நாளின் முதல் உணவாகிய காலை உணவு எவ்வளவு
அவசியம் என்பது சொல்லத்த் தேவையில்லை.
இருந்தாலும் ஒரு ஞாபகத்திற்காக இங்கே.
ஆகவே பிள்ளைகளை வெறும் வயிற்றோடு பள்ளிக்கு
அனுப்பாதீர்கள். (நாங்க எங்க அனுப்பரோம். அவங்கதான்
சாப்பிடறதில்லைன்னு சொல்வது காதுல விழுது)
நான் பற்றும் முறை உங்களுக்கு சரிவருமா என்று
பாருங்கள். இதோ தருகிறேன்:
இரவு 9 மணிக்கு பிள்ளைகள் தூங்கப் போயிவிடவேண்டும்.
(நானும் தூங்கிவீடுவேன்.) அப்போதுதான் காலையில்
எழுவது ஒரு பெரிய எபிசோட் டிராமாவாக இராது.
காலையில் எழுந்ததும், பல்துலக்கியு உடன் பால்
அருந்தாமல், ஒரு டம்பளர் தண்ணீர் குடித்து, சின்ன
உடற்பயிற்சி ( 5 நிமிஷம் தான். யோகா மாதிரி)
செய்வார்கள். இதனால் "காலைக்கடன்கள்"
ஒழுங்காக முடிந்து, குளித்து காலை உணவு
(2 இட்லியாவது) சாப்பிட்ட உடன், பாலைக் குடித்து
செல்வார்கள். வயிறும் நிறைந்திருக்கும்.
பள்ளி சென்றபின் வயிறு உபாதை பிரச்சனனயும்
இல்லை.
சரி இப்போ உணவு என்னன்னு பார்ப்போம்:
ஆபாத்பாந்தவன், அனாத ரட்ச்கன் என்று கொண்டாடப்
படும் இட்லி மாவை வைத்து என்ன செய்யலாம்? (இட்லி
மாவை வைத்து இட்லிதான் சுடுவாங்கன்னு கடிக்காதீங்க :) )
இட்லி இது சில பிள்ளைகளுக்கு பிடிக்காது. கொடுக்கும்
விதத்தில் கொடுத்தால் விரும்மி சாப்பிடுவார்கள். இனி
உங்கள் வீட்டில் இட்லி வேண்டாம் என்று யாரும் சொல்ல
மாட்டார்கள். ரெசிபிக்கு போகலாம்.
1. குட்லி:
பட்டன் இட்லி/14 இட்லி எனப்படும் இட்லிதான். அந்த
சின்ன இட்லி பிளேட்டில் இட்லி செய்து கொள்ளுங்கள்.
சாம்பார் செய்து, அதைக் குட்டி இட்லியின் மேல் ஊற்றி
(விரும்பினால் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து) 1 ஸ்பூனையும்
வைத்து அனுப்புங்கள்.
2. இட்லி மஞ்சூரியன்:
பட்டன் இட்லி அல்லது சாதாரண இட்லி தட்டில் செய்த
இட்லியாக இருந்தால் 4 ஆக வெட்டிக்கொள்ளவும் .
பட்டர் கொஞ்சம். பாஸ்தா சாஸ் (மெக்ரோணி சாஸ் என்றும்
சொல்வார்கள். இதில் சிக்கன் ஸ்டாக் சேர்த்ததும்
கிடைக்கும்)
வாணலியில் பட்டர் போட்டு உறுகியதும், இட்லி
துண்டுகளைப் போட்டு வறுக்கவும். தேவையான
அளவு பாஸ்தா சாஸ் சேர்த்து கிளறி இரக்கி,
கொத்துமல்லி தழை தூவினால் இட்லி
மஞ்சூரியன் ரெடி.
3. இட்லி ஃப்ரை:
இட்லியை வெட்டி, பட்டர் சேர்த்து வறுத்து,
மேலே இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்து
பிரட்டினால் ஃப்ரை ரெடி.
விரூம்பும் பிள்ளைகளுக்கு மேலே
கெட்டித்தயிர் விட்டு அனுப்பலாம்.
4. இட்லி காய்கறி உருண்டை:
வேகவைத்த இட்லி - 4, கேரட்- துருவியது கொஞ்சம்,
கோஸ், பொடியாக அரிந்தது, வெங்காயம்- பொடியாக
நறுக்கியது, உப்பு, ப.மிளகாய் தேவைக்கேற்ப.
செய்முறை: இட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய்
வெங்காயம் வதக்கவும், பிறகு காய்கறிகள் சேர்த்து வதக்கி
உதிர்த்த இட்லி, உப்புசேர்த்து வதக்கி இரக்கவும்.
இதை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி
டப்பாவில் வைத்து அனுப்பினால் மிச்சம் வைக்காமல்
சாப்பிடுவார்கள்.
5. இட்லி உசிலி:
டலைப் பருப்பு, கறிவேப்பிலை, கடுகு தாளித்து,
மிளகாய், வெங்காயம் வதக்கி அதில் உதிர்த்த
இட்லி சேர்த்து உருண்டை பிடித்து செய்யலாம்.
