பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

(ரத்னேஷ் அவர்களின் பதிவு படித்து அங்கே பின்னுட்டமாய்ப் பகிர்ந்து கொண்ட செய்தியைச் சற்றே விரிவாகப் பதிவிடுகிறேன்..)

"மாமாவுக்கு ரைம்ஸ் சொல்லிக் காட்டு.."

"ABCD சொல்லிக்காட்டு.."

"திருக்குறள் மொத்தமும் நேர்வரிசை, தலைகீழ் வரிசையில் தப்பு விடாமச் சொல்லுவா.."

"நீயுந்தான் இருக்கியே..கணக்கு வாய்ப்பாடு ஒழுங்காச் சொல்லத்தெரியுதா..அந்தப் பொண்ணைப் பாரு...உலக நாடுகளின் கரன்ஸி, தலைநகரம் எல்லாம் ஒண்ணு விடாமச் சொல்றா..

இப்டிக் கதைகள் கேட்பது/ நிகழ்வுகள் பார்ப்பது நமக்கெல்லாம் சகஜமான ஒன்றுதான். குழந்தைகளின் கற்றல் திறன் மிகவும் கூர்மையானது. சில குழந்தைகளின் செயலாற்றல் சற்றே வயதுக்கு மீறியதாய் இயல்பிலிருந்து வித்தியாசப்பட்டு தனித்து நிற்கும்.

ஒரு மணி நேரத்தில் 617 ஆசனங்கள் செய்யும் குழந்தை, நீச்சலில் புகழ்பெற்ற குற்றாலீஸ்வரன் என்று சாதனைகள் கேள்விப்படும்போது வியப்பு மட்டுமல்ல..ஒருவித கனமும் மனதைக் கவ்விப் போகிறது..Child Prodigy தான்..என்றாலும் இயல்பான குழந்தைத்தனங்கள் மறுக்கப்பட்ட குழந்தைகளின் சாதனையை மிஞ்சி நிற்கும் வேதனை அந்தக் குழந்தைக்கு மட்டும்தானே முழுமையாய்ப் புரியும்..

இங்கே எனக்கு அறிமுகமான ஒரு குழந்தையின் கதை இது..பெற்றோருக்கு ஒரே குழந்தை..நீண்ட நாள் குழந்தையின்றி இருந்த பெற்றோருக்கு மருத்துவ உதவிகள் மூலம் கிடைக்கப்பெற்ற குழந்தை..நினைவாற்றல் சற்றே அதிகம்..எப்போதும் ஒரு புத்தகம் கையில்..திருக்குறள், தலைநகரம், பொது அறிவு தொடங்கி ஷேக்ஸ்பியர் வரிகள், வரலாற்று நிகழ்வுகள் என்று மனனப் பயிற்சி நாள்தோறும்.. ..நண்பர்கள் கூட்டத்தில் இது போன்ற அவள் பங்களிப்பு காணும்போது வியப்பையும் மீறிய ஒரு கனம் இருக்கத்தான் செய்தது..

இயல்பாக வந்தால் பரவாயில்லை..வலிந்து வரவழைக்கப்பட்ட செயலென்று கேள்விப்பட்டபோது..கஷ்டமாகவே இருந்தது..

ஆனாலும் சோகம் சிந்தும் கண்கள்..மற்ற குழந்தைகளுடன் ஒட்ட முடியாத இயல்பாகிவிட்ட தனிமை...கூட்டங்களில் இருக்கும் போதுகூட ஒரு புத்தகம் கைகளில்..தாய் ஆசிரியை, தகப்பனும் கணக்காளர் பணியில்..பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை என்ற போதும் ஆசிரியர்களை மட்டும் வரச் சொல்லும் தினங்களில், என் தோழியின் வீட்டில் அந்தக் குழந்தையை விட்டுப் போவார்கள்..தோழியின் குழந்தையும் சம வயதினள்தான்..அந்தக் குழந்தை அப்போதும் பை நிறையப் புத்தகங்களுடன் தான் வருமாம்..வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் அவ்வப்போது பொம்மைகளுடன் விளையாடும் தோழியின் குழந்தையின் பக்கம் வெறுமையான பார்வை ஒன்றை வீசிவிட்டு மீண்டும் புத்தகத்துக்குத் தாவும் கண்கள்..(இது நடந்தது அவளின் ஆறு வயதில்)

கணினியிலும் எப்போதும் இதுபோன்ற அக்கறைதான் அவளுக்கு...படிப்பிலும் படுசுட்டிதான்..

ஆனால் சமீபத்தில்(இப்போது அவளுக்கு வயது 11..) சற்றே மந்தமான நிலை..படிப்பிலும் சரி..இது போன்ற விஷயங்களிலும் சரி..மற்ற குழந்தைகளை விட அதிகப்படியாகச் சாதித்த குழந்தை..இன்று பல படிகள் கீழே..இயல்பான நினனவாற்றல் மங்கிவிட்ட நிலையில்..மருத்துவ சோதனைக்குட்படுத்தினார்கள்..ஒரு ப்ரச்னையுமில்லை உடலில் நல்லவேளையாக..இன்று அவள் பாடப் புத்தகத்தை எடுத்தாலே பயப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெற்றோரின் நிலையும் பரிதாபத்துக்குரியது..

