பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

"ஏண்டி உன் பையனைக் கூட்டிட்டு வரலே கல்யாணத்துக்கு? நான் பாத்து எவ்ள நாளாச்சு?"
"அவனுக்கு யூனிட் எக்ஸாம் நடக்குது..லீவு போட முடியல.."
(பையன் படிப்பது 1ம் கிளாஸ்)

"ஜுரமாவது ஒண்ணாவது...ஸ்கூல் மட்டம் போடக்கூடாது..போய்த்தான் ஆகணும்.." (பையனுக்கு உண்மையிலேயே ஜுரம்.)

"23.75 தான் வாங்கிருக்க..மீதி 1.25 மார்க் எங்கே போச்சு? சதீஷ் பாத்தியாடா? எப்படி 100 வாங்குகிறான் எப்போதும்?

"படம் வரைஞ்சே பொழுது போக்கு..படிக்காத..இதுல ட்ராயிங் க்ளாஸ் வேற கேக்குது..இப்ப இருக்குற பாடம் படிக்கவே நேரம் பத்தல்..இதுல வேற வகுப்பு வேறயா?"

இப்படி படிப்பு படிப்பு படிப்பு என்ற போராட்டத்தில் எத்தனை விஷயங்களைக் குழந்தைகள் இழக்கின்றனர்? வருடத்தில் வரும் அத்தனை விசேட கரியங்களுக்கும் போக முடியாதுதான்..ஆனால் முக்கியமான வைபவங்களில் குழந்தைகளும் கலந்துகொள்ள வேண்டியவர்கள்தானே?

ஜுரம் என்று சாக்குப் போக்கு சொல்லாமல் நிஜமாகவே ஜுரம் இருக்கும் போது கூடக் குழந்தை வகுப்பில் சாதாரணமாக வரும் தேர்வு கூட எழுதியே ஆக வேண்டும் என்று வீண் பிடிவாதம் பிடிக்கும் பெற்றோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

0.01 குறைந்த மதிப்பெண் சதவிகிதம்- இதற்காகக் கூடக் குழந்தையைப் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டினால்..குழந்தை மதிப்பெண் எடுத்துக் காண்பிப்பான்..ஆனால் அவன் மனம் காலப் போக்கில் சிதைந்துவிடும். அடுத்த குழந்தைகளுடனும் தேவையற்ற ஒப்புமைகள் செய்வதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.

படிப்பு சாராத ஏதவது ஒரு துறையில் தனித்திறமை ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கும். அதைக் கண்டறிந்து தட்டிக் கொடுத்து, அந்தத் துறையில் அவர்தம் திறமையை வளர்க்கும் வாய்ப்புகளைப் பெற்றோர்தானே ஏற்படுத்தித் தர வேண்டும்?

படிப்பு என்பது மட்டுமே வாழ்க்கையல்ல..தவிரவும் எல்லாக் குழந்தைகளும் முதல் இடம் பெற முடியுமா என்ன? குழந்தைகளின் படிக்கும் திறனின் அளவுகோல் பெற்றோர் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

படிப்புக்காகக் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான முக்கியத்துவம் குழந்தைகளின் நியாயமான உரிமைகளைப் பறிக்கும் விதம் அமைதல் கூடாது.

17 comments:

கண்டிப்பா...
அதுலயும் அப்பா அம்மா ஃப்ரெண்ட்லியா இருந்து வளர்த்தற குழந்தைங்க ரொம்ப நல்லா வருவாங்கன்றது என் கருத்து. என்ன சொல்றீங்க???

பாசமலர்,

நல்ல கருத்தை சொல்லியிருக்கீங்க.

எல்லோரும் இஞ்சினியர்களும், டாக்டர்களும் ஆகவேண்டும். அதற்கு குறைவான எந்த ஒரு படிப்பை பிள்ளை படித்தாலும் மட்டமானது என்ற ஒரு எண்ணம் பெற்றோர்களுக்கு இருப்பது தவறு.

அதனால் வந்தது தான் இவ்வளவு கோரமான நிலமை.

கணிணி துறைப் படிப்பையே எல்லோரும் தேர்ந்தெடுக்க, இப்போ,
சிவில் இஞ்சினியர்கள் மற்ற துறைகளுக்கு ஆளே இல்லையாம்.

உண்மைதான் இம்சையரசி..நட்புடன் பழகும் பெற்றோர் இருந்தாலே குழந்தைகளின் போக்கு நல்லபடி இருக்கும்..

உண்மைதான் புதுகை..

இம்சை அரசி said...
கண்டிப்பா...
அதுலயும் அப்பா அம்மா ஃப்ரெண்ட்லியா இருந்து வளர்த்தற குழந்தைங்க ரொம்ப நல்லா வருவாங்கன்றது என் கருத்து. என்ன சொல்றீங்க???

உங்க அனுபவத்த சொல்லுறீங்க? மறுக்க முடியுமா? உண்மை தான்.

அட நல்லா இருக்கு ஆனாலும் எல்லா தப்பும் பெற்றோர் கிட்ட இருக்க மாதிரியே சொல்லரிங்களே...