துருவிய சீஸை சேர்க்கலாம்.
6. இட்லி Finger chips:
இட்லியை நீளவாக்கில் நறுக்கி எண்ணையில்
பொரித்து, டிஷ்யூ பேபரில் வைக்கவும். ஆறியதும்
எடுத்து மேலே மிளகு/சீரகத்தூள் உப்பு சேர்த்து
கொடுக்கலாம்.
7. ஸ்டஃப்டு இட்லி:
இட்லி உருண்டைக்கு சொன்னது போல் காய்கறிகளை
கல்நது, இட்லி அவிக்கும் போது நடுவில் வைத்து
அவித்தால் இட்லி ரெடி.
8. மசாலா இட்லி:
பட்டரில் வெட்டிய இட்லி சேர்த்து வதக்கி,
மேலே கரம் மசாலா, உப்பு சேர்த்து பிரட்டினால் ரெடி.
விரும்பினால் மேலே கெட்டித்தயிரும், வெங்காயமும்
சேர்க்கலாம்.
பிள்ளைங்க சாப்பிட என்னென்ன செய்ய வேண்டியது
இருக்கு என்று சொல்கிறீர்களா?ஆமாம் என்ன
செய்வது. நோகாமல் நோன்பு கும்பிட முடியாதே?!!!!!!
மேலும் சில ரெசிப்புக்களோடு சந்திக்கிறேன்.
அன்புடன்,
புதுகைத்தென்றல்
இங்க நாம ஒரு ஆரோக்கியமான விவாதம் நடத்தபோறோம்.
ஒரு பெற்றோரா நாம ஆசிரீயர்கள்யிடம் என்ன எதிர் பார்க்கிறோம்?
ஆப்ரகாம் லிங்கனின் இந்தக் கடிதம் போலா?
நாம் என்னென்ன சொல்லிக்கொடுக்க வேண்டும்?
ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கூட்டு முயற்சியால் தான் குழந்தை சாதிக்க முடியும் என்பதை ஒத்துக்கொள்வீர்களா?
40 மாணவர்ளுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதம் இருக்கும் பொழுது,அவர்களால் என்ன செய்ய முடியும்?
போனற பல விடயங்களை நமக்குள்ளே பேசி அறிந்து கொள்ளலாமே!!!!
இது யாரையும் குறை சொல்வதற்காக அல்ல. அறிதலுக்காக மட்டுமே.
வாருங்கள். தங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
"ஏண்டி உன் பையனைக் கூட்டிட்டு வரலே கல்யாணத்துக்கு? நான் பாத்து எவ்ள நாளாச்சு?"
"அவனுக்கு யூனிட் எக்ஸாம் நடக்குது..லீவு போட முடியல.."
(பையன் படிப்பது 1ம் கிளாஸ்)
"ஜுரமாவது ஒண்ணாவது...ஸ்கூல் மட்டம் போடக்கூடாது..போய்த்தான் ஆகணும்.." (பையனுக்கு உண்மையிலேயே ஜுரம்.)
"23.75 தான் வாங்கிருக்க..மீதி 1.25 மார்க் எங்கே போச்சு? சதீஷ் பாத்தியாடா? எப்படி 100 வாங்குகிறான் எப்போதும்?
"படம் வரைஞ்சே பொழுது போக்கு..படிக்காத..இதுல ட்ராயிங் க்ளாஸ் வேற கேக்குது..இப்ப இருக்குற பாடம் படிக்கவே நேரம் பத்தல்..இதுல வேற வகுப்பு வேறயா?"
இப்படி படிப்பு படிப்பு படிப்பு என்ற போராட்டத்தில் எத்தனை விஷயங்களைக் குழந்தைகள் இழக்கின்றனர்? வருடத்தில் வரும் அத்தனை விசேட கரியங்களுக்கும் போக முடியாதுதான்..ஆனால் முக்கியமான வைபவங்களில் குழந்தைகளும் கலந்துகொள்ள வேண்டியவர்கள்தானே?
ஜுரம் என்று சாக்குப் போக்கு சொல்லாமல் நிஜமாகவே ஜுரம் இருக்கும் போது கூடக் குழந்தை வகுப்பில் சாதாரணமாக வரும் தேர்வு கூட எழுதியே ஆக வேண்டும் என்று வீண் பிடிவாதம் பிடிக்கும் பெற்றோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
0.01 குறைந்த மதிப்பெண் சதவிகிதம்- இதற்காகக் கூடக் குழந்தையைப் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டினால்..குழந்தை மதிப்பெண் எடுத்துக் காண்பிப்பான்..ஆனால் அவன் மனம் காலப் போக்கில் சிதைந்துவிடும். அடுத்த குழந்தைகளுடனும் தேவையற்ற ஒப்புமைகள் செய்வதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
படிப்பு சாராத ஏதவது ஒரு துறையில் தனித்திறமை ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கும். அதைக் கண்டறிந்து தட்டிக் கொடுத்து, அந்தத் துறையில் அவர்தம் திறமையை வளர்க்கும் வாய்ப்புகளைப் பெற்றோர்தானே ஏற்படுத்தித் தர வேண்டும்?
