குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்
குழந்தைகளுக்கான (0 முதல் ஏழு வயது வரை மட்டும்) தமிழ் easy reading வகை புத்தகங்கள் அதிகம் வருவதில்லையே என்று ரொம்ப நாளாகவே யோசித்தது உண்டு. என் அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்த போது, என்னுடைய குழந்தைகளுக்கான வலைப்பூ நாற்றங்கால் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அவரின் அறிவுரைப்படி ஏழு பக்கங்கள் கொண்ட மின்னூலாக, வரும் மார்ச்-2010 முதல், நாற்றங்கால்-லில் வாயிலாகவே வாராவாரம், இலவசமாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.
இதில்:
1. படமும் பாடலும் - Tamil Nursery Rhyme
2. எளிமையான நன்னெறிக் கதைகள் - Moral Stories based on various folk stories (இதைக் குழந்தைகளுக்குச் சொல்லும் மொழி நடையிலேயே எழுத வேண்டும் என்று ஆசை)
3. எளிமையாக தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்க (மற்ற மொழிகளையும் இணைக்க ஆசை - Volunteer-கள் வேண்டும்)
4. குழந்தைகளுக்கான புதிர்கள்
5. பட்டாம்பூச்சி பக்கம் (coloring page)
6. குழந்தைகளுக்கான தொன்மையான விளையாட்டுக்கள் பற்றிய அறிமுகங்கள்
7. சின்னச் சின்ன அறிவியல் செயல் முறைகள்
உங்கள் மேலான ஆலோசனைகளும் வேண்டுகிறேன். இந்த முயற்சியில் இணைந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
நன்றி.
= =வித்யா
11 comments:
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல தங்கள் முயற்சியால் நானும் ஹிந்தி கற்கும் வாய்ப்பு கிடைக்கப் போகிறதே...
//எளிமையாக தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்க (மற்ற மொழிகளையும் இணைக்க ஆசை - Volunteer-கள் வேண்டும்)//
Is spanish ok?If so, I will write
//குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ் //
Very good effort Vidya.
வாழ்த்துக்கள் வித்யா.நல்ல முயற்சி
உங்கள் ஹிந்தி பிலாக் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு.
வித்யா,
ரொம்ப நல்ல முயற்சியும், ரொம்ப நல்ல நோக்கமும். பாராட்டுக்கள்.
Thanks sangkavi
thanks anbumani :)
kabeesh: thanks. spanish. wow. who ever wishes to learn the same will reap the benefit of it. thanks so much
thanks jaleela
thanks navaas
me ready for hindi :))
நல்ல ஐடியா. ஹிந்தி சொல்லிக்கொடுக்க நான் ரெடி
hi,
I also contribute to your initiative, please let me know how can i?
நல்ல பதிவு இதை நான் எனது உறவுகளுக்கு நண்பர்களுக்கு மின் அஞ்சல் வழியாக பகிர்கிறேன்
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். எனக்கும் ஹிந்தி கத்துக ஆசையா இருக்கு.
Post a Comment