சென்ற பதிவில் சுட்டிக்குழந்தைகள் நீண்ட நேரம் அமர மாட்டார்கள் மற்றும் அடிக்கடி செயல்களை மாற்றிக்கொண்டே இருக்க விரும்புவார்கள். அதனால் வீட்டுப்பாடம் சொல்லித்தரும்போது அடிக்கடி விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பார்த்தோம். இந்த பதிவில் அவர்களிடம் இயற்கையாக உள்ள எதிர்மறை மனோபாவத்தை பயன்படுத்தி எப்படி வீட்டுப்பாடத்தை கவர்ச்சிகரமாக மாற்றுவது என்று பார்க்கலாம்.
4.எதிர்மறை மனோபாவம்
பொதுவாக குழந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். சுட்டிக் குழந்தைகள் அதிகம் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். நகைச்சுவை என்பதே பொதுவாக நடக்கும் ஒரு விசயத்தை மாற்றி செய்வது. பல நேரங்களில் நாம் சொல்வதை மாற்றி செய்யவே குழதைகள் விரும்புகின்றன. அதற்குக் காரணம் அவர்களின் நகைச்சுவை உணர்வு (கோபத்தில் மாற்றி செய்வதுஅல்ல, நல்ல மனநிலையில் அல்லது சிரித்துக்கொண்டே மாற்றி செய்வார்கள்). என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் உலகை புரிந்தகொள்ள பயன்படுத்தும் பல வழிகளில் எதிர்மறை மனோபாவமும் ஒரு வழி என்றே தோன்றுகிறது.
எதிர்மறை மனோபாவம் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ள ஒரு சின்ன நிகழ்ச்சி. தட்டில் சாப்பாடை போட்டுவைத்து விட்டு “நான் சவால் விடுகிறேன் உன்னால் இந்த சாப்பாடை 2 நிமிடத்தில் சாப்பிட முடியாது” என்று சொல்லுங்கள். உடனே சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.
இந்த முறையை எப்படி வீட்டுப்பாடத்திற்கு பயன்படுத்துவது.
முறை.1.
சொல்லித்தரும்போது scaleஐ முதுகுக்கு பின் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக சொன்னால் அடிப்பேன், தவறாக சொன்னால் அடிக்க மாட்டேன் என்று சொல்லுங்கள். லேசாக அடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவை அடி விழும்போதும் எவ்வளவு சந்தோசமாக படிக்கிறார்கள் அல்லது எழுதுகிறார்கள் என்று கவனியுங்கள். அடி விழாமல் போகும்போது என்ன தவறு என்று எவ்வளவு ஆர்வருடன் தேடுகிறார்கள் என்று பாருங்கள். உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கும்.
முறை.2.
ஒரு கணக்கு போட ஆரம்பிக்கும்போது “இது ரொம்ப கஷ்டம். உன்னால முடியாது தம்பி” என்று சொல்லுங்கள். நன்றாக போட்டுவிட்டால் “சே.. மாட்டுக்குவான்னு நினைச்சேன், தப்பிச்சுட்டாண்டா” என்று சொல்லுங்கள். அடுத்த கணக்கிற்கு “போன தடவைதான் மாட்டல, இந்த தடவை மாட்டிக்குவான் பாரு” என்று தொடருங்கள்.
இந்த முறையை உங்கள் குழந்தைகளால் நன்றாக செய்ய முடிகிற பாடத்தில் மட்டும் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்.
முறை.3.
குழந்தைகள் படிக்கும் பாடத்தை நீங்களும் படித்து அவர்களிடம் பார்க்காமல் சொல்லுங்கள். சொல்லும்போது சில இடங்களில் தவறுகளை செய்யுங்கள்.
உதாரணத்திற்கு குழந்தை 7 table படிக்கிறான் என்றால், படித்து முடித்தவுடன் நீங்கள் அதே tableஐ அவனிடம் பார்க்காமல் சொல்லுங்கள். “நீ பார்த்துக்கொண்டே வா, தவறாக சொன்னால் சொல்லு” என்று சொல்லுங்கள். அவன் படிக்கும்போது ஏதாவது ஒரு இடத்தில் குழந்தை கஷ்டப்பட்டிருந்தால் அந்த இடத்தில் நீங்கள் தவறாக சொல்லுங்கள். அவன் நம்மை திருத்தும்போது அவனுக்கு மனதில் நன்றாக பதியும். இது மீண்டும் மீண்டும் revision செய்ய வைக்கவும் ஒரு வழி.
