பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.


பேரன்ட்ஸ் கிளப்பில் இணைந்திருக்கும் பல இனிய இதயங்களுக்கு வரவேற்பு.

'ஏன் நீங்க நேத்து பார்ட்டிக்கு வரலை?..'

'வெளியே ஒரே குளிர் இல்ல..குழந்தையை எப்படிக் கூட்டிட்டு வர்றது? அதான் வரலை..'

'அப்ப நீங்க வெளிலயே போறதில்லயா..இப்பல்லாம்?'

'நானும் குட்டியும் போறதில்லீங்க..அவங்கப்பா எல்லா இடத்துக்கும் போய் வந்துருவார்..டாக்டர்கிட்டப் போகும் போது மட்டும் இவளைக் கூட்டிட்டுப் போவோம்..'

இது அநேகமாக பலரும் செய்கின்ற ஒரு தவறு. எல்லா இடங்களிலும் தட்பவெப்பம் ஒரே சீராக இல்லாத ஒரு காலகட்டம் இது. இந்தியாவில் என்றாலும் வெளியே தெருவே போக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் நாம் வசிக்கும் போது, அதற்கான வாய்ப்புகளை நாம்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம்.

பலரும் மாறிவரும் சூழல் கருதித் தன் குழந்தையை வெளியே கூட்டிப் போகாமல் வீட்டுக்குள்ளேயே பொத்திப் பாதுகாத்து வருவார்கள். ஆனாலும், பள்ளிப் பருவத்தில் அந்தக் குழந்தைகள் அவசியம் வெளியே வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படிச் சடாரென்று வெளியே வரும்போதுதான் உடல் நிலை பாதிக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. புதியதான சூழலில் சட்டென்று வெளிப்படுத்தப்படும் குழந்தைகளுக்கு அதற்கான பழக்கம் இல்லாத காரணத்தால் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

குழந்தைகளைச் சட்டென்று மாறிவரும் தட்பவெப்ப சூழலில் கூட்டிக் கொண்டு போவது உகந்ததில்லைதான். எனினும் சில ப்ரத்யேக தட்பவெப்பம் நிலவும் இடங்களில் வாழ்கின்ற போது, தொடர்ந்தும் வாழும் சாத்தியம் இருக்கின்ற போது, அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது குழந்தைகளை வெளியே கூட்டிக் கொண்டு போய்ப் பழக்கப்படுத்துவதே காலப்போக்கில் நன்மை பயக்கும்.

தற்சமயம் என்ன நிலவரம் என்று யோசிக்கிறோமே தவிர, பின் வரும்
காலத்தில் சூழலை அனுசரிக்கும் பக்குவமான நிலையைக் குழந்தைக்கு ஏற்படுத்திக் கொடுக்கத் தவறிவிடுகிறோம்.

தட்பவெப்பத்துக்கேற்ற ஆடைகள் அணிந்து, தேவையான பாதூகாப்பு
ஏற்பாடுகள் செய்து அவ்வப்போது வெளியே கூட்டிக் கொண்டு போய்ப்
பழக்கப்படுத்திவிட்டால் பின் குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி தானாக
வந்து விடும்.

2 comments:

பேரண்ட்ஸ் கிளப் அருமையா இருக்கு.நான் மிகவும் இரசிக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று.குழந்தைகளைப் பற்றி அழகா சிந்திக்கிற எல்லாருமே 'அபியும் நானும்' பாருங்கள். குழந்தைகளையும் கூட்டிச்செல்லுங்கள்.இந்த கிளப்பில் இருப்பவர் எல்லோருமே கண்டிப்பாக இரசிப்பீர்கள்.

பல நாட்களுக்குப்பிறகு அருமையான அதே சம்யம் அவசியமான பதிவிட்ட பாசமலருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்