பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

உலகமயமாக்கலுக்குப் பின்னால நடந்திருக்குற மாற்றங்களால வேலை விசயமா நம்ம ஆட்கள் வெளிநாடுகளுக்கு போறது கடந்த பத்து இருபது வருசங்களில் பலமடங்கு அதிகமாகி இருக்கு. சும்மா ஒரு மாசம் ரெண்டு மாசம்னு தனியா போறவங்க மட்டுமில்லாம ஆறுமாசம் ஒரு வருசம் அதுக்கும் மேலன்னு குடும்பத்தோட வெளிநாடுகளுக்கு போறவங்கள அதிகமா பாக்க முடியுது.

இந்த முறை நான் அமெரிக்காவுக்கு ஆறு வார வேலையா வந்துட்டு அது ஆறு மாசமா எக்ஸ்டெண்ட் ஆனதால என் தங்கமணியவும் பையனையும் இங்க கூட்டிட்டு வந்தேன். அவனை இங்க பள்ளிக்கூடத்துல சேத்தலாம்னு போய் கேட்டப்ப அவங்க கேட்ட சில டாக்குமென்ட்ஸும், பள்ளிக்கூடத்துல சேத்துறதுக்காக நாங்க அலைஞ்சதும் நிறைய விசயங்களை கத்துக் கொடுத்தது. அதை எல்லார்கூடவும் பகிர்ந்துக்குறது நல்லதுன்றதால இங்க பதியுறேன்.

டிஸ்கி: நான் எழுதியிருக்குறது இப்ப நான் இருக்குற டென்னிஸி (Tennessee, USA) மாகாண விதிமுறைகள். இடத்துக்கு இடம் விதிமுறைகள் மாறும்னாலும், பெரிய அளவுல மாற்றம் இருக்காது.

1. குழந்தை பள்ளிக்கு செல்லும் வயது
இங்க குழந்தைகள் பள்ளிக்கு செல்ல குறைஞ்ச பட்சம் 5 வயசு கம்ப்ளீட் ஆகி இருக்கணும் (செப்டம்பர் 30 தேதி அன்னிக்கு). என் பையன் ஆகஸ்ட்லயே 5 வயசு கம்ப்ளீட் பண்ணிட்டதால அது பிரச்சினை இல்லை. ஒரு வருசம் KinderGarten, அதுக்கப்புறம் 1st grade, 2nd grade இப்படி போகுது.

2. தடுப்பூசிகள்
குழந்தையை பள்ளியில சேர்க்க முதல்ல அவங்க கேக்குற கேள்வியே “குழந்தைக்கு எல்லா தடுப்பூசிகளும் குடுத்தாச்சா?” (vaccine / shots) அப்படிங்குறதுதான். இதுல எந்த காம்ப்ரமைஸும் பண்ணிக்குறதே இல்லை. ஒவ்வொரு மாகாணமும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் போட்டிருக்க வேண்டிய தடுப்பூசி லிஸ்ட் வெச்சிருக்காங்க. அது எல்லாம் போட்டாச்சின்னு ஒரு டாக்டர் சர்டிஃபிகேட் குடுத்தாத்தான் குழந்தையை பள்ளியில சேர்க்கவே முடியும்.

இந்தியாவுல இருந்து வர்ற நமக்கு இது பெரிய பிரச்சினை. என் பையனுக்கு எல்லா தடுப்பூசிகளும் சரியான நேரத்துல சென்னையில விஜயா ஹாஸ்பிடல்ல போட்டிருக்கோம். அது எல்லாத்தையும் மெடிக்கல் ரெக்கார்ட் எழுதுற நோட்டுலயே டாக்டர் எழுதி ட்ராக் பண்ணியிருக்கோம். ஆனா இங்க அந்த நோட்டை மெடிக்கல் ரெக்கார்டா கன்சிடர் பண்ண மறுத்துட்டாங்க. அதுக்காக அஞ்சு வருச தடுப்பூசிகளை மறுபடியும் போடுறதும் முடியாத காரியம்.

