சிங்க வேஷம் போட்ட கழுதை
ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. பக்கத்துக் கிராமத்திலிருந்து அந்தக் காட்டுக்குள்ள ஒரு கழுதை வழி மாறி வந்திருச்சாம். காட்டுக்குள்ள ஒருத்தர் மட்டுமே நடக்கக் கூடிய ஒரு மண் சாலை வழியா நடந்து நடந்து களைச்சுப் போச்சு. தண்ணீர் குடிக்கலாம்முன்னு ஒரு ஓடைப் பக்கம் போனது.
அந்த ஓடைக்கு பக்கத்துல சில வேட்டைக்காரர்கள் வசித்து வந்தாங்க. அவங்க தான் வேட்டையாடிய சிங்கம், புலி, மான் போன்ற சில மிருகங்களின் தோலை எல்லாம் அங்கிருந்தப் பாறைகள் மேலக் காய வைத்திருந்தாங்க.
இதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தோட தோலை எடுத்துத் தன் உடம்பு மேல போத்திக்கிச்சாம். பார்க்க சிங்கம் போலவே இருந்ததுனால, மற்ற மிருகங்கள் எல்லாம் இதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் போனதாம். மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்துக் கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது. மனிசங்களையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து கிராமத்துக்குள்ள போயி சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்திச்சாம். அதோட குரல் அது கழுதைன்னு காட்டிக் கொடுத்திருச்சு. அதுக்குப் பிறகு கழுதைய யாருமே மதிக்கவேயில்லை. யாரும் அதைப் பார்த்துப் பயப்படவேயில்லை.
நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.
(ஈசாப் நீதிக் கதைகள் ஆங்கில மூலத்தின் ஆதாரத்தில் சிறிது மாற்றி தமிழில் கூறுவது விதூஷ்)
The Ass in the Lion's Skin
An Ass once found a Lion's skin which the hunters had left out in the sun to dry. He put it on and went towards his native village. All fled at his approach, both men and animals, and he was a proud Ass that day. In his delight he lifted up his voice and brayed, but then every one knew him, and his owner came up and gave him a sound cudgelling for the fright he had caused. And shortly afterwards a Fox came up to him and said: "Ah, I knew you by your voice."
Fine clothes may disguise, but silly words will disclose a fool.
.
வீட்டுப்பாடம் இனிக்க பல யோசனைகளை தருவதற்கு முன் மாணவர்களை இரண்டாக பிரித்துக்கொள்வோம். மெதுவாக படிப்பவர்கள் (Slow Learners), வேகமாக படிப்பவர்கள் (Fast Learners).இவ்விருவர்களின் குணங்களை முதலில் தெரிந்துகொள்வோம்.
1. மெதுவாக படிப்பவர்கள் (Slow Learners)
இவர்களைப் பெற்றுவிட்ட பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதற்குள் வாழ்க்கையை வெறுப்பது உறுதி. பெரும்பாலான ஆண் குழந்தைகள் இந்த வகையை சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனப்பாடம் செய்வதைவிட புரிந்து படிப்பதையே விரும்புவார்கள். அதனால் படித்து முடிப்பதற்கு காலதாமதமாகும். இவர்களுக்கு கணிதம் நன்றாக வரும். ஓரிரு வார்த்தைகளில் படிக்கும் கோடிட்ட இடத்தை நிருப்புக, பொருத்துக, சரியா? தவறா? போன்றவற்றை சீக்கிரம், தெளிவாக புரிந்துகொண்டு சரியாக விடை அளிப்பார்கள். ஆனால் கேள்வி பதில்கள் பகுதி சீக்கிரம் படிக்க மாட்டார்கள். பின்னாளில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்கள் இவர்களே. இன்றைய கல்வி முறை இவர்களுக்கு எதிராக உள்ளது என்பதும் ஒரு கசப்பான உண்மை.
இவர்களுக்கு பாடம் சொல்லித் தருவது மிக கடினம். ஏனென்றால்
1. ஒரு பாடத்தை புரிந்துகொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். அது வரை சொல்லித்தரும் நமக்கு பொறுமை இருக்காது. அவர்கள் படிக்கும் வேகத்தை புரிந்துகொண்டு தேவையான கால அவகாசத்தை கொடுக்க வேண்டும். சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று அவசரப்படுத்தக்கூடாது.
2. நாம் 1 தடவைக்கு 2 தடவை சொல்லித் தந்தால் உடனே சரியாக சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் இக்குழந்தைகள் 1 தடவை 2 தடவைகளில் புரிந்துகொளவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. சில (சின்ன சின்ன) விசயங்களை முதல் தடவையிலேயே புரிந்துகொள்வார்கள். சில விசயங்களை அவர்களாகவே சிறிது காலதாமதத்திற்கு பிறகு அவர்களாகவே புரிந்துகொள்கிறார்கள். அது எப்போது எப்படி நிகழ்கிறது என்பது நமக்குத் தெரியாது.
3. புரியவில்லை என்பதற்காக நாம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொடுத்தாலும் போரடித்துவிடுகிறது. ஆகவே 2 முறைக்கு மேல் சொல்லிக்கொடுக்காமல் இருப்பதே நல்லது.
