பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்?

 • கதை சொல்வதன் மூலம் தாய்/தந்தை குழந்தையோடு நேரம் (quality time) செலவிட முடிகிறது.
 • அவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது.
 • குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது.
 • அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.
 • உரையாடுவது / அவர்களை பேசவைப்பது / கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான discussions-களுக்கு வழிவகுக்கும்.
 • பழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம்.
 • தாத்தா, பாட்டி போன்றவர்கள் மூலம் கதை கேட்கும் போது, அவர்களும் குழந்தைளுக்கும் அன்னியோன்யம் ஏற்படுகிறது.
 • கற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 • உங்கள் குழந்தை மனம் துவண்டு, தோல்வி அடைந்து இருக்கும் நேரத்தில், ஒரு பெற்றோராக நீங்கள் கூறும் அறிவுரைகள்/ஊக்க வார்த்தைகளை விட, ஒரு நல்ல (அச்சூழ்நிலைகேற்ற ) கதை அவர்கள் மனதை உற்சாகப் படுத்தும். தாய் -தந்தை / தாத்தா பாட்டியும் இதே மாதிரி ஒரு நிலையை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு/நம்பி, ஊக்கம் அடைவார்கள். (டிவி சீரியலில் கேட்பது போல "எனக்கு மட்டும் ஏன் இப்படி?" என்று மனம் இழக்க மாட்டார்கள் :))
 • டிவி மற்றும் மீடியா தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில், பெற்றோருடன் பேசுவது / அல்லது குழந்தையோடு பெற்றோர் பேசுவது என்பதே குறைந்து வருகிறது. கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிரவும், அதை அறிந்து, குழந்தையும் தன் குழந்தைப் பருவத்து தருணங்களை நினைத்து பெருமை கொள்ளக் கூடும்.
 • கதை சொல்வதன் மூலம் நீங்கள் எதையெல்லாம் பெருமையாக நினைக்கிறீர்கள் என்பதையும் ஊடகமாக தெரிவிக்க முடியும். இதனால், நீங்கள் பெருமைப் படும் / மகிழும் வேலைகளை செய்யவே குழந்தைகள் முற்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட வயது வரை (பத்து வயது வரை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்), தாய் தந்தையரை மகிழ்விக்க வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவதால், அவர்களை நல்வழிப் படுத்தும் வாய்ப்பாக கதை சொல்லுதல் அமையும்.
 • குழந்தைக்கு படுக்கை நேர கதைகள் (bed-time stories) இனிமையானவற்றை சொல்வதனால், அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
 • உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.
 • கதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள் (modulation), முக பாவங்கள் (facial expressions), மற்றும் செய்கை / நடிப்பு (action) என்று சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள்.

================
=======================================================அதே போ குழந்தைகளையும் உங்களுக்கு கதை சொல்லச் சொல்லி, பொறுமையாய் கேளுங்கள்.

 • அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். (presentation skills)
 • தன்னம்பிக்கை வளரும்.
 • உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும்.
 • creativity, inventive thinking மற்றும் imagination வளரும்.
 • குழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும்.
உதாரணத்திற்கு, என் பெண் தன் teddy bear (பிங்கி) மற்றும் நாய்க்குட்டி (மிட்டு) stuffed toy இரண்டையும் வைத்து ஒரு கதை சொல்லும் போது, அவள் ஸ்கூலில் (LKG) ஒரு பையன் மற்றவர்கள் பென்சிலை தொடர்ந்து எடுத்துக்கொண்டே வருவது தெரிந்தது. பென்சில் ஒரு ரூபாய்தான். மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்கள் தொலைத்து வருவது பிரச்சினையாகத் தெரியவில்லை அல்லது அந்த குழந்தைகளை திட்டி விட்டு வேறு பென்சில் வாங்கி தந்து வந்திருக்கிறார்கள் (நானும்தான்). பென்சிலை தினம் தினம் எடுத்துச் செல்லும் குழந்தையின் பெற்றோரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தப் பழக்கம் தொடர்ந்தால், அவன் attitude தவறாக மாறிவிட ஏதுவாகும், என்பதால், class miss-ஸிடம் இதை கவனிக்குமாறு சொல்லி விட்டேன். அவர்கள் அக்குழந்தைக்கு தண்டனை ஏதும் தராமல், ஒரு அற்புதமான வழியில் இப்பிரச்சினையைக் கையாண்டார்கள். எப்படி தெரியுமா? அவனை class leader ஆக்கி, அனைவரது பொருட்களும் சரியாக இருக்கிறதா என்று தினமும் செக் பண்ணச் சொன்னார்கள். அப்படிச் சரியாக இருந்தால், அவன் பெயர் அன்று போர்டில் எழுதி, எல்லோரும் clap செய்வார்கள். நாளடைவில் அவன் self-esteem அதிகம் உள்ள சிறுவனாக ஆகிவிட்டான்.