இது போன்ற நிகழ்வுகள் பெற்றோர் சமூகத்தில் அத்திப் பூத்தாற்போல் நடப்பதுதான்..

சாதனைக் குழந்தைகள் பலரின் பின்னும் இது போன்ற வேதனைகள் இருக்குமோ?

11 comments:

உண்மையில் அது மஹாகொடுமை. சாதனை குழந்தைகள் என்று எங்காவது படிக்கும்போதே எனக்கும் இப்படித்தான் தோண்றும் :(

மலர் ஒருமுறை ஜெயா டிவியில் பார்த்தேன்.ஒரு 2 வயது குழந்தை எல்லா நாட்டின் பெயரையும் தலைநகரையும் கொடியைப் பார்த்தே சொல்லியது.அதன் தாய் சொன்னார்கள்'' அந்தக் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே பயிற்சி ஆரம்பித்து விட்டோம் அப்போதே நான் சத்தமாக எல்லாவற்றையும் சொல்வேன் ''என்று.
எவ்வளவு கொடுமையிது.
பிரகலாதன் கதை புராணத்தில் கேட்க நல்லாயிருக்கும்.ஆனால் நடைமுறையில் அது இயற்கைக்கு மாறுபட்ட செயலே.

இது தொடர்பாக இன்னொன்றையும் குறிப்பிடலாம். விஜய் டிவி குழந்தகளை வைத்து ஜூனியர் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இது போன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் வருவது தடைசெய்யப்பட வேண்டும். (என் கருத்தில் தொலைக்காட்சி quiz நிகழ்ச்சிகளையும் இந்த வரிசையில் சேர்க்கலாம்.)

குழந்தைகள் இடையே பள்ளியில் போட்டி நடத்தப்பட்டால் கூட இறுதியில் எல்லோரையுமே பரிசுக்குறியவர்களாக அறிவித்து, சமமாகப் பரிசளிக்க வேண்டும்.

அபஸ்வரம் ராம்ஜி நடத்திவரும் 'இசை மழலை' என்ற சிறுவர் இசைக்குழு குழந்தை உழைப்பாகக் கருதப்பட்டுத் தடை செய்யப்பட வேண்டும்.

ரத்னேஷின் பின்னூட்டத்தில் நான் அளித்துள்ள மனநல மருத்துவர் மோகன் ராஜ் ஆங்கிலத்தில் எழுதிய கதையின் சுட்டியை இங்கும் தருகிறேன்:

http://www.hinduonnet.com/mag/2005/05/15/stories/2005051500460600.htm

ம்ம்ம் சரியா சொன்லிருக்கிங்க அதே மாதிரி குழந்தைகளை பள்ளி விட்டு வந்ததும் விளையாட விடாமல் பாட்டு கிளாஸ், காராத்தே, டான்ஸ், செஸ், கிரிக்கெட்,டிராயிங், கம்ப்பியீட்டர் அப்படின்னு 5 வயதிலிருந்தே பிடிக்குதோ பிடிக்கலையோ அனுப்பும் பெற்றோரை என்ன செய்வது

குழந்தைகளை இயல்பாய் எந்தவித திணிப்புகளும் இல்லாமல் வளரவிடுவதே நல்லது.

கண்மணி,

என்னல்லாம் அநியாயம் நடக்குது பாருங்க...இதெல்லாம் பெருமைப்படக் கூடிய விஷயமல்ல என்ரு பெற்றோர் புரிந்து கொள்கையில் காலம் கடக்காமல் இருக்க வேண்டும்..

ஆமாம் சரவணன்,

நீங்கள் சொல்வது சரி...இது போன்ற நிகழ்ச்சிகள் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையைக் குழந்தைகள் மனதில் வளர்க்கும்..அதே நேரம் சில பெற்றோர் தன் பிள்ளைகளைப் பிற குழந்தைகளோடு ஒப்பீடு செய்யும் பழக்கமும் அதிகரிக்கும்..

உங்கள் சுட்டிக்கும் நன்றி..

ஆமாம் இம்சை..

ஆசைதான்...நாம செய்ய முடியாதது எல்லாம் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்ற பேராசை.. குழந்தையின் மனநிலையிலிருந்து, வயதிலிருந்து சிந்தித்துப் பார்ப்பதில்லை..

நந்து,

உண்மைதான்..சாதனை என்ற பெயரில் குழந்தைகளுக்கு வந்த சோதனைதான்..

http://www.hinduonnet.com/mag/2005/05/15/stories/2005051500460600.htm

சரவணன் தந்த இந்தச் சுட்டியில் உள்ள கதை குழந்தைகள் படும் அவஸ்தையை எப்படி பிரதிபலிக்கிறது..படித்துப் பாருங்கள்..

பிள்ளைகள் மற்ற கலைகள் கற்பது நல்லது. ஆனால் பிள்ளைகள் விரும்பாவிட்டால் வற்புறுத்துக்க கூடாது.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்