Alvin and the Chipmunks
டேவிட் என்ற பாடலாசிரியரின் வாழ்க்கையில் வந்த மூன்று குட்டி அணில்களின் கதை.முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான அனிமேஷன் கலந்த மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படம்.
பாடலாசிரியன் டேவிட் தனது வேலையை பறி கொடுத்தபடி மிகவும் துன்பத்தில் உழல்கிறான்.கிறிஸ்மஸ் பண்டிக்காக காட்டிலிருந்து ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வெட்டி Los Angels க்கு எடுத்து வருகிறார்கள். அந்த மரத்தில் வசிக்கும் Alvin, Simon & Theodore என்ற 3 அணில்களும் பேசவும் பாடும் திறனுடையது.
டேவிடிடம் அடைக்கலம் கேட்கும் அணில்களை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றை தன் குழந்தைகளை போல பாதுக்காக்கவும் அவைகளை கொண்டு எப்படியாவது மீண்டும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடு பராமரிக்கிறான்.
ஆனால் டேவிடின் முதலாளி Ian எப்படியாவது இந்த அணில்களை கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்க பேராசையுடன் காத்திருக்கிறான்.
ஒரு சந்தர்பத்தில் டேவிடிடம் சண்டையிட்ட 3 அணில்களும் அவன் முதலாளியிடம் சென்றுவிடவே அவைகளை வைத்து மிகப்பெரிய இன்னிசை கச்சேரி நடத்துகிறான். பணம் குவிகின்றன. அவைகளுக்கு இம்மியளவும் ஒய்வில்லாமல் சதா கச்சேரி, பாட்டு, நடனம் விளம்பரம் என அவைகள் சோர்ந்து போகும் அளவிற்கு அவைகளை துன்புறுத்தி பணம் சம்பாதிக்கிறான்.
அமெரிக்கா முழுவதும் அவைகள பிரபலமடைகின்றன. அவைகளை கொண்டு உலக பயணம் மேற் கொள்ளவும் திட்டமிடுகின்றான்.
இவைகளை அறிந்த டேவிட் மனது மிகவும் வருந்துகிறான். ஆனால் அவைகளை காண்வும் பேசவும் முடியாதபடி Ian அணில்களுக்கு கட்டுபாடு விதிப்பதோடு காவலாளிகளை வைத்து கண்காணிக்கிறான்.
Ian னின் சூழ்ச்சிகளை முறியடித்து பத்திரிகை நிருபரான தன் காதலியின் துணை கொண்டு அவைகளை மீட்டு மீண்டும் தன் குடும்பமாகவே இணைத்து கொள்வதாக திரைப்படம் இனிதே முடிகிறது.
டேவிடின் வீட்டில் குட்டி அணில்கள் செய்யும் லூட்டிகள் குழந்தைகளை துள்ளி குதிக்க வைக்கும். அணில்களின் அனைத்து உரையடல்களும் நல்ல நகைச்சுவை. அனிமேஷன் மிகவும் இயல்பாக அணில்கள் நடிப்பது போன்றே இருக்கிறது.
குழந்தைகளை மட்டுமல்ல மனம் மகிழ்ந்து குடும்பத்துடன் ரசிக்க அனைவருக்கும் பார்கலாம்.
குறிப்புகள்:
நடிப்பு: Jason Lee, David cross, Cameron Richardson மற்றும் சிலர்.
மொழி: ஆங்கிலம்
காலம்: 91 நிமிடங்கள்
நடிப்பு: Jason Lee, David cross, Cameron Richardson மற்றும் சிலர்.
மொழி: ஆங்கிலம்
காலம்: 91 நிமிடங்கள்
கதை: Jon Witti
இயக்கம்: Tim Hill
வெளிவந்தது: 2007 -08
வெளியீடு: Fox 2000 Pictures
விருதுகள்: 2008ம் ஆண்டின் அமெரிக்காவின் Nickelodeon's (n)th Annual Kids' Choice Award மற்றும் குடும்பதிரைபட பிரிவில் சில விருதுகளும்.
5 comments:
வண்ணத்துப்பூச்சியாரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
குழந்தைகளுக்கான் திரைப்படங்கள் குறைவு என இனி நாங்கள் வருந்த மாட்டோம்.
நன்றி புதுகை மற்றும் அனைவருக்கும்.
கதை புத்த கங்களை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இல்லாத இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று திரைப்படமே இல்லை என்பது மிகுந்த வேதனையான விஷயம்.
நிறைய எழுதும் எண்ணம் உள்ளது. முயற்ச்சிக்கிறேன்.
அனைவரும் மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும்.
Nice film for children Vannaththupoochchiar,David, Alvin & the chipmunks really watch worthy in screen.Is it an animation film?
Thanx sir for your comments. It is partly animated. Nice to watch with family.
குறித்து வைத்துக் கொள்கிறேன்..
Post a Comment