பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

Barbara Hacker என்பவர் பிள்ளைகளுக்கு நாம் எவ்வாறெல்லாம்
உதவலாம் என்று கூறியிருக்கிறார். ஒன்று, இரண்டல்ல
101 ஐடியாக்கள்.

என்ன சொல்லியிருக்கிறார்? இதோ சில உங்களுக்காக.

1. குழந்தைகள் தானாகவே உடை உடுத்திக்கொள்ள அனுமதியுங்கள்.
(நேரம் அதிகமானாலும் பரவாயில்லை)

2. குட்டி செஃபாக குழந்தையையும் பக்கத்தில் இருத்தி
இருவரும் சேர்ந்து உணவை சமைக்கலாமாம்.
(நல்ல ஐடியா தான். உணவு தயாரிக்க ஆகும் நேரம்,
சாமான்களின் விலை எல்லாம் தெரிந்த குழந்தை
உணவை வீணக்காது)

3.குழந்தைக்கு சின்ன சின்ன பாடல்களை சொல்லிக்கொடுத்து
குழந்தையுடன் சேர்ந்து நீங்களும் பாடுங்கள்.

4. உங்களின் வேலை எத்தகையது? எங்கு வேலை பார்க்கிறீர்கள்?
போன்றவற்றை பிள்ளைக்கு சொல்லுங்கள்.

5. குழந்தை கேட்பது எல்லாம் அவசியமானதல்ல. ஆகவே
கோபமாக இல்லாமல் ஸ்திரமாக “நோ” சொல்லுங்கள்.

6. குழந்தை தானாகவே செய்யக்கூடியதை நீங்களே
செய்து கொடுக்காதீர்கள்.

7. நாம் தவறு செய்த பட்சத்தில் பிள்ளையிடம்
மன்னிப்பு கேட்பது தவறல்ல.

8.எப்போதும் உண்மையே பேசுங்கள்.

9. பஸ்ஸில், டிரையினில் பயணிப்பதின் சுகத்தை
குழந்தைக்கும் அறியத் தாருங்கள்.

10. குழந்தைக்கு போதுமான தூக்கம் கிடைக்கிறதா
என்று பாருங்கள்.

101 யோசனைகளும் மொழி பெயர்க்க நேரம் போதவில்லை.
முடிந்தபோது ஒரு எட்டு இங்கே போய்
பார்க்கலாமே!


மீண்டும் சந்திப்போம்.

14 comments:

ஐய்ய்யா......நான்தான் மொதல்ல!

நம்பளும் .......வந்துட்டோம்ல

நல்ல ஐடியாக்கள் நன்றி

நீங்க தான் மொதல்ல புதுகைச் சாரல்.

வாங்க வாங்க

வாங்க ஞானசேகரன்,

வருகைக்கு நன்றி.

முதல் பத்தை மொழி பெயர்த்து, மற்றவற்றிற்குச் சுட்டியைத் தந்து வழி மொழிந்து...அருமை புதுகைத் தென்றல். மிகவும் பயனுள்ள பதிவு.

//குழந்தைக்கு சின்ன சின்ன பாடல்களை சொல்லிக்கொடுத்து
குழந்தையுடன் சேர்ந்து நீங்களும் பாடுங்கள்.
//

பாடிருவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்...யாரும் ஓடிருவோம்னு சொல்லாதவரையில்...:))

இது நல்லா அயிடியா...மற்றவையும் கூட..

ரொம்ப நன்றி..நான் இதை எங்க அப்பா,அம்மாகிட்ட அவசியம் காட்டுறேன்
:)

அருமையான விமர்சனம்
புத்தி குர்மை மிகவும் அழகு
நிறைய எதிர் பார்கிறேன்
http://loosupaya.blogspot.com

மன்னிக்கவும் ராமல‌ஷ்மி,

இப்பத்தான் பார்த்தேன்.

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

வாங்க NewBee,

அடுத்தவங்க ஓடினா ஒடட்டும். அதப்பத்தி நமக்கென்ன கவலை. :)

நாம பிள்ளைகளோடு கலந்து எஞ்சாய் செய்யப்போறோம் அம்புட்டுதானே.

வாங்க அப்துல்லா,

வருகைக்கும் பின்னூட்த்திற்கும் நன்றி.

வாங்க விவேக்,

கண்டிப்பா இன்னும் நிறைய நல்ல பதிவுகள் வரும்.

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வண்ங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்