4. அதிக வீட்டுப்பாடங்கள் இருப்பதால் இவர்களால் முடிக்க முடியாமல் போகும். அல்லது ஒன்றையுமே தெரிந்துகொள்ளாமல் பெயருக்கு (Physically) முடித்து விடுவார்கள்.
உடலினை உறுதிசெய்
ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. அந்தக் காட்டுக்குள்ள ஒரு குகை. குகையின் உள்ளே சுருண்டபடி படுத்திருந்தது அந்த நரி.
குகைக்கு வெளியே வந்து நின்ற கரடி "நரியாரே! உமக்கு என்ன நேர்ந்தது! ஏன் குகையை விட்டு இரண்டு நாளாக வெளியேவரவில்லை" என்று சப்தமாக கேட்டது.
கரடி காட்டுக் கத்தலாக கத்தியும் குகையின் உள்ளே எந்த சப்தமும் இல்லாமல் இருக்கவே கரடி குகையின் உள்ளே சென்றது.
சுருண்டு படுத்திருந்த நரியைக் கண்டதும் நரியாரே உமக்கு என்னாயிற்று.. இப்போதும் உமக்கு உடல் நிலை சரியில்லையா? அடிக்கடி இப்படி சுருண்டு படுத்துக் கொள்கிறீரே என்று அன்போடு கேட்டது.
"கரடியாரே! நான் என்ன செய்வது? எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது. அதன் காரணமாக உடலும் சோர்வடைகிறது. நாட்பட நாட்பட என் உடலும் மெலிந்து கொண்டே போகிறது" என கவலையுடன் கூறியது.
அதனைக்கேட்ட கரடி நரியாரே நீர் இரை சாப்பிட்டு முடித்ததும் அப்படியே படுத்துக் தூங்கி விடுகிறீர் உமது உடலைவலுப்படுத்த நீர் துளியளவு மனதால் நினைக்க மாட்டீர் சாப்பிடுவதும் தூங்குவதுமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர். அதனால்தான் உமக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றது.
கரடியாரே என் உடல்நிலை இப்படியே இருந்தால் என்னால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டு உடல் பருமன் அதிகாரித்து படுத்த படுக்கையாகி விடுவேன். என் உடல் நிலை சீராக நீ எனக்கு உதவி செய்வாயா என்று கேட்டது நரி.
நரியாரே மெல்ல எழுந்து என்னோடு வாரும். நாம் இருவரும் சிறிது நேரம் உற்பயிற்சி செய்யலாம். என்றது கரடி.
நரியும், கரடியும் ஒரு மரக்கிளையின் அருகே வந்தன.
கரடி வேகமாக ஓட ஆரம்பித்தது. நரியும் பின்தொடர்ந்து வேகமாக ஓடியது. சிறிது தூரம் சென்றது கரடி. வேகமாக நடக்கத் தொடங்கியது அதனைத் தொடர்ந்து நரியும் வேகமாக நடக்கத் தொடங்கியது.
தன் உடலில் மெல்ல மெல்ல சிறுசிறு மாற்றம் ஏற்படுவதை நரி உணர்ந்தது.
அதே நேரம் கரடி நரியாரே உமது உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? ஏதோ உற்சாகம் நிரம்பியவர் போன்று காணப்படுகின்றீரே என்று கேட்டது.
ஆமாம் கரடியாரே எனக்கு உற்சாகமாகத்தான் இருக்கிறது. இதனைப் போன்று தினமும் உடற்பயிற்சி செய்தால் என் சோம்பல் எல்லாம் மறைந்துவிடும். என் உடலும் உறுதியாகிவிடும் என்றது நரி.
அன்று முதல் நரி தினமும் கரடியோடு சேர்த்து கொண்டு தன் உடலை உறுதியாக்கிக் கொண்டது.
நம் உடல் உறுதியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
.
வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கா? பெற்றோரகளுக்கா? என்கிற அளவுக்கு குழந்தைகளின் வீட்டுப்பாடம் குழந்தைகளுக்கு மட்டுமால்லாமல் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையாக உள்ளது. குழந்தை வளர்ப்பில் இது ஒரு பெரும் சவால் என்றே நினைக்கிறேன். (என் 6 வயது மகனுடன் நான் போராடி வருகிறேன்). இதைப் பற்றி அலசவே இந்தத் தொடர்.
வீட்டுப்பாடம் தேவையா?
வீட்டுப்பாடம் தேவையா?, வீட்டில் இவ்வளவு சொல்லித் தரவேண்டும் என்றால், பள்ளியில் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள், வீட்டிலும் படிப்பு பள்ளியிலும் படிப்பு என்றால் குழந்தை எப்பொழுதுதான் விளையாடுவது என்பது பல பெற்றோர்களின் புலம்பலாக உள்ளது. இக்கருத்து நமது வலையில் ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்டது. அதற்கு புதுகைத் தென்றல் அவர்கள்கூட “குழந்தைகள் கற்றலில் பாடங்களை மனதில் நிறுத்திக்கொள்ள அதிக revision தேவைப்படுகிறது அதனால் வீட்டுப்பாடம் தேவைதான்” என்று கூறியிருந்தார்கள்.
