parents club blogல் எழுத ஆசைப்பட்டு, கீழே எனது பதிவை போட்டுள்ளேன். நல்லதாக இருந்தால், போடலாம்.
வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி!:)
என் கருத்துகள்:
வளரும் பதின்ம வயது பிள்ளைகளை கையாள்வது என்பது பெற்றோர்களுக்கு சற்று கடினமாக தெரியலாம். ஆனா, எந்த ஒரு கஷ்டத்தையும் நமக்கு சாதகமாக ஆக்கி கொண்டால், அது நமக்கு இஷ்டமான வேலையாக மாறிவிடும். கண்டிப்பு என்ற பெயரில் நிறைய பெற்றோர்கள் செய்வது என்ன?
பக்கத்துவீட்டு பையன், எதிர்வீட்டு பையன், சித்தி மகள், தங்கச்சி மகள் என்று மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்ப்பது! ஒரு பதின்ம வயது பிள்ளையின் மனநிலைமையை சற்று நினைத்து பாருங்க... அவனுக்கோ/அவளுக்கோ அது எப்படி வேதனையாக இருக்கும், இருந்திருக்கும்! நாளைக்கு அதே பிள்ளை பெற்றோரை, பக்கத்துவீட்டு பெற்றோருடன் ஒப்பிட்டு பேசினால், பெற்றோர்களால் அது தாங்கி கொள்ள முடியமா?
சரி, ஏன் பிள்ளைகளை ஒப்பிட்டு பேசுகிறோம்? பிள்ளைகளின் நலனுக்காக என்றே பதில் வரும். எது பிள்ளைகளின் நலன் என்று ஒரு நாளாவது சிந்தித்து பார்த்து இருப்போமா? சந்தோஷ் சுப்பரமணியம் படத்தில் பிரகாஷ்ராஜ்(அப்பா) , ஜெயம் ரவியிடம்(மகன்) கேரம் விளையாடும்போது, அப்படி செய், இப்படி நகர்த்து என்று கூறுவார். கடைசி கிளைமெக்ஸில் ஜெயம் ரவி கேட்பார் "என் விளையாட்ட, நீங்களே விளையாண்டால், நான் எதுக்குப்பா?" என்று கூறும்போது, படத்தை பார்த்த எத்தனையோ இளையர்களின் கண்கள் குளமாகியதை நான் பார்த்தேன். பிள்ளைகளின் நலன் கருதி எதை செய்ய வேண்டுமோ, அதை செய்வதே ஒரு பெற்றோர்களின் தலையாய கடமை! அப்படி பிள்ளைகளின் நலன் எது, அவங்களுக்கு எது பிடிக்கும் என்பதை எப்படி அறிந்து கொள்வது?
இதுவரைக்கும் பிள்ளைகளின் உணர்வுகளை
புரிந்து கொண்டு வந்தீர்களா? (understand their feelings)
ஆம் என்றால், அது தவறு. வெறும் புரிதல் மட்டும் போதாது.
அவர்களின் உணர்வுகளை உணருங்கள்(feel their feelings)
உதாரணத்திற்கு,பையன் பக்கத்து தெருவில் சும்மா கிரிக்கெட் விளையாடி வீடு திரும்புகின்றான். அருமையா 3 விக்கெட்களை வீழ்த்திவிட்டேன் என்று பெருமையாக சொல்கிறான். உடனே, பெற்றோர்கள் என்ன செய்வோம்?
"படிக்கறத விட்டுடு, கிரிக்கெட் விளையாடுறீயா? நாளைக்கு கிரிக்கெட்டா உனக்கு சோறு போட போகுது" என்று சொல்லும் ஒரு வகை பெற்றோர்கள் உள்ளனர். இன்னொரு வகையினர் "ஓ, அப்படியா. சரி. போய் குளி" என்று உப்புசப்பு இல்லாமல் பேசுவர். இரண்டுமே பிள்ளைகளின் தன்னம்பிக்கையை உடைத்துவிடும்.
மாறாக இப்படி செய்து பார்க்கலாமே?
"டேய், நிஜமாவா? யார் அந்த மூனு விக்கெட்கள்? கேட்ச்சா, இல்ல ரன் வுட்டா?.... நீ பேட்டிங் பண்ணலய்யா?" என்று பி்ள்ளைகளின் உணர்வுகளை சேர்ந்தே உணர்ந்து பாருங்கள்! இவ்வாறு தான் உங்களுக்கும் பதின்ம வயதினருக்கும் உள்ள உறவு மேன்மையடையும். அடுத்து, அவர்களை பற்றி மேலும் புரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு, குடும்பத்தோடு ஒன்றாக கூடி உண்ணும்போது. ஒரு இரவு சாப்பாட்டு நேரம் என்று வைத்து கொள்வோம். பிள்ளைகள் அவர்களுக்கு அன்று என்ன நடந்தது என்பதை பற்றி பேசுவர்.
