இங்க நாம ஒரு ஆரோக்கியமான விவாதம் நடத்தபோறோம்.
ஒரு பெற்றோரா நாம ஆசிரீயர்கள்யிடம் என்ன எதிர் பார்க்கிறோம்?
ஆப்ரகாம் லிங்கனின் இந்தக் கடிதம் போலா?
நாம் என்னென்ன சொல்லிக்கொடுக்க வேண்டும்?
ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கூட்டு முயற்சியால் தான் குழந்தை சாதிக்க முடியும் என்பதை ஒத்துக்கொள்வீர்களா?
40 மாணவர்ளுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதம் இருக்கும் பொழுது,அவர்களால் என்ன செய்ய முடியும்?
போனற பல விடயங்களை நமக்குள்ளே பேசி அறிந்து கொள்ளலாமே!!!!
இது யாரையும் குறை சொல்வதற்காக அல்ல. அறிதலுக்காக மட்டுமே.
வாருங்கள். தங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
15 comments:
என்னோட கருத்து, ஒரு ஆசிரியருக்கு 25 மாணவர்கள் இருந்தால் நல்லது. The session should not be lecture based instead it should be activity based. அதாவது ஒரு பாடத்திற்கு 100 மணி நேரம் இருந்தால் அதில் 20 மணி மட்டுமே லெக்சர் இருக்க வேண்டும் மீதி 80 மணி ஆக்ட்டிவிட்டி இருக்கனும்.
இப்படி இருந்தால் நல்லது - சோலார் எனர்ஜி
சரியா சொன்னீங்க இம்சை.
தியரியாக கற்பதைவிட பிராக்டிகலாக கற்பதுதான் மனதில் நிற்கும்.
இங்கெல்லாம் (துபாயில்) ஒரு வகுப்பிற்கு 15 பிள்ளைகளே உள்ளனர்.A to Z sections முடிந்து AA,AB, to AZ என ஏராளமான sections உள்ளன...படிப்பை தவிர விளையாட்டு, ஓவியம் , இசை என பல் துறைகளில் கவனம் செலுத்து கின்றனர்..ஊரில் எனக்கு பிடிக்காத ஒன்று டியூசன், ஒரு நாள் முழுதும் அந்த குழந்தைகளுக்கு கற்று தராததை ஒரு மணி நேரத்தில் கற்றுக் கொடுப்பது என்றால் அவர்களால் வகுப்பறையில் சரியாக போதிக்க இயலவில்லை என்று தானே அர்த்தம்....
40க்கு 1 என்பதையும் தாண்டி சில கிராமங்களில் 70க்கு 1 கூட இருக்கும் நிலை..அந்தக் காலத்திலிருந்தே தொடர்கிறது..ஆசிரியர்கள் பாடு திண்டாட்டம்தான்...அதுவும் இன்றைய பாடத்திட்டம் இருக்கும் நிலையில்.
செயல்முறைக் கல்விக்கான சாத்தியக் கூறுகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நகரங்களிலும், தனியார் பள்ளிகளிலும் பரவாயில்லை..
கணினி என்பதையே கல்லூரியில்தான் பர்க்கவேண்டிய நிலையில் இருக்கும் கணிப்பொறியியல் மாணவர்களும் உண்டு..
வாங்க கீழைராசா,
நான் வேலைப் பார்த்த பள்ளியில், 9 மாணவர்களுக்கு 2 டீச்சர்.
அதுதான் சரியான விகிதாசாரம்.
நம்நாட்டில் மக்கள் தொகை அதிகம் என்றாலும், பயிற்சி முறையை கொஞ்சம் தளர்த்தலாம்.
மணனம் செய்ய முடியாத பிள்ளைகள், புரிந்து கொண்டாலும் சரியாக மதிப்பெண்கள் பெறாமல் போகிறார்கள்
வாங்க பாசமலர்,
சரி. நம் எல்லோர் கருத்தும் ஒன்றாக இருக்கிறது. இப்போ அடுத்த டாபிக்கிற்கு வாங்களேன்.
நிலமை இவ்வாறு இருக்க பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உதவவேண்டுமா? வேண்டாமா?
எப்படி உதவுவது?
கண்டிப்பாக..வீட்டில் குழந்தைகளின் பாடப் புத்தகங்களை அன்றாடம் பார்வையிடுதல், எங்கே அதிகம் பலவீனம் என்று புரிந்து சரிசெய்தல், ஆசிரியரிடம் தவறு அல்லது தன் குழந்தையைச் சரிவரப் புரிந்து கொள்ளாத நிலைமை தெரிய வரும் போது சுட்டிக் காட்டுதல்.., முதலில் பிள்ளைகளைப் பள்ளிகள் பார்த்துக் கொள்ளும் என்ற மெத்தனப் போக்கு இல்லாமல் தன்னாலும் என்ன செய்ய முடியும் என்று முயலுதல்..பெற்றோர் பங்கு இதில் முக்கியம்.
முதலில் மனனம் செய்யும் நமது கல்விமுறையை மாற்ற வேண்டும்.
கல்வி என்பது பள்ளிக்கு வெளியிலும் கற்கும் பாடங்களையும் சேர்த்துதான், எனவே பெற்றோர்களின் மிகப்பெரும் கடமை அவர்களுக்கு பாடப்புத்தகம் தாண்டிய உலகத்தை காண்பிக்க வேண்டியது நம் கடமை.
01. எல்லா பெற்றோரும் தம் குழந்தைகள் அனைவரும் 100/100 அல்லது 99/100 என்ற மதிப்பெண் வரையறைகளை விட்டு வரவேண்டும்.