மேலும் சில காரணங்களை முன் மொழிய ஆசைப்படுகிறேன்.
1. நாம் பேசுவது ஒரு மொழி. ஆனால் நம் குழந்தைகள் படிப்பது ஒரு மொழி. இந்த இடைவெளியை போக்க, பாடத்தைப் புரிய வைக்க ஒவ்வொரு குழந்தையும் தனித்தனியாக கவனிக்கப்படவேண்டி இருக்கிறது. இதனை பள்ளியால் செய்ய இயலாது.
2. குழந்தைகள் விளையாடி கற்க நினைக்கும் வயதில், நாம் படித்து கற்க வற்புறுத்துகிறோம். இந்த முரண்பாட்டினால் கற்றல் கற்பித்தல் இரண்டுமே கடினமாகிறது.
3. பெரும்பாலும் ஆண் குழந்தைகள் புரிந்து படிப்பதையே விரும்புகின்றனர். (மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படும்)ஆனால் நமது கல்வி அதிகம் மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. ஆகையால் அதிக revision தேவைப்படுகிறது.
வீட்டுப்பாடம் சொல்லித்தருவதில் ஏன் சிக்கல்கள் எழுகின்றன, அதனை கையாளுவது எப்படி என கட்டுரை தொடரும்...
- விசயகுமார்

ஒற்றுமை வலிமையாம்
ஒரு ஊருல, வயலோரத்தில் அடர்ந்த புளிய மரம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த புளியமரத்தில் ஏராளமான கொக்குகள் வசித்து வந்தன.
அந்தக் கொக்குகள் பொறாமையின் காரணமாக தங்களுக்குள் "நீ பெரியவனா.. நான் பெரியவனா.." என்று போட்டியிட்டவாறு வாழ்ந்து கொண்டிருந்தன.
வரப்போரமாக நின்று கொண்டு தனித்தனியாகப் பிரிந்து தாங்கள் இரையை தேடி அலைந்தன.
ஒரு நாள் வேட்டைக்காரர் ஒருவர் அந்த புளியமரத்தின் பக்கமாக வந்தார். அவர் பார்வைக்கு கொக்குகள் எல்லாம் தெரிந்துவிட்டன. அதுவும் ஒவ்வொரு கொக்கும் தனித்தனியாக பிரிந்து சென்று இரை தேடிக் கொண்டிருப்பதையும் கண்டார். உடனே தன் வேட்டை துப்பாக்கியை எடுத்து தனித்தனியாக நின்று கொண்டிருக்கும் கொக்குகளை எல்லாம் சுட ஆரம்பித்தார்.
"ஆஹா.. இன்று எனக்கு நல்ல வேட்டைதான். இதோ மூன்று கொக்குகளை சுட்டு வீழ்த்தி விட்டேன். இனி நாளை வேட்டையாட வந்தால் போதும்" என்று மகிழ்ச்சியடைந்தார்.
மூன்று கொக்குகள் வேட்டைக்காரனின் துப்பாக்கிக்கு பலியாகி விட்டதை கண்ட புளிய மரம் மிகவும் வருந்தியது.
"இந்த கொக்குகளுக்கு ஒற்றுமையில்லாத காரணத்தால் இனிமேல் இந்த வேட்டைக்காரனுக்கு மிகவும் கொண்டாட்டமாகவே இருக்கும். தினமும் இங்கு வந்து இந்த கொக்குகளை எல்லாம் வேட்டையாட ஆரம்பித்துவிடுவான். நாம் அதற்கு முன்னர் இந்த கொக்குகளை ஒற்றுமையாக இருக்கும்படி செய்துவிட வேண்டும்" என்று எண்ணியது.
மாலை நேரத்தில் கொக்குகள் எல்லாம் இரை தேடி மு
டித்து விட்டு மரத்தில் வந்து தங்கத் தொடங்கின. அதுவரையிலும் கொக்குகளின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த புளியமரம், கொக்குகளைப் பார்த்து, புளியமரம் பேசியது.
"பறவையின நண்பர்களே நெடு நாட்களாக என் மனதில் இருந்து வந்ததை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் அதனை கவனமுடன் கேட்கின்றீர்களா?" என்று அன்போடு கேட்டது.
புளியமரம் அன்போடு பேசுவதை கண்டு கொக்குகளும் அதன் பேச்சை கேட்க வேண்டி ஆவலாயின.
"புளியமரமே! உனது கிளைகளில்தான் நாங்கள் எல்லோரும் கூடுகட்டி வசித்துக் கொண்டிருக்கிறோம். உன் நன்றியை மறக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாங்கள் உனது பேச்சைக் கேட்க மறுப்பு தெரிவிக்க மாட்டோம். எதுவாக இருந்தாலும் எங்களிடம் தாராளமாக கூறலாம்" என்றன.