நானெல்லாம் படிச்ச காலத்தில எத்தனை முறை வீட்டு பாடம் எழுதாததினால வயிற்றுவலின்னு சொல்லி பள்ளிக்கு மட்டம் போட்டு இருக்கேன்... பாவம் என்னொட பெற்றோர்...

நாங்க எல்லாம் வாங்கினதே 100க்கு 30 டு 40 க்கு நடுவுல தான், அப்படி இருக்கும் போது எங்க அப்பா அம்மா ஏன்டா உன் பிரண்ட் மாதிரி பாஸ் மார்க்காவது வாங்க கூடாதான்னு திட்டினா தப்பா...

நீங்க வேணா குசும்பன், நந்து, பொடியன், சிவா எல்லார் கிட்டயும் கேட்டு பாருங்க , எல்லா விட்டிலயும் இதே கதை தான்...

ஒத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்..
ஆனால் பசங்களும் ரொம்ம்ப வெவெரமாத்தான் இருக்காங்க இந்தக் காலத்தில !!!
இம்சை வாக்குமூலம் பார்த்தீங்கல்ல????

நல்லா சொல்லியிருக்கீங்க... ஆனால், கண்டிப்பும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் என்பது என் கருத்து...

இம்சை அரசி,

அப்பா, அம்மா குழந்தைகளிடம் நண்பர்களா இருந்தா மாத்திரம் பத்தாது.

கணவண்-மணைவி உறவும் நட்போட இருக்கணும்.

பாதி பேர் வீட்டுல ஒருத்தருக்கு ஒருத்தர் காலை வாறி விட்டுக்கறமாதிரி தான் நிலைமை இருக்கு.

ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கே இளசாம்? அப்பா, அம்மா சண்டை போட்டுகிட்டே இருந்தா பிள்ளைங்க!!!!!

நம்ம மங்களுர் சிவா மாமா சொல்றார் அவரெல்லாம் 100க்கு 23 வாங்கினா அவங்க வீட்டில ரொம்ப சந்தோசப்படுவாங்கலாம்...ஏன்ன அவரு எப்பவுமே சிங்கிள் டிஜிட் தான்டினது இல்லயாம்...

இம்சை,
30/40 மார்க் வாங்கும்போது கொஞ்சம் கேட்கத்தான் வேண்டும்.

ஆனால் 100 மார்க்தான் எடுக்கனும்னு பிடிவாதம் பிடிக்ககூடாது.

எரியும் தீபத்திற்கு ஒரு தூண்டும் குச்சியாக பெற்றோர் இருப்பது நலம்.

நீங்க சொல்ற மாதிரி விவரமான பசங்க இருக்கும் இம்சை..அதைப் பெற்றோரால கண்டுபிடித்துவிட முடியும்..
அளவோட, தேவையான கண்டிப்பு அவசியம் தேவை ச்சின்னப்பையன்..

நிஜமா நல்லவன், அறிவன், பவன் அனைவருக்கும் நன்றி..

பாசமலர் மேடம்,

நல்ல ஓர் எளிய கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.

உங்களில் பலருக்கு நம்புவதற்கு கஷ்டமாக இருக்கலாம். என் பையனைப் பள்ளியில் சேர்த்த உடன் பள்ளி நிர்வாகத்தினரிடம் நான் சொன்ன விஷயம்: "நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, கஷ்டப்படுத்தினாலும் ஒவ்வொரு வகுப்பிலும் யாரோ ஒரு மாணவன் கடைசி ரேங்க் எடுத்தே ஆவான் இல்லையா? அது என் மகனாகவே இருந்து விட்டுப் போகட்டும். எனக்குக் கவலை இல்லை. அவனை எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாக்காதீர்கள். கஷ்டப்படுத்தாதீர்கள்". (நான் இப்படிச் சொன்னதில் அவன் அம்மாவுக்கு ரொம்பவே வருத்தம்). நான் அப்படிச் சொன்னதன் ரிப்பர்கஷன் அவனுடைய பள்ளி ஆண்டுவிழாவில் என்ன ஆனது என்று ஒரு பதிவு எழுதுகிறேன்.

உங்க பதிவுக்காக காத்திருக்கோம் ரத்னேஷ்.

போட்டுட்டு இங்க ஒரு லிங்க் கொடுத்திடுங்க.

நன்றி.

உண்மைதான் ரத்னேஷ் சார்..ஆனாலும் நீங்கள் கடைசி ரேங்க் பற்றிக் கூறிய விபரம் வியப்புக்குள்ளாக்குகிறது..உங்கள் பையன் கொடுத்து வைத்தவன்தான்..

ஆமாங்க புள்ளைங்கள படி படின்னு போட்டு அடிக்கிறதைவிட கொஞ்சம் மென்மையா அறிவுரை சொல்லி திருத்தலாம்.

இது என்ன புது கிளப் ?? சரி சரி கூகுள் ரீடர்ல சேர்த்துக்குறேன் :)

வாங்க பொண்வண்டு,

இது பெற்றோர்களின் சங்கம்.

அடிக்கடி வாங்க.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்