பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.


பேரன்ட்ஸ் கிளப்பில் இணைந்திருக்கும் பல இனிய இதயங்களுக்கு வரவேற்பு.

'ஏன் நீங்க நேத்து பார்ட்டிக்கு வரலை?..'

'வெளியே ஒரே குளிர் இல்ல..குழந்தையை எப்படிக் கூட்டிட்டு வர்றது? அதான் வரலை..'

'அப்ப நீங்க வெளிலயே போறதில்லயா..இப்பல்லாம்?'

'நானும் குட்டியும் போறதில்லீங்க..அவங்கப்பா எல்லா இடத்துக்கும் போய் வந்துருவார்..டாக்டர்கிட்டப் போகும் போது மட்டும் இவளைக் கூட்டிட்டுப் போவோம்..'

இது அநேகமாக பலரும் செய்கின்ற ஒரு தவறு. எல்லா இடங்களிலும் தட்பவெப்பம் ஒரே சீராக இல்லாத ஒரு காலகட்டம் இது. இந்தியாவில் என்றாலும் வெளியே தெருவே போக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் நாம் வசிக்கும் போது, அதற்கான வாய்ப்புகளை நாம்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம்.

பலரும் மாறிவரும் சூழல் கருதித் தன் குழந்தையை வெளியே கூட்டிப் போகாமல் வீட்டுக்குள்ளேயே பொத்திப் பாதுகாத்து வருவார்கள். ஆனாலும், பள்ளிப் பருவத்தில் அந்தக் குழந்தைகள் அவசியம் வெளியே வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படிச் சடாரென்று வெளியே வரும்போதுதான் உடல் நிலை பாதிக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. புதியதான சூழலில் சட்டென்று வெளிப்படுத்தப்படும் குழந்தைகளுக்கு அதற்கான பழக்கம் இல்லாத காரணத்தால் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

குழந்தைகளைச் சட்டென்று மாறிவரும் தட்பவெப்ப சூழலில் கூட்டிக் கொண்டு போவது உகந்ததில்லைதான். எனினும் சில ப்ரத்யேக தட்பவெப்பம் நிலவும் இடங்களில் வாழ்கின்ற போது, தொடர்ந்தும் வாழும் சாத்தியம் இருக்கின்ற போது, அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது குழந்தைகளை வெளியே கூட்டிக் கொண்டு போய்ப் பழக்கப்படுத்துவதே காலப்போக்கில் நன்மை பயக்கும்.

தற்சமயம் என்ன நிலவரம் என்று யோசிக்கிறோமே தவிர, பின் வரும்
காலத்தில் சூழலை அனுசரிக்கும் பக்குவமான நிலையைக் குழந்தைக்கு ஏற்படுத்திக் கொடுக்கத் தவறிவிடுகிறோம்.

தட்பவெப்பத்துக்கேற்ற ஆடைகள் அணிந்து, தேவையான பாதூகாப்பு
ஏற்பாடுகள் செய்து அவ்வப்போது வெளியே கூட்டிக் கொண்டு போய்ப்
பழக்கப்படுத்திவிட்டால் பின் குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி தானாக
வந்து விடும்.





Alvin and the Chipmunks

டேவிட் என்ற பாடலாசிரியரின் வாழ்க்கையில் வந்த மூன்று குட்டி அணில்களின் கதை.முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான அனிமேஷன் கலந்த மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படம்.

பாடலாசிரியன் டேவிட் தனது வேலையை பறி கொடுத்தபடி மிகவும் துன்பத்தில் உழல்கிறான்.கிறிஸ்மஸ் பண்டிக்காக காட்டிலிருந்து ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வெட்டி Los Angels க்கு எடுத்து வருகிறார்கள். அந்த மரத்தில் வசிக்கும் Alvin, Simon & Theodore என்ற 3 அணில்களும் பேசவும் பாடும் திறனுடையது.

டேவிடிடம் அடைக்கலம் கேட்கும் அணில்களை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றை தன் குழந்தைகளை போல பாதுக்காக்கவும் அவைகளை கொண்டு எப்படியாவது மீண்டும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடு பராமரிக்கிறான்.