"பறவையின நண்பர்களே! நீங்கள் ஒற்றுமையில்லாமல் ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டு வாழ்வதால் உங்களில் மூன்று பேர்கள் வேட்டைக்காரனின் துப்பாக்கிக்கு பலியாகி விட்டார்கள். இனிமேலும் நீங்கள் ஒற்றுமையில்லாமல் இருந்தால் வேட்டைக்காரருக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும். உங்கள் கூட்டத்தினர்கள் ஒவ்வொருவரையும் அவர் சுட்டு வீழ்த்திக் கொண்டேயிருப்பார். முடிவில் உங்கள் கூட்டத்தினர்கள் எல்லோருமே காலியாகிவிடுவீர்கள். இதனை நன்கு யோசித்து உங்கள் பொறாமை எண்ணத்தை கைவிட்டு ஒற்றுமையோடு வாழுங்கள்" என்று கூறியது.
மறுநாள் வேட்டைக்காரர் கையில் வேட்டை துப்பாக்கியுடன் புளியமரத்தின் அருகே வந்தார். வேட்டைக்காரர் எதிர்பாராத வண்ணம் புளிய மரத்திலிருந்து கொக்குகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக வேட்டைகாரரை நோக்கிப் பறந்தன.
அவரை சூழ்ந்து கொண்டு அவர் கையில் இருந்து வேட்டை துப்பாக்கியை கீழே தட்டிவிட்டு கைகளை பலமாக தம் அலகுகளால் கொத்த தொடங்கின. இன்னும் சில கொக்குகள் அவரின் முகத்தைப் பலமாக தாக்கத் தொடங்கின.
கொக்குகளின் கூட்டமான தாக்குதலுக்குப் பயந்துபோய் வேட்டைகாரர் ஓட்டமெடுத்தார்.
கொக்குகள் எல்லாம் ஒற்றுமையின் வலிமையை உணர்ந்தன. கொக்குள் எல்லாம் மனம் மாறியதைக் கண்டு புளியமரம் மகிழ்ச்சியடைந்தது.
ஒற்றுமையுடன் வாழ்வதால் எந்த தீமையும் நம்மை நெருங்காது.
=================================================================
குழந்தைகள் கற்றுக் கொள்ளும் புதிய வார்த்தைகள்:
வயல்
வரப்பு
கொக்கு
புளியமரம்
வேட்டைக்காரன்
துப்பாக்கி
ஒற்றுமை
கொத்துதல்
அலகு
எதிர்பாராதது
பொறாமை
=================================================================
குழந்தைகளுக்கான தமிழ் ரைம்ஸ் இங்கே தொகுத்துள்ளேன்.
அன்புடன்,
விதூஷ்
.

ஏறு போல் நட
குழந்தைகளா! ஒரு ஊருல, சலவைக்காரர் ஒருவருக்கு பொன்னி, செம்பி என்ற இரண்டு கழுதைகள் இருந்தன.பொன்னி சலவைக்காரர் இட்ட வேலைகளை எல்லாம் சரியாக செய்துவிடும். செம்பியோ சற்று முரட்டுத்தனம் காட்டும்.
ஒரு நாள் சலவைக்காரர் வழக்கத்துக்கு மாறாக அதிக துணிகளை சலவை செய்து காயவைத்து துணியெல்லாம் உலர்ந்த பின்னர் அதனை செம்பியின் முதுகிலும், பொன்னியின் முதுகிலும் ஏற்றி அவைகளை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பொன்னியும், செம்பியும் துணிமூட்டைகளை சுமந்தபடியே வந்து கொண்டிருந்தன.
அமைதியாக சென்று கொண்டிருந்த பொன்னியைப் பார்த்த செம்பி "இதோ பார் நாம் இப்படி கடினமாக வேலைசெய்ய வேண்டுமா?" என்று கேட்டது.
உடனே பொன்னி "இன்று உனக்கு என்ன நேர்ந்து விட்டது? எதனால் இப்படிப் பேசுகிறாய்?" என்று கேட்டது.
உடனே செம்பி "ஆமாம் நீ எப்போதுமே ஏதாவது கூறினால் ஏன் எதற்கு என்று கேட்டுக் கொண்டே இருப்பாய். நான் சொல்வதை கவனமாக கேள். எதற்காக நாம் இந்த சலவைக்காரருக்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். அதனால், இவர் முன்பு உடம்பில் வலு இல்லாதது போல் நம்மால் மூட்டையை சுமந்து செல்ல முடியாதது போல் நடிக்க வேண்டும். நம் நடிப்பை அவரும் உண்மை என்று நம்பி நம்மை துணி சுமக்க செய்யமாட்டார். இரக்கப்பட்டு நம்மை விட்டுவிடுவார்" என்று கூறியது.
செம்பியின் பேச்சைக் கேட்ட பொன்னி "இதோ பார் செம்பி உன் எண்ணத்தை மாற்றிக் கொள். துணி மூட்டைகளை சுமந்து செல்லும் ஆற்றல் உனக்கு ஏற்கனவே இருக்கிறது. எனவே அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு நம் சலவைக்காரருக்கு தகுந்தபடி நடந்துகொள். இப்படி கூனிக்குறுகி நடக்காதே. ஏறுபோல் நட. பொய்யுரைக்காதே. நடித்து ஏமாற்றாதே!" என்று கூறியது.