கேளுங்கள். ஆனால், அந்த நேரத்தில் அட்வைஸ் பண்ணாதீங்க. அந்த நேரத்துல 'நல்ல படிக்கனும், படிப்பு தான் முக்கியம்... நாங்க இப்படி கஷ்டப்பட்டோம்" என்று கூறுவதை தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள்! குறிப்பா பதின்ம வயதினருக்கு பிடிக்காத ஒன்று அதுதான்! மாறாக, சினிமா, விளையாட்டு, இசை பற்றி பேசுங்க. பதின்ம வயது பெண்கள் மாதவன் பற்றியோ, சூர்யா பற்றியோ பேசினால், ரசித்து பாருங்க. அப்படி பேசும்போது, அவர்களை கொலைகுற்றவாளி பார்ப்பதுபோல் பார்க்காதீங்க. மிஞ்சி மிஞ்சி போனால், அப்பெண்கள் தங்களது படுக்கையறையில் மாதவன் போஸ்டர் ஓட்டுவார்கள். அதனால், இவர்கள் சினிமா பார்த்து கெட்டுபோய்விடுவார்கள் என்ற நினைப்பை முதலில் விட்டுவிடுங்கள்! பதின்ம வயதில் இது சகஜம் என்பதை அறிய வேண்டும் (ஒரு காலத்தில் நீங்கள்கூட சரோஜா தேவியை பார்த்து ரசித்தவராக இருந்திருக்கலாம்...)
நமக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால், அது தவறு! அது ஆபத்து! என்ற எண்ணத்தை மாற்றுங்கள்! இதை ஏன் சொல்கிறேன் என்றால்...நிறைய பெற்றோர்கள் MSN chat, yahoo chat, orkut, friendster, facebook போன்றவற்றை தவறாக பார்க்கிறார்கள். இதனால் சில தீயவை நடப்பது உண்மை தான்! ஆனால், தன் பிள்ளையும் வழி மாறி போய்விடும் என்று தன் பிள்ளையின் மீது நம்பிக்கை இல்லை என்றால், அப்பிள்ளைக்கு இவ்வுலகில் வேறு யாரு அவர்களின் மீது நம்பிக்கை வைக்க முடியும். இது போன்ற networking விஷயங்களால் நடக்கும் நல்லதையும் கெட்டதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பெற்றோர்களே மனம் திறந்து பேசும்போது, பிள்ளைகள் வழி மாறி செல்வார்களா என்ன? எனக்கு தெரிந்த சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் orkut, friendster, facebook ஆகியவற்றில் சேர்ந்து இருக்கிறார்கள். கேட்டபோது ஆச்சிரியமாக இருந்தது, பெற்றோர்கள் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
பதின்ம வயது பிள்ளைகளை வளர்ப்பது என்பது கையில் பட்டாம்பூச்சியை வைத்து இருப்பதுபோன்றது. ரொம்ப அழுத்தி பிடித்தால், பட்டாம்பூச்சி செத்துவிடும். கையை அகலவிரித்தால், நம் கையை விட்டு பறந்துவிடும். ஆக, சரியான அளவில் பட்டாம்பூச்சியை வாழ விடுவோம்!!
நாளைக்கு என் பிள்ளை பதின்ம வயதை எட்டும்போது, நான் அவளுக்கோ/அவனுக்கோ ஒரு பெற்றோராக இல்லாமல், அவன்/ள் தினமும் எழுதும் டைரியாக இருக்க ஆசைப்படும்
தமிழ்மாங்கனி
குறள் வழிக்கதைகள்
5 years ago
15 comments:
/
, ஜெயம் ரவியிடம்(மகன்) கேரம் விளையாடும்போது, அப்படி செய், இப்படி நகர்த்து என்று கூறுவார். கடைசி கிளைமெக்ஸில் ஜெயம் ரவி கேட்பார் "என் விளையாட்ட, நீங்களே விளையாண்டால், நான் எதுக்குப்பா?"
/
சோத்துக்கு வழியில்லாம சிங்கி அடிச்சிருந்தா அப்பிடி கேட்டிருக்கமாட்டார். எல்லாம் கிடைக்குதில்ல அதனால அப்பிடியெல்லாம் கேக்கணும்னு அரிக்கும்.
/
.நிறைய பெற்றோர்கள் MSN chat, yahoo chat, orkut, friendster, facebook போன்றவற்றை தவறாக பார்க்கிறார்கள். இதனால் சில தீயவை நடப்பது உண்மை தான்!
/
மத்தவங்களுக்கு எதுனாச்சும் நடந்தாதான் நமக்கு அது செய்தி அதே நமக்கு நடந்தா அது வேதனையான விசயம் தங்கமாங்கனி.
மொத்தத்துல
ஆடற மாட்ட ஆடி கறக்கணும்
பாடற மாட்ட பாடி கறக்கணும்
:))
சில நேரங்களில் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள்.
நிறைய வாங்கியிருக்கேன்.
//நாளைக்கு என் பிள்ளை பதின்ம வயதை எட்டும்போது, நான் அவளுக்கோ/அவனுக்கோ ஒரு பெற்றோராக இல்லாமல், அவன்/ள் தினமும் எழுதும் டைரியாக இருக்க ஆசைப்படும்
தமிழ்மாங்கனி//
உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் சகோதரி!
