பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பதின்ம வயது பிள்ளைகள் அந்தந்த வயதிற்கே உரிய வளர்ச்சியுடன்
காணப்படுவார்கள். பெண் பிள்ளை பூப்பெய்வதும் அப்போதுதான்.
வெளியே சொல்ல முடியாமல், சொன்னால் தவறாக நினைப்பார்களோ!!
என்று குழம்பி தவிப்பான் ஆண்பிள்ளை.

(13 வயது தான் டீன் ஏஜின் துவக்கம் என்றாலும் பல பிள்ளைகள்
11 வயது அடைந்த உடனே மாற்றங்கள் மெல்ல நிகழும்)


தனக்குள் நடக்கும் மாற்றங்கள் சரியா? தவறா? எல்லோருக்கும்
இப்படித்தான் இருக்குமா? போன்ற அனாவசிய குழப்பங்கள்
பிள்ளைக்கு ஏற்படும். யாருக்கும் நேராத ஒன்று தனக்கு மட்டும்
ஏற்பட்டிருப்பதாக உள்ளுக்குள் புழுங்கிப்போவார்கள். தெளிய
வைக்க வேண்டியது நம் பொறுப்பு.

அந்தரங்க உறுப்புக்களில் முடிவளர்தல் சாதாரணமான ஒரு
நிகழ்ச்சி என்று புரிய வைக்க வேண்டும். பெண்களுக்கு
ஏற்படும் உடல் மாற்றத்தையும் சாதரண நிகழ்வு என
புரிய வைத்து மனதை லேசாக்கி வைப்பது அவசியம்.


என் மகனுடன் பேச முதலில் எனக்கு தயக்கமாகத்தான் இருந்தது.
இதுவே பெண்குழந்தையாக இருந்தால் இந்தத் தயக்கம் இருந்திருக்காது
என நினைக்கிறேன். அயித்தானோ அடிக்கடி டூர் போகிறவர். பக்கத்தில்
இருந்து மாற்றங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஆண்டவன்
பெண்களுக்குத்தான் கொடுத்திருக்கிறான்.

குழ்ந்தை பிறக்கும் பொழுதுதான் தாய், தந்தையர் எனும் பதவி
வருகிறது. அதன் பிறகுதான் கற்றலும் நடக்கிறது. ஆம் தாயாக,
தந்தையாக நாம் செய்ய வேண்டியதை கற்கிறோம். இப்போது
பதின்ம வயது மகனை ஹேண்டில் செய்யும் திறனை நான்
வளர்த்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்து தனியறையில்
நானும் மகனும் மட்டும் உறவாடினேன்.

”கண்ணா, உன் உடலில் சில மாற்றங்கள் நேரும்
இதற்காக கலங்கக்கூடாது. மற்ற பிள்ளைகளிடம் இது குறித்து
ஆலோசனை செய்ய வேண்டாம். இது தவறல்ல! இயற்கை உன்னை சின்ன
குழந்தையிலிருந்து பெரிய மனிதனாக்க செய்யும் வேலை இது.
இது சாதாராண நிகழ்வு,” என்று சொன்னேன்.


”ஆமாம்மா, சின்ன சின்ன மாற்றம் பயமாயிருக்கு! என்ன செய்வதுன்னு
புரியலை!!” என்றான் கண்களில் நீருடன். தக்க சமயத்தில் பிள்ளையிடம்
பேசும் புத்தியை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லி கண்ணீரை
துடைத்து மடியில் இருத்திக்கொண்டேன்.


“நம் வாழ்க்கையில் டீன் ஏஜ் பருவம் ரொம்ப முக்கியம். ஏன் தெரியுமா?
inner PERSONALITY DEVELOPMENT அப்போதுதான் ஏற்படும். இதுவரை
சின்னக்குழந்தையாக தெரிந்த உன் உடல் இனி சில மாற்றங்கள் கொண்டு
தன்னை தயாராக்கிக்கொள்ளும். 13-19 வயது வரை நீ ரொம்பவே
கவனமாக இருக்க வேண்டும். பயப்பட ஏதும் இல்லை. ஆனந்தமாக
கொண்டாடலாம். இப்போது நீ குழந்தையுமில்லை, பெரிய மனிதனும்
இல்லை. அதனால் உனக்கு எப்போதாவது எதற்காவது சந்தேகம்
வந்தால் நானோ, அப்பாவோ உடன் இருக்கிறோம். கடினமான
இந்தக் கட்டத்தை நீ ஆனந்தமாக கடக்க நாங்கள் இருக்கிறோம்.


நீ செய்ய வேண்டியதெல்லாம், எங்களை நம்பு. 13-19 வயது
என்பதை ஏணிப்படி போல் கற்பனை செய்து கொள். ஒவ்வொரு
அடி எடுத்துவைக்கும்பொழுதும் உனக்குள் ஒவ்வொரு மாற்றம்,
ஒரு முதிர்ச்சி ஏற்படும். படியில் ஏறும்பொழுது கொஞ்சம் பயமாக
இருந்தால் என் கைகளைப்பிடித்துக்கொள்!!! அப்பாவைக் கேள்!நாங்கள் நீ ஏற
உதவி செய்கிறோம். நானும் உன்னைப்போல அந்த வயதைத்
தாண்டித்தானே வந்திருக்கிறேன், என்றதும் முகத்தில் நம்பிக்கை
வந்தது மகனுக்கு.

அவரிடமும் பேசி நீங்களும் மகனிடம் பேச வேண்டும்
என்று சொல்ல ,”நானும் அது பற்றி தான்
யோசித்து கொண்டிருக்கிறேன்!” உற்ற நண்பனாய் இருப்பேன்!! என்றார்.
சொன்னபடி செய்தும் வருகிறார்.