பொன்னியின் பேச்சைக் கேட்காத செம்பி தான் சுமந்து வந்த துணி மூட்டையை பொத்தென்று தரையில் போட்டது. துணி மூட்டை தரையில் விழுந்த வேகத்தில் சாக்கடைநீரில் உருண்டோடியது.
அந்த நேரம் கழுதைகளின் பின்னே வந்து கொண்டிருந்த சலவைக்காரர் இந்த காட்சியைப் பார்த்து விட்டார். வேகமாக ஓடிவந்து தனது துணி மூட்டைகளை எடுத்து அப்புறப்படுத்திவிட்டு, செம்பியை பலமாக தாக்கத் தொடங்கினார்.
செம்பியை சந்தைக்கு கொண்டு சென்று விற்றுவிட்டார்.
செம்பியை விலைக்கு வாங்கிய சலவைக்காரரோ அதற்கு சரியாக உணவு கொடுக்காமல் துன்புறுத்தினார்.
செம்பி பொன்னி கூறிய அறிவுரைகளை அப்போதுதான் உணரத் தொடங்கியது. ஏறுபோல் நட என்று பொன்னி கூறியதே அதன் பேச்சுப்படி நாம் நடந்திருந்தால் இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்காதே என்று நினைத்தது.
வாழ்க்கையில் எந்த துன்பங்களையும் தாங்கிக் கொண்டு, பொய்யுரைக்காமல் அடுத்தவரை ஏமாற்றாமல், ஏறுபோல் நடைபயணத்தை தொடர்ந்தால் வெற்றி உறுதி.
--மீண்டும் அடுத்த வாரம் பார்க்கலாமா!
.
பள்ளி செல்வதற்கு முன், பள்ளி செல்ல ஆரம்பித்த பின்
என பிள்ளையின் வளர்ச்சியை எடுத்து பார்த்தால்
கணிசமான வித்யாசம் தெரியும்.
பல நல்லவைகளையும், சில கெட்டவைகளையும்
கற்றுக்கொண்டிருப்பது புரியும். இது யார் சொல்லிக்
கொடுத்து வந்தது. சுற்றி இருப்பவர்கள்.
சமுதாயம் கற்றுத் தந்தது. அதனாலேயே
ஆரோக்கியமான சமுதாயத்தில் பிள்ளைகள்
வளர வேண்டும்.
இந்த மாற்றத்தை நாம் ஒன்றும் செய்ய இயலாது.
இது தன்னிச்சையாக நடப்பது.
அப்படி என்ன பெரிய்ய மாற்றம் வந்துவிடும்
என்று கேட்கிறீர்களா??
ஒரு உதாரணம் சொல்கிறேன்.
20 வயது பெண் தனது உறவினர் வீட்டில்
தங்கி மேல் படிப்பு படிக்க சென்றாள்.
அந்த வீட்டு பிள்ளைகள் 4,6 வகுப்பில்
படிப்பவர்கள். தன் தாய்க்கு உதவிக்கொண்டு,
தன் வேலையை தானே செய்து பழகிய
நல்ல குழந்தைகள். ஹாலில் டம்பளார் இருந்தால்
அதைக் கொண்டு வந்து சிங்கில் போட்டு வீட்டைச்
சுத்தமாக்க உதவும் இயல்பு, நல்ல விதமாக
பிள்ளைகளை வளர்த்திருந்தார் அந்தத் தாய்.
அந்தப் பெண் வந்து தங்கியது முதல் மாற்றங்கள்.
இந்தப்பிள்ளைகள் படிப்பில் மந்தகித்து, தன்
வேலையைக்கூட செய்யாமல் இருக்க குழம்பிய
தாய் யோசித்து பார்த்ததில் மேல் படிப்பு
படிக்கும் காரணத்தைக்காட்டி புதிதாக வந்திருக்கும்
20 வயது பெண் வீட்டில் உதவுவதே இல்லை.
அவரின் உடைகள் எல்லாம் அலங்கோலமாக
கிடக்கும், படிப்பும் சரியாக படிக்காமல் எந்த
நேரமும் மொபைலில் பாட்டு கேட்டுகொண்டிருப்பதை
பார்த்து பிள்ளைகள் மாறிவிட்டார்கள்.
மகனின் பள்ளியில் அழைத்து பிள்ளையின்
படிப்பு குறித்தும், நடவடிக்கை மாற்றம் குறித்து
பேசும் பொழுதுதான் நிலமையின் தீவிரம் உணர்ந்து
அந்தப் பெண்ணை ஹாஸ்டலில் சேர்க்க வைத்து
தன் மக்களின் மனமாற்றத்தை போக்க வெகு
காலம் எடுத்தது!!!!
வீட்டை விட்டு வெளியே சென்று பலதரப்பட்ட
மக்களுடன் பள்ளியில் பழகித்தான் ஆகவேண்டும்.
என் மகன் கெட்டுவிடுவான் என நினைத்து
வீட்டுக்குள் முடக்கி வைக்க முடியாது.
என்ன தான் செய்வது??
அன்னை தெரசாவிடம் 4 மாணவர்கள் சென்று
தாங்களும் சேவை செய்ய விரும்புவதாகச் சொன்னார்களாம்.
