பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

குழந்தைகளுக்கு முதல் வருடப் பிறப்பு கொண்டாடும் நாளன்றே, உங்கள் குழந்தையின் பல் மருத்துவருக்கும் ஒரு கேக் கொடுத்துவிட்டு, அப்படியே உங்கள் குழந்தையின் பல் குறித்த அவரது ஆலோசனையும் கேட்டு வாருங்கள்.

  • பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஆஸ்துமாவை விட ஐந்து மடங்கு அதிகமாகவும், இன்புளுயன்சா என்ற வைரஸ் தாக்குதலால் வரும் ஒருவித சுவாச மண்டலத்தை பாதிக்கும் காய்ச்சலான ப்ளூ ஜுரத்தை விட ஏழு மடங்கு அதிகமாகவும் பல் நோய்கள் வருவதாகத் தெரிகிறது.
  • முக்கியமாக, இரண்டு முதல் ஐந்து வயதுடைய குழந்தைகள் பல் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.







பற்கள்
சரியான முறையில் பாதுகாக்கப்படாததின் விளைவுகள்:
  • மோசமான பற்கள் இருப்பதால், அவர்களால் படிப்பில் சரிவர கவனம் செலுத்தமுடியாமல்போகலாம்.
  • அவர்கள் சிரிப்பது குறைந்து போகலாம். தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடும்.
  • சமூகத்தில் இலகுவாக பழகவியலாமல் போகலாம்.
  • பல் சீரமைப்பு சிகிச்சைக்கு மருத்துவச் செலவு மிகவும் அதிகம்.
  • மோசமான பல் பராமரிப்பு, சர்க்கரை நோய் மற்றும் குடல் நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு பல் நோய்கள் வராமல் எப்படி தடுக்கலாம்?

பற்களை தினமும் இருமுறை சுத்தம் செய்யுங்கள்.
  • பிறந்த குழந்தையாக (1 முதல் 9 மாதங்கள் வரை) இருந்தால் ஒரு நாளுக்கு இருமுறையேனும் ஓமம் வறுத்து பொடி செய்து, சிறிது உங்கள் ஆட்காட்டிவிரல்முனையில் தொட்டு கொண்டு ஈறுகளைத் துடைக்கவும். (ஓமம் உரைக்கும் (காரமாகஇருக்கும்)என்பதால், கவனமாக மிக மிக சிறிய அளவே எடுக்க வேண்டும்.)
  • ஒவ்வொரு முறை பால் அல்லது பானங்கள் ஏதும் குடித்த பிறகு வாயை நன்கு தண்ணீரால் துடையுங்கள்.
  • ஆறு மாதம் ஆன பிறகு, ஒரு பல் வரும். ஒரு அரிசி அளவே டூத் பேஸ்ட் எடுத்துக்கொண்டு, ஸாஃப்ட் டூத் பிரஷால் தேய்த்து விடவும். (இப்படித் தேய்க்கும் போதுகுழந்தையின் தலை உங்கள் மடியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்)
ஆரோக்கியமான உணவு வகைகள் மற்றும் பானங்களையே கொடுக்கவும்.
  • பாட்டில் பால், ஃபார்முலா பால் வகைகள் கொடுப்பதாக இருந்தால், கொடுத்து முடித்ததும், ஒன்றிரண்டு டேபிள்-ஸ்பூன் தண்ணீர் கொடுக்கவும்.
  • ஸ்நாக்ஸ் சாப்பிடும் வயது வந்ததும், சீஸ், பழங்கள், மற்றும் காய்கறிகள் போன்ற உணவு வகைகளும், மென்று சாப்பிடக் கூடிய வகைகளையுமே தேர்ந்தெடுக்கவும்.
  • பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகள், மிட்டாய்கள், கர்போனேட்டட் பானங்களை முற்றிலும் தவிர்க்கவும்.
  • ஜவ்வு போன்ற உணவுகளை (சுயிங் கம் போன்ற) மற்றும் உறிஞ்சி குடிக்கக் கூடிய பானங்கள் ஆகியவை இளவயதினருக்கு, பல் இன்னும் முழுமையாக உருவாகாமல் இருப்பதால், பற்சிதைவு ஏற்படலாம்.
  • சர்க்கரை சேர்க்காத, இனிப்பூட்டப் படாத பானங்கள், ஜூஸ், மற்றும் தண்ணீர் மட்டும் அடிக்கடி கொடுக்கவும்.
குழந்தையின் உதடுகளை அடிக்கடி தூக்கிப் பற்களை பரிசோதிக்கவும்.
  • குழந்தைகள் சீக்கிரம் வளர்ச்சியடைவது போலவே பற்களும் அதிவேகத்தில் வளரும்.
  • ஒவ்வொரு மாதமும் உங்கள் குழந்தையின் பற்கள் சரியான விதத்தில் வளருகிறதா என்று பரிசோதித்து பார்க்கவும்.
  • பற்சிதைவு பெரும்பாலும் ஈறுகளை ஒட்டிவாறு முன் பற்கள், அல்லது பின் பற்களில் தான் ஏற்படுகிறது.
  • வித்தியாசமான வெள்ளை நிறமோ, அல்லது பிரவுன் நிறமோ பற்களில் அல்லது ஈறுகளில் தென்பட்டால் உங்கள் பல் மருத்துவரை உடனடியாக அணுகவும்.
  • குழந்தைக்கு ஒரு வயது நிறைவு பெறும் போதே பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளவும்.
  • இதற்கு முன்பே பற்களில் ஏதும் பிரச்சினைகள் தென்பட்டால் அப்போதே மருத்துவரிடம் காட்டித் தெளிவு படுத்திக் கொள்ளவும்.
மருத்துவப் பரிசோதனைகளின் போது:

