பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா??

ஷேரிங்- பகிர்ந்துகொள்ளுதல் நல்லதாயிற்றே.
No sharing.. என்று சொல்கிறேனே என்று
பார்க்கிறீர்களா!!!

No sharing.. என்று சொல்வது படுக்கயறையை.

நாம் குழந்தை வளர்ந்து கல்லூரி செல்லும் வயதில்
இருந்தாலும் தனியாக படுக்க வைத்துக்கொள்ளாமல்
நம் அறையிலேயே படுக்க வைத்துக்கொள்வதுதான்
பழக்கம்.

அப்படி செய்வதனால் நாம் குழந்தைக்கு நன்மை ஏதும்
செய்துவிடவில்லை.. இதுதான் ஆச்சரியமான உண்மை.

சிறு குழந்தையாக இருக்கும்பொழுது சரி.
பால் கொடுக்க, இரவில் குழந்தை அழுமோ என்று
பயப்படும் வயதில் சரி.குழந்தை பெற்றோருடன்
தூங்குவதுதான் சிறந்தது.

வளர்ந்த குழந்தையும் உடன் படுக்க வைப்பதில்
பெற்றோர் குழந்தை இருவருக்கும் கொஞ்சம் கஷ்டம்தான்.

பிள்ளைகள் வளர வளர அவர்கள் படுக்கவென இடம்
தேவைப்படும். அந்தச் சூழலில் தாயோ/தந்தையோ
தனியே படுக்க வேண்டும். இது கணவன் - மனைவி
உறவில் சில சங்கடங்களை ஏற்படுத்தும்.

தவிரவும் தனியாக இருக்க குழந்தை பழக்கப்படுவதில்லை.


குழந்தையை தனியாக படுக்க வைப்பதால் நாமொன்றும்
இமாலய குற்றம் செய்துவிடவில்லை. தனித்துவமாக
இருக்க கற்றுக்கொடுக்கிறோம்.(developing a sense of
independence)

பெரியவர்கள் வீட்டில் இருந்தால் குழந்தைகள் அவர்களுடன்
படுக்க வைக்கலாம். இரண்டு தலைமுறைகளுக்கிடையே
இது ஒரு இணைப்பாகும். ஆனால் இப்போதெல்லாம்
தனிக்குடித்தனம் தான். இந்த நிலையில் எப்படி
குழந்தையை தனியாக படுக்க வைக்க பழக்குவது??!!!

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இது மிகப்பெரிய
வேலை. முழுமனதுடனும், விடாமுயற்சியுடனும்தான்
இதை செய்ய வேண்டும்.

இதைப்பற்றி குழந்தையிடம் நேரே பேசி அவர்களுக்கென
ஒரு அறை ஒதுக்கப்போவதாகவும், அது அவர்களுக்கேயான
ப்ரத்யேகமானதென்றும் சொல்லி அவர்களுக்குப்பிடித்த
பெட் ஸ்ப்ரெட்கள் போட்டு தனி மெத்தை என
நிறைய்ய..... பேசவேண்டும், செய்ய வேண்டும்.

1. இது தவறல்ல என முதலில் நம் மனதுக்கு
நாமே அடிக்கடி சொல்ல வேண்டும்.
ஏனென்றால் குழந்தை பக்கத்திலேயே இருந்து பழகிவிட்டிருக்கும்.

2. குழந்தை இரவில் எழுந்து வந்து கதவு தட்டலாம்.

3. இரட்டால் பயமாக இருப்பதாகவும்,அலமாரிக்குள்ளிருந்து
பூதம் வருவது போல் தோன்றுவதாகவும் குழந்தை
சொல்லும்.

4. பெற்றோரின் அன்பை இழப்பதாக நினைக்கலாம்.

5. தனி ரூம் கொடுத்து கட்டிலில் குழந்தையை போட்டு
கதவை சாத்திவிட்டு என் குழந்தை தனியே தூங்கக் கற்றுக்கொள்ளும்
என்று நினைபப்தை விட குழந்தையின் பயம்போக்க என்னென்ன
செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.

6. இரவு விளக்கை ஒளிர விட்டு, அலமாரியின் கதவைத்
திறந்து வைப்பதால் அலமாரிக்குள் பூதம் ஒளிந்துகொள்ள
வாய்ப்பில்லை என்று சொல்ல வேண்டும்.

7. பக்தி/ஸ்லோகங்கள் புரியும் வயதென்றால் தைரியம்
வர ஸ்லோகம் சொல்ல வைக்கலாம்.

8. கார்ட்லெஸ் போன்/ மொபைல் ஒன்றை பக்கத்தில்
வைத்து தேவையென்றால் அழைக்கச் சொல்லலாம்.
குழந்தைகள் விளையாடும் வாக்கி டாக்கி கூட உபயோகிக்கலாம்.
(இரவில் தொந்திரவு செய்யாமல் தூங்கினால் காலையில்
பிள்ளைக்கு ஒரு சாக்லேட் கொடுக்கலாம்)

9. மேலை நாடுகளில் தாயின் ஆடைகொண்டு பூதம் போல்
செய்து அலமாரியில் வைத்து, தாயே பூதமாக தன்னை
காப்பதால் மற்ற பூதங்கள் வராது எனும் நம்பிக்கையை
தருவார்களாம்.