நாங்கள் அப்போது இருந்தது வெளிநாட்டில்! அங்கே கேர்ள்/ பாய்ஃப்ரெண்ட்
சகஜம். அது இல்லாவிட்டால் ஏதோ பெரும் குத்தம் என்பது
போல் பேசும் ஜென்மங்களும் உண்டு. அவர்களது கலாச்சாரம் அது.
6ஆம் வகுப்பு மகனிடம் கேர்ள் ஃப்ரெண்ட் பற்றி பேச தைரியம்
கொடுத்தது குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி. அப்போதுதான்
அவர் இது பற்றி சிநேகிதியில் எழுதியிருந்த தலையங்கம் படித்திருந்தேன்.
அவர் சொன்ன உதாரணத்தை என் மகனிடம் சொன்னேன்.

“பதினம வயதில் தான் ஆண்/பெண் கிளர்ச்சி ஏற்படும். வயதுக்கோளாறு
அது. ஆனால் அது உன் வாழ்வை நாசமாக்கி விடக்கூடாது. உன்
விருப்பப்படி நீ படித்து செட்டிலாகிவிட்டு அதைப் பற்றி யோசிக்கலாம்.
சில உதாரணங்கள் சொல்லி,” அம்மா இதை ஏன் உன்னிடம் சொல்கிறேன்
தெரியுமா? வானத்தில் ஆனந்தமாக பறக்கும் குருவி தன் காலில்
ஒரு சிறு கல்லைக் கட்டிக்கொண்டு பறந்தால் என்னவாகும்!?” எனக்கேட்டேன்.

“பறக்கவே கஷ்டமாக இருக்கும் அம்மா, ஃப்ரியா பறக்க முடியாது”
என்றான்.

“ஆமாம். படிக்கும் வயதில் காதல் கூட அப்படித்தான். ஒரு பாரமாகி
உன்னை திசை திருப்பும். பெண் நண்பர்கள் இருப்பது தவறில்லை.
உன் தோழி AQUILA இல்லையா. ஆனால் நட்பு வேறு காதல் வேறு!”
என்றதும் மகன் சொன்னது, ரொம்ப தேங்க்ஸ்மா, புரிய வெச்சதுக்கு!”
என்றான்.

என் மகனிடம் பேசியதை ஏன் இங்கே கொடுத்தேன் தெரியுமா??
நம் பிள்ளைகளிடம் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.
நான் பேசுவது அட்வைஸாக இருந்தால் பிள்ளைகளுக்கு
போரடித்து விடும். அதுவே நட்பிடம் பகிர்வது போல் பக்குவமாக
பேசினால் நல்ல பலன் இருக்கும்.

தன்னைக் குழந்தையாக நடத்தாமல் பெரிய பிள்ளை போல்
நடத்துவதாக பிள்ளை புரிந்து நம்மிடம் மனம் விட்டு பேச வரும்.
“என்ன ஆனாலும், நானிருக்கிறேன்!” என்ற நம்பிக்கையை
நாம் கொடுத்து விட்டால், என்னை காக்க என் பெற்றோர்
இருக்கிறார்கள் என்ற எண்ணமே தன்னம்பிக்கை மிளிர வைக்கும்.


நாமே நம் பிள்ளையிடம் பேசாவிட்டால் அந்தக் குழந்தை
தன்னை பாதுகாப்பற்றவனாக/ளாக ஆக நினைத்து வருந்தும்.
சில விடயங்கள் நண்பர்கள் மூலம் தெரிவதால் அவர்கள்தான்
தெய்வம் போலவும், தவறான நட்புக்கள் மூலம் பாதை மாறுதலும்
நடக்கும். வீட்டில் போதிய சப்போர்ட் இல்லாத குழந்தைகள் தான்
வழி மாறிச் செல்கின்றன.

போதை, குடி, சிகரெடி போன்ற பழக்க வழக்கங்கள் ஏற்படுவது
இதனால் தான். தமிழ்த்துளி தேவா அவர்களின் இந்தப் பதிவை
பாருங்கள்.
போதை பழக்கத்துக்கு ஆளானல் மீட்பது கஷ்டம்.


குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படி நாகரீகம்


இதுவும் படிச்சி பாருங்க

வரும் திங்களன்று அடுத்த பதிவு வரும்
அதுவரை
தொடரும்....

9 comments:

Very nice posting. happy to see such postings, eye opener. :)

மிக அவசியமான அருமையான இடுகை. குருவியின் உதாரணம் அட போட வைத்தது. மிகச் சிறந்த பணியை தொடருங்கள் புதுகைத் தென்றல்.

gr8 akka.

well done.

நன்றி வித்யா

நன்றி நவாஸுதீன்,

அந்த உதாரணம் குமுதம் சிநேகிதியில் ஆசிரியர் லோகநாயகி சொல்லியிருந்த உதாரணம். அவருக்கு இங்கே என் நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்

நன்றி அப்துல்லா

Nice essential post.

அவசியமான...பதிவு...அவர்களது உடல் நிலைமாற்றங்களை , பெற்றவர்கள் தான் புரியவைக்க வேண்டும் நம் பெற்றோர் பேச கூச்சபடுகிறார்கள். அவன் /அவள் தான்கவே புரிந்து கொள்வார் என அசட்டையாய் இருக்கும் விடயம். மொத்தத்தில் பெற்றவர்கள் நண்பர்களாய் இருக்கவேண்டும். மனம் விட்டு பேச சந்தர்ப்பங்க்களை அமைத்து கொடுக்க வேண்டும். பாராடுக்கள் உங்கள் பதிவுக்கு............

அவசியமான பதிவு அக்கா... பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி. தொடருங்கள்... :-)

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்