பதிவர் சஞ்சய் மூலமா அவர் நண்பர் டாக்டர் ரியாஸ் அவர்கள் எனக்கு இதுல உதவி பண்ணுனாரு. எல்லா தகவல்களையும் அவருக்கு அனுப்பி, குழந்தைகள் மருத்துவரா இருக்குற அவர் நண்பர் ஒருத்தரோட லெட்டர் ஹெட்ல எல்லாத்தையும் எழுதி கையெழுத்து போட்டு அனுப்பினாரு. அதை கொண்டு போய் கொடுத்ததும்தான் ஒத்துகிட்டாங்க.

அதிலும் அடுத்த பிரச்சினை வந்தது. குழந்தைக்கு நாலு வயசுக்கு அப்புறம் ஒரு தடவை போலியோ மருந்து கொடுத்திருக்கணும்னு சொன்னாங்க. அவனுக்கு ஐந்து வயசு ஆகுற வரைக்கும் ஒவ்வொரு தடவையும் பல்ஸ் போலியோ ப்ரோக்ராம்ல நாங்க அவனுக்கு மருந்து கொடுத்திருக்கோம். இதுவரைக்கும் 10 தடவையாவது கொடுத்திருப்போம். ஆனா அதுக்கு எந்த ரெக்கார்ட்டும் இல்லாததால மறுபடியும் ஒருதடவை கொடுத்தே ஆகணும்னு சொல்லிட்டாங்க

அதே மாதிரி லெட்டர்ல “Prevnar" அப்படின்னு மட்டும் எழுதியிருந்தது. அது Prevnar 6ஆ அல்லது Prevnar 13ஆன்னு கேட்டாங்க. நல்ல வேளையா அந்த தடுப்பூசி மேல இருந்த ஸ்டிக்கரை எடுத்து நோட்ல ஒட்டியிருந்தாங்க. அதுல 13ன்னு இருந்தது. இல்லைன்னா அதையும் மறுபடியும் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்.

அதனால இந்தியாவுல இருந்து கிளம்பும் முன்னால உங்க டாக்டர்கிட்ட லெட்டர் ஹெட்ல எந்த எந்த தடுப்பு மருந்துகள் எந்த எந்த தேதியில குடுத்திருக்காங்கன்னு தெளிவா எல்லா டீடெய்ல்ஸோடவும் எழுதி கையெழுத்து + சீல் வெச்சி வாங்கிட்டு கிளம்புங்க.

3. தடுப்பூசிகள்
இங்க அரசு சொல்லியிருக்குற லிஸ்ட்ல இருக்குற 3 குறிப்பிட்ட தடுப்பூசிகள் நாங்க குழந்தைக்கு கொடுத்திருக்கலை. அதை கொடுத்தாத்தான் பள்ளிக்கூடத்துல சேத்துக்க முடியும்னு சொல்லிட்டாங்க. ஆனா அவங்களே அதுக்கான வழியையும் சொன்னாங்க. இங்க குறிப்பிட்ட சில அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு எல்லா தடுப்பூசிகளும் இலவசமாவே கொடுக்குறாங்க. அருகில் இருந்த அரசு மருத்துவமனை முகவரியும் கொடுத்தாங்க. ப்ரைவேட் க்ளினிக் போயிருந்தா குறைந்தது 300 டாலர் ஆகியிருக்கக்கூடிய அந்த மூணு தடுப்பூசிகளும் செலவே இல்லாம அதே நாள்ல குழந்தைக்கு கொடுத்துட்டோம்

4. ஆங்கில அறிவு
இங்க பேச்சு மொழியே ஆங்கிலமா இருக்குறதால, குழந்தைக்கு குறைந்தபட்ச ஆங்கில அறிவாவது இருக்கணும்னு எதிர்பார்க்குறாங்க. இந்த மாகாண விதிகளின் படி, வெளிநாட்டில் இருந்து வரும் குழந்தைகள் முதலில் EL Office (English Learners Office) போகணும். அவங்க குழந்தைக்கு ஒரு டெஸ்ட் வெக்குறாங்க, எப்படி ஆங்கிலம் பேசுறான், பேசுறதை புரிஞ்சுக்குறானா எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணுறாங்க. என் குழந்தை எதிர்பார்த்த மாதிரியே “Not Proficient”. ஆனா அவன் ரொம்ப கம்மியா ஸ்கோர் பண்ணினது ஆங்கிலம் படிக்குறதுல, மத்தபடி பேசுறது / புரிஞ்சுக்குறது எல்லாம் ஓரளவு நல்லா பண்ணியிருந்தான். அதனால “நீங்க பள்ளியில சேர்க்கலாம், ஆனா ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் பள்ளி நேரத்துலயே உங்க பையனுக்கு ஸ்பெஷல் கோச்சிங் பள்ளியில குடுப்பாங்க”ன்னு சொல்லிட்டு அதை பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்ட்ரக்‌ஷனாவும் எழுதி கொடுத்துட்டாங்க.