படிப்பு என்பது மட்டுமே வாழ்க்கையல்ல..தவிரவும் எல்லாக் குழந்தைகளும் முதல் இடம் பெற முடியுமா என்ன? குழந்தைகளின் படிக்கும் திறனின் அளவுகோல் பெற்றோர் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
படிப்புக்காகக் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான முக்கியத்துவம் குழந்தைகளின் நியாயமான உரிமைகளைப் பறிக்கும் விதம் அமைதல் கூடாது.
இவற்றையெல்லாம் வெறும் இலட்சிய குறிக்கோள்களாகக் கொள்ளமால் நாம் தொடர்ந்து நம் தினசரி நடவடிக்கைகளில் கைகொள்வோமானால் ஒரு நல்ல குடிமகனை/மகளை உருவாக்க முடியும்.
1. குழந்தைகளோடு நாம் பழகும்போது நம் ஒவ்வொரு வெளிப்பாடும் அவர்களால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும். பிரிதொரு சமயம் அவர்களும் அதையொத்த சூழ்நிலை உருவாகும்போது அதை மீள் பாவனை செய்ய முற்படுவர். அதற்காக புறச்சூழலில் நாம் எத்தனையோ நிகழ்வுகளைத் தாண்டிவரும் போது நாம் எப்பொழுதும் ஒரு ஆதர்சமான நடவடிக்கைகளையே மேற்கொள்ளுவதும் சாத்தியமில்லை. அது போன்ற சமயங்களில் நாம் நம் குழந்தைகளிடம் மிகவும் உண்மையாக அவர்களுக்கு ஒரு பெரியவர்களுக்குரிய (நாம் மிகவும் மதிப்பவர்களில் ஒருவராகக் கொண்டு) மரியாதை கொடுத்து, அந்த சூழலின் ஆதர்சமான எதிர்விளைவுகள் எவ்வாறு இருந்திருக்கும் என்றும் நாம் எதற்காக இப்படி எதிர்வினையாற்றினோம் என்றும் விளக்க முற்படுவோமேயானால் அவர்களிடத்து ஒரு மிகப்பெரும் புரிதலும் நிகழ்வுகளை சீர்தூக்கிப்பார்க்கும் மனப்பக்குவமும் உண்டாகும். இது போன்ற நடவடிக்கைகள் இருவருக்கும் உண்டான நெருக்கத்தை அதிகரிக்கும்.
२. கணவன் மனைவி இருவருமே தனித்தனியாக குழந்தைகளோடு சிறிது நேரமாயினும் செலவிடவேண்டும். அது எங்காவது சிறிய கடைகளுக்குச் செல்லும் நேரமாகக் கூட இருக்கலாம். அப்போது அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்து நாம் மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது குறிப்பிட்டு பேச முயலவேண்டும் அது நாம் அவர்கள் பேச்சிற்கு அளிக்கும் மரியாதையையும், அவர்கள் பேச தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் குறித்தான விழிப்புணர்வையும் தோற்றுவிக்கும்.
சிறு துளி பெறுவெள்ளம் தானே.. ஒவ்வொரு வீடும் தலைப்பட்டால் ஒரு மிகச்சிறந்த இளைய சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகள் நாமாகலாம். இன்னும் தொடரும்….
ஏன் இந்த வெறுப்பு?
சில குழந்தைகள் குறிப்பிட்ட சில உணவுவகைகளைத் தவிர்த்து, வேறு எதையும் திரும்பிப் பார்க்க கூட மாட்டார்கள். இது குழந்தையின் தவறல்ல.
வீட்டில் பெரியவர்கள் பிடிக்காது என்று ஒதுக்கும், பல விஷயங்களைப் பார்த்து தானும், அவ்வாறே செய்ய முயலுகிறது.
கஷ்டப்பட்டு சமைத்து அனுப்புவதை கொட்டிவிட்டும் பிள்ளைகள், நமக்குத் தெரியாமல் தேய்க்கப்போடும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
குழந்தைகள் ஒரே மாதிரியான உணவை வெறுக்கிறார்கள்.
நான் மாண்டிசோரி ஆசிரியையாக பணிபுரிந்த போது, எனக்கு மிகவும் கடினமான பீரியடாக நான் நினைத்து, "பிரேக் டயம்" தான்.
தினமும் "சால்ட் பிஸ்கெட்" மாத்திரமே கொண்டுவரும் பையனனப் பார்க்க பாவமாய் இருக்கும். வேறொரு குழந்தை தினமும் "ப்ரெட் ஸ்ப்ரெட்" தடவிய ரொட்டித்துண்டுகள். வெரைட்டியாக இருக்கட்டும் என்று கடையிலிருந்து பன், பேட்டீஸ் கொண்டுவரும் குழந்தைகளூம் சரியாக சாப்பிட மாட்டார்கள். அடுத்த குழந்தையின் டப்பாவை
ஏக்கமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
காலையிலும் ஒன்றும் உண்ணாமல், வீடு போகும்வரை வெறும் வயிற்றோடு இருக்கும் அவர்களைப் பார்க்கும்போது பரிதாபப் படத்தான் முடியும்.