ஆனால் டேவிடின் முதலாளி Ian எப்படியாவது இந்த அணில்களை கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்க பேராசையுடன் காத்திருக்கிறான்.
ஒரு சந்தர்பத்தில் டேவிடிடம் சண்டையிட்ட 3 அணில்களும் அவன் முதலாளியிடம் சென்றுவிடவே அவைகளை வைத்து மிகப்பெரிய இன்னிசை கச்சேரி நடத்துகிறான். பணம் குவிகின்றன. அவைகளுக்கு இம்மியளவும் ஒய்வில்லாமல் சதா கச்சேரி, பாட்டு, நடனம் விளம்பரம் என அவைகள் சோர்ந்து போகும் அளவிற்கு அவைகளை துன்புறுத்தி பணம் சம்பாதிக்கிறான்.

அமெரிக்கா முழுவதும் அவைகள பிரபலமடைகின்றன. அவைகளை கொண்டு உலக பயணம் மேற் கொள்ளவும் திட்டமிடுகின்றான்.

இவைகளை அறிந்த டேவிட் மனது மிகவும் வருந்துகிறான். ஆனால் அவைகளை காண்வும் பேசவும் முடியாதபடி Ian அணில்களுக்கு கட்டுபாடு விதிப்பதோடு காவலாளிகளை வைத்து கண்காணிக்கிறான்.

Ian னின் சூழ்ச்சிகளை முறியடித்து பத்திரிகை நிருபரான தன் காதலியின் துணை கொண்டு அவைகளை மீட்டு மீண்டும் தன் குடும்பமாகவே இணைத்து கொள்வதாக திரைப்படம் இனிதே முடிகிறது.

டேவிடின் வீட்டில் குட்டி அணில்கள் செய்யும் லூட்டிகள் குழந்தைகளை துள்ளி குதிக்க வைக்கும். அணில்களின் அனைத்து உரையடல்களும் நல்ல நகைச்சுவை. அனிமேஷன் மிகவும் இயல்பாக அணில்கள் நடிப்பது போன்றே இருக்கிறது.
குழந்தைகளை மட்டுமல்ல மனம் மகிழ்ந்து குடும்பத்துடன் ரசிக்க அனைவருக்கும் பார்கலாம்.

குறிப்புகள்:

நடிப்பு: Jason Lee, David cross, Cameron Richardson மற்றும் சிலர்.
மொழி: ஆங்கிலம்
காலம்: 91 நிமிடங்கள்
கதை: Jon Witti
இயக்கம்: Tim Hill
வெளிவந்தது: 2007 -08
வெளியீடு: Fox 2000 Pictures
விருதுகள்: 2008ம் ஆண்டின் அமெரிக்காவின் Nickelodeon's (n)th Annual Kids' Choice Award மற்றும் குடும்பதிரைபட பிரிவில் சில விருதுகளும்.


2007 டிசம்பரில் ஹைதைக்கு வந்திருந்த பொழுது
“தாரே ஜமீன் பர்” ஹிந்தித் திரைப்படம் பார்த்தோம்.
படம் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே மனதில்
பலவகையான ஓட்டங்கள்.

“நீயும் ஒரு ஆசிரியைதானே? நீ என்ன
சாதித்திருக்கிறாய்” என்றுதான் என் மனசாட்சி
என்னிடம் முதலில் கேட்டது.

“என்னால் என்ன செய்ய முடியும்? நானும்
ஒரு சாதாரண மனுஷிதானே?” இது என்
பதில்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகும்
தொடர்ந்து எங்கள் உரையாடலின் தாக்கமே
இந்த வலைப்பூ. 16.01.08 அன்று தொடங்கப்பட்டது.

பெற்றோர்கள் ஒன்று கூடி நமக்குள்
ஓரு விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும்,
ஒருவரின் அனுபவம் மற்றவருக்கு உதவுமானால்
பகிர்ந்துகொள்ளவும் ஒரு களமாக இருக்கத்தான்
இந்த வலைப்பூ.

நண்பர் இம்சை வெங்கியின் உதவியுடன்
அமோகமாக துவங்கப்பட்டு இன்று

* நந்து f/o நிலா
* இம்சை
* விசயக்குமார்
* பாச மலர்
* புதுகை.அப்துல்லா
* சுரேகா..
* Jeeves
* வெண்பூ
* புதுகைத் தென்றல்
* கிருத்திகா என இந்த வலைப்பூவின்
உறுப்பினர் பட்டியல் நீள்கிறது.

இந்த வலைப்பூவிற்கு ஆதரவளித்த அனைவருக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

தொடர்ந்து உங்களின் ஆதரவோடு பல நல்ல
பதிவுகளை இந்த வலைப்பூ தரவிருக்கிறது.

இதில் சேர்ந்துகொள்ள விரும்புவோர்கள்
சேர்ந்துகொள்ளலாம்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்