சுருக்கமா சொல்லணும்னா,
1. இந்தியாவுல இருந்து கிளம்பும்முன் உங்க குழந்தையோட தடுப்பூசி லிஸ்ட்டை உங்க டாக்டர்ட்ட அவரோட லெட்டர் ஹெட்ல எழுதி கையெழுத்து வாங்கிட்டு வாங்க
2. அப்படியும் சில மருந்துகள் விட்டுப்போயிருந்தா, அதை கொடுக்க இலவசமா எதாவது அரசு மருத்துவமனைகள் இருக்கான்னு கேளுங்க, கேக்குறதில் தப்பில்லை. நமக்கு பணம் மிச்சமாகும்.
3. உங்க குழந்தை சின்ன சின்ன வார்த்தைகளாவது ஆங்கிலத்துல பேசணும், புரிஞ்சுக்கணும். தமிழோ அல்லது உங்களோட தாய்மொழியோ பேசுறது கூட அப்பப்ப இதையும் பழக்கிட்டு வர்றது இந்த மாதிரி வெளிநாட்டுப் பயணங்களில் ரொம்ப உதவும்

முதல்லயே சொன்ன மாதிரி, இது என்னோட அனுபவங்கள் மட்டுமே. இது ஒரு கைட்லைனா எடுத்துக்கிட்டு நான் சொன்ன சின்ன சின்ன விசயங்களை கவனிச்சி செஞ்சிட்டோம்னா வெளிநாட்டுக்கு போய் இறங்கினப்புறம் நமக்கு அலைச்சல் மிச்சமாகும்.

14 comments:

பயனுள்ள அருமையான பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லாத விஷயங்களை பதிவா தந்திருக்கீங்க நன்றி வெண்பூ

பயனுள்ள பகிர்வு...

நன்றி ரமணி, புதுகைத் தென்றல், சிநேகிதி

நல்ல பதிவு.

குட் குட் :) போயி உருப்படியா ஒரு பதிவு எழுதிருக்கீங்க :)

@விஜி, உருப்படியான பதிவுன்னு தோணினதாலதான் இங்க எழுதினேன். வழக்கம்போல மொக்கைன்னா என் பதிவுலயே போட்டிருப்பேன் :)

@ராமலக்‌ஷ்மி மேடம்.. நன்றி..

வெண்பூ, செப்டம்பர் 30ங்கிற கட் ஆஃப் ஸ்டேட்டுக்கு ஸ்டேட் மாறும். உதாரணத்துக்கு நியூ யார்க்ல நவம்பர் 30க்குள்ள 5 வயசு கம்ப்ளீட் ஆகியிருந்தா போதும். அதே வாஷிங்டன் ஸ்டேட்ல ஜூலை 31க்குள்ள 5 வயசு முடிஞ்சிருக்கணும்.

@முகிலன், நல்ல தகவல். நான் பதிவுலயே சொல்லியிருக்குறமாதிரி இது எல்லாமே டென்னஸி மாகாண விதிமுறைகள். எனக்குத் தெரிஞ்சி mandatory shots கூட நியூயார்க்குக்கு வேற.

தம்பி சஞ்சய் காந்தியப் பிடிச்சா வேலை நடக்கும்னு குறிப்பிட்டுச் சொன்னது மிகவும் பயனுள்ள தகவல்.

http://www.vaclib.org/exempt/tennessee.htm
We explored this option in our state but
Did not go through with it. There are
Parents in this country who do not want to immunize their kids

வணக்கம்...
புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...
மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவில் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..
http://ithu-mangayarulagam.blogspot.com/

மிகவும் ப்பயனுள்ள பதிவு

பிள்ளை பெறுவது மட்டும் அல்ல பெற்றோர்களின் கடமை இன்னும் இருக்கிறது என்று அடித்து சொல்லும் பதிவுகள் நானும் கூட உங்களோடு பயணிக்க ஆயத்தமாகிறேன் நன்றி

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்