல்லிக்கொடுக்கும் பொழுது கையெழுத்து பார்க்க
அழகா இருக்கும். (ஆஷிஷ் அம்ருதா இந்த ஸ்டைல்லதான்
எழுதுவாங்க.)
இங்க போய் பாருங்க.

கூட்டெழுத்து கையெழுத்து போல வேணாம் நல்லா இருக்கும்.
நடைமுறைக்கு ஒத்துவராது, அதனால அதை கற்பது
கட்டாயம்னு சொல்லக்கூடாது என்பது என் எண்ணம்.
உங்க எண்ணத்தையும் சொல்லிட்டு போங்க.

8 comments:

தனித்தனியாக எழுதுவதை விட சேர்த்து எழுதும்போது கொஞ்சம் வேகமாக எழுதலாம் இல்லையா?! அதனால் இந்த முறை கற்றுக்கொடுக்கப்படுகிறது என நினைக்கிறேன். ஆனாலும் இதைக்கட்டாயப்படுத்துவது அவசியமில்லை. ஏனெனில், என் வகுப்புத் தோழி தனித்தனியாகத்தான் எழுதுவாள். அவள்தான் +2வில் பள்ளியில் முதல் மாணவியாக வந்தாள். இப்ப 'புரியும்படி எழுதும் மருத்துவராக'வும் ஆகிவிட்டாள் ;))

சில பள்ளிகளில் ஐந்தாம்,ஆறாம் வகுப்புக்கு மேல் சேர்த்து எழுதுகிறார்களா என்று பார்ப்பதில்லை...கையெழுத்து நீட்டாக இருந்தாலே போதும் என்று விட்டுவிடுகிறார்கள்.

////அந்த வயசு
குழந்தைகள் பென்சிலையே பிடிக்க கூடாதுன்னு சொல்வேன்////

இது எமது நாடுகளில் கட்டாய சட்டம் தான் சகோ... இந்த வயது பிள்ளைகளுக்கு எழுதச் சொல்லிக் கொடுக்கக் கூடாது..

என் வலைச்சரப் பொறுப்பின் கடைசிப் பகுதியில் தங்களுடைய வலையகத்தை அறிமுகப் படுத்தியிருக்கின்றேன் என்பதனை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_6632.html

நன்றியுடன்,
சிவஹரி

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

அருமை

nice info tnks for d good one congrates

இளம்ப்ராயத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர் தான் ரோல்மாடல், THIS IS TRUE,

அருமையான பாயின்ட் ..

ஆனால் எழுதுகின்ற குழந்தைகளின் திறமையும் எழுத சிரமப் படும் குழந்தைகளுக்காகா கீழிறக்கக் கூடாது

அவர்களுக்கு ஒரு அறிமுகம் செய்து ஒரு சுதந்திரம் கொடுக்க வேண்டும்

பயிற்சி அவசியம் அறிமுகம் அவசியம்
பின்பற்றுவது அவர்களின் விருப்பம்..
இதை நமது தனியார் பள்ளிகளில் எதிர்பார்க்க முடியாது...

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்