ஏன் என்று கேட்க, “அவர்களுக்கு உதவ, அன்பு காட்ட”
என்றார்களாம்.
“உடனே அன்னை! அன்பு விதைப்பதை உன் வீட்டிலிருந்து
தொடங்கு!” என்று அனுப்பி வைத்தாராம்.
நாமும் நம் குழந்தைகளுக்கு நற்பண்பு, அன்பு ஆகியவற்றை
வீட்டில் விதைத்த அன்பு,நற்பண்புகள் வீதி முழுதும் விளைந்து,
ஏரியா, ஊர், மாநிலம், தேசம் என விரிந்தால் நல்லதொரு
சமுதாயம் அமையும். அப்படி பட்ட சமுதாயத்தில் வாழும்
பிள்ளைகள் நல்ல குடிமகன்களாக, சிறந்த பண்புடையவர்களாக
வளர்வார்கள்.
ஆரோக்கியமான,அழகான சமுதாயத்தை உருவாக்குவோம் வாருங்கள்.
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்?
- கதை சொல்வதன் மூலம் தாய்/தந்தை குழந்தையோடு நேரம் (quality time) செலவிட முடிகிறது.
- அவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது.
- குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது.
- அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.
- உரையாடுவது / அவர்களை பேசவைப்பது / கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான discussions-களுக்கு வழிவகுக்கும்.
- பழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம்.
- தாத்தா, பாட்டி போன்றவர்கள் மூலம் கதை கேட்கும் போது, அவர்களும்
குழந்தைகளுக்கும் அன்னியோன்யம் ஏற்படுகிறது. - கற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- உங்கள் குழந்தை மனம் துவண்டு, தோல்வி அடைந்து இருக்கும் நேரத்தில், ஒரு பெற்றோராக நீங்கள் கூறும் அறிவுரைகள்/ஊக்க வார்த்தைகளை விட, ஒரு நல்ல (அச்சூழ்நிலைகேற்ற ) கதை அவர்கள் மனதை உற்சாகப் படுத்தும். தாய் -தந்தை / தாத்தா பாட்டியும் இதே மாதிரி ஒரு நிலையை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு/நம்பி, ஊக்கம் அடைவார்கள். (டிவி சீரியலில் கேட்பது போல "எனக்கு மட்டும் ஏன் இப்படி?" என்று மனம் இழக்க மாட்டார்கள் :))
- டிவி மற்றும் மீடியா தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில், பெற்றோருடன் பேசுவது / அல்லது குழந்தையோடு பெற்றோர் பேசுவது என்பதே குறைந்து வருகிறது. கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிரவும், அதை அறிந்து, குழந்தையும் தன் குழந்தைப் பருவத்து தருணங்களை நினைத்து பெருமை கொள்ளக் கூடும்.
- கதை சொல்வதன் மூலம் நீங்கள் எதையெல்லாம் பெருமையாக நினைக்கிறீர்கள் என்பதையும் ஊடகமாக தெரிவிக்க முடியும். இதனால், நீங்கள் பெருமைப் படும் / மகிழும் வேலைகளை செய்யவே குழந்தைகள் முற்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட வயது வரை (பத்து வயது வரை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்), தாய் தந்தையரை மகிழ்விக்க வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவதால், அவர்களை நல்வழிப் படுத்தும் வாய்ப்பாக கதை சொல்லுதல் அமையும்.

- குழந்தைக்கு படுக்கை நேர கதைகள் (bed-time stories) இனிமையானவற்றை சொல்வதனால், அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
- உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.
- கதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள் (modulation), முக பாவங்கள் (facial expressions), மற்றும் செய்கை / நடிப்பு (action) என்று சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள்.
=======================================================================
அதே போல குழந்தைகளையும் உங்களுக்கு கதை சொல்லச் சொல்லி, பொறுமையாய் கேளுங்கள்.

- அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். (presentation skills)
- தன்னம்பிக்கை வளரும்.
- உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும்.
- creativity, inventive thinking மற்றும் imagination வளரும்.
- குழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும்.
====================================================
என் பெண் மூன்று வயதிருக்கும் போது, கிட்டத் தட்ட அவள் வயதுக்குரிய எல்லா கதையும் தீர்ந்து போய் விட்டது. அன்று greedy farmer and the duck which laid the golden egg, என்ற கதை சொல்லிக்கொண்டிருந்தேன். கதையைக் கேட்டு "வாத்து பாவம் இல்ல" என்று அழுதே விட்டாள் குழந்தை. அப்போது, அவளை சமாதானப் படுத்த, கற்பனையாக நானே எடுத்துவிட்ட கதை.
மழை வந்த கதை
(என் பெண் தர்ஷிணிக்காக நான் எழுதியது)
வாத்து ஒன்று குளத்திலே நீந்தி நீந்தி சென்றதாம்.

