பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பெரியவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி, உரிமை மீரல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் சமுதாயம், குழந்தைகளைப்பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை.

இது மாபெரும் தவறு. ஒரு பெரிய மனிதனாக வளர்வதற்கு உண்டான அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு வளர்வது இன்றைய குழந்தைதானே?

"The adult is a procreator, but the child is a creator" என்பார்கள். குழந்தைகளின் உலகம் ஆரோக்கியமானதாகவும், தடைகளற்றதாகவும் இருந்தால்தான் அவன் வளர்ந்து ஒரு நல்ல சமுதாயம் உருவாகும்?

உண்மையான உதவியை குழந்தைகளுக்கு கொடுக்க நாம் முதலில் குழந்தைகளின் உலகத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


"EVERYTHING BEGINS IN CHILDHOOD" என்கிறார்கள் அறிஞர்கள். ஒரு நல்ல முழு மனிதனன உருவாக்குவது என்பது மிகப்பெரிய காரியம்.

குழந்தையிலிருந்து முழு மனிதனாக மாறுவதற்கு இடையில் இருக்கும் காலகட்டத்தை ஒரு குழந்தை கடந்தாகவேண்டும்.

வழித்தட முன்னேற்றத்தை (path of development) அறிந்து சின்னஞ்சிறார்களுக்கு உதவுவதனாலேயே, பிறக்கும்போதே அளற்கறிய சக்தியுடன் பிற்ந்திருக்கும் குழந்தையை, முழு சக்தி, ஆற்றலுடன் கூடிய மனிதனாக மாற உதவலாம்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தைகளை அன்புடன் புரிந்து கொண்டு, பாதுகாத்து, சரியான/தேவையான உதவிகளை செய்தால் நம்மால் ஒரு வலுவான, அன்பு நிறைந்த தலைமுறையை உருவாக்கமுடியும்.

இதனால் தான் குழந்தைகளை வருங்காலத் தூண்கள் என்கிறோம். இப்படி வளரும் குழந்தைகள்தான் இப்போது இருப்பதைவிட மேலும் சிறந்த உலகத்தை படைக்கும் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? குழந்தையின் வளர்ச்சியும், பயிற்ச்சியும்

துவங்குவது தாயின் கருவறையில் இருந்துதான்.

குழந்தைகளைப் படிப்போம். வலுவான உலகைப் படைக்க அவர்களுக்கு உதவுவோம்.


(பாடம் எடுப்பதாக நினைக்கவேண்டாம். நான் ஒரு MONTIESSORY METHOD OF TEACHING DIPLOMA முடித்த ஆசிரியை. அங்கு படித்ததை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்)

கலா ஸ்ரீராம்.

12 comments:

தை பிறந்தால் வழிபிறக்கும்னு பெரியவங்க அனுபவிச்சி தான் சொல்லி இருக்காங்க.

உங்களால எங்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கு நன்றி அக்கா

வாழ்த்துகள் கலா..கலக்குங்கள்.

வாங்க வாங்க
பவன் குட்டி,பாசமலர்.

எல்லோரும் சேந்து கலக்குவோம்.

நல்லா இருக்கு - தொடருங்க கலா - வாழ்த்துகள்-

நல்லது...தொடருங்கள் கலா....

//பாடம் எடுப்பதாக நினைக்கவேண்டாம். நான் ஒரு MONTIESSORY METHOD OF TEACHING DIPLOMA முடித்த ஆசிரியை. அங்கு படித்ததை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்//

பாடமே எடுங்கள். மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளேன்

வாழ்த்துக்கு நன்றி சீனா

வாழ்த்துக்கு நன்றி சீனா

வாங்க மதுரையம்பதி. தங்கள் வருகைக்கு நன்றி.

//பாடமே எடுங்கள்//

ஏற்கனவே "ஹஸ்பன்டாலஜி" பாடத்துக்கு எல்லோர் கிட்டயும் திட்டு வாங்கிகிட்டு இருக்கேன். அதனால பாடமா வேண்டாம். பகிர்தலாவே இருக்கட்டும்.
புதுகைத்தென்றல்.

நீங்களும் இதைப்பற்றி சிந்தித்து எழுதியதற்க்காக எனது நன்றியைத் தெறிவித்துக் கொள்கிறேன்

வாங்க புரட்சித் தமிழன்,

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்