ஒவ்வொரு முறை பல் மருத்துவரிடம் செல்லும் போதும்:

  • பற்கள், பல் வரிசை / அமைப்பு சரியானபடி வளர்ந்திருக்கிறதா என்று உறுதி படுத்திக் கொள்ளவும்
  • பற்சிதைவு இருக்கிறதா என்று தெளிவு படுத்திக் கொள்ளவும்
  • தினசரி பல் தேய்க்கும் முறைகள், மற்றும் டூத் பேஸ்ட் / பிரஷ் ஆகியவற்றைப் பற்றி மருத்துவரிடம் பேசவும்.
  • உங்கள் குழந்தையின் உணவுப் பழக்கம் பற்றி பேசவும்.
  • ப்ளூரைடு உள்ள டூத் பேஸ்ட் பயன்படுத்தலாமா என்று கேட்டுக் கொள்ளவும்

இவை எல்லாவற்றுக்கும் மேலே, ஒரு பெற்றோராக நீங்களும், கை கழுவிய பின் சாப்பிடுவது, சாப்பிட்டபின் வாய் கொப்பளிப்பது, தினசரி இருமுறை பல் துலக்குவது போன்ற பழக்கங்களை கொண்டால், உங்களை பார்த்து, குழந்தைகளும் சீக்கிரம் இந்த நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்வார்கள்.

.

8 comments:

நல்லதொரு பதிவு.

ஆஹா வாங்க,

முதல் பதிவே கலக்கல் பதிவா கலக்கறீங்க.

பாராட்டுக்கள்.

# தினசரி பல் தேய்க்கும் முறைகள், மற்றும் டூத் பேஸ்ட் / பிரஷ் ஆகியவற்றைப் பற்றி மருத்துவரிடம் பேசவும்.

# ப்ளூரைடு உள்ள டூத் பேஸ்ட் பயன்படுத்தலாமா என்று கேட்டுக் கொள்ளவும்//

ரொம்ப முக்கியமான விடயம் இது.

13 வயது வரை (பால்பற்கள் போய் ஸ்திரமான பற்கள் வரும் வரை)
kidodent போன்ற டூத் பேஸ்டுகள்தான் சரி. என் மகளுக்கு மருத்துவர் பரிந்துரைத்த போதுதான் தெரியும்.

பயனுள்ள பதிவு.. வருடத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது நன்று என்று பல் மருத்துவர்களே கூறுகிறார்கள்..

பற்களை நன்றாக வைத்துக்கொள்வதைப் பற்றி விளக்கமான, நன்கு பயன்படக்கூடிய கட்டுரை. நன்றி.

நல்ல பதிவு.

மிக மிக உபயோகமான நல்ல பதிவு.

வாழ்த்துகள்.

புதுகை.. இன்னும் நிறைய பேரை கிள்ப்புல சேர்க்கணும்.. இன்னும் இது போன்று நல்ல பதிவுகள் வர வேண்டும்..

எதிர்ப்பார்ப்புடன்....

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்