வாத்து மாடு கிட்ட போய்

`மாடே மாடே எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்’ அப்படீன்னு கேட்டுதாம்
மாடு அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த மரத்து கிட்ட
போய் கேளு’ அப்படீன்னு சொல்லித்தாம்
வாத்து மரத்துக்கிட்ட போய்`மரமே மரமே மாடு சொல்லிச்சு
எல்லாத் தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்’ அப்படீன்னு கேட்டுதாம்
மாடு அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த கடல் கிட்ட
போய் கேளு' அப்படீன்னு சொல்லித்தாம்
வாத்து கடல் கிட்ட போய்

`கடலே கடலே மரம் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்’ அப்படீன்னு கேட்டுதாம்
கடல் அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த சூரியன் கிட்ட
போய் கேளு’ அப்படீன்னு சொல்லித்தாம்
வாத்து சூரியன் கிட்ட போய்

` சூரியன் சூரியன், கடல் சொல்லித்து, மரமும் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்’ அப்படீன்னு கேட்டுதாம்
சூரியன் அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த மேகத்துக்கிட்ட
போய் கேளு’ அப்படீன்னு சொல்லித்தாம்
வாத்து மேகத்துக்கிட்ட போய்
` மேகம் மேகம் சூரியன் சொல்லித்து, கடல் சொல்லித்து, மரமும் சொல்லித்துஎல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்’ அப்படீன்னு கேட்டுதாம்
மேகம் அதுக்கு `அப்படியா? இதோ இப்பவே மழையை தரேன் ’ அப்படீன்னு சொல்லித்தாம்.
மழை சோவெனப் பெய்தது. குளம் நிரம்பி, மாடு நனைந்து, மரம் எல்லாம் நனைந்து, கடலும் நிரம்பி, சூரியன் அந்த கடல் நீரை ஆவியாக்கி, மேகமாக ஆக்கியது. மீண்டும் மழை சோவெனப் பெய்தது. அந்த மகிழ்ச்சியுடன் நீந்திச் சென்றது..
.
இந்தக் கட்டுரை, என் அம்மா, பாட்டி போன்றவர் கூறியதை எல்லாம் குறித்து வைத்து கொண்டு, பின்பற்றிய என் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும் எழுதப்பட்டது. இதில் ஏதும் தவறு / சந்தேகம் / improvements / suggestions இருந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
குழந்தையின் மூன்றாம் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதத்திருக்கும் உண்டான குறிப்புக்களை தருகிறேன். இன்று ஒன்று முதல் ஆறு மாதம் வரையான பேணும் முறைகள். இது ஓரளவுக்கு guideline என்றே எடுத்துக்கொள்ளவும்.
அந்தந்த ஊரின் தட்பவெட்பம், மற்றும் குழந்தையின் உடல் நலம், தாயின் instinct (உள்ளுணர்வு) போன்றவை குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
==============================
மூன்று மாதம் முதல் ஐந்து வயது வரை, குழந்தை சரியான ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் பெறுமாறு கவனித்துப் பேணுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகிறது. இதனால் குழந்தை சரியான படி வளர்ந்து, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதில்தானே நமக்கும் peace of mind கிடைக்கிறது. குழந்தைகள் அதிகம் நோயுராமல் இருந்தாலே அவர்கள் நன்கு வளர்வார்கள்.
அதற்காக ஜுரம், ஜலதோஷம் கூட வராமலோ, பல் முளைக்கும் போது dysentry ஆவதையோ நம்மால் தடுக்க முடியாது. அது இயற்கை. இதனால் நோய் எதிர்ப்பு குழந்தையின் உடலில் அதிகரிக்கும். குழந்தைக்கு இந்தமாதிரி நேரங்களில் உடனடியாக உங்கள் குழந்தை மருத்துவரின் ஆலோசனைக்கு தக்கவாறு மருத்துவம் கொடுத்தால், மீண்டும் பழையபடி ஆரோக்கியம் அடைவார்கள்.
ஆறு மாதம் வரை போட்டால் போட்டபடியே கிடக்கிறதே குழந்தை என்று அலட்சியமாக நினைக்க முடியாது. அதே போல குழந்தைதானே என்று நினைத்து, ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு முன் இஷ்டப்படி நடந்து கொள்வது அதன் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம்.
குடும்ப சூழ்நிலை, தாயின் மனநிலை முதல் தட்பவெட்பம் வரை ஒவ்வொரு விஷயமும் குழந்தை தாயின் வயிற்றில் உருவானதிலிருந்து ஒவ்வொரு நிலையிலும், குழந்தைகளைப் பாதிக்கிறது. இதற்கு தீர்வுல்கள் பலவாக இருந்தாலும், இன்று மிகக் குறைவான செலவிலேயே, சாதாரண இந்திய குடும்பத்தில் வழக்கமாக இருக்கும் உணவுப் பழக்கங்களை பின்பற்றியே, அதை ஒழுங்கு செய்வதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியத்தை எப்படிப் பேணுவது என்பதைப் பார்க்கலாம்.
====================================
பிறந்த / கைக் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து அளிப்பது எப்படி?