"என் மகன் சாப்பிடுவதே இல்லை , கொஞ்சம் பாருங்கள்", என்று என்னிடம் குறை கூறுவார்கள் பெற்றோர்.
விதம் விதமாக, மாறுபட்ட உணவைத் தான் பிள்ளைகள் விரும்புகிறார்கள். உங்களுக்கு உதவ சில உணவுவகைகள்.
(இவை காலை உணவாகவும் கொடுக்கலாம், டிபன் பாக்சிலும்
வைத்து அனுப்பலாம்)
முதலில் ஈசி உணவாகிய பிரெட் வகைகளைப் பார்ப்போம்.
1. பிரெட் மசாலா:
தேவையானவை: சான்ட்விச் பிரெட்- 4, தக்காளி-2, வெங்காயம்-2,
ப.மிளகாய-1 கொத்தமல்லி இழை-கொஞ்சம்.
செய்முறை :- பிரெட் தவிர மீதி அனனத்தையும், நன்கு பேஸ்டாக
அரைத்துக் கொள்ளவும், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
வாணலியில் முதலில் பட்டர் கொஞ்சம் போட்டு,
அதன் மேல் அரைத்த மசாலா பேஸ்ட் தடவிய பக்கத்தை
முதலில் வைத்து, பிறகு மெல்ல திருப்பி டோஸ்ட் செய்தால்
மசாலா டோஸ்ட் ரெடி.
2. பிரட் சீஸ் டோஸ்ட். (சீஸில் பிள்ளைகளுக்குத் தேவையான
பாலின் சத்து முழுதும் கிடைக்கிறது)
சீஸைத் துருவி வைத்துக் கொள்ளவும். பிரட்டில் பட்டர்
தடவி, அதில் கொஞ்சம், டொமேடோ சாஸ், (விரும்பினால்
சில்லி சாஸ் கொஞ்சம்) சீஸ் வைத்து மற்றொரு பிரட்டால்
மூடி டோஸ்டரிலோ/தோசைக்கல்லிலோ வைத்து
டோஸ்ட் செய்தால் பிரட் சீஸ் டோஸ்ட் ரெடி.
3. பாவ் மசாலா:
சாண்ட்விச் பிரெட் அல்லது வடா பாவ் பிரெடில் பட்டர்
தடவி, கரம் மசாலா பவுடர் கொஞ்சம் சேர்த்து தோசைக்கல்லில் டோஸ்ட் செய்ததால் பாவ் மசாலா/ மசாலா பால் (Masala ball) ரெடி.
4. 2பிரெட்டை ஒரு புறம் பட்டர் தடவி, தோசைக்கல்லில் கிரிஸ்பாக டோஸ்ட் செய்து கொள்ளவும். தக்காளி, வெள்ளரிக்காயை
வட்டமாக வெட்டி, அதன் நடுவில் வைத்து, மேலே சீரகம், மிளகுத்தூள் கொஞ்ச்மாகத் தூவி இன்னொரு பிரட்டால் மூடினால் சாண்ட்விச் டோஸ்ட் ரெடி.
5. உருளைக் கிழங்கு கறி செய்து அதை பிரட்டின் நடுவில் வைத்து டோஸ்ட் செய்து கொடுக்கலாம்.
6 கேரட், கோஸ், வெங்காயம் ஆகியவற்றை வதக்கி, அதை பிரட்டின் நடுவில் வைத்து டோஸ்ட் செய்யலாம்.
7. முட்டையை அடித்து அதில் மிளகுத்தூள்,உப்பு, சேர்த்து, அந்தக்கலவையில் பிரெட்டை நனைத்து பட்டர் சேர்த்த தவாவில் பிரை செய்து "பாம்பே டோஸ்டாக" கொடுக்கலாம்.
தொடரும்....
அன்புடன்,
புதுகைத் தென்றல்
பிறந்த குழந்தை பேசமுடியாது, அசைய முடியாது, தன்நிலையை எடுத்துச் சொல்ல முடியாது என்பதாலேயே பசிக்குப் பால கொடுத்தால் போதும்,
தூங்கிவிடும் குழந்தை என்ற மனநிலைதான் அனைவருக்கும்.
பிரசவம் முடிந்தபின் தாய் சோர்வாக இருப்பதாலும், மருத்துவ உதவி தேவைப்படுவதாலும், தாய்தான் அதிகம் கவனிக்கப் படுகிறாள். இங்கு கவனிக்கப் படவேண்டியது குழந்தையும் தான்.
பிரசவமான களைப்பு தாய்க்கு என்றால், பிறந்த களைப்பு குழந்தைக்கும் இருக்கும். பிறப்பு என்பது குழந்தைக்கு ஒரு வித கொடிய அனுபவமாகும்.
இத்தனை நாட்களாக கருவறையில், தண்ணீரில் மிதந்து கொண்டு இருந்த குழந்தைக்கு, வெளிச்சம், சத்தம், தன் உடல் எடையை உணர்தல், வெளி உலகில் தன் முதல் சுவாசத்தை அனுபவிக்கும் அவஸ்தை.... இப்படி எத்தனனயோ வகையில் குழந்தையின் அனுபவம் இருக்கும்.