====================================================

என்
பெண் மூன்று வயதிருக்கும் போது, கிட்டத் தட்ட அவள் வயதுக்குரிய எல்லா கதையும் தீர்ந்து போய் விட்டது. அன்று greedy farmer and the duck which laid the golden egg, என்ற கதை சொல்லிக்கொண்டிருந்தேன். கதையைக் கேட்டு "வாத்து பாவம் இல்ல" என்று அழுதே விட்டாள் குழந்தை. அப்போது, அவளை சமாதானப் படுத்த, கற்பனையாக நானே எடுத்துவிட்ட கதை.


மழை வந்த கதை
(
என் பெண் தர்ஷிணிக்காக நான் எழுதியது)

வாத்து ஒன்று குளத்திலே நீந்தி நீந்தி சென்றதாம்.
மாடு ஒன்று வந்து தாகத்தில் தண்ணீரெல்லாம் குடித்ததாம்.
குளத்தின் நீரும் குறைந்து போய்விட்டதாம்.

வாத்து மாடு கிட்ட போய்
`மாடே மாடே எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
மாடு அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த மரத்து கிட்ட
போய் கேளுஅப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து மரத்துக்கிட்ட போய்
`மரமே மரமே மாடு சொல்லிச்சு
எல்லாத் தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
மாடு அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த கடல் கிட்ட
போய் கேளு' அப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து கடல் கிட்ட போய்
`கடலே கடலே மரம் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
கடல் அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த சூரியன் கிட்ட
போய் கேளுஅப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து சூரியன் கிட்ட போய்
` சூரியன் சூரியன், கடல் சொல்லித்து, மரமும் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
சூரியன் அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த மேகத்துக்கிட்ட
போய் கேளுஅப்படீன்னு சொல்லித்தாம்
வாத்து மேகத்துக்கிட்ட போய்

` மேகம் மேகம் சூரியன் சொல்லித்து, கடல் சொல்லித்து, மரமும் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
மேகம் அதுக்கு `அப்படியா? இதோ இப்பவே மழையை தரேன்அப்படீன்னு சொல்லித்தாம்.
மழை சோவெனப் பெய்தது. குளம் நிரம்பி, மாடு நனைந்து, மரம் எல்லாம் நனைந்து, கடலும் நிரம்பி, சூரியன் அந்த கடல் நீரை ஆவியாக்கி, மேகமாக ஆக்கியது. மீண்டும் மழை சோவெனப் பெய்தது. அந்த மகிழ்ச்சியுடன் நீந்திச் சென்றது..
.

10 comments:

மழை கதை அழகாயிறுக்கு.


-------------


கதை ஏன் சொல்ல வேண்டும்களும் அருமை.

சிறுவர்களுக்கான மழை கதை படத்தோட அழகா வந்துருக்குங்க...

அவசியமான அழகான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று

அழகான படங்களுடன் அருமையான கதையும் சொல்லி அசத்திடீங்க..

நல்ல பதிவுகளை மேலும் தொடரவும்..

நன்றி..

கதை ஏன் சொல்ல வேண்டும்?

ரொம்ப சிம்பிள்! கதை வுடாம நம்மாலே இருக்க முடியாது!

இருந்தாலும் தர்ஷினிக்காக சொல்லப் பட்ட கதைகளை நானும் கேட்டேன்!

கதை ஏன் சொல்ல வேண்டும்? அருமையா விளக்கியிருக்கீங்க வித்யா.
தர்ஷிணிக்கு சொன்ன கதையும் அருமை. நோட் பண்ணிக்கிட்டேன். என் குழந்தைக்கு சொல்ல...
தெடாருங்கள்.

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க..இந்த காலத்துல வீட்ல இருக்கறவங்க ஒருத்தர் கூட ஒருத்தர் பேசிக்கர்தே குதுரகொம்பா இருக்கு..குழந்தைக்கும் தாய்க்கும் கான்வர்செஷனே இல்லாம போச்சு..நீங்க சொல்லி இருக்கற கதை நல்லா இருக்கு..

அன்புடன்,
அம்மு.

///குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்///

நல்ல பதிவு ஐயா நன்றி.

நட்புடன் நீணட் உங்களது கரத்தை மானசீகமாகப் பற்றிக் குலுக்குகிறேன்.

தங்களது பதிவுகள் கவனங் கொள்ள வைக்கின்றன. "ஐந்தில் வளையாதது. ஐம்பதில் வளையுமா?" பிள்ளை பிறந்தவுடன்தானே பெற்றோரும் பிறக்கிறார்கள். அறிவுபூர்வமான அணுகுமுறையுடன் ஆரோக்கியமான எதிர்காலச் சந்ததியினரைப் பெறும் தங்களது முயற்சிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!
- சிறுவதில் இனிமையான நல்ல உச்சரிப்பிலமைந்த தாய் மொழிப்பாடல்களைப் பிள்ளைகள் மென்மையாகக் கேட்பது மிகுந்த நன்மை பயற்கும்!
"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் - அச்செல்வம் செல்வத்துக்கெல்லாம் தலை" தமிழ் மறை
-முகிலன்
தோரணம்

ரொம்ப அற்புதமான பதிவு

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்