- தாய்ப்பால் மிக அவசியம். பிறந்த அன்றிலிருந்து குறைந்த பட்சம் ஒரு வயது வரை, முடிந்தால் இரண்டு வயது வரைக் கொடுப்பதால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திஅதிகமாகிறது. ஆரோக்கியம் நிறைந்த குழந்தையாக இருக்கிறது. பாலூட்டும் தாய், ஆரோக்கியமான உணவு உட்கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரை, பூண்டு, மீன், கோதுமை அடிப்படையிலான உணவுகள், பால், தயிர், மோர் ஆகியவற்றை உண்பதால்அதிகம் பால் சுரக்கும். அரிசி, வாயு உண்டாகும், காய்கறிகள் (உருளை, சேனை போன்ற) மொச்சை, பயறு, பருப்பு வகைகள், கொண்டைக் கடலை போன்றவற்றையும், ஊறுகாய், உப்புகரிக்கும் பண்டங்கள் சாப்பிடாமல் இருப்பதாலும் பால் வற்றாமல் இருக்கும். பாலூட்டும்தாய் காரமான மற்றும் மாமிச வகை உணவுகள் அல்லது வாயு பதார்த்தங்களைசாப்பிடுவதால் குழந்தைக்கு ஆஸ்துமா, ஜலதோசம் போன்றவை ஏற்படுகிறது. குழந்தைக்குஜெரிக்கும் சக்தி (செரிமானம்) குறைந்து நாக்கு வெள்ளை படிந்து, மலஜலம் கழிப்பதிலும்அசௌகரியம் ஏற்படுகிறது. சரியான உணவு உண்பதால், தாயும் உடல் எடை அதிகரிக்காமல்பார்த்துக் கொள்ள முடியும். குழந்தைக்கு பத்து வயது வரை, செரிமானம் மற்றும் மல-ஜலம்கழிக்கும் பழக்கங்கள் சீராக இருந்தாலே, நோய் ஏற்படாமல் காக்க முடியும். "யாகாவாரயினும் நா காக்க" என்பது உணவு பழக்கத்திற்கும் பொருந்தும்.
- குழந்தையை காலை ஆறு மணி முதல் ஒன்பது மணிக்குள், காலை வெய்யில் படுமாறு ஒரு அரை மணிநேரம் கிடத்தி வைக்கவும். அப்படி போடும் போது, உடம்பில் டாபர் லால் தேல் அல்லது ஆலிவ் / கடுகு / நல்லெண்ணெய் தடவி, தலை உச்சியிலும் தொப்புளிலும், பிறப்புறுப்பிலும் சிறிது விளக்கெண்ணை தடவி (சும்மா தொட்டு தடவினால் போதுமானது) நல்ல துவைத்த காட்டன் வேஷ்டி அல்லது மல் துணியை கீழே போட்டு அதன் மேல் போடவும். வெறும் தரையில் யாருமே படுக்கக் கூடாது. வெய்யிலில் இருப்பதால் வைட்டமின் டி கிடைக்கிறது. (குளிர் நாட்களிலும், மழை நாட்களிலும் விளக்கெண்ணை உபயோகிக்க வேண்டாம்).
- குழந்தைக்கு
nappy (huggies போன்றவை) உபயோகப்படுத்தினால், இரவில் மட்டுமேஉபயோகிக்கவும். குளிப்பாட்டிய பின் சிறிது நேரம் மல் துணியால் ஆனஜட்டி உபயோகிக்கவும். அல்லது இப்படத்தில் கொடுத்த படி தைத்துவைத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும். இதனால் nappy rash வருவதை தவிர்க்கலாம்.
- தினமும் குழந்தையைக் குளிப்பாட்டவும். குளிப்பாட்டிய உடனேயே நன்குநெஞ்சு/முதுகுபகுதிகளை உடனே துடைக்கவும். எப்போதும், முகத்திலும் தொப்புள் மற்றும்பிறப்புறுப்புப்பகுதிகளில் talcum powder போட வேண்டாம். அவசியம் என்றால் மட்டும், சிறிதுவிரலில்தொட்டு முகத்தில் தடவி விடவும். இதனால் சுவாசக் குழாயில் பவுடர் போவது தவிர்க்கலாம். சாயந்திர நேரங்களில் நல்ல சுத்தமான டர்கீ டவலை மிதமான வெந்நீரில் நனைத்துப் பிழிந்து உடலை நன்கு துடைத்து விடுங்கள்.
பொறுமை இல்லாத தாய்மார்கள் / creche / care takers / ஆயாக்களுக்கு - யாரும்தான் இப்போ பக்கத்தில இல்லையே.யாருக்குத் தெரியப் போகிறது என்று உங்கள் அலட்சியம், உங்களுக்கு சம்பளம் ஈட்டும் தொழிலுக்கு வஞ்சனை மட்டும் இல்லை, ஒரு குழந்தையின் அன்பையும், எதிர்காலத்தையும் shatter செய்து பார்க்கிறீர்கள். இதனால் இழப்பு கடைசியில் உங்களுக்குத்தான் என்பதையும் உணர்ந்து, குழந்தைக்காக செய்யும் சிறிய வேலையையும் முழு ஈடுபாடோடு செய்தால், நீங்கள் குழந்தையோடு அதிகம் போராட வேண்டியிருக்காது.
-----வித்யா
.



