தவறு.14..
கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளை கேலி/கிண்டல் செய்வது.
காரணம்
கேலி செய்வதால் நம்மீது குழந்தைகளுக்கு வெறுப்பு வரும். அதனால் அந்தத் தீய பழக்கத்தை மேலும் தீவிரமாக செய்யலாம். கை சூப்பும் பழக்கம் பொதுவாக மிரட்டி வளர்க்கப்படுகின்ற, பெரியவர்கள் யாரும் உடன் இல்லாத குழந்தைகளிடமே காணப்படும். இப்பழக்கம் பொதுவாக பொழுது போகாமல் இருப்பதினாலும், கோப உணர்ச்சியின் வடிகாலாகவும் ஏற்படுகிறது எனலாம்.
தீர்வு
குழந்தையை ஏதாவது ஒரு விளையாட்டில் /பணியில் ஈடுபடுத்திக்கொண்டே இருங்கள். பெரியவர்கள் யாராவது உடன் விளையாடிக்கொண்டோ அல்லது பேசிக்கொண்டோ இருப்பது நல்லது. மேற்கண்ட சூழ்நிலை இல்லாதவர்கள் நிறைய விளையாட்டுப் பொம்மைகளை வாங்கிப் போடலாம். கணினி விளையாட்டை அறிமுகப்படுத்தலாம். வரைகலை drawing கற்றுக் கொடுக்கலாம். வண்ணம் தீட்டும் புத்தகம் வாங்கிக் கொடுக்கலாம். நாம் உடன் இருக்கும் வேலையில் சிறு சிறு வீட்டு வேலைகளையும் கொடுக்கலாம். பலவித வழிகளையும் ஏற்படுத்தி குழந்தை ஏதாவது ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
தவறு.15.
மகாத்மா காந்தியின் பென்சில் கதையை நினைத்துக்கொண்டு சிறிய பென்சிலை எழுதக் கொடுப்பது.
காரணம்
சிறிய பென்சிலைக் கொண்டு எழுதும்போது எழுத்துக்கல் அழகாக வராது.
தீர்வு
சிறு குழந்தைகளிடம் எழுதுவதற்கு பெரிய பென்சில்களையே கொடுக்க வேண்டும்.
தவறு.16.
பள்ளியில் பென்சில், ரப்பரைத் தொலைத்து விட்டு வரும் குழந்தையைத் திட்டுவது.
காரணம்
அதிகம் திட்டினால் அடுத்த நாள் பள்ளியில் பென்சில், ரப்பர் மீது தான் கவனம் இருக்குமே தவிர பாடத்தில் இருக்காது. மேலும் பென்சில் தொலைந்துவிட்டால் இன்னொருவன் பென்சிலை திருட வேண்டும் என்ற எண்ணம் வரும். பின் திருடனாகவும் மாறலாம்.
தீர்வு
1.வகுப்பிலேயே தேவையான பென்சிலையும், ரப்பரையும் பொதுவில் கொடுக்க சொல்லலாம்.
2.நிறைய பென்சில், ரப்பரை வாங்கி வைத்துக்கொண்டு தொலைந்தபோதெல்லாம் 'இதற்கே நிறைய செலவாகிரது, முடிந்த வரை தொலைக்காமல் கொண்டு வாருங்கள்' என்று சொல்லலாம்.
3.பென்சில், ரப்பரை இரண்டாக உடைத்துக் கொடுக்கலாம். (மிகச் சிறியதாக அல்ல).
மரு.இரா.வே.விசயக்குமார்
குறள் வழிக்கதைகள்
5 years ago
5 comments:
aamam vijayakumar,
Intha pencil matter romba too much. engapavum gandhiji pencil kathayai solli solliye kutti pencila than kodupar. athayum compasla vachukittu eluthuven.
:(((
பென்சில் ரப்பர் தொலைக்கறதுக்கு அனுபவ தீர்வு ஒன்னு கொஞ்சநாளா நடைமுறையிலேயிருக்கு எங்க வீட்டுல.என்னத்தெரியுமா?அவனை விட்டே ஒரு பட்டியல் தயாரிக்கச்சொன்னேன். 'இன்று நான் தொலைத்த பொருட்கள்"1.பென்சில் - 2 ரப்பர்- 1,ஸ்கேல் 1 . [[தினமும் எல்லாத்தையும் விட்டுவிட்டு வருவான். கீழே விழுந்துவிட்டால் எடுக்கவே மாட்டான்] இன்று தொலைத்தால் அடுத்த மாதம் இதே தேதியில் பனிஷ்மெண்ட் என்று கூறிவிட்டேன்.தண்டனைக்கூட சொல்லிவிட்டேன்.அன்று அவனேடு பேசவேமாட்டேன் என்பதுதான் அது.திரும்ப எடுத்துவந்துவிட்டால் டிக் செய்துவிடவேண்டும்.மற்றவர் பொருளை எடுத்து வந்தால் அதற்கு மற்றொரு லிஸ்ட்.'திருப்பிக் கொடுக்கவேண்டியது' என்று. தானே எழுத எழுத வெட்கம் வந்துவிட்டது. இப்போது பத்து நாட்களாக தொலையும் பொருட்கள் எல்லாம் அடுத்த நாள் கிடைத்து விடுகிறது.திருப்பி கொடுக்கவேண்டியவைகளும் கொடுக்கபடுகின்றன.
நல்ல விசயங்கள் விசயகுமார்.. முக்கியமாக, திட்டினால் பாடத்தை கவனிக்காமல் பென்சில் ரப்பரையே கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்பது சரியாகவே தோன்றுகிறது. நன்றி..
//சிறிய பென்சிலைக் கொண்டு எழுதும்போது எழுத்துக்கல் அழகாக வராது.//
முழுங்கிவிடுவதற்கும் வாய்புண்டு.
விமர்சனம் எழுதிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
Post a Comment