பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

குழந்தையின் வளர்ச்சியும், பயிற்ச்சியும் தாயின் வயிற்றிலிருந்த்து தான் ஆரம்பம்.

நாம் அனைவருக்குமே நீச்சல் தெரியும் என்றால் ஒத்துக்கொள்வீர்களா? அது தான் உண்மை. 10 மாதக்காலம் தாயின்வயிற்றில் நாம் நீந்திக் கொண்டிருந்தோமே. அங்கே ஆரம்பிக்கிறது நம் நீச்சல் திறமை.

(வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் நாம் எல்லாவற்றையும் மறந்து, மாறிப் போகிறோம்.)

தாயின் வயிற்றில் இருக்கும்போதே கேட்கும் திறன், உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகியவை ஆரம்பம் ஆகிறது.

புராணத்தில் "பிரகலாதன்" தாயின்வயிற்றில் இருக்கும் போது நாராயணனைப் பற்றி நாரதர் சொல்லக் கேட்டுபிறகு சிறந்த விஷ்ணுபக்தனாக திகழ்ந்தான்.

இசைக் கேட்டு துள்ளும் குழந்தைகள் உண்டு. ( இம்சை அவர்கள் கூட தன் மகன் கருவில் இருக்கும் போது ஒரு பாடலைக் கேட்டு குழந்தை அதிகம் உதைத்து விளையாண்டதாக சொல்லியிருக்கிறார்.)

இதெல்லாம் நமக்கு சொல்லும் பாடம் என்ன? ஒரு பெண் கருவுற்றிற்கும் போது பெண்ணிற்கு கிடைக்கும் சூழ்நிலையை பொறுத்துதான் ஒரு குழந்தையின் தன்மை இருக்கும். நல்லதையே கேட்டு வளரும் குழந்தை நல்ல பிள்ளையாக பிறந்து, நாட்டிற்கு நல்லது செய்யும் நல்ல குடிமகனாகிறான்.

கருவுற்றிற்கும் பெண் அழுவது, படப்படப்புடன் வேலைப் பார்ப்பது, துக்கம், கோபம் எல்லாம் கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கிறது. HYPERACTIVE குழந்தைகளின் காரணம் தாய் கருவுற்றிருக்கும் போது இருந்த மனோபாவம்தான்.

உடனே பெண்ணால்தான் எல்லாம் என்று குற்றம் சாற்றக் கூடாது. கணவனும், கணவன் வீட்டைச் சார்ந்தவர்களும் இதற்கு கருவுற்றிற்கும்
பெண்ணிற்கு உதவினால், கர்ப்ப காலத்தை அனுபவித்து, ஆனந்தமாக பிள்ளை பெற ஏதுவாக இருக்கும்.

குழந்தைபிறந்த பிறகு குழந்தைமருத்துவர் குழந்தையின் கையில் பென்சில் ஒன்றைக் கொடுத்து, பார்ப்பார். குழந்தை பென்சிலை பிடித்துக் கொண்டால் திறன் சரியாக இருக்கிறது என்று அர்த்தமாம். பிறந்து ஒரு சில நிமிடங்களே ஆன குழந்தைக்கு யார் சொல்லிக் கொடுத்து பென்சிலைப் பிடிக்கிறது?

இதிலிருந்தே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அளற்கறிய திறனுடன்தான்
பிறக்கிறது என்பது ஊர்ச்சிதமாகிறதல்லவா?

தொடரும்...

புதுகைத் தென்றல்.

பெற்றோர்களுக்கான புதிய பாடம்(child psychology) - 1

7 comments:

நாம் அனைவருக்குமே நீச்சல் தெரியும் என்றால் ஒத்துக்கொள்வீர்களா?

ம்ம்ம் சரிதாங்க, பவன் யாரும் சொல்லி தராமலேயே 6வது மாதத்தில் நீச்சல் கற்றுக்கொண்டான். இன்னனும் தண்ணிரை பார்த்தால் குறைந்தது 2 மணி நேரம் தண்ணிரில் விளையாடுகிறான்.

இசைக் கேட்டு துள்ளும் குழந்தைகள் உண்டு. ( இம்சை அவர்கள் கூட தன் மகன் கருவில் இருக்கும் போது ஒரு பாடலைக் கேட்டு குழந்தை அதிகம் உதைத்து விளையாண்டதாக சொல்லியிருக்கிறார்.)

அந்த பதிவு இன்னும் ரிலிஸ் ஆகல நாளை பண்ணிடலாம்.

ஓஹோ..அதுக்குதான் குழந்தை கையில ரூபாய் கொடுத்து செக் பண்றாங்களோ

வாங்க இம்சை,

இது அறிவியலார் சொல்லும் உண்மை.

வாங்க பாசமலர்,

என் மாமா ஒரு pediatrician. அவரிடம் இருந்து கற்றது நிறைய.

கல்யாணம் ஆனவங்க மட்டுமில்லாம.. கல்யாணம் ஆகப் போறவங்களும் தெரிஞ்சுக்க வேண்டிய விசயஙகள்.. நல்லாயிருக்கு...

வாங்க ரசிகன்,
வருகைக்கு நன்றி.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்