இறைவன் எல்லோருக்கும் அதே 24 மணிநேரம்தான்
கொடுத்திருக்காரு. ஆனால் அதை முறையா திட்டமிட்டவங்க
வாழ்வில் ஜெயிக்கிறாங்க. பிள்ளைகள் மேல் பாசம்
வைத்திருக்கும் நாம் அவர்களுக்கு அந்த நேரத்தை
உபயோகப்படுத்தனும்னு அழகா சொல்லிக்கொடுத்து
விட்டால் நம்ம பசங்களும் ஜெயிப்பாங்களே!
நாமலே போடற திட்டத்தை கடைபிடிக்காம
போறோம், இதுல பிள்ளைங்களுக்கு என்ன
சொல்லிக்கொடுப்போம்னு? நினைக்காதீங்க.
அவங்களுக்கு சொல்லிக்கொடுக்கற சாக்குல
நாமளும் நம்மளை முறைப்படுத்திக்கலாமே.
ரெண்டு பேருக்குள்ள ஒரு போட்டி மாதிரி
வெச்சுகிட்டு யார் டார்கெட்டை அசீவ்
செய்யறாங்களோ அவங்களுக்கு பரிசுன்னு
செஞ்சு பாக்கலாம். மாற்றம் சில சமயம்
நல்லது.
எதுக்குமே MIND SETTING ரொம்ப முக்கியம்.
முதலில் பிள்ளையை பக்கத்தில் இருத்தி
பேசுங்க. நாம இப்ப வீட்டுக்கு ஒரு
டைம் டேபிள் செய்யப்போறோம். இதுனால
உனக்கு படிக்க, விளையாட, டீவி பார்க்க,
ஒண்ணுமே செய்யாம சும்மா இருக்க,
(அதுவும் முக்கியமுங்க.அதைப்பத்தின ஒரு
பதிவும் இருக்கு. லிங்க் கொடுக்க முடியல.
பேரண்டிங் டிப்ஸை கிளிக்கினால் பார்க்கலாம்)
எல்லாத்துக்கும் நேரம் கிடைக்கும்.
அப்படின்னு சொல்லவேண்டும்.
நேரத்தை திட்டுமிடுதலின் அவசியத்தை
பிள்ளைக்கு உணர்த்தனும்
திட்டமிடும்போது நிறைய “நோ”
சொல்ற மாதிரி டைம்டேபிள்
இல்லாமல் அவங்கவங்க தேவை
வீட்டுச்சூழலை மனசுல வெச்சுகிட்டு
டைம் டேபிள் போடக் கற்று கொடுக்கலாம்.
ஆமாம். நாம டைம்டேபிள் போட்டு
அதை பிள்ளைகள் கடைபிடிக்க
வேண்டுமென்றால் அவர்கள் விரும்ப
மாட்டார்கள். ஆகவே டைம்டேபிள்
போடல் ஐடியா கொடுக்கணும். பசங்க
எழுதணும்.
போட்டுவத்தை திட்டத்தை அவங்க
ஒழுங்கா கடைபிடிக்கிறாங்களா?
அப்படின்னு பாத்து அதை பாயிண்ட்ஸ்களாகவோ,
ஹேப்பி பேஸாகவோ, ஸ்டார் ஸ்டிக்கர்களாகவோ
குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி முறையா செய்யவதன் பலனை
பிள்ளைகள் விரும்ப ஆரம்பிச்சிருவாங்க.
ஏன் என்றால் எல்லாவற்றிற்கும் அதில்
நேரம் இருக்குல்ல. படிப்பு, விளையாட்டு
டீவி எல்லாமும் சரிவிகிதமா இருக்கும்.
பிள்ளைகள் இதை விரும்புவாங்க.
சரி, முதலில் பிள்ளைகளிடம் பேசிட்டு
வாங்க. திட்டமிடுதல் எப்படின்னு
பார்ப்போம்.
(தொடரும்)
குறள் வழிக்கதைகள்
5 years ago
6 comments:
idhu romba nalla idea.... management padikkum podhu first planninga pathidhan....adhula irundhu eppavume time table pottuthan nadakudhu.....
//நாம டைம்டேபிள் போட்டு
அதை பிள்ளைகள் கடைபிடிக்க
வேண்டுமென்றால் அவர்கள் விரும்ப
மாட்டார்கள். ஆகவே டைம்டேபிள்
போடல் ஐடியா கொடுக்கணும். பசங்க
எழுதணும். //
அட.. ஆமால்ல!
நல்ல ஐடியாவாத்தான் இருக்கு தென்றல்.
இந்த காலாண்டு பரிட்சைல உனக்கு இதை வாங்கித்தரேன், அது வாங்கித்தரேன்னு சொல்லாம எந்த ரேங்க் எடுத்தா, என்ன வேணும்ன்னு நீங்களே லிஸ்ட் போடுங்கனு என் தேவதைகள்கிட்ட சொன்னேன். அதுக்கு நல்ல பலன் இருந்தது!
வாங்க தரிஷிணி,
பர்சனாலிட்டி டெவலப்மெண்டில் டைம் மேனஜ்மெண்டும் ஒரு பாடமாச்சே.
தங்களின் வருகைக்கும் கரு்த்துக்கும் மிக்க நன்றி.
இந்த காலாண்டு பரிட்சைல உனக்கு இதை வாங்கித்தரேன், அது வாங்கித்தரேன்னு சொல்லாம எந்த ரேங்க் எடுத்தா, என்ன வேணும்ன்னு நீங்களே லிஸ்ட் போடுங்கனு என் தேவதைகள்கிட்ட சொன்னேன். அதுக்கு நல்ல பலன் இருந்தது!//
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது பரிசல்.
நம்ம விருப்பத்தை அப்பா, அம்மா நிறைவேற்றுகிறார்கள் என்று பிள்ளைகள் படும் ஆனந்தத்திற்கு அளவே கிடையாது.
ஆனால் அதுவே அவர்கள் நம் சக்திக்கு மீறி கேட்கும்போது இதமாக பதமாக நாம் “நோ” சொல்லவும் தயங்கக்கூடாது.
:))
ம்ம், முக்யமான விசயம். அடுத்த பாகத்துக்கு வெய்டிங்க்.
அடுத்த பாகத்துக்கு வெய்டிங்க்.//
அடுத்த பாகம் போட்டாச்சு. வந்து பாருங்க.
Post a Comment