பிரசவகால ஆபத்துக்கள் (Birth Trauma or Birth terror) கூட பிள்ளையின் வளர்ச்சியில் பாதிப்பு உண்டாகும். (ஆய்த கேஸ் ஆக பிறக்கும் குழந்தைக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது என்று எங்கள் உரில் அவ்வகை
பிரசவத்திற்கு court stay order இருந்தது)
ஒரு சாதாரண குழந்தை தூங்கும், பயப்படும் என்று மாத்திரம் நினைப்பது தவறு. சந்தோஷமான, எதிர் பார்ப்புடைய, சுதந்திரமாக இருக்கு விழையும். எப்போதும் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் விருப்பதுடனும், சாதிக்க விரும்பும் குழந்தையாக இருக்கும். ( கை அழகை காணுதல், ஒலி எழுப்பி தன் குரலைக் கேட்டல், குப்புற விழுதல், நகர்தல்................. போன்றவை.)
நாம் பின்பற்றும் முறைகளுக்கும், அறிவியலாளர்கள் கூறும் முறைகளுக்கும் பலத்த வித்தியாசம் இருக்கும். ஒவ்வொரு குழந்தைக்கு இது மாறுபடும்.
முறைகளை பார்ப்பதை தவிர்த்து நாம் குழந்தையைப் பார்க்க வேண்டும். குழந்தையை அன்புடன் பார்த்து, அந்த சின்ன உயிரை மதித்து நாம் அந்தக் குழந்தையை முறையாகப் பேண முடியும்.
(இங்கு கொடுக்கப்படும் பாடம் மரியா மாண்டிசோரி அவர்களின் படைப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள். குழந்தைகளின் கல்வியில் மாண்டிசோரி முறை மிகப் ப்ரபலமானது. )
(Dr. Montessori said people talked much about her wonderful method of education but she had never deviced any method: she had wanted to observe the children, and the results superised her more than anyone else.)
தொடரும்.....
புதுகைத் தென்றல்
முதல் நிலை வளர்ச்சி( 0-6 வயதுவரை) அவ்வளவு முக்கியம் ஏன்?
"எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின்
நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
பெற்றவர் வளர்ப்பினிலே"
இது சத்தியமான வார்த்தை. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் நன்கு சாதித்து இருக்கிறான் என்றால் அது அவனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினால் அல்ல. குழந்தையாய் இருக்கும் போதே அதற்கான அஸ்திவாரம் போடப் பட்டிருக்கிறது. பெற்றோர் குழந்தையின் வளர்ச்சியில் பங்கு பெறாவிட்டால், பிற்காலத்தில் பேராசிரியர் கூட உதவி செய்ய முடியாது. வாழ்க்கை வீணடிக்கப்படுகிறது.
குழந்தை பிராயத்தில், முறையாக கவனித்து வளர்க்கப் படாத பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போகும். பயமுறுத்தவில்லை. பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அறிவியலாளர்கள் ஒத்துக்கொண்டுள்ள உண்மை இது. இந்த நிலைக் குழந்தைகளைப் புறக்கணித்தல் அபாயகரமானது என்று
அபாயச் சங்கு ஊதுகிறார்கள். இதைத்தான் நம் முன்னோர்கள் "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது", என்றார்கள்
சமுதாயமும் குழந்தைகளுக்கு நல்ல முறையான கவனிப்பு கிடைக்கிறதா என்பதில் அக்கறைக் காட்ட வேண்டும். (Society plays the vital role in childrens develpment)
Psychology எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தங்கள் குழந்தையின் மீது அன்பும், அரவணைப்பும் முறையாகக் கொடுத்து பெற்றோர்கள் கவனம் செலுத்தினால் போதும். தவறினால் ஒரு தலைமுறையே நாசமாகிறது.
எனவே குழந்தை பிறந்தது முதல் ஏற்படும் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் அறிதல் அவசியமாகிறது.
பெற்றோருக்கானப் பாடம் தொடரும்....
புதுகைத் தென்றல்
குழந்தை வளர்ப்பு பற்றி ஒவ்வொறுவருக்கும் நிறைய மாறுபட்ட கண்ணோட்டம் உண்டு. சிலர் தங்கள் சொந்த வாழ்வில் தங்கள் பெற்றோரால் நடை முறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தங்கள் குழந்தை வளர்ப்பில் பயன்படுத்துவர். சிலர் பிரண்ட்ஸ் கிட்ட இருந்து கற்றுக்கொள்வர், சிலர் புத்தகத்தில் உள்ளதை பாலோ செய்வார்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றி நிறையா ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அவற்றில் இருந்து சில parenting practices which are most effective and are more likely to lead to positive outcomes for children.
பேரண்டிங் ஸ்டைல் மூன்று வகையாக பிரிக்கலாம். அவற்றின் நன்மைகள், தீமைகள் இப்போ பார்க்கலாம்.