10. சில மாதங்களுக்கு பெற்றோரின் தூக்கம் தடை படும்.
குறைந்தது 6 முறை எழுப்புவார்கள். ”இந்தக் கொடுமைக்கு
பக்கத்திலேயே படுக்க வைத்துக்கொள்ளலாம்!!” என
தோன்றும். அப்படி செய்ய வைப்பதுதான் குழந்தையின்
முயற்சி. நீங்கள் இடம் கொடாமல் உங்கள் நோக்கத்தில்
குறியாக இருங்கள்.

11. ஒவ்வொரு முறை குழந்தை எழுந்து வரும் பொழுதும்
என்ன பிரச்சனை என கேட்பது அவசியம்.

12. குழந்தை தனியே படுப்பது அவரின் மெச்சூரிட்டியை
குறிப்பது என்றும் நீ பெரியவள்/ன் என்று சொல்வதனால்
கொஞ்சம் புரிதல் ஏற்படும்.

13. குழந்தையின் அறையில் கதை சொல்லி தூங்க
வைத்துவிட்டு வருதல் பலனளிக்கும்.

14. தனியாக படுப்பதை ஒரு தண்டனையாக்கக் கூடாது.

15. இரவு படுக்குமுன் பாத்ரூம் செல்ல வைக்க வேண்டும்.

16. பயப்படும் குழந்தைக்கு கையில் ஒரு பொம்மை
கொடுப்பதால் அந்த பொம்மையை பிடித்துக்கொண்டு
தூங்கப்பழகும்.

17. குழந்தை தனியே படுக்கத் துவங்கியதற்கு
பாராட்டு பத்திரம் வாசிக்க்ப்பட வேண்டும். இது
அவசியம். வீட்டுக்கு வருபவர்களிடம் பெருமை
பொ்ங்க சொல்வதனால் குழந்தையும் பெருமையாக
உணரும். சில நாட்களில் தனது அறையை பெருமையாக
காட்டிக்கொள்ள விரும்புவாள்.

18. இப்ப படுத்துக்கோ!! அப்புறமா எங்க ரூம்ல, எங்ககூட
படுத்துக்கலாம் போன்றவைகள் தவறான அனுகுமுறை

19. நடு இரவில் கதவை தட்டி அறைக்குள் வந்து
படுக்கையில் படுத்து தூங்கும் குழந்தையை அவனது
அறையில் விட்டு படுக்க வைகக்வேண்டும்.
(இம்ம்புட்டு கஷ்டம் படணுமான்னு யோசிக்காதீங்க)

20. கொஞ்சம் பொறுமையாக அணுகினால் உங்கள்
குழந்தை தனியே படுத்துத் தூங்கும் பழக்கத்திற்கு
ஆளாக்கலாம்.


14 comments:

Super..

மிக உபயோகமான பதிவு

ரொம்ப உபயோகமா இருக்கும் போல. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக படிக்கிறேன்

அம்மணி கலக்குங்க!!

குழந்தையை தனியாக படுக்க வைப்பதால் நாமொன்றும்
இமாலய குற்றம் செய்துவிடவில்லை. தனித்துவமாக
இருக்க கற்றுக்கொடுக்கிறோம்.(developing a sense of
independence) ]]

மிக(ச்)சரி

குட் பேட் டச்-சில் இதுவும் ஒரு அம்சம்.

உபயோகமான பதிவு!

நல்ல பதிவு; அவசியமான பதிவு

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே,

நன்றி நர்சிம்,

கண்டிப்பா படிங்க நவாஸுதீன்

கலக்கிடுவோம் தேவா.

மிக மிக முக்கியமான அம்சம் ஜமால்

நன்றி நிஜமா நல்லவன்

நன்றி அமுதா

:-)

சிறப்பாக இருந்தது உங்கள் பதிவு....

வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.....

இங்கே பாருங்கள் - பெற்று கொள்ளுங்கள்

வாழ்த்துகள்

வேலைக்காக அதிகாலையிலேயே சென்றுவிடும் நான் எனது துப்பட்டாவைத்தான் குழந்தையிடம் விட்டுச் செல்வேன். தலையனை மேல் துப்பட்டாவை போட்டுவிட்டால் கட்டிக் கொண்டு தூங்கி விடுவான்.[எங்கள் வீட்டு பெரியவர்களின் ஆலோசனை,நானில்லாதப் போது அவனைப் பார்த்துக்கொண்டது அப்படித்தான்] இப்போது 10வாயதாகிறது.ஆனால் அவன் எப்பொழுதாவது தனியாகத் தூங்கினால் நான் தான் 6 முறை எட்டிப்பார்ப்பேன். அவன் கவலையேப்பட மாட்டான். இந்த பதிவைப் பார்த்தப் பின் கண்டிப்பாக தனியாகத்தான் தூங்க விடப் போகிறேன்.

உபயோகமான தகவல்.

Super post

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்