2. வேகமாகப் படிப்பவர்கள் Fast Learners
இவர்கள் எதையும் சீக்கிரம் கற்றுக்கொளவர்கள். இவர்களைப் பெற்ற பெற்றோர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால் வீட்டுப்பாடம் முடிப்பதில் எந்த சிரமும் இருக்காது. எல்லாவற்றையும் சீக்கிரம் முடித்துவிட்டு விளையாடுவதையோ அல்லது டி.வி பார்க்கவோ சென்றுவிடுவார்கள்.
இவர்களிடம் உள்ள பிரச்சினை சீக்கிரம் படிப்பதைப்போல் சீக்கிரம் மறந்தும் விடுவார்கள். படித்ததில் ஆழ்ந்த புரிதல் இருக்காது. புரிந்து படிப்பதைவிட மனப்பாடம் செயவதையே விரும்புவார்கள். அதனால் கணக்கு சரியாக வராது. மற்ற பாடங்கள் நன்றாக வரும். பெரும்பாலான பெண் குழந்தைகள் இந்த வகையில் வருவார்கள்.
இவர்களுக்கு பாடம் சொல்லித் தரும்போது கீழ்கண்ட விதிகளைப் பின்பற்றுங்கள்.
1. அவர்களின் வேகம் என்னவோ அதே வேகத்தில் சொல்லிக்கொடுத்து விடுங்கள். புரியவைக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு மெதுவாக சொல்லிக்கொடுத்தால் பாடம் போரடித்து வீட்டுப்பாடத்தையே வெறுப்பார்கள்.
2. இப்பொழுது புரிந்துபடிக்கவில்லை என்பதற்ககாக கடைசி வரை இப்படியே இருப்பார்கள் என எண்ண வேண்டியதில்லை. எந்த வயதிலும் புரிந்து படிப்பவர்களாக மாறலாம். நம்முடைய கடமை பாடத்தின்மீடு வெறுப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் போதும்.
3. கடைக்கு செல்லும்போது கூட்டிச்செல்லுங்கள். பொருட்களின் விலை என்ன? எவ்வளவு கொடுத்தோம்? மீதி எவ்வளவு வாங்கினோம்? என்பதை வெறும் தகவலாக மட்டும் சொல்லுங்கள். சிறிது காலத்திற்கு பிறகு அவர்களாகவே கணக்கு கேட்பார்கள். அப்பொழுதுதான் எப்படி கூட்டினோம், கழித்தோம் என்ற கணக்கையெல்லாம் சொல்ல வேண்டும்.
அடுத்த வாரம் குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் அல்லது புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
10 comments:
உங்க பேரைப் பார்த்த உடனே, என்னோட நண்பன் நினைவுதாங்க வந்தது.... விசயக்குமார்னு தட்டும் போது, எதிர்பாராதவிதமா ‘ய’ விடுபட்டுப் போய்...நான் அவன்கிட்ட வாங்கிக்கட்டினேன்.... :-0(
நல்ல பகிர்வு.
-வித்யா
இந்த விசப் பரீட்சை எனக்கு வேண்டாம், சாமி. இனிமேல் விஜயகுமார் என்றே போட்டுக்கொள்கிறேன். வித்யா அவர்களுக்கும் நன்றி.
4 th படிக்கும் எனது பையனை எப்படி படிக்க வைக்க என்று தெரியவில்லை .பயங்கர சுட்டி படிக்க உக்கார மாட்டான் .எப்படி அவனை படிக்கவைப்பது என்று சொல்லுங்க plz
//இந்த விசப் பரீட்சை எனக்கு வேண்டாம், சாமி. இனிமேல் விஜயகுமார் என்றே//
:)) நான் நிஜமாவே உங்கள் பெயர் "விஷய"குமார் என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.. :))
--வித்யா
பயனுள்ள பகிர்வு அன்பரே....
உபயோகமான பதிவு.
வாழ்த்துக்கள்
//இந்த விசப் பரீட்சை எனக்கு வேண்டாம், சாமி. இனிமேல் விஜயகுமார் என்றே//
:)) நான் நிஜமாவே உங்கள் பெயர் "விஷய"குமார் என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.. :))
--வித்யா //
இதுலயும் "ய" போச்சுனா ரொம்பக் கஷ்டம் வித்யா... உங்க பேருக்கு அந்தப் பிரச்னை இல்லையின்னு நினைக்கிறேன். :-)
ரொம்ப அருமையான பதிவு.
அப்பாடா ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல வரவேற்பு. அனைவருக்கும் நன்றி. மலர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுட்ட பையன்களைப் பற்றிய கட்டுரையை 2 தினங்களுக்களு எழுதுகிறேன். அனைவருக்கும் நன்றி
Post a Comment