அத்தாரிடேரியன் - Authoritarian
இந்த வகை பெற்றோர் தங்கள் குழந்தைகளை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவர். அதாவது குழந்தைக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும். குழந்தை எதை செய்யவேண்டும் , எப்போது எப்படி செய்ய வேண்டும் எல்லாம் ரொம்ப ஸ்டிரிக்டாக நடைமுறைப்படுத்துவர்.
குழந்தைக்கு நிறையா ஆப்சன்ஸ் கிடைக்காது. ஏன் எதற்கு இந்த கட்டுப்பாடு என்ற கேள்வியை குழந்தையால் கேட்க முடியாது.
இந்த வகை பெற்றோர்கள் குழந்தையின் தவறுகளை மட்டும் பெரிதுபடுத்தி பார்ப்பார்கள். அவர்களிடம் செய்யும் நல்ல காரியங்களை பெற்றோர் கவனத்தில் கொள்ள மாட்டார்கள்.
இந்த பேரண்டிங் ஸ்டைலால் குழந்தைகள் நாளடைவில் தன்னுடைய விருப்பத்திற்காக எதையும் செய்யாது அதே போல தன் பெற்றோர் எதற்காக கட்டுப்பாடு விதிக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
பெர்மிஸ்வ் பெற்றோர் - Permissive
இந்த வகை பெற்றோர் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்துகொள்வர். சில கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதை முழுவதும் செயல்படுத்த மாட்டார்கள்.
இந்த வகை பெற்றோர்கள் குழந்தை அவர்கள் விருப்பம் போல இருக்க விரும்புவார்கள். அதனால் குழந்தைக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் போகும்.
இவர்கள் குழந்தையின் நல்ல செயல்கள், கெட்ட செயல்கள் இவற்றை ஒரே போல எடுத்துகொள்வர்.
டெமக்ரேடிக்/அத்தாரிடேடிவ் Democratic Or Authoritative
இந்த வகை பெற்றோர் தங்கள் குழந்தைகளை அவர்களின் விருப்பப்படி வளர உதவி ஊக்கம் அளிப்பார்கள். குழந்தை எடுக்கும் முடிவுகளின் நன்மை தீமைகளை புரிய வைத்து பின் குழந்தை எந்த முடிவு எடுத்தாலும் அதனை முழு மனதுடன் செயல்படுத்த ஊக்கம் அளிப்பார்கள்.
இந்த வகை பெற்றோர் குழந்தையிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை குழந்தைக்கு புரியும்படி எடுத்து சொல்வார்கள். ஏன் எதற்கு கட்டுப்பாடுகள் என்பதையும் குழந்தைக்கு புரியவைப்பார்கள். இவர்கள் குழந்தையின் நல்ல செயல்களை பாராட்டி அதற்கு உரிய பாரட்டுகளை அளிப்பார்கள்.
For example, a child who leaves her toys on a staircase may be told not to do this because, "Someone could trip on them and get hurt and the toy might be damaged." As children mature, parents involve children in making rules and doing chores: "Who will mop the kitchen floor, and who will carry out the trash?"
Parents who have a democratic style give choices based on a child's ability. For a toddler, the choice may be "red shirt or striped shirt?" For an older child, the choice might be "apple, orange or banana?" Parents guide children's behavior by teaching, not punishing. "You threw your truck at Mindy. That hurt her. We're putting your truck away until you can play with it safely."
உங்கள் பேரண்டிங் ஸ்டைல் என்ன ?
நாம் அனைவரும் நேரம், இடம் இவற்றிற்கு தகுந்தபடி இந்த முன்று வகைகளையும் நடைமுறைபடுத்தி இருப்போம்.
குழந்தை வளர்ப்பு பற்றி ரிசர்ச் செய்பவர்கள் கூறுவது என்ன?
The most positive outcomes for children occur when parents use democratic styles. Children with permissive parents tend to be aggressive and act out, while children with authoritarian parents tend to be compliant and submissive and have low self-esteem.
No parenting style will work unless you build a loving bond with your child.
அப்படியே உங்க அனுபவம், கருத்து எல்லாம் சொன்னா எங்களுக்கு உதவியா இருக்கும்.
பியூச்சர்ல வ.வா சங்கம், ப.பா சங்கம், கும்மி சங்கம், அமுக மெம்பர்ஸ் எல்லாருக்கும் கூட உதவியா இருக்கும்.
இங்க போய் இந்த குவிஜ் எல்லாம் பாருங்க...
Parenting Style Test
The Model Parent Test
The Ultimate Mom Test
How Do You Talk to Your Teen?
ஆங்கிலத்தில்
What Kind Of Parent Are You?
Psychological research has identified two broad dimensions of parental behavior that influence greatly the development of children and their personalities. These parental factors, first noted by Diana Baumrind, have been labeled responsiveness and demandingness.
The first dimension, responsiveness, includes the degree to which parents express affection toward their children along with the amount of attention they give to their children 's needs. Thus, the responsiveness dimension is largely an estimate of parental "warmth".
The second dimension, demandingness, refers to the parents' use of rules and the degree to which they expect good behavior from their children. It is largely a "control" factor. How much do parents seek to control their children 's behavior?
