வணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.
சென்ற வாரம் எனது மகன் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதில பள்ளி நிர்வாகம் சொன்ன சில கருத்துக்கள் சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் என்னைத் திண்டாட வைத்தது. அதன் விளைவே இக்கட்டுரை..
மாணவர்கள் முன்னேற்றத்திற்காக அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கையில் ஒன்று 5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு “Spelling Success” என ஒரு புத்தகம் கொடுத்துள்ளார்களாம். அதில 3000 வார்த்தைகள் இருக்கும். தினம் 10 வார்த்தைகள் எடுத்துக்கொண்டு, அன்றைய நாளில் எல்லா வகுப்புகளிலும் ஆசிரியர்கள் அந்த 10 வார்த்தைகளை அடிக்கடி உபயோகிப்பார்கள். அதனால் மாணவர்களின் மனதில் 10 வார்த்தைகளுக்கான அர்த்தமும், spellingம் மனதில் நின்றுவிடும். 2 ஆண்டுகளில் ஆங்கிலத்தில் அடிக்கடி உபயோகப்படுத்தக்கூடிய 6000 வார்த்தைகளை மாணவர்களின் மனதில் புகுத்திவிடுவோம். அதனால் அவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசுவார்கள் என்பது அவர்கள் வாதம்.
முதலில் அவர்கள் தங்களுடைய பெரிய தவறு ஒன்றை ஒத்துக்கொள்கிறார்கள். அவர்கள் வழக்கமாக நடத்தும் பாடத்தில் வரும் வார்த்தைகளின் அர்த்தத்தையோ, spellingகோ மாணவர்களின் மனதில் பதியவைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். மொழிப் பாடங்களில் அடிக்கடி வரும் வார்த்தைகளை பதிய வைத்தாலே போதும் ஆங்கிலம் பேச நிறைய வார்த்தைகளை மாணவர்கள் தெரிந்துகொள்வார்கள். இவ்வளவுக்கும் அந்த பள்ளியில் எல்லா வகுப்புகளிலும் (from 1st std) ஆங்கிலத்திற்கு மட்டும் textbook, good grammar, conversation or spelling success என 3 புத்தகங்கள் கொடுப்பார்கள். அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை பதிய வைக்கமுடியவில்லை என்றால் இந்த 3 புத்தகங்கள் எதற்கு?
உண்மையான பிரச்சினை பாடச்சுமை. ஒரு வார்த்தையை மாணவர்கள் படிக்கும்போது 3 விதமான கற்றல் நடக்கிறது.
1. வார்த்தையின் ஓசை
2. வார்த்தையின் அர்த்தம்
3. spelling
தாய்மொழியாக இருந்தால் முதல் 2 கற்றல் தேவையில்லை. 3வது கற்றல் மட்டுமே நடக்கிறது. ஆகவேதான் தாய்மொழியில் கற்பது எளிதாக இருக்கும்.(அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டும் சொல்கிறேன்)
ஆங்கிலம் அயல்மொழி 3 கற்றலும் நடக்கும். ஆகவே ஆங்கில வார்த்தைய கற்பதற்கு நிறைய கால அவகாசத்தை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.
இன்று இருக்கும் பாடச்சுமை மெதுவாக கற்பதற்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கவில்லை. அவசரகதியில் கற்பதால் அரைகுறையாக ஓசை மற்றும் spelling மட்டும் படித்து மதிப்பெண் எடுத்துவிட்டு மறந்துவிடுகிறார்கள்.
ஆங்கில வார்த்தைகள் மாணவர்கள் மனதில் பதியாமல் போனதற்கு பாடச்சுமைதான் காரணம். இதைகூட புரிந்துகொள்ளாமல் இக்குறையை போக்க இன்னொரு புத்தகம் வழங்குகிறோம் என்று பாடச் சுமையை மேலும் அதிகமாக்கும் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது?
(குறிப்பு: General Knowledge புத்தகத்தையும் இந்த வகையில் சேர்த்துகொள்ளலாம். Science, Social Science இரண்டையும் நன்றாக புரியவைத்து மனதில் ஏற்றினால் அதுதான் General Knowledge. ஆனால் இன்றோ General Knowledge புதிய பாடமாகவே ஆகிவிட்டது.)
குறள் வழிக்கதைகள்
5 years ago
5 comments:
கேட்டால் டீச்சிங் மெத்தடலாஜி மாறியிருக்குன்னு சொல்வாங்க. ம்ம்ம்ம்
பணம் பிடுங்க இன்னொரு வழி.
பணம் பறிப்பத்தில் மட்டும் எல்லா பள்ளியிலும் புதுசு புதுசாக தான் யோசிக்கிறாங்க... உண்டான பாடங்களை ஒழுங்காக சொல்லிக்கொடுத்தால் போதாதா? யாரிடம் கேட்பது...
'கல்லா’ கட்டுவதற்கு இப்படி ‘குல்லா’ போட்டால் தான் உண்டு!
சரியாகச் சொல்லிவிட்டீர்கள் பெற்றோர்களின் புலம்பலை.
கொலை(ள்ளை)க்கூடம்!"தான்.
"தினமும் செய்தித்தாள்களிலும், புத்தகங்களிலும் வரும் புது வார்த்தைகளாக 5 அல்லது 6 வார்த்தைகளை எழுதி அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் எழுதி வாருங்கள்" என்று சொன்னாலே போதுமே.
Post a Comment