பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

குழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு. ஆகவே கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும். ஆனால் பலநேரம் நமக்கு எரிச்சல்தான் வரும். அதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

1. நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது:
நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது குழந்தைகள் கேள்விகள் கேட்கும், அதுவும் உடனே பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். பதில் கிடைக்கும் வரை தொடர்ந்து கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கும். இதில் நாம் சந்தோசப்பட வேண்டிய விசயம், நம் குழந்தை விடை கிடைக்கும் வரை எவ்வளவு தூரம் போராடுகிறது என்பது?. எவ்வளவு வேலையாக இருந்தாலும் உடனே குழந்தையின் கேள்விக்கு விடை சொல்லுங்கள். இதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்,

முறை.1:
பதில் சொல்ல முடியாத அளவுக்கு முக்கிய வேலையாக இருந்தால், “அம்மா, முக்கிய வேலையாக இருக்கிறேன், வேலை முடிந்ததும் பதில் சொல்கிறேன்” என்று சொல்லுங்கள்.
காரணம்: சில குழந்தைகள் கேள்விகள் கேட்டவுடன், ஏதாவது ஒரு பதிலை உடனே எதிர்பார்க்கும். அப்பதில் கேட்கும் கேள்விக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

முறை.2.
சுருக்கமாக ஒரு பதிலை சொல்லிவிடுங்கள். வேலை முடிந்ததும் விரிவான பதிலை கொடுத்துவிடலாம். ஆனால் வேலை முடிந்ததும் விரிவான பதிலைத் தருகிறேன் என்று சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால் உடனே விரிவான பதில் வேண்டும் என்று அடம் பிடிக்கலாம்.

முறை.3.
வீட்டில் வேறு யாராவது சும்மா இருந்தால், அவர்களிடம் பதில் சொல்லச் சொல்லலாம்.

-மரு. இரா. வே. விசயக்குமார்.

3 comments:

அருமையான கருத்து.

நொய் நொய்னு கேள்வி கேட்கிறான் என்று சலித்துக்கொள்ளாமல் பதில் சொல்ல வேண்டும்.

நமக்குத் தெரியாவிட்டால் தெரிந்து கொண்டாவது விடை சொல்லவேண்டும்.

குழந்தைக்கு புரியும் விதத்தில் சொல்லவேண்டும்.

என்ன எப்பபாரு கேள்வி கேக்கற? ஏடாகூடாமா கேள்வி கேட்டுகிட்டே இருக்காத போன்ற வார்த்தைகள் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சியை அமுக்கிவிடும்.

பகிர்தலுக்கு நன்றி விசயகுமார்.

அருமையான கருத்து, பாரு! அப்பா ப்ரீயா தான் இருக்கார், அவர் கிட்ட கேளேன், பதில் சொல்வார்! என்றும் குழந்தைகளை வழி நடத்தலாம். :))

சைடு கேப்புல வெட்டியா இருக்கும் ரங்கமணிக்கு ஆப்படிச்ச மாதிரியும் ஆச்சு! ஒரே கல்லுல ரெண்டு மாங்காய். :)

அம்பி அதை நீங்கள் சொன்னதால் சரியாப் போச்சு.

நான் சொல்லியிருந்தால் விட்டிருப்பார்களா?

இங்கேயும் வந்து ஹஸ்பண்டாலஜி எடுக்கறேன்னு சொல்லுவாங்க.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்