@சிவா சித்தப்பு
//அதே நமக்கு நடந்தா அது வேதனையான விசயம் தங்கமாங்கனி.//
ஹாஹா... சரியாய் சொன்னீங்க!:)
//ஆடற மாட்ட ஆடி கறக்கணும்
பாடற மாட்ட பாடி கறக்கணும்//
ஆமாங்க, எல்லாம் ராமராஜன் மாதிரி ஆயிடுங்க!:)
//சில நேரங்களில் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள்.//
இந்த காலத்துல இது ஒத்து வராது. சமீபத்தில் கேட்ட செய்தி, ஏதோ ஒரு நாட்டில், புள்ளையே பெற்றோர் மீது புகார் கொடுத்து இருக்கான், அடி கொடுத்ததால்....:((
@நிஜமா நல்லவன்
//உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் சகோதரி!//
நன்றி நல்லவா!:)
//பதின்ம வயது பிள்ளைகளை வளர்ப்பது என்பது கையில் பட்டாம்பூச்சியை வைத்து இருப்பதுபோன்றது. ரொம்ப அழுத்தி பிடித்தால், பட்டாம்பூச்சி செத்துவிடும். கையை அகலவிரித்தால், நம் கையை விட்டு பறந்துவிடும். ஆக, சரியான அளவில் பட்டாம்பூச்சியை வாழ விடுவோம்!! //
நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் தமிழ்மாங்கனி.
"பெத்தவங்க நம்ம நல்லதுக்குத்தான் எல்லாம் செய்றாங்க அதுக்காக எல்லாம் அவங்க இஷ்டப்படியே இருக்கணும்னு செய்வது ரொம்பத் தப்பு.
தன் கனவுகளை சுமக்க வைக்கறாங்க
//சோத்துக்கு வழியில்லாம சிங்கி அடிச்சிருந்தா அப்பிடி கேட்டிருக்கமாட்டார். எல்லாம் கிடைக்குதில்ல அதனால அப்பிடியெல்லாம் கேக்கணும்னு அரிக்கும்.//
சிவா,
இந்த வார்த்தைகளுக்கு என் மனதில் ஆயிர கணக்கான பதில்கள் வருது. அவைகளை அடக்கிக்கொண்டுவிட்டேன் என்பதை மட்டும் சொல்கிறேன்
:(
மத்தவங்களுக்கு எதுனாச்சும் நடந்தாதான் நமக்கு அது செய்தி அதே நமக்கு நடந்தா அது வேதனையான விசயம் தங்கமாங்கனி//
சொல்ல வெச்சிட்டீங்களே சிவா,
அப்படி வாங்க. அப்பா அம்மா அடக்கி வெச்சிருந்தாத்தான் அந்த வலியோட வேதனை தெரியும். அது தெரியாததனால் தானோ என்னவோ ..
//சோத்துக்கு வழியில்லாம சிங்கி அடிச்சிருந்தா அப்பிடி கேட்டிருக்கமாட்டார். எல்லாம் கிடைக்குதில்ல அதனால அப்பிடியெல்லாம் கேக்கணும்னு அரிக்கும்//
இப்படி ஒரு பின்னூட்டம் போட்டீங்க.
//பதின்ம வயது பிள்ளைகளை வளர்ப்பது என்பது கையில் பட்டாம்பூச்சியை வைத்து இருப்பதுபோன்றது. ரொம்ப அழுத்தி பிடித்தால், பட்டாம்பூச்சி செத்துவிடும். கையை அகலவிரித்தால், நம் கையை விட்டு பறந்துவிடும். ஆக, சரியான அளவில் பட்டாம்பூச்சியை வாழ விடுவோம்!! //
நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் தமிழ்மாங்கனி.
ராமலஷ்மியை நானும் வழி மொழிகிறேன் தமிழ்மாங்கனி.
மிக நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கீறீர்கள்
@ புதுகை தென்றல்
அந்த படம் பாத்துட்டீங்களா?
நான் சொல்லவந்ததை ரொம்ப தவறா புரிஞ்சிருக்கீங்க
நன்றி
அந்த படம் பாத்துட்டீங்களா?//
ஓ பாத்தேனே, தெலுங்கில் பாத்தேன்.
நான் சொல்லவந்ததை ரொம்ப தவறா புரிஞ்சிருக்கீங்க//
இருக்கலாம் சிவா, கொஞ்சம் தெளிவா புரிய வெச்சீங்கன்னா உதவியா இருக்கும்.
நன்றி
@ராமலட்சுமி
//நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் தமிழ்மாங்கனி.//
நன்றி!:)
@புதுகை தென்றல்
//"பெத்தவங்க நம்ம நல்லதுக்குத்தான் எல்லாம் செய்றாங்க அதுக்காக எல்லாம் அவங்க இஷ்டப்படியே இருக்கணும்னு செய்வது ரொம்பத் தப்பு.
தன் கனவுகளை சுமக்க வைக்கறாங்க//
சரியாய் சொன்னீங்க...!:)
Post a Comment