According to Diana Baumrind, the two dimensions of parental behavior described above combine to form four styles of parenting. Some parents are rated high on both warmth (the responsiveness dimension) and control (the demandingness dimension). These parents are called "authoritative" parents. A second group of parents is high on warmth but low on control. These parents are called "permissive" parents. A third group is rated low on warmth but high on control. These parents are called "authoritarian" parents. Finally, a relatively small group of parents is rated low on both warmth and control. These parents are called "uninvolved" parents. Each style of parenting is correlated with specific types of parental behaviors. And, each seems to have its own set of consequences for child development.
Authoritative parents are warm and accepting of their children. They love their children and they show it. While they show affection for their children, authoritative parents also value discipline. They set limits for their children and expect their children to follow family rules. Their disciplinary practices usually include a good deal of reasoning and explanation both for the rules they set and for any punishment they may use.
Permissive parents, like authoritative parents, are warm and affectionate toward their children. Indeed, they are likely to be very involved in their children 's lives. However, because they often value creativity and self-expression in their children, permissive parents exert very little "control". They generally do not set standards of behavior for their children. They have very few, if any, family rules and often do not to enforce the rules they do set.
Authoritarian parents have a more detached approach than either authoritative or permissive parents. It is fair to say that they are not child-centered parents. They do not openly demonstrate warmth and affection toward their children. They do not encourage their children to develop independence. For authoritarian parents absolute obedience is a key value. Thus, they do not explain rules or punishments. They are simply the parents and they must be obeyed. Authoritarian parents often resort to harsh forms of punishment to control their children 's behavior.
Uninvolved parents are simply indifferent toward their children. They do not show affection and make no real effort to monitor or control their children 's behavior. In the extreme case, their parenting style shades into parental neglect.
The four styles of parenting have predictable consequences for children. In general, the best outcomes are associated with authoritative parenting. The children of authoritative parents tend to be the friendliest and most socially competent of all four groups of children. They tend to develop self-confidence, independence, a sense of responsibility, and good self-control. They tend to work up to their potential in school.
The children of permissive parents, in contrast, are not very achievement oriented. They are often viewed by adults as less mature than their age mates. They have lower impulse control and more difficulty handling everyday frustrations. Interestingly, children of permissive parents do not develop the independence and curiosity that their parents seem to value.
Like children of permissive parents, the children of authoritarian parents tend to lack initiative and self-reliance. They are often underachievers in school. From the preschool years on, these children also tend to have relatively poor social skills. They are likely to be anxious or withdrawn when they are around adults.
As you might expect, the worst developmental outcomes are associated with uninvolved parenting. Children of uninvolved parents tend to be unhappy, moody individuals. They are often socially incompetent and aggressive. In the teen years, they are at risk for delinquency and drug use.
What kind of parent are you? If you want to be an effective parent, the lessons from psychological research are simple and compelling. It is not enough to simply love your children. You must openly express your affection for them. At the same time, you must set rules for them and their behavior. Children need both love and limits. When one of these is missing, children experience less than optimal development.
About the Author
Douglas Hardwick, Ph.D., has extensive interests in issues of holistic health and human development. He is a primary contributor to the information website: http://www.holisticwebworks.com/
Article Source: Content for Reprint
இமயமலையைக் கூட சர்வ சாதாரணமாக ஏறிவிடலாம். குழந்தையைச் சாப்பிட வைப்பது "பிரம்ம ப்ரயத்தன்ம்" என்பார்களே அது மாதிரி மிக கஷ்டமான வேலை.
நேரத்திற்கு உண்ணாத குழந்தை வளர்ச்சி குறைந்து, மெலிவாக காணப்படும். சில குழந்தைகள் சரியாக சாப்பிடாவிட்டாலும் நாள் முழுதும் ஆக்டிவாக இருப்பார்கள்.
சிறுதீணிகளுக் கென்று ஒரு நேரம் வைத்துக் கொண்டு அப்போது மாத்திரம் கொடுப்பது நலம். பிஸ்கட், சாக்லெட் போன்றவை அடிக்கடி கொடுக்கக்கூடாது.
ஃபாஸ்ட் புட் எனப்படும் பிட்ஸா, பர்கர், சிப்ஸ், .... போன்றவைகளை அதிகமாக உட்கொள்ளும் குழந்தைகள் "ஹைபர் ஆக்டிவ் குழந்தைகள் - HYPER ACTIVE KIDS"ஆக இருப்பார்களாம்.
மகா பயங்கரம் இந்த 2 நிமிட நூடில்ஸ்கள். அதில் இருக்கும் மெழுகு வயிற்றுவலியை கொடுத்து, பக்க விளைவுகளைத் தருகிறது.
சில குழந்தைகள் அடிக்கடி ஜலதோஷத்திற்கு ஆளாவர்கள். ஐஸ்கிரீம் சாப்பிடுவதனால் மாத்திரம் அல்ல, அவர்களுக்கு ஒவ்வாத்தன்மை (Allergy) இருக்கலாம். உணவுகளில் சேர்க்கப்படும் பிரிஸர்வேடிவ் (preservative)
(தக்காளி சாஸ், ஜாம்கள், பெப்ஸி, கோக் போன்ற குளிர் பானங்கள், சாக்லெட்...... இப்படி பல இருக்கின்றன.) ஒவ்வாத்தன்மையை ஏற்படுத்துகின்றன்.