எதிர் மறை மனோபாவம் முறையை பயன்படுத்த நினைப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் தவறான் நேரத்தில் பயன்படுத்திவிட்டால் நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்து விடும்.
இந்த முறையை பயன்படுத்தக்கூடாத சூழ்நிலைகள்:
1. நீங்களும் உங்கள் குழந்தையும் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். அதாவது tensionலோ, கோபத்திலோ இருக்கக்கூடாது. அப்படி தவறாக பயன்படுத்தி விட்டதாக தெரிந்தால் உடனே கவனத்தை வேறு விசயத்தில் திருப்பி விடுங்கள்
2. இந்த முறையை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.
3. குழந்தைகளுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது கௌரவத்தை பாதிக்கும் வித்தத்திலோ பயன்படுத்தக்கூடாது. அதாவது அவர்கள் தோற்கும் விதத்தில் இந்த முறையை பயன்படுத்தக்கூடாது.
நாம் வீட்டுப்பாடம் சொல்லித்தரும்போது புரிய வைக்க வேண்டும் என நினைத்து நாம் செய்யும் காரியங்கள் பல நேரங்களில் குழந்தைகள் அரைகுறையாக புரிந்து வைத்திருப்பதையும் குழப்பி விடுவதாக அமைகிறது. எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.
.
குறள் வழிக்கதைகள்
5 years ago
5 comments:
நல்ல கருத்துக்கள்.
//இந்த சாப்பாடை 2 நிமிடத்தில் சாப்பிட முடியாது” //
நான் நூறு எண்ணுவதற்குள் சாப்பிட / எழுத வேண்டும் என்று கூறுவேன். பத்து வரை வாய் விட்டு எண்ணுவேன். அப்புறம் கவனித்து கொண்டே இருந்து விட்டு, அவள் கவனம் சிதறும் போது, முப்பத்தஞ்சு என்று சத்தமாகக் கூறுவேன். அவள் உடனே "அம்மா மெதுவா எண்ணும்மா" என்று வேக வேகமா சாப்பிடவோ / எழுதவோ செய்வாள். நிறையா எனக்கு ஹோம் வொர்க்கில் இந்த முறை பயன்பட்டுள்ளது.
--வித்யா
அப்புறம் அவள் எழுதியோ, உணவருந்தியோ முடிக்கும் போது, ஆயிரம் வரை எண்ணக் கூடிய அளவுக்கு நேரமாயிருக்கும். நான் மீண்டும், அம்பத்தி ஆறு என்பேன். அவள் உடனே, "அம்மா. நான் எழுதவே இல்லை" என்பாள். நான், ஹையா, நான்தான் ஜெயிச்சேன் என்பேன்.
அவள் உடனே எழுதி முடித்த நோட்டை / காலியான தட்டை/டம்பளர் என் முன் நீட்டுவாள்.
நான், ஆச்சரியம் காட்டி, சும்மாவாவது "ஊம் ஊம்..நான் தோத்து போயிட்டேன் ஊம். ஊம்" என்ற அழுவது போல செய்வேன்.
"நீயும் ஜெயிச்சதான். நான் பர்ஸ்ட், நீ செகண்ட். செகண்ட் வந்தாலும் பர்ஸ்ட் மாதிரிதான்" என்று கன்னத்தில் ஒரு முத்தம் கொடுப்பாள் பாருங்கள்.....
பாரதியின் சின்னஞ்சிறு கிளியின் முத்தத்தில் நம் கருவம் ஓங்கி வளரும்.
ரொம்ப அற்புதமான பதிவுங்க விஜய்.
--வித்யா
மிக ஜோரான பதிவு...
remba nalla pathivu
http://susricreations.blogspot.com
வித்யா அவர்கள் தனது குழந்தையை ரசித்தும், ருசித்தும் வளர்த்திருப்பார்கள் போலும்.
அமுதா கிருஷ்ணாவுக்கும், சுவையான சுவைக்கும் எனது நன்றிகள்.
Post a Comment