02. என் அனுபத்தில் கண்ட உண்மை இது, ஆசிரியர்களை நாம் புரிந்து கொண்டு அவர்களோடு இயைந்து செல்லும் போது மட்டுமே நம்மால் நம் குழந்தைகளுக்கு ஒரு பள்ளியில் ஒரு சுமூகமான சூழலை உருவாக்க முடியும்.
03. இப்போதெல்லாம் தரும் ப்ராஜெக்ட் பெற்றோருக்குத்தான் என்ற உண்மை ஒருபக்கம் இருந்தாலும், குழந்தைகளை அவர்களின் உலகத்தோடு அணுகும் போது மட்டுமே நம்மால் அவர்களை புரிந்து கொண்டு உதவி செய்ய முடிகிறது. (ஏன் மொதல்லயே சொல்லல, இன்னிக்கித்தான் கடைசிநாள் இன்னிக்க்குச் சொன்னா வாங்கித்தரமாட்டேன்) இது போண்ற கடுமையான பதிலிறுத்தல்கள் அவர்களிடம் இருந்து ஒரு நெகட்டிவ் ரியாக்ஷனை உண்டாக்கு கிறது.
ரொம்ப பெரிய விவாதத்தை துவக்கியிருக்கீங்க.. நிறைய பேசலாம்....
//ஒரு பெற்றோரா நாம ஆசிரீயர்கள்யிடம் என்ன எதிர் பார்க்கிறோம்//
என் மகளுக்கு நான் எதிர்பார்ப்பவை,(தப்போ சரியோ)
1. யார் கூடவும் கம்பேர் செய்யக்கூடாது.
2. ரேங்க் போடும் சிஸ்டமே இருக்க கூடாது
3.என்கரேஜ் பண்ண முடியாவிட்டாலும் டிஸ்கரேஜ் பண்ணாமலிருந்தால் போதும்(eg. நீ வேஸ்ட், நீ லாயக்கே இல்லை)
பிற்காலத்தில் பெரிய திறமைசாலிகளாக வந்தவர்களில் வெகு சிலரைத்தான் ஆசிரியர்களால் மாணவப்பருவத்தில் இனம் கான முடிந்தது.
நம்மோடு படித்தவர்களை இப்போது நினைத்து பாருங்கள். இப்போதும் அதே ரேங்க் ஆர்டர்படிதான் முன்னேறி இருகிறார்களா?
4 கடைசியாக ஒரு பேராசை. எக்சாமே இருக்கக்கூடாது, மார்க்கும் இருக்கக்கூடாது.
முதல் மூண்று விஷயங்கள் என் மகளுக்கு கிடைக்குமாயின் 1:40 இருந்தால் கூட தப்பில்லை.
வாங்க பாசமலர்,
நல்ல ஆரம்பம்.
(அடுத்த டாபிக்குக்கு சொன்னேன்)
வாங்க கிருத்திகா,
பல நல்ல வேல்யூ உள்ள பாயிண்டுகளைச் சொல்லியிருக்கீங்க.
இது பெரிய விவாதம் தான். அப்பத்தான் நமக்குத் தெரியாததை தெரிஞ்சுக்க முடியும்.
நல்லா எல்லா பாயிண்டுகளிலும் ஆராயனும் அதான் தேவை.
வாங்க நந்து.
ஒரு தகப்பனா உங்க எதிர் பார்ப்புகள் தவறில்லை.
ஆனா அப்படி நம்ம நாட்டுல இருக்க சான்ஸ் ரொம்ப குறைவு.
ரேங்கிங் இல்லாம குறைந்தது 5 ஆம் வகுப்பு வரைக்குமாவது மதிப்பெண்கள் பல்வேறு விடயங்களூக்கும் கொடுக்கணும்.
எழுத்தில் மாத்திரம் இல்லாம வாய்மொழியாகவும் பரிட்சைகள் வரனும்.
அதுக்கு ஒரு மாதிரி தயார் பண்ணிகிட்டு இருக்கேன். அதுவும் தருவேன்.
இப்ப ஒரு தகப்பனா நீங்க எப்படி உதவுவீங்க?(பிள்ளைக்கும், ஆசிரியருக்கும்) அதுபத்தி உங்க கருத்தையும் சொல்லுங்க.
ஒரு பெற்றோரா நாம் செய்ய வேண்டியது பேரண்ட்ஸ் மீட்டிங்னா
அப்பா, அம்மா இருவரும் போய்
ஆசிரியர்களைக் கலந்து பேசனும்.
குழந்தைக்கு கற்தலில் ஏதாவது பிரச்சனையின்னா எப்படி உதவணும்? என்ன செய்யலாம் அப்படின்னூ கேட்டு தெரிஞ்சுக்கனும்.
சில பிள்ளைகள் வீட்டுல எலி வெளியில புலி அல்லது வீட்டுல புலி வெளியில் எலி மாதிரி இருப்பாங்க.
அதனால சரியா கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.
பள்ளியில பிள்ளைகளுக்கு சில உபத்திரவங்கள் இருக்கலாம். அந்த மாதிரி நேரத்தில தேவையான உதவிகளைச் செய்யணும்.
பிள்ளைகள் எதிரில் ஆசிரியர்களை ஏகவசனத்தில் பேசுதல், ஆமா, உங்க டீச்சர் சொல்லிட்டா சரியா?, அவங்களுக்கு என்னத் தெரியும்? போன்ற கமெண்டுகள் கொடுத்து அவர்களின் மரியாதைக்கு பங்கம் வைக்கக் கூடாது.
(வேற யாராவது கொஞ்சம் பாயிண்ட்ஸ் சொல்லுங்க....
ஸ்ஸ்ஸ் அப்பா...)
Post a Comment