கடைகளில் வாங்கும் ஊறுகாய்களில் இருக்கும் வினிகர் கூட ஒவ்வாத்தன்மையைத் தரலாம்.
சில வீடுகளில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து குளிர்ந்த நீரை குழந்தைகளும் எடுத்து அப்படியே குடிக்கின்றனர். அது மிகத் தவறு. குளிர் சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து அறையின் வெப்பநிலைக்கு வந்த பிறகே எதையும்
உட்கொள்ளலாம்.
சின்னச்சின்ன விஷயங்கள் தான் என்றாலும் அவற்றையும் கவனத்தில் வைத்து பார்த்து பிள்ளைகளை வளர்ப்பது முக்கியம்.
(விண்ணப்பம்)
வீட்டிலேயே நமக்கு டேக்கா கொடுத்துவிட்டு ஓடும் பிள்ளைகள், பள்ளிக்கு எடுத்துச் செல்லும் டிபன் பாக்ஸ் அப்படியே திரும்ப வரும்போது மனது படும் வேதனை. அவர்களை எப்படி பள்ளியிலும் சாப்பிட வைப்பது? குழந்தைகளுக்கு என்ன கொடுத்தனுப்பலாம்?, அதற்கான் ப்ர்த்யேக சமையற்குறிப்புக்களை பற்றி ஒரு தொடர் பதிவு போட இருக்கிறேன். அதற்கு தங்களின் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன்.
parentsclub08@gmail.com க்கு எழுதுங்கள். தங்களின் பெயரோடு பதிவாகப் போடலாம்.
மீண்டும் சந்திப்போம் புதுகைத் தென்றல்.
கொஞ்சம் ஊக்கப்படுத்தினால் தன் வேலையைத் தானே செய்யப் பழகும் குழந்தை.
நம் விரும்பும், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் சில விடயங்களை பாயிண்டுகளாக பெரிய சார்டிலோ, white board - லோ குழந்தைக்கு சேரில் ஏறினால் மட்டுமே எட்டும் உயர்த்திற்கு மாட்டுங்கள். HAPPY FACE,
STAR, STICKERS இப்படி மாதத்திற்கு ஒரு பெயர் வைத்து அன்றாடம் அந்தந்த பாயிண்டுகளுக்கு கொடுங்கள்.
பாயிண்டுகளுக்கு ஏற்ப பொம்மை வாங்கிக் கொடுப்பதினால்,
விளையாட்டுத்தனம் தான் அதிகமாகும். அதற்கு பதில் PIGGY BANK, DOG HOUSE போன்ற உண்டியல்களை வாங்கிக் கொடுத்து, ஹேப்பி பேஸிற்கு தக்க காசுகளைக்கொடுத்து அதில் போடச் சொல்லுங்கள்.
விரும்பிய பொழுது, குழந்தை ஆசைப் பட்ட பொம்மை, குழந்தை விரும்பி உண்ணும் பண்டம் ஆகியவற்றை அந்த பணத்திலிருந்து வாங்கிக் கொடுங்கள். சேமிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியது போலும் இருக்கும், தனக்குத் தேவையானதை வாங்க தான் பணம் சேர்க்கவேண்டும் என்ற தூண்டுதலும் இருக்கும்.
நடைமுறைப் படுத்தி பார்த்தால்தான் தெரியும்.
உதாரணத்திற்கு சில பாயிண்டுகள் கொடுத்திருக்கிறேன்.
1. குட்மார்னிங் சொல்லி சிரித்த முகத்துடன் எழுந்து, ஒழுங்கா பல்லு தேச்சு, பாலைக் குடிச்ச சபாஷ் பையனுக்கு 3 HAPPY FACE
2. அழாமல் குளித்து காலைஉணவு சாப்பிட்ட mr.clean/ms.clean க்கு 2 "
3. விருந்தினர் எதிரில் ஒழுங்காய் நடந்து கொண்ட well behaved boy/girl 2
4. அடம்பிடிக்காமல் ஒழுங்காய் சீக்கிரம் சாப்பிட்ட FAST FOOD EATER ku 2
5. விளையாடிமுடித்து விளையாட்டு சாமாங்களை பெட்டியில்
அழகாய் எடுத்து வைத்த mr.perfect/ms.perfect 1 "
6. மிச்சம் வைக்காமல் பாலைக் 1 " குடித்த.............
7. THE GOOD GIRL/BOY WHO USED THE TOILET 2 "
8. CHANGING THE DRESS AND PUTTING THE SHOES BY THEMSELVES. HE/SHE IS GOOD GIRL/BOY 2 "
9. WALKING BY THEMSELVES IS A PROUD PEACOCK gets 2 "
10. 9.OOPM, ITS TIME TO SAY GOODNIGHT AND KICK THE BED. A GOOD BOY/GIRL GETS