என்ன தான் கலாச்சாரம் மிக்க நாடு அப்படி இப்படின்னு எல்லாம் சொன்னாலும் நம்ம நாட்டுல தவறு நடக்காமல் இல்லை. நாம நம்ம கொழந்தைகளை பொத்தி பொத்தி வளத்தாலும் தவறுகள் நடந்தது கிட்டே தான் இருக்கு. சரி, நம்ம வூட்டு புள்ளைக்கு தப்பு எதுவும் நடக்கலை அவ்வளவு தானா. பக்கத்து வூட்டு புள்ளைக்கு எது நடந்தாலும் பரவா இல்லையா. இது போல எதிர் கேள்விகள் வந்திட்டே தான் இருக்கு.
இப்போ என்ன நடந்திச்சுன்னு இப்படி குதிக்கறே.
2005'இல் இருந்து 2007 வரை ஒரு ஆய்வு செய்யப்பட்டு, 'குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை' வெளியுட்டுள்ள 207 பக்க ஒரு அறிக்கையின் முடிவுகளை இங்கே தருகிறேன். நம்ம மக்களுக்கு ஒரு பக்க நல்ல பதிவை படிக்கவே கண்ணு கட்டும் இதுல நல்ல விடயத்தை பத்தியோ 207 பக்க அறிக்கைய படிங்கன்னு சொன்னா ஹி ஹி ஹி தான்.
கீழ வரும் செய்திகள் அனைத்தும் அந்த அறிக்கையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. அந்த அறிக்கையில் இருந்து பெறப்பட்ட முடிவுகளும், அதனுடைய சாராம்சம் மட்டும் இங்கே தருகிறேன்.
இந்த ஆய்வுக்கான களத்தை பற்றிய பின்னனி. இது இந்தியாவில் 13 மாநிலங்களில் 12447 குழந்தைகள் மற்றும் 17220 ஏனையோரிடம் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பின் எழுதப்பட்ட அறிக்கை. அனைத்து விதமான மத, இன, மொழி வாரியான குழந்தைகளும் பங்கு பெற்று உள்ளார்கள். ஆதலால் இதனுடைய முடிவை நாம் ஒரு நல்ல கணிப்பாக ஏற்க முடியும்.
1. Physical abuse (தமிழ்ச்சொல் தெரியவில்லை, அதுநாள் ஆங்கிலத்தில்)
அ. மூன்றில் இரண்டு குழந்தைகள் இதற்க்கு ஆளாகி உள்ளார்கள்.
ஆ. பிசிகல்லி abuse செய்யப்பட்ட 69 சதவிகித குழந்தைகளில் 54.68% ஆண் குழந்தைகள்.
இ. 50% மேலான குழந்தைகள் ஒன்று அல்லது மற்றொரு வகையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஈ. குடும்ப சூழலில் பாதிக்க பட்ட குழந்தைகளில், 88.6% பெற்றோரால் பாதிக்க பட்டு உள்ளார்கள்.
உ. ௬௨% தண்டனைகள் அரசு பள்ளிகளை தரப்பட்டு உள்ளன.
ஊ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.
2. Sexual abuse.
அ. 53.22% இந்த வகையில் பாதிக்க பட்டு உள்ளதாக கூறி உள்ளார்கள்.
ஆ. தெருக்களில் வளரும் குழந்தைகளுக்கும், குழந்தை தொழிலில் ஈடு படும் மற்றும் காப்பங்களில் வளரும் குழந்தைகள் இந்த கொடுமைக்கு ஆளாகி உள்ளார்கள்..
இ. 50% மேலான தவறுகள் மிகவும் நம்பகமான ஆட்களால் செய்யப்பட்டு உள்ளது.
ஈ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.
3. Emotional abuse and Girl child neglect
அ. 83% பெற்றோரால் செய்யப்பட்டு உள்ளது.
ஆ. 48.4% பெண் குழந்தைகள் ஆண்களாக பிறக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
இந்த அறிக்கையில் இதில் இருந்து மீள்வதற்கான ஒரு முக்கிய குறிப்பாக அவர்கள் கூறுவது விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குறிப்பாக பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரிடமும்.
இதில் கூறப்பட்டு உள்ள பல விடயங்களை படிக்கும் பொழுது, நெஞ்சு பதபதைக்கவே செய்கிறது. இது போல் ஒன்று இருப்பதாக இந்தியா இது வரை மறுத்தே வந்து உள்ளது. இதுவே இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு.
நன்றி :
குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை.
'Save the children' அமைப்பு.
'PRAYAS' அமைப்பு
'UNICEF'
இந்த அறிக்கையை முழுவதும் படிக்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே தரவிரக்கம் செய்யலாம். இதில் நம்மால் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்கு எதாவது தோன்றினால் இங்கே கூறவும்.
பயம் கலந்த நம்பிக்கையுடன்.
எஸ். கே.
குறள் வழிக்கதைகள்
5 years ago
2 comments:
பெற்ற தகப்பனிடமிருந்தே பெண் குழந்தைகளை காக்க வேண்டி இருக்கிறது ..இதில் பக்கத்து வீடு, எதிர் வீடு, பள்ளி,பொது இடம்..சின்ன பெண்களுக்கு
அம்மாக்கள் தான் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என அவ்வப்பொழுது சொல்லி தர வேண்டும்...
நல்ல பதிவு.
நம்ம கலாச்சாரக் காவலர்கள் இதுக்கென்ன சொல்லப்போறாங்க?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா?
எல்லாத்தையும் மூடி அமுக்கி வச்சுருவாங்க(-:
பாரதநாடு புண்ணீய பூமி ஆன்மீகம் கொடிகட்டிப் பறக்குது.
ஹூம்....
Post a Comment