பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

இப்ப டீவி, மாத இதழ்கள், வார இதழ்கள் எல்லாத்துலயும் ஒரே
டாபிக்தான் அதிகமா பேசப்படுது. அது தனது ஆசிரியையை
குத்தி கொன்ற மாணவன்.

தப்பு யார் மேலன்னு விவாதங்கள் நடக்குது. யாரைச் சொல்லி
நோவது கொஞ்சம் அலசி பாப்போமா?!!

நான் எப்பவுமே சொல்லிக்கிட்டு இருக்கும் மாரல் ஸ்டெடி வகுப்புக்கள்,
நீதி போதனைகள் எதுவும் பள்ளிகளில் கிடையாது. அவற்றிற்கு பதில்
எங்கள் பள்ளி மாணவன் தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட், டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்
என மார்தட்டிக்கொள்ள பள்ளி நிர்வாகம் விரும்புவதால ஆசிரியர்கள்
இயக்கி விடப்பட்ட மிஷின்களாக தங்களுக்கு இடப்பட்டிருக்கும் வேலையை
மட்டும் செய்து முடிக்க முனைகிறார்கள். CBSC பாடத்திட்டத்தில்
இப்ப சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பாடங்களை ஸ்ட்ரெஸ்
இல்லாம பரிச்சார்த்தம் செய்யும் முறை வந்திருக்கு. ஆனாலும்
இந்த CONTINUOUS CLASS ROOM ASSESSMENT கேள்வித்தாள் செட்
செய்து, பரிட்சை வைத்து, பேப்பர் திருத்தி ரிப்போர்ட் கார்ட்
தருவதை விட ஆசிரியருக்கும், மாணாக்கருக்கும் தொடர்ச்சியான
ஒரு ஸ்ட்ரெஸ் என்றே சொல்ல வேண்டும்.

யோகா, டான்ஸ், விளையாட்டு இதெல்லாம் கட்டாயமா வெச்சிருக்காங்க.
இத்தோடு வேல்யூஸ், மாரல் ஸ்டெடி வகுப்புக்களையும் கட்டாயமாக்கணும்.
அப்போ இழந்த நீதி போதனைகள் பிள்ளைகளுக்கு கிடைக்கும். அப்படியும்
ஒரு தலைமுறை பள்ளிக்குழந்தைகள் இவற்றை இழந்ததை ஈடு செய்ய
முடியாம போகும். அதனால கல்லூரிகளில் (அதாவது நீதிப்பாடங்களை
பள்ளியில் கற்றிராதவர்களுக்கு என அமைத்தல் வேண்டும்.

மெத்த படிச்ச மேதாவியா மட்டும் இருந்தா போதாது. அதனால
நல்ல குடிமகனாக்க இதை கல்வித்துறை செய்ய வேண்டும்.


ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. CHARITIY BEGINS AT HOME.
சத்தியமான உண்மை இது. எதுவும் நம்ம வீடுகளில் இருந்துதான்
துவங்கனும். எனக்கு வேலை இருக்கு. இரண்டு பேரும் வேலை
பார்க்கிறோம்னு சொல்லி ஓடிட முடியாது. தப்பிக்கவும் வழி இல்லை.
நம்ம பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டிய முக்கியமான கடமை
நமக்கு இருக்கு. பெற்றால் மட்டும் போதாதே! நல்லது கெட்டது
சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் தலையாய
கடமை. பள்ளியில் சேர்த்தோமா... ஃபீஸ் கட்டினோமா,
வேண்டியதை வாங்கிக்கொடுத்தோமா!!ன்னு இருக்க கூடாது.

மார்க்கு, ரேங்கு என ஓடாத பள்ளியாக பார்த்து பிள்ளைகளை
சேர்த்து, ஆசிரியரைப் பற்றி எந்த வித தவறான கமெண்டுகளும்
பிள்ளைகளின் காதில் விழாமல், ஒரு மாணவனின் வாழ்வில்
குருவின் அவசியத்தை சொல்லிகொடுத்து அந்த உன்னதமான
தொழிலின் மூலம் அறிவுக்கண்ணை திறக்க வைக்கும் தெய்வங்களுக்கு
என்றும் நன்றியுடையவர்களாக பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

உங்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும் பொழுது
உங்களின் ஆசிரியர்கள் பற்றியும் நினைத்து மனதில் ஒரு
குதூகலம் ஏற்ப்படுகிறதுதானே!!! அந்த ஒரு நிலயை,
சந்தோஷத்தை நம் குழந்தைகளும் அடைய உதவி செய்ய
வேண்டும். பள்ளியில் ஏதும் பிரச்சனை இருந்தால், ஆசிரியர்
ஏதும் திட்டியது தெரிந்தால் உடன் பள்ளிக்குச் சென்று
கத்தி சண்டை போடாமல் என்ன நடந்திருக்கிறது என்பதை
அறிந்துக்கொள்ள வேண்டும். ”அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பதுதானே அறிவு!!!!

பள்ளியில் ஆசிரியருக்கு இருக்கும் ஸ்ட்ரெஸ் அவ்வளவு
இவ்வளவு இல்லை. அதிலும் இந்த பதின்ம வயதுக்கு
குழந்தைகள் இருக்கும் ஆசிரியருக்கும் இருக்கும் கஷ்டம்
அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். வீட்டில் இருக்கும்
நமக்கு புரியாத கஷ்டம். ஒரு பதின்ம வயதுக்குழந்தை
இருக்கும் வீட்டில் எப்படி இருக்கும் என உணர்ந்தவர்கள்,
அதே போல 30க்கும் மேற்பட்ட குழந்தையை ஒரு இடத்தில்
உட்கார வைத்து பாடம் சொல்ல என்ன பாடு படுவார்கள்
என தெரிந்தால், புரிந்தால் போதும்.

எதுவும் நடந்த பிறகு பேசி புண்ணியம் ஏதுமில்லை.
ஆகவே முன்பே நன்கு யோசித்து, இப்படி இப்படி
நடக்கலாம் என அவதானித்து நாம் செய்ய வேண்டியவற்றை
செய்ய வேண்டும்.

யார்மேலும் தவறு இல்லை என்றோ, ஒருவர் மீது
தவறு என்றோ சொல்ல முடியாத சூழல். ஆகாவே
நம் கடமையை நாம் சரியாக செய்ய வேண்டும்
எனும் எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டால்
பிரச்சனைத் தீர வாய்ப்பிருக்கிறது

9 comments:

நல்ல அலசல்...

நீதி போதனை வகுப்புகள் இருந்தாலும் அந்த வகுப்பையும் கைப்பற்றி மற்ற பாடங்கள் எடுக்க முடியுமான்னு ஆசிரியர்கள் அலை மோதுறதுதான் ரொம்ப நாளா நடக்குதுங்க. ஞாயிற்றுக் கிழமையைக்கூட விடறதில்லைன்னா பார்த்துக்கோங்க...

நன்றி சகோ

தெரியும் அமைதிச்சாரல்,

மகா கொடுமை அது

வருகைக்கு நன்றி

பள்ளியின் பங்கும் பாங்கும் குறைந்து போய்விட்ட நிலையில், பெற்றோர்கள் தலையில்தான் மேலும் மேலும் சுமை...

பிள்ளைகளுக்கு நேரிடும் குழப்பம் தீர்வதற்குள் மாணவப்பருவமே முடிந்து போய்விடுகிறதே..

நீதியைப் பின்பற்றாததால், போதிக்கவும் மறுக்கிறார்கள்..

நல்ல பதிவு.
கூட்டுக் குடும்பங்கள் அழிந்த்தும், நகர வாழ்க்கையில் பக்கத்து வீட்டு மாணவர்களுடன் சேர்ந்து விளையாட வசதியில்லாமல் போனதும், காலையில் ஒரு டியூசன், பள்ளி பிறகு மாலையில் ஒரு டியூசன் என அனுப்புவதும் இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம்.

மெத்த படிச்ச மேதாவியா மட்டும் இருந்தா போதாது. அதனால
நல்ல குடிமகனாக்க இதை கல்வித்துறை செய்ய வேண்டும்.

கடமை சரியாக செய்ய வேண்டும்
எனும் எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டால்
பிரச்சனைத் தீர வாய்ப்பிருக்கிறது

பழிசொல்லல் பாவமெனப் பாடம் நடத்தி
வழிசொல்லும் மின்வலையே வாழ்க! - மொழிவெல்ல
நற்பணி செய்க! நறுந்தமிழை நன்கோதிப்
பொற்பணி செய்க பொலிந்து

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr

பழிசொல்லல் பாவமெனப் பாடம் நடத்தி...
இதுல உங்களே பத்தி வேற நீங்க போட்டதாலே ? படிக்கின்றோம் .இதில் இன்னா கொடுமை சார் இருக்கு ?

உன் நண்பனைப் பற்றிச் சொல் உன்னைப்பற்றி நான் சொல்கிறேன்
உன் கவிதையை கொடுத்து விடு உன்னைப்பற்றி(உங்களைப் பற்றி ) நான் சொல்கிறேன்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்